Back

ⓘ முற்று என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும். கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது: இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை ..




                                     

ⓘ முற்று

முற்று என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்
                                     

1. எடுத்துக்காட்டுகள்

"துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை." மேற்கண்ட குறளில் முதலடியில் நான்கு சீர்களுமே "து" என்று மோனையெடுக்கின்றன. எனவே இச்செய்யுள் முற்று மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.