Back

ⓘ பொழிப்பு என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும். கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது: இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிட ..




                                     

ⓘ பொழிப்பு

பொழிப்பு என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்
                                     

1. எடுத்துக்காட்டுகள்

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்." மேற்கண்ட குறளில் முதலடியில் முதல் மற்றும் மூன்றாம் சீர்கள் "ம" என்று தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் பொழிப்பு மோனைத் தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.