Back

ⓘ ஆசிரியத்தளை. யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் உறுப்புக்களில் ஒன்றான தளைகளில் ஒரு வகையே ஆசிரியத்தளை ஆகும். ஆசிரியப்பா எனும் செய்யுள் வகைக்குச் சிறப்பாக உரியதாதலால ..




                                     

ⓘ ஆசிரியத்தளை

யாப்பிலக்கணத்தில் செய்யுள்களின் உறுப்புக்களில் ஒன்றான தளைகளில் ஒரு வகையே ஆசிரியத்தளை ஆகும். ஆசிரியப்பா எனும் செய்யுள் வகைக்குச் சிறப்பாக உரியதாதலால் இத் தளை ஆசிரியத்தளை என வழங்கப்படுகின்றது.

                                     

1. ஆசிரியத்தளையின் இலக்கணம்

செய்யுளொன்றில் அடுத்துவரும் இரண்டு சீர்களுக்கு இடையே உள்ள தொடர்பே தளை ஆகும். இவ்விரு சீர்களுள் முதலில் வருவது நிலைச்சீர் எனவும் அடுத்து வருவது வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றன. ஆசிரியத்தளை அமைவதற்கு:

1. நிலைச்சீர் எப்பொழுதும் ஈரசைச்சீராக இயற்சீர் இருக்க வேண்டும். 2. மேற்படி சீரின் ஈற்று அசை நேரசை ஆகவோ, நிரையசை ஆகவோ இருக்கலாம். 3. நிலைச்சீரின் ஈற்றசையும் வருஞ்சீரின் முதல் அசையும் ஒரேவகை அசைகளாக இருத்தல் வேண்டும். அதாவது நேரும் நேருமாக அல்லது நிரையும் நிரையுமாக இருத்தல் வேண்டும்.

இதன் அடிப்படையில் இரண்டுவிதமான ஆசிரியத்தளைகள் அமைகின்றன.

1. நேரொத்த ஆசிரியத்தளை - இது நேரசையும் நேரசையும் இணைந்து உருவாவது. 2. நிரையொத்த ஆசிரியத்தளை - இது நிரையும் நிரையும் இணைந்து அமைவது.
                                     

2. எடுத்துக்காட்டு

மேலேயுள்ளது சிலப்பதிகாரத்தில் வரும் ஒரு ஆசிரியப்பா. இதை வாய்பாடாக எழுதுவதன்மூலம் எவ்வாறான தளைகள் அமைந்துள்ளன என்பதை இலகுவாக அறியமுடியும்.

செய்யுளிலுள்ள சீர் இணைகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக எடுத்து அவற்றின் வாய்பாடுகளை ஆசிரியத்தளை அமையும் விதம் பற்றிய அட்டவணையுடன் ஒப்பிட்டால் எங்கெங்கே ஆசிரியத்தளைகள் அமைகின்றன என்பதை அறிய முடியும்.