Back

ⓘ பரிபாடல், யாப்பு. பரிபாடல் என்னும் யாப்பு வகை பற்றிய செய்திகள் தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளன. பாடல்களை யாப்பு வகையால் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, ..




                                     

ⓘ பரிபாடல் (யாப்பு)

பரிபாடல் என்னும் யாப்பு வகை பற்றிய செய்திகள் தொல்காப்பியச் செய்யுளியலில் கூறப்பட்டுள்ளன.

  • பாடல்களை யாப்பு வகையால் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா என வகைப்படுத்துவர். மற்றும் வாழ்த்தியல், கைக்கிளை, அங்கதம், முதுசொல் எனப் பொருள்நிலை வகையானும் வகைப்படுத்துவர். பரிபாடலானது யாப்பு-வகைப் பாகுபாட்டிலும், பொருள்நிலை-வகைப் பாகுபாட்டிலும் அடங்காது, அனைத்து-வகைப் பாக்களுக்கும் பொதுவாக நிற்கும்.
  • பரிபாடலில் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து என்னும் நான்கு உறுப்புகளைக் கொண்டிருக்கும்.
  • பரிபாடலில் சொற்சீர் அடி, முடுகியல் அடி ஆகியவை பயின்று வரும். அதனால் பரிபாடலை அந்தச் சீர்கள் வரும் பாவாகவும் கொள்ளப்படும்.
  • பரிபாடல் குறைந்தது 25 அடிகளையும், அதிக-பக்கமாக 400 அடிகளையும் கொண்டிருக்கும்.