Back

ⓘ கீழ்க்கதுவாய் என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும். கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது: இருசீர் மிசைஇணை யாகும் பொழி ..




                                     

ⓘ கீழ்க்கதுவாய்

கீழ்க்கதுவாய் என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல் கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்
                                     

1. தொடை விகற்ப வகைகள்

பின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:

  • கீழ்க்கதுவாய் எதுகைத்தொடை
  • கீழ்க்கதுவாய் மோனைத் தொடை
  • கீழ்க்கதுவாய் இயைபுத்தொடை
  • கீழ்க்கதுவாய் முரண் தொடை
  • கீழ்க்கதுவாய் அளபெடைத்தொடை
                                     

2. எடுத்துக்காட்டுகள்

"கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால் தோட்கப் படாத செவி." மேற்கண்ட குறளில் முதலடியில் முதல், இரண்டாம் மற்றும் நான்காம் சீர்கள் "கே" என்று தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் கூழை மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.