Back

ⓘ பால் உணர்த்தும் ஈறுகள். பால் உணர்த்தும் ஈறுகளைப் பாலறி கிளவி எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவற்றை அது ன், ள், ர், ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்னும் 11 ..




                                     

ⓘ பால் உணர்த்தும் ஈறுகள்

பால் உணர்த்தும் ஈறுகளைப் பாலறி கிளவி எனத் தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அவற்றை அது ன், ள், ர், ப, மார், து, று, டு, அ, ஆ, வ என்னும் 11 எழுத்துக்கள் என வரையறுத்துச் சுட்டிக் காட்டுகிறது. உயர்திணையில் ஆண்பால், பெண்பால், பலர்பால், அஃறினையில் ஒன்றன்பால், பலவின்பால் என்பன தமிழ் மொழியில் உள்ள ஐந்து பால்கள்.

பெயரும் வினையுமாக வாக்கியம் அமையும்போது பெயரில் தோன்றும் பாலறி கிளவியும், வினையில் தோன்றும் பாலறி கிளவியும் மயக்கமின்றி முரண்படாமல்வருதல் நெறி.

  • நல்லவ ள் வந்தா ள் பெண்பால்
  • நல்லவை வந்தனஅ பலவின்பால், தீயவை வாராஆ, அவை உண்கு வ எதிர்காலம்
  • நல்லவர் வந்தா ர் பலர்பால், வரு ப எதிர்காலம், ஆர்த்தார் கொண் மார் வந்தார். முற்றெச்சம்
  • நல்லவ ன் வந்தா ன் ஆண்பால்
  • நல்ல து வந்த து ஒன்றன்பால் ஆடு ஓடிற் று, தவளை குண்டுகட் டு குண்டுக்கண் உடையது

நன்னூல் இவற்றை விகுதி என்று பதத்தின் பகுதியாகக் காட்டுகிறது.