Back

ⓘ புணர்ச்சிக் குறிப்பு. ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதல் புணர்ச்சி எனப்படும். தலைவி தலைவனோடு கொண்ட மறைமுக உடலுறவைத் தோழி எவ்வாறு அறிந்துகொள்வாள் என்று தொல்காப்பிய ..




                                     

ⓘ புணர்ச்சிக் குறிப்பு

ஆணும் பெண்ணும் உடலுறவு கொள்ளுதல் புணர்ச்சி எனப்படும். தலைவி தலைவனோடு கொண்ட மறைமுக உடலுறவைத் தோழி எவ்வாறு அறிந்துகொள்வாள் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது.

  • செய்வினை மறைத்தல் - தன் செயல்களைப் பிறர் அறியாவண்ணம் மறைத்தல்
  • தோழியோடு பயிலும் பாங்கு - தோழியோடு ஆடிப்பாடியும் அரவணைத்தும் நடந்துகொள்ளுதலில் மாற்றம்.
  • தனியே செல்லுதல் - தோழியுடன் சேர்ந்தே சென்றவன் தனியே செல்லல்
  • தோற்றம் - வாரிய கூந்தல் கலைந்திருத்தல், உடல் உறவின்போது தோன்றும் வியர்வையால் பொட்டு அழிந்திருத்தல், மார்பில் தோன்றும் கீறல் குறிகள் முதலானவை தோற்ற மாறுபாடுகள்.
  • நாற்றம் - புணர்ச்சி வெளிப்பாட்டில் தோன்றும் உடல் மணத்தைத் தொல்காப்பியம் வெறி-நாற்றம் எனக் குறிப்பிடுகிறது.
  • ஒழுக்கம் - பதற்றத்தோடும், பறிகொடுத்தவள் போலவும் நடந்துகொள்ளுதல்
  • உண்டி - உண்ண விரும்பாமை

ஆகிய ஏழு வகையான நடத்தைகளால் தலைவி தலைவனோடு உடலுறவு கொண்டிருக்கிறாள் என்பதை உணர்ந்துகொள்ள முடியுமாம்.