Back

ⓘ செப்பலோசை. வெண்பா விற்கான ஓசை செப்பலோசை. செப்பல் என்றால் வினாவிற்கு விடை கூறுதல். வினாவிற்கு விடை கூறுதல் போன்ற ஒசையமைப்பு இதுவே செப்பலோசை எனப்படும். செப்பலோசை ..




                                     

ⓘ செப்பலோசை

வெண்பா விற்கான ஓசை செப்பலோசை. செப்பல் என்றால் வினாவிற்கு விடை கூறுதல். வினாவிற்கு விடை கூறுதல் போன்ற ஒசையமைப்பு இதுவே செப்பலோசை எனப்படும். செப்பலோசை மூன்று வகைப்படும்:

௧. ஏந்திசைச் செப்பலோசை ஏந்திசைச் செப்பலோசை எனப்படுவது வெண்சீர் வெண்டளைகள் காய் முன் நேர் மட்டுமே கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு

யாதானும் நாடாமால் ஊராமால் என்ஒருவன் சாந்துணையும் கல்லாத வாறு.

௨. தூங்கிசைச் செப்பலோசை

தூங்கிசைச் செப்பலோசை எனப்படுவது இயற்சீர் வெண்டளைகள் மா முன் நிரை மற்றும் விளம் முன் நேர் மட்டுமே கொண்டிருக்கும்.

எடுத்துக்காட்டு

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.

௩. ஒழுகிசைச் செப்பலோசை

ஒழுகிசைச் செப்பலோசை எனப்படுவது இருவகை வெண்டளைகளும் சேர்ந்து வரும் இயற்சீர் வெண்டளை மற்றும் வெண்சீர் வெண்டளை.

எடுத்துக்காட்டு

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்