Back

ⓘ மேற்கதுவாய் என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும். கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது: இருசீர் மிசைஇணை யாகும் பொழிப் ..




                                     

ⓘ மேற்கதுவாய்

மேற்கதுவாய் என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

"இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல் கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்
                                     

1. தொடை விகற்ப வகைகள்

பின்வரும் 5 வகைகளில் இவ்விகற்பம் அமையும்:

  • மேற்கதுவாய் முரண் தொடை
  • மேற்கதுவாய் அளபெடைத்தொடை
  • மேற்கதுவாய் எதுகைத்தொடை
  • மேற்கதுவாய் மோனைத் தொடை
  • மேற்கதுவாய் இயைபுத்தொடை
                                     

2. எடுத்துக்காட்டுகள்

"பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான்தருவேன் - கோலஞ்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச் சங்கத் தமிழ்மூன்றுந் தா" நல்வழி, ஔவையார் மேற்கண்ட செய்யுளில் முதலடியில் முதல், மூன்றாம் மற்றும் நான்காம் சீர்கள் ப கொண்டு தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் மேற்கதுவாய் மோனைத்தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.