Back

ⓘ பண்ணத்தி என்பது தொல்காப்பியம் பகுத்துக் காட்டும் ஏழு வகையான செய்யுள் பாங்குகளில் ஒன்று. இது செய்யுளுக்குள் இருக்கும் விடுகதை போன்ற பொருள் குறிப்பு என விளக்கப்பட ..




                                     

ⓘ பண்ணத்தி

பண்ணத்தி என்பது தொல்காப்பியம் பகுத்துக் காட்டும் ஏழு வகையான செய்யுள் பாங்குகளில் ஒன்று. இது செய்யுளுக்குள் இருக்கும் விடுகதை போன்ற பொருள் குறிப்பு என விளக்கப்பட்டுள்ளது. இது பொருளை உய்த்துணர வைக்கும் பாட்டாக வரும்.

என்னும் பாடலை தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் பண்ணத்தி வகைக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறார். இதில் ‘கொன்றை வேய்ந்த செல்வன்’ என்னும் தொடர் பாட்டிடை வைத்த குறிப்பு. இந்தத் தொடர் கொன்றைப் பூவைத் தலையில் சூடிக்கொண்டிருக்கும் சிவபெருமானைக் குறிக்கும். இது பிசி என்னும் விடுகதை போல இருக்கும் என்று தொல்காப்பியம் விளக்குகிறது.

பிசி, பண்ணத்தி ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு

இந்தப் பண்ணத்திப் பொருட்குறிப்பபு பன்னிரண்டு அடிக்கு மிகாத அடிகள் கொண்ட பாட்டில் வரும். அதற்கு பேற்பட்ட அடிகள் கொண்ட பாட்டில் வரினும் கடிந்து நீக்கப்படாது என்கிறது தொல்காப்பியம்.