Back

ⓘ தமிழ்த் திரையிசை தமிழ் செவ்வியல் இசையின் நீட்சி. பொதுவாக தமிழிசை இனிய ஓசைக்காக கூட்டி எழுதுதல் என்பனார் புலவர் எனச் சொன்ன தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு இருந் ..
                                     

ⓘ தமிழ்த் திரையிசை

தமிழ்த் திரையிசை தமிழ் செவ்வியல் இசையின் நீட்சி. பொதுவாக தமிழிசை இனிய ஓசைக்காக கூட்டி எழுதுதல் என்பனார் புலவர் எனச் சொன்ன தொல்காப்பியர் காலத்திற்கு முன்பு இருந்தே ஆரம்பிக்கிறது. புலன், பள்ளு, குறம், என்னும் இலக்கிய வகைகள் எல்லாம் இசையின்பாற்பட்ட இலக்கியங்களே. ஆக தமிழிசை என்பது சங்க காலத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது. ஓவ்வொரு திணைக்கும் பண், பறை இதுவென வகுத்த போதே இசை மரபு மிகுந்திருந்த தன்மை தமிழிசையின் தோற்றுவாய் அல்ல அது மேலோங்கிய செவ்வியல் தன்மை எனலாம்.

                                     

1. தமிழ் இசையின் தோற்றுவாய்

கி.பி 13ஆம் நூற்றாண்டு வரை இந்திய இசையின் தோற்றுவாயாக தமிழ் செவ்வியல் இசையே இருந்து வந்த நிலையில் அவற்றுடன் அரேபிய இசையும் பாரசீக இசையும் இணைந்து இந்துஜ்தானிய இசையாக உருவெடுத்தது. இசையை நீண்ட நேரம் ஆலாபனை செய்யும் முறை தமிழ் இசையின் ஒரு விதமான வளர்ச்சி என்கிறார் இசை ஆய்வாளர் ந.மம்மது. இந்திய இசையே தமிழ் இசையின் மறு ஆக்கம் எனும்போது தமிழ்த் திரையிசையின் மூலத்தை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இருந்து கணக்கி;ட முடியாது.

பக்தி இலக்கிய காலத்தில் திருஞான சம்பந்தர் தொடங்கி அருணகிரிநாதர் வரை சந்தங்களை வைத்தும், நாட்டுப்புற செவ்வியல் இசை மரபுகளை வைத்தும் பாடல்களை ஆக்கி அளித்து பக்தியினையும், தமிழிசையினையும் வளர்த்தனர். இதனை சரிவரப் புரிந்திருந்த சங்கரதாஜ் சுவாமிகள் தமிழிசையின் முன்மாதிரிகளை உருவாக்கினார். கதைகளைக்கூட பாடல்கள் வாயிலாகச் சொல்லியும் கேட்டும் வந்த பாரம்பரியத்தை வளர்த்தெடுத்தவராக அறியப்படுகிறார். அவரே இன்றைய தமிழ் இசை வடிவின் மூலகர்த்தா எனலாம்.

பெரும்பாலும் இதிகாச புராண நாடகங்களில் தன்னை இழந்திருந்த தமிழ்ச் சமூகம் சங்கரதாஜ் சுவாமிகளின் வருகைக்குப் பிறகு பக்திப் பாடல்கள் மீதும் காதல் பாடல்கள் மீதும் ஆர்வம் கொண்டது. இதன் விளைவாக திரைப்படம் என்னும் சாதனம் நம் கைக்கு வந்த போது அதற்குத் தேவையான இசையை நம்மால் எளிதாக உருவாக்க முடிந்தது. கிட்டப்பாவும் கே.பி.சுந்தரம்பாளும் தாம் பெற்ற தமிழிசையை தமிழ்த்திரையிசைக்குப் பகிர்;ந்தளித்தார்கள்.

                                     

2. திரைப்படத்தில் தமிழிசை

நாடகத்தில் நுழைந்த தமிழிசை பின்பு தமிழ்த் திரைப்படத்தில் நுழைந்து மதுரகவி பாஜகரதாசு, பாபநாசம் சிவன் ஆகியோரால் வளர்க்கப்பெற்று, தியாகராய பாகவதர், பி,யு.சின்னப்பா ஆகியோரின் செல்வாக்கால் எழுந்து இன்னும் எத்தனையோ சாம்பவான்களால் தமிழ்த் திரையிசை உச்ச நிலையை அடைந்தது. இது ஏதோ ஒரு நாளில் நிகழ்ந்தது இல்லை. பன்னெடுங்கால இசை மரபின் தொடர்ச்சி. கூத்து மரபிலிருந்து கதை சொல்லும் உத்தியைப் பெற்றதைப்போலவே திரையிசையை நாம் தமிழிசையின் மரபிலிருந்தே உருவாக்கினோம்.

இப்போது தமிழ்த் திரையிசையை சில அபாயங்களில் இருந்து காப்பது அல்லது மீட்பது மிகமிக அவசியமாகிறது. ஓன்று இந்துஜ்தானிய முறையிலான இசை, தெலுங்கு கீர்த்தனைகள் அமைந்த இசை, இன்னொன்று வெற்று வார்த்தைக் குவியாலான பாடல் வரிகள். இத்தகைய அபாயத்திற்குக் காரணம் அரசியலற்ற சூழல். தமிழனுக்கு தான் தமிழன் என்கிற உணர்வையே இன்று ஊட்ட வேண்டிய அரசியல் தேவை ஏற்பட்டுள்ளது. இவ்வுலகில் அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல் என்பதால் நல்ல திரையிசையும், அதன் கையில்தான் உள்ளது. தமிழ் உணர்வு, தமிழ்த் தேசியம் என்கிற அறிவியல் பூா்வமான அரசியல் மாற்றம் நிகழாமல் கலை இலக்கித்திலும், சினிமாவிலும் மாற்றங்களை எதிர்பார்ப்பது வேடிக்கை.