Back

ⓘ ஆசி. கந்தராஜா அவுத்திரேலிய-ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர். பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர். செருமனி, சப்பான் மற்றும் அவுத்திரேலியப் பல்கலைக் ..




ஆசி. கந்தராஜா
                                     

ⓘ ஆசி. கந்தராஜா

ஆசி. கந்தராஜா அவுத்திரேலிய-ஈழத்து எழுத்தாளர், கல்வியாளர். பூங்கனியியல், உயிரியல் தொழிநுட்பத்துறைப் பேராசிரியர். செருமனி, சப்பான் மற்றும் அவுத்திரேலியப் பல்கலைக்கழகங்களில் படித்தவர். பணிபுரிந்தவர்.

                                     

1. வாழ்க்கைக் குறிப்பு

ஆசி. கந்தராஜா யாழ்ப்பாணத்திலுள்ள கைதடி கிராமத்தில் பிறந்தார். தந்தை ஆ. சின்னத்தம்பி புராண இதிகாசங்களை முறைப்படி கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ் ஆசான் ஆவார். கிழக்கு செருமனி அரசின் புலமைப் பரிசில் பெற்று 1974ஆம் ஆண்டு உயர் கல்வி கற்கச் சென்ற ஆசி. கந்தராஜா, பின்னர் மேற்கு செருமனியிலும் புலமைப் பரிசில் பெற்று கிழக்கிலும் மேற்கிலுமாக மொத்தம் 13 ஆண்டுகள் படித்தவர் பணிபுரிந்தவர்.1987 தொடக்கம் புலம் பெயர்ந்து அவுத்திரேலியாவில் வாழ்ந்து வருகின்றார்.

                                     

2. வெளிவந்த நூல்கள்

  • உயரப்பறக்கும் காகங்கள் சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2003
  • பாவனை பேசலன்றி சிறுகதைத் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000
  • ஹெய்க்கோ சிறுகதைத் தொகுப்பு, சிங்கள மொழிபெயர்ப்பு. கொடகே பதிப்பகம் 2019, ISBN 9789553095794)
  • தமிழ் முழங்கும் வேளையிலே செவ்விகளின் தொகுப்பு - மித்ர வெளியீடு 2000, சிட்னியில் இருந்து ஒலிபரப்பாகும் தமிழ்முழக்கம் நிகழ்ச்சிக்காக இவர் கண்ட 18 பேட்டிகள்
  • Horizon மித்ர பதிப்பகம், 2007, ஆங்கில மொழிபெயர்ப்பு
  • கறுத்தக் கொழும்பான். புனைவுக் கட்டுரை தொகுப்பு, மித்ர வெளியீடு 2014 ISBN 978-93-81322-28-4)
  • செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய். புனைவுக் கட்டுரை தொகுப்பு. ஞானம் வெளியீடு 2017. ISBN 978-955-8354-53-7)
  • கள்ளக்கணக்கு சிறுகதைத் தொகுப்பு, காலச்சுவடு வெளியீடு 2018 ISBN 978-93-86820-49-5)
  • கீதையடி நீயெனக்கு. குறுநாவல் தொகுப்பு, மித்ர வெளியீடு 2014 ISBN 978-93-81322-29-1)
                                     

3. பரிசுகளும் விருதுகளும்

  • திருப்பூர் இலக்கியவிருது 2019. படைப்பிலக்கியம்.
  • இந்திய சாகித்திய அகாதெமி பதிப்பித்து வெளிவந்துள்ள கண்களுக்கு அப்பால். இதயத்திற்கு அருகில். என்னும் சிறுகதைத் தொகுப்பில் 2015 இவரது சிறுகதை இடம்பெற்றுள்ளது.
  • திருப்பூர் தமிழ்ச்சங்க இலக்கிய விருதும் பரிசும் 2018. கள்ளக்கணக்கு சிறுகதைத் தொகுப்புக்கு. காலச்சுவடு வெளியீடு 2018
  • சிறீலங்கா சாகித்திய மண்டலப் பரிசு 2001, பாவனை பேசலன்றி - சிறந்த சிறுகதைத் தொகுப்புக்காக.
  • திருப்பூர் இலக்கியவிருது 2016 ‘கறுத்தக்கொழும்பான் புனைவுக் கட்டுரைத் தொகுதி
  • இந்திய தமிழக அரசின் உலகத் தமிழ்ச்சங்கம் மதுரை விருதும், பணப்பொதியும். 2018. கள்ளக்கணக்கு சிறுகதைத் தொகுப்புக்கு. காலச்சுவடு வெளியீடு 2018
  • தமிழியல் விருது 2015. கறுத்தக் கொழும்பான் நூலுக்கு.! வித்தியாகீர்த்தி ந. சந்திரகுமார் தமிழியல் விருது.
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது 2015. கீதையடி நீயெனக்கு. குறுநாவல் தொகுதிக்கு. மித்ர பதிப்பகம்