Back

ⓘ தொல்காப்பியம் வினையியல் செய்திகள். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. சொல்லதிகாரம் சொற்கள் இணைந்து பொருள் தரும் பாங்கை உணர்த்த ..




                                     

ⓘ தொல்காப்பியம் வினையியல் செய்திகள்

தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் என மூன்று அதிகாரங்களைக் கொண்டது. சொல்லதிகாரம் சொற்கள் இணைந்து பொருள் தரும் பாங்கை உணர்த்துகிறது. இந்தப் பாங்கை நாம் வாக்கியம் என வழங்கிவருகிறோம். வினையியல் சொல்லதிகாரத்தில் ஆறாவது இயலாக வருகிறது.

கிளவியாக்கம், வேற்றுமையியல், வேற்றுமை-மயங்கியல், விளிமரபு என்னும் முதல் நான்கு இயல்களும் வாக்கிய அமைப்பை உணர்த்துகின்றன. அடுத்து வரும் பெயரியல், வினையியல், இடையியல், உரியியல் என்னும் நான்கு இயல்களும் வாக்கியத்தில் வரும் சொற்களைப் பாகுபடுத்திக் காட்டுகின்றன. ஒன்பதாவதாக உள்ள எச்சவியல் 8 இயல்களில் சொல்லப்படாத எச்சமிச்சச் செய்திகளைக் கூறுகிறது.

செய்திகள் நூற்பா வரிசை எண்ணுடன் தரப்படுகின்றன
                                     

1. வினையின் செயல்

வினைச்சொல் வேற்றுமை கொள்ளாது காலம் காட்டும் -1- காலம் மூன்று வகைப்படும் -2- இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்னும் மூன்று காலமும் தெரியும்-நிலையிலும், குறிப்பு-நிலையிலும் தோன்றும் -3- வினைச்சொல்லானது உயர்திணைக்கும், அஃறிணைக்கும், இரண்டிலும் விரவும் பெயர்க்கும் உரிமை உடையது -4-

                                     

2. உயர்திணை

உயர்திணையில் தன்மைப்பன்மை வினைச்சொல் 8 ஈறுகளில் முடியும் -5-

  • டும் – யாம் உண்டும்
  • எம் – யாம் வந்தனெம்
  • அம் – யாம் வந்தனம்
  • ஆம் – யாம் வந்தாம்
  • தும் – யாம் வருதும்
  • றும் – யாம் சேறும்
  • கும் – யாம் உண்கும்
  • ஏம் – யாம் வந்தேம்

தன்மை-ஒருமை வினைச்சொல்லின் 7 ஈறு -6-

  • என் – யான் வந்தனென்
  • று – யான் சேறு செல்கிறேன்
  • து – யான் வருது வருகிறேன்
  • கு – யான் உண்கு
  • அல் – யான் வருவல்
  • டு – யான் உண்டு உண்கிறேன்
  • ஏன் – யான் வந்தேன்

செய்கு வந்தேன் செய்துகொண்டு வந்தேன் என மற்றொரு வினை கொண்டும் முடியும் -7- படர்க்கை-ஒருவர் 4 ஈறு கொள்ளும் -8-

  • ஆள் – அவள் வந்தாள்
  • அள் – அவன் வந்தனள்
  • ஆன் – அவன் வந்தான்
  • அன் – அவன் வந்தனன்

படர்க்கை-பலர் 3 ஈறு கொள்ளும் -9, 10-

  • ஆர் – உண்டணார்
  • மார் – ஆர்த்தார் கொண்மார் வந்தார் ஆரவாரத்தோடு வாங்கிக்கொண்டே வந்தனர்
  • ப – உண்ப
  • அர் – உண்டனர்

இந்த 23 ஈறுகள் பன்மையும் ஒருமையும் ஆகிய பால் உணர்த்திக்கொண்டு உயர்திணையில் வரும். -11-

மேலே காட்டப்பட்ட 24-ல் மார்-ஈறு பன்மையையோ ஒருமையையோ காட்டாமையால் அது விலக்கப்பட்டு 23 என ஈறு வரையறுக்கப்பட்டது

வந்தனம், வந்தாம் தொடக்கத்தன தன்மையொடு முன்னிலையையும் சேர்த்து உணர்த்தும் -12- யார் என்னும் சொல் 3 பாலுக்கும் உரியது. -13-

அவன் யார், அவள் யார், அவர் யார்

பால் உணரும்படி வந்த உயர்திணை ஈறு மூன்றும் செய்யுளில் ஆ