Back

ⓘ மகிழ்கலை - மகிழ்கலை, மார்வெல் மகிழ்கலை, வால்ட் டிஸ்னி நிறுவனம், பிளே போய் தொழிலகம், ரோமன் ரெயின்சு, செத் ராலின்சு ..




                                               

மகிழ்கலை

மகிழ்கலை அல்லது பொழுதுபோக்கு என்பது மகிழ்ச்சியை தருவிப்பதை நோக்காக கொண்ட கலைகளை மகிழ்கலைகள் எனலாம். தமிழில் இச்சொல் ஆங்கில சொல்லான Entertainment இணையாக பயன்படுகின்றது. கதைகூறல், நடனம், இசை, தொழிற்கலைகள், கல்விசார் கலைகள், தற்காப்பு அல்லது போர்க் கலைகள், மனவளக்கலைகள் போன்றவற்றுடன் மகிழ்கலைகளை ஒப்பிட்டு வேறுபடுத்தலாம். மகிழ்கலைகள் நிகழ்ச்சியாகவோ, அரங்காடல் கலைகளாகவோ, கணினிக் கலைகளாகவோ மற்றும் பல கலை வடிவங்களாக அமையலாம்.

                                               

மார்வெல் மகிழ்கலை

மார்வெல் மகிழ்கலை ஓர் அமெரிக்க நாட்டு மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1933 ஆம் ஆண்டில் வரைகதை இதழ்களை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. இந்த நிறுவனம் முற்றிலும் வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் மார்வல் மகிழ்கலைக் கொம்பனி வெளியீடுகளின் தாக்கம் கணிசமானது. ஸ்பைடர் மேன், அயன் மேன், தோர், ஹல்க், கேப்டன் அமெரிக்கா, வால்வரின், எக்ஸ்-மென் போன்ற பல பரவலாக அறியப்பட்ட கதாபாத்திரங்களை இந்த நிறுவனமே அறிமுகப்படுத்தியது.

                                               

வால்ட் டிஸ்னி நிறுவனம்

வால்ட் டிஸ்னி கம்பனி உலகின் இரண்டாவது பெரிய, அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் இயங்குபட தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் வால்ட் டிஸ்னியின் தாக்கம் கணிசமானது. டிஸ்னி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று வால்ட் டிஸ்னி மற்றும் ரோய் ஓ டிஸ்னி ஆகியோரால் டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோவாக நிறுவப்பட்டது. இது வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மற்றும் வால்ட் டிஸ்னி புரொடக்சன்ஸ் ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வால்ட் டிஸ்னி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட் ...

                                               

பிளே போய் தொழிலகம்

பிளே போய் தொழிலகம் ஒர் அமெரிக்க மகிழ்கலை வணிக நிறுவனமாகும். இது 1953 ஆம் ஆண்டில் பெண்களை ஆபாசமாக, நிர்வாணமாக, கவர்ச்சியாக காட்டும் பிளே போய் இதழை வெளியிடும் நிறுவனமாக தொடங்கி இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கின்றது. தொலைக்காட்சி, இணையம் போன்ற எல்லா ஊடகங்களையும் பயன்படுத்தும் நிறுவனமாக வ்ளர்ச்சியடைந்துள்ளது. அமெரிக்க பண்பாட்டிலும் உலகமயமாதல் பண்பாட்டிலும் பிளே போய் இதழினிதும் நிறுவனத்தினதும் தாக்கம் கணிசமானது.

                                               

ரோமன் ரெயின்சு

லயதி ஜோசப் "ஜோ" அனாய் என்பவர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர், நடிகர் மற்றும் கிரிதிரான் கால்பந்து அணியின் முன்னாள் தொழில்முறை வீரரும் ஆவார். இவர் புகழ்பெற்ற உலக தொழில்முறை குத்துச் சண்டை குடும்பமான அனோவா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் ஆவார்.டுவெயின் ஜான்சன், ரிக்கிசி மற்றும் தெ ஊ சோஸ் ஆகியோர் இந்தக் குடும்பத்தினர் ஆவர். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு ரா எனும் குத்துச் சண்டைப்பிரிவில் ரோமன் ரெயின்சு எனும் பெயரில்விளையாடி வருகிறார்.

                                               

செத் ராலின்சு

கால்பி டேனியல் லோபசு என்பவர் ஓர் அமெரிக்க மற்போர் வல்லுனர் மற்றும் நடிகர் ஆவார். தற்பொழுது டபிள்யு டபிள்யு ஈ-ல் ஒப்பந்தமாகி, அங்கே செத் ராலின்சு என்ற புனைப் பெயரில், ரா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். 2010 இல் உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் உடன் கையெழுத்திட்ட பிறகு, லோபஸ் அதன் அங்கத்துவ நிறுவனமான புளோரிடா சாம்பியன்ஷிப் மல்யுத்தத்திற்கு அனுப்பப்பட்டார், அங்கு அவர் சேத் ரோலின்ஸ் என்று பெயர் மாற்றப்பட்டு தொடக்க எப் டிடபிள்யூ கிராண்ட்ஸ்லாம் வாகையாளர் ஆனார். உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்தின் அங்கத்துவ நிறுவனமான என் எக்ஸ் டியில் கலந்து கொண்டு என் எக்ஸ் டி வாகையாளர் பட்டம் பெற்றார். சக மல்யுத்த வ ...