Back

ⓘ பண்புப்பெயர். பொருளின் தன்மை எத்தகையது என்று கூறும் பெயர்கள் பண்புப்பெயர்கள் ஆகும். பண்பானது நிறம், சுவை, அளவு, வடிவம், குணம் அல்லது பண்பு ஆகியவற்றின் அடிப்படைய ..




                                     

ⓘ பண்புப்பெயர்

பொருளின் தன்மை எத்தகையது என்று கூறும் பெயர்கள் பண்புப்பெயர்கள் ஆகும். பண்பானது நிறம், சுவை, அளவு, வடிவம், குணம் அல்லது பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிறக்கும்.

சான்று: வெண்சங்கு - வெண்மை + சங்கு -நிறப்பண்பைக் குறித்த பண்புப்பெயர். புளிக்குழம்பு - புளிப்பு + குழம்பு - சுவைப்பண்பைக் குறித்த பண்புப்பெயர். சதுரக்காகிதம் - சதுரம் + காகிதம் -வடிவப் பண்பைக் குறித்த பண்புப்பெயர். நீள்வானம் - நீளம் + வானம் - அளவுப் பண்பைக் குறித்த பண்புப்பெயர். இன்சொல் - இனிமை + சொல் - குணப் பண்பைக் குறித்த பண்புப்பெயர்.

                                     

1. நன்னூல் பார்வை

செம்மை சிறுமை சேய்மை தீமை வெம்மை புதுமை மென்மை மேன்மை திண்மை உண்மை நுண்மை இவற்றின் எதிர்ச்சொல் கருமை பெருமை அண்மை நன்மை குளுமை பழைமை வன்மை சிறுமை நொய்மை பொய்மை பருமை ஆகியவை பண்பின் பகாப்பதம் என நன்னூல் குறிப்பிடுகிறது.