Back

ⓘ சமயம் - சமயம், இந்து சமயம், பகாய் சமயம், வைணவ சமயம், பண்டைய எகிப்தின் சமயம், பாகிஸ்தானில் இந்து சமயம், பிவிட்டி ..
                                               

சமயம்

கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வெவ்வேறு படிகளாக ஒவ்வொரு மதமும் உள்ளன என்றும் எந்தப் படியும் அபாயகரமானதோ, தீமையானதோ அல்ல என்றும் வளர்வதற்கு மறுத்து முன்னேறாமல் கட்டுப்பெட்டியாக நின்றுவிடும் போதுதான் ஒரு மதம் அபாயகரமானதாகின்றது என்றும் சுவாமி விவேகானந்தர் குறிப்பிடுகின்றார். சமயம் அல்லது மதம் - மனிதன் கடவுள் நிலையை அடைவதற்கான வழியினை வாழ்ந்துகாட்டினார்கள். இவர்களை பின்பற்றி வாழ்ந்த மக்கள் காலம் செல்ல செல்ல அவர்கள் கூறியதை "அனைவரும் ஒன்றே" என்பதை மறந்து மற்றவர்களிலிருந்து தங்களை வேறுபடுத்திக்காட்டப் பயன்படுத்த ஆரம்பித்தனர்.

                                               

இந்து சமயம்

இந்து சமயம் இந்தியாவில் தோன்றிய, காலத்தால் மிகவும் தொன்மையான உலகின் முக்கிய சமயங்களில் ஒன்றெனக் கருதப்படுகிறது. ஏறக்குறைய 950 மில்லியன் இந்துக்களைக் கொண்டு உலகின் மூன்றாவது பெரிய சமயமாக இருக்கின்றது. பெரும்பாலான இந்துக்கள் இந்தியாவிலும், நேபாளத்திலும் வசிக்கின்றார்கள். இலங்கை, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், சுரினாம், பிஜி தீவுகள், அமெரிக்கா, கனடா மற்றும் பிற பல நாடுகளிலும் இந்துக்கள் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையில் வசிக்கின்றார்கள். பிற சமயங்கள் போலன்றி இந்து சமயத்தைத் தோற்றுவித்தவர் என்று யாருமில்லை. இதனை நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த என ஒரு மைய அமைப்பு இதற்கு இல்லை. பல்வேறு வகையி ...

                                               

பகாய் சமயம்

பஹாய் நம்பிக்கை 1863 இல் ஈராக்கின் பாக்தாத்தில் மனிதகுலத்தின் ஆன்மீக ஒற்றுமையை முன்னிறுத்தி பஹாவுல்லா என்பவரால் தொடங்கப்பட்ட சமயமாகும். உலகம் முழுவதும் 200க்குமதிகமான நாடுகளில் சுமார் 6 மில்லியன் பேர் பஹாய் சமயத்தைப் பின்பற்றுகின்றனர். பஹாவுல்லாவின் படிப்பினைகளுக்கேற்ப சமய வரலாறு ஒரே அடிப்படை நோக்கத்தைக் கொண்டிருந்த இறைத்தூதர்கள் மூலமாக நகர்த்தப்பட்டதாகும். ஆபிரகாம், மோசே, புத்தர், இயேசு, முகம்மது நபி ஆகியோரையும் உள்ளடக்கிய இறைத்தூதர் வழியில் தானும் ஒருவர் எனத் தன்னைக் குறிப்பிட்டார். எல்லா மக்களும் ஒரே அமைதியான ஒன்றுசேர்க்கப்பட்ட உலகளாவிய சமூகமாகத்துக்கான உலக புனித நூல்களின் முன்னறிவிப்பை ...

