Back

ⓘ இணை என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும். கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது: இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட ..




                                     

ⓘ இணை

இணை என்பது ஒரு வகை தொடை விகற்பமாகும்.

கீழ்கண்ட விகற்பத்தின் சூத்திரத்தில் இவ்விகற்பம் தடித்த சொற்களில் காட்டப்பபட்டுள்ளது:

இருசீர் மிசைஇணை யாகும் பொழிப்பிடை யிட்டொருவாம் இருசீ ரிடையிட்ட தீறிலி கூழை முதலிறுவாய் வருசீ ரயலில் மேல்கீழ் வகுத்தமை தீர்கதுவாய் வருசீர் முழுவதும் ஒன்றன்முற் றாமென்ப மற்றவையே." யாப்பருங்கலக்காரிகை 19-வது செய்யுள்
                                     

1. எடுத்துக்காட்டுகள்

"அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது" மேற்கண்ட குறளில் முதலடியில் முதல் மற்றும் இரண்டாம் சீர்கள் "அ" என்று தொடங்க, இரண்டாவது அடியில் "ப" என தொடங்குகின்றன. எனவே இச்செய்யுள் இணை மோனைத் தொடை வகையை பின்பற்றுகிறது எனலாம்.