Back

ⓘ விரவுப் பெயர்கள் எனக் குறிபிடப்படுபவை உயர்திணை, அஃறிணை என்னும் திணைகளிலும், ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து வகையான பால்களிலும் ..




                                     

ⓘ விரவுப் பெயர்கள்

விரவுப் பெயர்கள் எனக் குறிபிடப்படுபவை உயர்திணை, அஃறிணை என்னும் திணைகளிலும், ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என்னும் ஐந்து வகையான பால்களிலும் விரவி வருபவை. இவற்றைத் தொல்காப்பியம் 18 நூற்பாக்களில் விளக்கிக் கூறுகிறது. அன்றியும் வினையால் வேறுபடும் சொற்கள் என இரண்டு வகையினை 6 நூற்பாக்களிலும் குறிப்பிடுகிறது.

                                     

1. வகைகள்

  • திணை விரவாமை - சாத்தன் யாழ் மீட்டும், சாத்தி சாந்து அரைக்கும். - இவற்றில் சாத்தன், சாத்தி என்னும் திணைவிரவுப் பெயர்கள் வினையால் அஃறிணையை விலக்கி நிற்கின்றன.
  • திணைப் பொது - சாத்தன் வந்தான் உயர்திணை, சாத்தன் வந்தது அஃறிணை
  • மா ஓடிற்று, மா காய்த்தது - இவற்றில் விரவுப் பெயர்கள் வினையால் வேறுபட்டு நிற்கின்றன.
  • சினைமுதற்பெயர் - சீத்தலைச் சாத்தன்
  • இயற்பெயர் - சாத்தன், வந்தான், வந்தது சாத்தி, வந்தாள், வந்தது கோதை வந்தாள் வந்தது
  • நீ, நீயிர்
  • எல்லாம்
  • தான், தாம்
  • முறைப்பெயர் - தந்தை, தாய்
  • சினைப்பெயர் - முடவன் என்னும் சொல் முடம்பட்ட ஒருவனுக்கும் முடம்பட்ட விலங்குக்கும் பொதுவாக வரும் விரவுப்பெயர்
  • மா வீழ்ந்தது - இதில் மா என்னும் சொல் மாமரம் வீழ்ந்தது, மா என வழங்கப்படும் மான் வீழ்ந்தது என இருவகையாகப் பொருள் உணர்த்தும் விரவுப்பெயர்.