Back

ⓘ அரசியல் - அரசியல், தமிழ்நாடு அரசியல், கனடிய அரசியல், விடுதலை, சுயேச்சை, அரசியல், இந்திய அரசியல் கட்சிகள் ..




                                               

அரசியல்

அரசியல் எனும் சொல், கிரேக்க மொழியில், பொலிடிகா என்ற சொல்லிலிருந்து உருவானது. வரையறை: "நகரங்களின் விவகாரங்கள்" என்று வரையறுக்கப்படுகிறது. நகரங்களின் விவகாரங்களில், நகரத்தில் உள்ள ஒவ்வொரு குழுவிற்கும், குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பொருத்தமான தீர்மானங்களை எடுக்கும் செயல் என்பதே இதன் விளக்கம் ஆகும். அரசியல் என்பது மக்கள் குழுக்களில் முடிவெடுக்கும் முறையைக் குறிக்கும் சொல். பொதுவாக அரசமைப்புகளின் செயல்பாட்டைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டாலும், அரசியல் என்பது உண்மையில், அலுவலகம், கல்வி, மற்றும் சமய நிறுவனங்கள் உட்பட அனைத்து மனித குழுக்களின் ஊடாடல்களிலும் காணப்படுகின்றது. அரசறிவியல், அரசிய ...

                                               

தமிழ்நாடு அரசியல்

1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள், திராவிடக் கொள்கைகள், பகுத்தறிவுக் கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்குத் தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிசக் கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன. தமிழ் நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள் எண்ணிக்கை 234 ஆகும். நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 39. 1986 வரை தமிழ்நாட்டில் இரண்டு அடுக்கு சட்ட மன்றங்கள் இருந்தன. தற்பொழுது ஒரு அவை மட்டுமே உள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட் ...

                                               

கனடிய அரசியல்

கனடிய அரசியல் வலுவான மக்களாட்சி வழமைக்களுடைய நாடாளுமன்ற முறைமையையும் கூட்டாட்சி அமைப்பிலான நாடாளுமன்ற அரசையும் அடிப்படையாகக் கொண்டதாகும். கனடா பின்பற்றும் அரசியல்சட்ட முடியாட்சியில் மன்னரே நாட்டுத் தலைவர் ஆவார். நாட்டில் பல கட்சிகள் இயங்குகின்றன; கனடாவின் சட்டமன்ற நடைமுறைகள் வெசுட்டுமின்சுட்டர் நாடாளுமன்றத்தின் முன்மாதிரிகளையையும் வழமைகளையும் பின்பற்றியவை. இருப்பினும் கனடாவில் கட்சிக் கட்டுப்பாடு ஐக்கிய இராச்சியத்தினுடையதை விட வலுவானது. அமைச்சரவையில் இல்லாத நாடாளுமன்ற உறுப்பினர்களின் குறைவாக உள்ளது. இருப்பினும் இவர்கள் நாடாளுமன்ற குழுக்களில் தங்கள் தாக்கத்தை ஏற்படுத்தவியலும். கனடாவின் வரலா ...

                                               

அரசியல் விடுதலை

அரசியல் விடுதலை அல்லது அரசியல் தன்னாட்சி என்பது மக்கள் தாங்களாக தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மக்களுக்காக அவர்களின் நலத்துக்காக ஆட்சி செய்யும் உறவில் அமைந்த ஒரு நிலை. அப்படி இல்லாமல் மற்றவர்களின் வல்லாண்மையின் கீழ் உரிமைகள் கீழ்மைப்படுத்தப்பட்ட நிலையில் இல்லாமலும், வலுவாக ஒடுக்கப்பட்டு ஒத்துப்போகச் செய்யாமலும், தனிமாந்தர்கள் விரும்பியவாறு செயற்படுத்துவதை தடுக்காமலும், பொருளாதாரம் போன்ற வழிகளில் பல்வேறு அழுத்தங்களும் வலியுறுத்தல்களும் இல்லாத, நிலையாகக் கருதப்படுகின்றது. அரசியல் விடுதலை அல்லது தன்னாட்சி என்பது அரசியல் அறிவியலில் ஒரு முக்கியமான கருதுகோளாக, கருத்துருவாக கருதப்ப ...

                                               

சுயேச்சை (அரசியல்)

அரசியலில், சுயேச்சை எனப்படுபவர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அரசியல்வாதி. இவர்கள் பொதுவாக ஒரு நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான கொள்கை வேறுபாடுகளுக்கு நடுவில் நிற்பவர்களாக இருப்பர். அல்லது அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கருதாத சில பிரச்சனைகளை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். வேறு சிலர் அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்தவர்களாக, ஆனால் அக்கட்சியின் சின்னங்களுக்குக் கீழே போட்டியிட விரும்பாதவர்களாக இருப்பார்கள். இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பொது அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவர்.

                                               

இந்திய அரசியல் கட்சிகள்

இந்தியாவில் நாடாளுமன்றத்திற்கான மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல்கள், இந்திய மாநிலங்களிலுள்ள சட்டப்பேரவை மற்றும் சட்ட மேலவைத் தேர்தல்கள், குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போன்றவைகளை நேர்மையான முறையில் நடத்துவதற்காக நிறுவப்பட்டுள்ள இந்தியத் தேர்தல் ஆணையத்தில் இந்தியாவிலுள்ள அரசியல் கட்சிகள் தங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றன. 2018 சூன் 20ஆம் தேதி நிலவரப்படி 2.064 கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.