Back

ⓘ அளவடி. செய்யுள் நூலார் யாவரும் ஒத்து நேர்ந்துகொண்ட அடி நேரடி. நேர்தல் - ஒத்துக்கொள்ளுதல் எதுகை மோனை முதலிய தொடை விகற்பங்களை அறிந்து கணக்கிட உதவுவது நான்கு சீரால ..




                                     

ⓘ அளவடி

செய்யுள் நூலார் யாவரும் ஒத்து நேர்ந்துகொண்ட அடி நேரடி. நேர்தல் - ஒத்துக்கொள்ளுதல் எதுகை மோனை முதலிய தொடை விகற்பங்களை அறிந்து கணக்கிட உதவுவது நான்கு சீரால் இயன்ற அளவடி. எனவே கணக்கிடுவதற்குப் புலவர் எல்லோரும் அளவடியையே நேர்ந்தனர். ஆகையால் அளவடியின் பெயர் ‘நேரடி’ எனக் கொள்ளப்பெற்றது.

என்னும் இப்பாடல் கலிவிருத்தமாகும். இது நான்கு அடிகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடியும் நான்கு சீர்களால் அமைந்துள்ளது. நான்கு சீர்களைக் கொண்ட இந்த அளவடியில்/ நேரடியில், முறையே நிரையொன்றாசிரியத்தளை, இயற்சீர் வெண்டளை. நேர்ஒன்றாசிரியத்தளை என்று மூன்று தளைகள் தோன்றுகின்றன. இதனை மூன்று தளையால் வந்த அடி எனலாம். முத்தளையால் வந்த அடி, அளவடி/நேரடி. இதனையே ‘முத்தளை அளவடி’ என்கின்றது இலக்கணம்.