Back

ⓘ நலம் - நலம், யாவரும் நலம், கூகிள் நலம், கனடாவில் நலம் பேணல், பேணல், பொது உடல்நலவியல் ..
                                               

நலம்

நலம் என்பது நோய் இன்மையும், நலிவற்ற நிலையும் மட்டுமன்றி முழுமையான உடல், உள, சமூக நன்னிலை ஆகும் என்று, 1948ல் உலக சுகாதார அமைப்பு வரைவிலக்கணம் கொடுத்துள்ளது. இந்த வரைவிலக்கணம் இன்றும் பரவலாகப் பயன்படுகின்றது. எனினும், இதனோடு, உலக சுகாதார அமைப்பின் ஒட்டாவா நல மேம்பாட்டுப் பட்டயம் போன்ற ஆவணங்களில் கொடுத்துள்ள வரைவிலக்கணங்களும் பயன்படுகின்றன. மேற்படி பட்டயம், நலம் அன்றாட வாழ்கைக்கான ஒரு மூல வளமேயன்றி வாழ்வின் நோக்கமே அதுவல்ல என்றும் அது தனிப்பட்ட, சமூக வளங்களுக்கும், உடற் தகுதிக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஒரு நேர்க் கருத்துரு என்றும் கூறுகிறது. வகைப்பாட்டு முறைகளும் நலம் என்பதை விளக்குகின் ...

                                               

யாவரும் நலம்

யாவரும் நலம் 2009 இல் வெளிவந்த இந்திய தமிழ், இந்தி திரைப்படம் ஆகும். விக்ரம் குமார் இயக்கத்தில் விக்ரம் குமார், நீலு ஐயப்பன், அபினவ் கஷ்யப் போன்றவர்கள் இப்படத்தை தயாரித்துள்ளனர். இதனை பிக் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது. இப்படத்தில் மாதவன், நீத்து சந்திரா, சச்சின் ஹெடக்கர், தீபக் டோப்ரியால், முரளி சர்மா, ரிட்டிமேன் சட்டர்ஜி, சம்பத் ராஜ் மற்றும் சரண்யா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் 2009 மார்ச் 6 அன்று வெளியானது.

                                               

கூகிள் நலம்

கூகிள் நலம் என்பது 2008 ஆம் ஆன்டில் கூகுள் நிறுவனத்தால் ஏற்படுத்தப்பட்ட தனிநபர் சுகாதார சேவை தகவல் மையம் ஆகும். இந்தச் சேவையானது 2011 ஆம் ஆண்டில் கூகிள் நிறுவனத்தால் நிறுத்தப்பட்டது. இந்த சேவையினை கூகிள் பயனர்கள் தன்னார்வத்தின் அடிப்படையில் கைமுறையாகவோ அல்லது சேவை பங்குதாரர்களின் சேவையாளர் கணக்கில் புகுபதிகை செய்வதன் மூலமோ தங்களது உடல்நலன் பற்றிய அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் ஒழுங்கமைத்துப் பகிர கூகிள் நலம் வழிவகை செய்கிறது. இந்த தன்னார்வ அடிப்படையில் வழங்கப்படும் தகவல்களில் அவர்களின் உடல்நிலை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகளின் விவரம், ஒவ்வாமைகள் மற்றும் ஆய்வு முடிவுகள் ஆகியவை அ ...

                                               

கனடாவில் நலம் பேணல்

கனடாவில் நலம் பேணல் என்பது மக்களின் உடல் உள சமூக நலம் எவ்வாறு கனடிய நாட்டில் பேணப்படுவது என்பது பற்றிய கட்டுரை. கனடாவில் முழுப்பொது நலம் பேணல் முறைமை உள்ளது. அதாவது ஒருவருக்கு அவசியமான அனைத்து மருத்துவ சேவைகளுக்கும் அவரின் பொருளாதார நிலைமைகளைப் பொருட்படுத்தாமல் அரசே நிதி வழங்கும். OECD நலம் பேணல் தரத்தில் கனடா நான்காவது இடத்தில் இருக்கிறது. இது இதன் சிறந்த நலம் பேணல் முறைக்குச் சான்றாகும்.

                                               

நலம் பேணல்

நலம் பேணல் அல்லது நலன் பராமரிப்பு என்பது நோய்களை வரும்முன் தடுத்தல், குணப்படுத்தல் அல்லது சமாளித்தல் ஆகும். மருத்துவம், செவிலியல் மற்றும் இதர மருத்துவத்துறைகள் நலத்தைப் பேண முதன்மையாக உதவுகின்றன. மனிதருக்கும் இருக்கும் அடிப்படைத் தேவைகளில் ஒன்று நலத்தைப் பேணுவதாகும்.

                                               

பொது உடல்நலவியல்

பொது நலம் அல்லது பொதுச் சுகாதாரம் என்பது ஒரு சமூகத்தின் நலத்தையும், அதை ஏற்படுத்தி தரும் நல முறைமையும் குறிக்கிறது. தொற்றுநோயை கட்டுப்படுத்தல், மருத்துவ சேவை, உணவு, நீர் தரக் கட்டுப்பாடு, சுற்றுச்சூழலைப் பேணல், அரசியல் பண்பாட்டு பொருளாதார நலத்தைப் பேணல் என பல பொது நலக் கூறுகள் ஒரு தனிநபரின் உடல் உள நலத்தை தீர்மானிக்கிறது. பொது நலத்தை பேண வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு அணுகுமுறைகளை கையாளுகின்றன. அவற்றின் தரமும் பெரிய வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. கனடா, சுவீடன் போன்ற நாடுகளில் அரசு பொது நலம் தொடர்பான முழுமையான பொறுப்பையும் செலவையும் ஏற்று நடைமுறைப்படுத்துகிறது. பிற பல மேற்குநாடுகளிலும், சீனா, கியூபா ...