Back

ⓘ அடுக்குப் பாடல்கள் ஓசை-அடுக்கிலும், எண்ணிக்கை அடுக்கிலும் காணப்படுகின்றன. ஒரு நிகழ்வின்மீது ஒத்த ஓசைப்பாக்கள் பல பாடல்களை அடுக்கிப் பாடப்பட்ட பாடல்கள் இசையடுக்க ..




                                     

ⓘ அடுக்குப் பாடல்கள்

அடுக்குப் பாடல்கள் ஓசை-அடுக்கிலும், எண்ணிக்கை அடுக்கிலும் காணப்படுகின்றன. ஒரு நிகழ்வின்மீது ஒத்த ஓசைப்பாக்கள் பல பாடல்களை அடுக்கிப் பாடப்பட்ட பாடல்கள் இசையடுக்குக் பாடல்கள்.

                                     

1. இசையடுக்கு

மூன்றடுக்குத் தாழிசை

  • கலிப்பாவில் தாழிசைப் பாடல்கள் இசையடுக்குப் பாடல்களாக ஒரு நிகழ்வின் மீது மூன்றடுக்காக வருகின்றன.

மூன்றடுக்கு வரியிசை

  • சிலப்பதிகார வரிப்பாடல்கள் மூன்றடுக்காக வரும் இசையடுக்குப் பாடல்கள்
  • ஐங்குறுநூறு 10, 10 ஆக ஒத்த இசையுடன் அடுக்கிப் பாடப்பட்ட நூல்
                                     

2. எண்ணடுக்கு

ஒரு பொபொருளின் மீது அடுக்கி வரும் பாடல்கள் ஒத்த ஓசை-அடுக்கு இல்லாமல் குறிப்பிட்ட எண்ணிக்கையில் அடுக்கி வருவதுண்டு. இவை எண்ணடுக்குப் பாடல்கள். இவற்றைப் பத்து என்னும் சொல்லால் குறிப்பிடுகின்றனர்.

பத்தடுக்கு

  • பதிற்றுப்பத்து ஒவ்வொருவர் மீதும் 10 பாடல்களை அடுக்கிப் பாடப்பட்ட நூல்
  • திருக்குறள் ஒவ்வொரு தலைப்பிலும் 10 பாடல் கொண்ட நூல்
  • ஐந்திணை ஐம்பது
  • திணைமொழி ஐம்பது
  • தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம், திருவிசைப்பா முதலான நூல்களிலும் 10 அடுக்கு முறைமை காணப்படுகிறது
  • பிள்ளைத்தமிழ் நூல்கள்
                                     

3. பத்துக்கு மேலும் அடுக்கு

14 பாடல்கள் கொண்ட அடுக்கு

  • ஐந்திணை எழுபது

30 பாடல்கள் கொண்ட அடுக்கு

  • திணைமாலை நூற்றைம்பது
  • சேது புராணம் பத்துக்கு மேற்பட்ட பல எண்ணிக்கைகளில் ஆங்காங்கே அடுக்கிப் பாடப்பட்ட துதிப்பாடல்களைக் கொண்ட நூல்