Back

ⓘ தொல்காப்பியம் செய்யுளியல் செய்திகள். தொல்காப்பியம் பொருள் அதிகாரம் வாழ்க்கைப் பாங்கினையும், அதனை வெளிப்படுத்தும் நூலின் பாங்கினையும் உணர்த்துகிறது. முதல் ஆறு இய ..




                                     

ⓘ தொல்காப்பியம் செய்யுளியல் செய்திகள்

தொல்காப்பியம் பொருள் அதிகாரம் வாழ்க்கைப் பாங்கினையும், அதனை வெளிப்படுத்தும் நூலின் பாங்கினையும் உணர்த்துகிறது. முதல் ஆறு இயல்கள் வாழ்க்கைப் பாங்கை உணர்த்துகின்றன. இறுதி மூன்று இயல்கள் தமிழ்நூல் நெறியை உணர்த்துகின்றன. கருத்துகள் உவமத்தால் கூறப்படும்; செய்யுளில் கூறப்படும்; மரபுநெறியைப் பின்பற்றிக் கூறப்படும் என இம் மூன்றும் கூறுகின்றன. இவற்றுள் தொல்காப்பியம் செய்யுளியல் வாழ்க்கைப் பாங்கை உணர்த்தும் செய்யுளின் இலக்கணத்தை 235 நூற்பாக்களில் விளக்குகிறது. யாப்பியல் வகை என 26 பாங்குகளும், வனப்பு என 8 வகைப் பாங்குகளும் இந்த இயலில் கூறப்படுகின்றன.