                                               

வைணவ சமயம்

வைணவ சமயம் விஷ்ணுவை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயமாகும். இச்சமயம் வைணவம் என்றும் வைஷ்ணவம் என்றும் அழைக்கப்படுகிறது. இச்சமயம் இந்து சமயத்தின் ஆறு உட்பிரிவுகளுள் ஒன்றாகும். உலகில் தீமைகள் ஓங்கும் போது விஷ்ணு அவதாரம் எடுத்து அவற்றை அழிப்பார் என்பது வைணவ நம்பிக்கை. வைணவக் கடவுளான விஷ்ணு எண்ணற்ற அவதாரங்கள் எடுத்துள்ளதாகவும் நம்புகிறார்கள். திருமாலின் எண்ணற்ற அவதாரங்களில் குறிப்பிடத்தக்க மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனன், பரசுராமன், இராமன், பலராமன், கிருஷ்ணன், கல்கி என்ற பத்து அவதாரங்கள் தசவதாரங்கள் என்று அழைக்கப்படுகின்றன. உபநிடதங்களில் 14 வைணவ உபநிடதங்களாகும். இந்த சமயத்தின் முக்கிய ...

                                               

பண்டைய எகிப்தின் சமயம்

பண்டைய எகிப்திய சமயம் பண்டைய எகிப்திய சமூகம் பல கடவுள் வணக்க முறை நம்பிக்கைகளும், சடங்குகளும் கொண்டது. எகிப்திய சமயத்தில் இறப்பிறகு பிந்தைய வாழ்க்கை உண்டு என நம்பிக்கை வலுவாக இருந்தது. எனவே இறந்த பார்வோன்கள் மற்றும் அரச குடும்பத்தினரின் உடல்கள் மம்மியாக்கப்பட்டு பதப்படுத்தி வைத்தனர். அனைத்து எகிப்தியர்களும் சூரியக் கடவுளான இரா எனும் கடவுளை வழிபட்டனர். உலகத்தை காத்தருளும் எகிப்திய கடவுள்களான இரா, அமூன், அதின், ஆத்தோர், ஒசைரிஸ், ஓரசு, சேத், இன்பு, சேக்மெட், வத்செட் மூத், கோன்சு, சகுமித்து மற்றும் தாவ் போன்ற கடவுள்களை வழிபட்டனர். மற்றும் தேவதைகளிடம், மக்கள் தங்கள் நலத்திற்கும், இயற்கை பேரழிவு ...

                                               

பாகிஸ்தானில் இந்து சமயம்

பாக்கித்தான் நாட்டு மொத்த மக்கள் தொகையில் 2% மட்டுமே இந்து சமயத்தவர் ஆவார். 1998ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பாகிஸ்தானில் இசுலாமிய சமயத்திற்கு அடுத்த பெரிய சமயம் இந்து சமயம் ஆகும். சிந்து மாகாணத்தில் மட்டும் அதிக அளவில் இந்துக்கள் வாழ்கின்றனர். பாகிஸ்தானிய இந்துக்கள் சிந்தி, சராய்கி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி மொழிகளை பேசுகின்றனர். மத்தியகால வரலாற்றில், பாகிஸ்தானின் பஞ்சாப் மற்றும் வடமேற்கு எல்லைப்புற மாகாணம் போன்ற பகுதிகளை மராத்தியப் பேரரசு மற்றும் சீக்கியப் பேரரசுகள் ஆண்டது.

                                               

பிவிட்டி

மேற்கு ஆப்பிரிக்காவில் முதன்மையான சமயங்களில் பிவிட்டி யும் ஒன்று. காபோன், காமரூன் ஆகிய நாடுகளில் அதிகம் பின்பற்றப்படுகிறது. இது காபோன் தேசத்து அதிகாரப்பூர்வ சமயங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவர்களின் பண்பாட்டில் கிறித்தவ சமயத்தின் தாக்கமும் காணப்படும். யாரேனும் ஒருவர் குழுவிற்கு தலைமையேற்று, பண்டிகைகளையும் சடங்குகளையும் நடத்துவார்.