Back

ⓘ சந்திரசேகர கவிராச பண்டிதர். இவர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் ஆகியோரிடம் கல்வி பயின்றுள்ளார். சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக ..




                                     

ⓘ சந்திரசேகர கவிராச பண்டிதர்

இவர் திருத்தணிகை விசாகப் பெருமாளையர், சரவணப் பெருமாளையர் ஆகியோரிடம் கல்வி பயின்றுள்ளார். சித்தூர் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகவும், கும்பகோணம் அரசு ஆடவர் கல்லூரியில் தமிழாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார். தாண்டவராய முதலியார், இராமநுச கவிராயர் ஆகியோரிடத்து நெருங்கிப் பழகியவர்.

                                     

1. இயற்றிய நூல்கள்

திருவாவடுதுறை ஆதீனம் குருமகாசந்நிதானம் ஸ்ரீசுப்பிரமணியதேசிகர் மீது மும்மணிக்கோவைப் பாடியுள்ளார். பொன்னுசாமித் தேவர் விருப்பத்தின்படி தனிப்பாடல்கள் பலவற்றைத் திரட்டி தனிப்பாடல் திரட்டு வெளியிட்டுள்ளார். வருஷாதிநூற் சித்தாந்த விளக்கமும், அறுபது வருஷ பலனும் எனும் பழைய நூலை ஆராய்ந்து, 1875 இல் அச்சிட்டு வெளியிட்டார். தண்டியலங்கார மூலத்தையும், அதற்குச் சுப்பிரமணியதேசிகரால் செய்யப்பட்ட உரையையும் ஆராய்ந்து வெளியிட்டார்.

                                     

2. பதிப்பித்த நூல்கள்

இவர் பதிப்பித்த நூல்கள் சில:

  • ஐந்திலக்கண வினாவிடை
  • நன்னூற் காண்டிகையுரை
  • பாலபோத இலக்கணம்
  • பரத நூல்
  • வெண்பாப் பாட்டியல் உரை
  • நன்னூல் விருத்தியுரை
  • செய்யுட்கோவை
  • பழமொழித் திரட்டு
  • யாப்பருங்கலக் காரிகையுரை
                                     

3. உசாத்துணை

  • மயிலை சீனி. வேங்கடசாமி, "19 ஆம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம்"- மெய்யப்பன் தமிழாய்வகம்-2001.
  • பூசை சுப்பிரமணியத் தம்பிரான்," குருபரம்பரை விளக்கம்" திருவாவடுதுறை ஆதீனம் வெளியீடு.