Back

ⓘ வணிகவியல் - வணிகம், இளங்கலை வணிகவியல், சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி ..




                                               

வணிகம்

வணிகம் அல்லது வர்த்தகம் என்பது மனிதனது தேவைகளையும் விருப்பங்களையும் நிறைவேற்றும் இலாப நோக்குடைய அல்லது இலாப நோக்கற்ற ஒரு பொருளாதார செயற்பாடு ஆகும். வணிகமானது பிரதானமான நான்கு வளர்ச்சி கட்டங்களின் கீழ் வளர்ச்சியுற்றது. பண்டமாற்று முறை கைத்தொழில் புரட்சி பணமுறை தகவல் தொழில்நுட்ப புரட்சி வணிகவியல் வர்த்தக நடவடிகைகளை வணிகம் தொழிற்சாலை என இரு பிரிவுகல்ளாக பிரிகளாம். வணிகம்.வணிகம் என்பது வியாபரதையும் அதன் துணை பணிகலானா போக்குவரது, வங்கியியல்,காப்பீடு, பண்டகக் காப்பகம்,தகவல்தொடர்பு, விளம்பரம் போன்ற பிற நடவடிக்கைகளையும் உள்ளடக்கியது. வியாபாரம் வணிகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படுவதே வியாபாரம். வியா ...

                                               

இளங்கலை வணிகவியல்

இளங்கலை வணிகவியல் அல்லது சுருக்கமாக பி. காம் என்பது கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் வணிகவியல் பாடத்தில் இளநிலை பட்டம் பெறுவதை குறிப்பதாகும். இது இளங்கலை வணிகவியல் நிர்வாகம், அல்லது பிசிஏ எனவும் அழைக்கப்படுகிறது. பெரும்பாலும் காமன்வெல்த் நாடுகளிலேயே இப்பட்டம் வழங்கப்படுகிறது. பொதுவாக இந்த பட்டமானது மூன்று ஆண்டுகள் அல்லது நான்கு ஆண்டுகள் முழுநேரப் படிப்பாக வழங்கப்படுகிறது. இந்தியாவில் மூன்று ஆண்டு படிப்பாக உள்ளது.

                                               

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தின் சரவணம்பட்டியில் அமைந்துள்ள கல்லூரியாகும். இக்கல்லூரி கோவை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அனுமதியுடன் கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரியாக விளங்கி வருகிறது.

                                               

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி

தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரி அல்லது சுருக்கமாக கோவை தமிழ்க் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாட்டில் கோயம்புத்தூரின் பேரூரில் இயங்கிவரும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரியாகும். 1953ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி கோயம்புத்தூரில் செயற்பட்டுவரும் மிகப் பழமையான கல்லூரிகளில் ஒன்றாகும். இளங்கலை தமிழ் இலக்கிய படிப்பும், இளங்கலை வணிகவியல் பிரிவில் மூன்று படிப்புகளும் வழங்கப்படுகின்றன.

                                               

பெரியார் பல்கலைக்கழகம்

பெரியார் பல்கலைக்கழகம், சேலத்தில் அமைந்துள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். இது 1997 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசால் நிறுவப்பட்டது. பல்கலைக்கழகத்திற்கு சமூக சீர்திருத்தவாதி பெரியார் பெயரிடப்பட்டது. பல்கலைக்கழக தேசிய தர நிர்ணய ஆணையத்தின் அங்கீகாரம் பெற்றது.

                                               

அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரி, செய்யாறு

அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி, செய்யாறு, என்பது தமிழ்நாட்டின், செய்யாரில் அமைந்துள்ள தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரி ஆகும். இது 1967ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி வேலூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. இந்த கல்லூரியானது கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்குகிறது.

                                               

படிமுறையியல் வணிகம்

படிமுறையியல் வர்த்தகம் என்பது எந்த ஓரு மனித தலையிடுதல் இல்லாமல் நேரம், விலை, காலம் போன்ற மாறிகள் மூலம் வர்த்தகம் ஆணைகளை மின்னணு தளத்தில் செயல்படுத்துவதாகும். சந்தையின் பாதிப்புகளையும் இடர்களையும் நீக்க முதலீட்டு வங்கிகள், ஓய்வூதிய நிதிகள், பரஸ்பர நிதிகள், மற்றும் பிற நிறுவன வணிகர்களால் பயன்படுத்தப்படுகிறது. நிதி சந்தைகளில் பரிவர்த்தனை முடிவெடுப்பது குறித்து மிகவும் மேம்பட்ட கணித மாதிரிகள் பயன்படுத்தும் ஒரு வர்த்தக அமைப்பாகும்.