Back

ⓘ நூற்பா. சூத்திரம் எவ்வாறு இருக்கும் என நன்னூல் விளக்குகிறது. சில எழுத்துக்களால் அமைந்து சுருக்கமாக இருக்கவேண்டும். கண்ணாடி பொருளைக் காட்டுவது போலப் பொருளைக் காட ..




                                     

ⓘ நூற்பா

சூத்திரம் எவ்வாறு இருக்கும் என நன்னூல் விளக்குகிறது.

  • சில எழுத்துக்களால் அமைந்து சுருக்கமாக இருக்கவேண்டும்.
  • கண்ணாடி பொருளைக் காட்டுவது போலப் பொருளைக் காட்டுவதாக இருக்கவேண்டும்.
  • திட்பமும், நுட்பமும் கொண்டிருக்கவேண்டும்
  • சுருக்கத்தில் பல்வகைப் பொருளும் செறிவாக இனிமையாக விளக்கப்பட்டிருக்க வேண்டும்
                                     

1. சூத்திரநிலை

ஒரு சூத்திரம் ஏனைய சூத்திரங்களோடு எவ்வாறு தொடர்பு கொண்டிருக்கவேண்டும் என்பதையும் நன்னூல் விளக்குகிறது.

  • தவளை தத்திப் பாய்வது போல சில நூற்பாக்களை இடைவிட்டுத் தவ்விப் பாய்ந்து அமர்ந்து பொருள் கொள்ள வைக்கும்.
  • முன்னும் பின்னும் தொலைவிலுள்ள இரையை அரிமாசிங்கம் பார்ப்பது போல, முன்னும் பின்னும் தொலைவில் உள்ள நூற்பாக்களை நோக்கி முரண்பாடு இல்லாமல் சொல்லும்.
  • முன்னும், பின்னும் தொடர்புடையதாக ஆற்றில் தண்ணீர் ஒழுகுவது போலத் தழுவிக்கொண்டு நடக்கும்.
  • பருந்து வானத்திலிருந்து வீழ்ந்து இரையைக் கவ்வுவது போல எங்கிருந்தோ பாய்ந்து கருத்தைச் சொல்வதும் உண்டு.
                                     

2. சூத்திரத்தைக் குறிக்கும் காரணப் பெயர்கள்

  • வகை – பிரித்து வகைப்படுத்திக் கூறுவது
  • கொண்டியல் – பிறர் கூறியனவற்றை தானும் அப்படியே ஏற்றுக்கொண்டு அவர் நூற்பாவையே தானும் கூறுதல்.
  • செய்கை – தான் நாட்டும் செயலைக் கூறுவது
  • பிண்டம் – கருப்பொருளாக அமைவது
  • புறனடை – தொகுப்புலை போல முடிவுரையில் கூறுதல்
  • குறி –குறிக்கோளைப் பற்றி வழுவாமல் செல்வது.
  • தொகை – தொகுத்துக் கூறுவது