Back

ⓘ தொடர்மொழி. தொல்காப்பியர் மொழியை அதாவது சொல்லை புணர்நிலைக் கோணத்தில் மூன்று வகையாக மொழிமரபு இயலில் பாகுபடுத்திக் காட்டுகிறார். அவை: 1.ஓரெழுத்தொருமொழி, 2.ஈரெழுத்த ..




                                     

ⓘ தொடர்மொழி

தொல்காப்பியர் மொழியை அதாவது சொல்லை புணர்நிலைக் கோணத்தில் மூன்று வகையாக மொழிமரபு இயலில் பாகுபடுத்திக் காட்டுகிறார். அவை: 1.ஓரெழுத்தொருமொழி, 2.ஈரெழுத்தொருமொழி, 3. இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி என்பன.

ஓரெழுத்தொருமொழியும், ஈரெழுத்தொருமொழியும் இரண்டு மாத்திரை அளவில் மிகாதவை. இரண்டு மாத்திரையைக் காட்டிலும் மிகுந்த ஒலி கொண்டவை தொடர்மொழி. அதாவது இரண்டு-மாத்திரையை இறந்து இசைப்பவை.

                                     

1. ம்-ன் மயங்கும் தொடர்மொழி

நிலம் - நிலன், பிலம் - பிலன், கலம் - கலன், வலம் - வலன், உலம் - உலன், குலம் - குலன், கலம் - கடன், பொலம் - பொலன், புலம் - புலன், கலம் - கலன், நலம் - நலன், குளம் - குளன் -- என இத் தொடக்கத்தன. இவை நச்சினார்க்கினியார் எடுத்துக்காட்டுகள்.
                                     

1.1. ம்-ன் மயங்கும் தொடர்மொழி எப்போது மயங்கும்

இதனைத் தொல்காப்பியரோ, தொல்காப்பிய உரையாசிரியர்களோ விளக்கவில்லை. என்றாலும் இலக்கிய ஆட்சிகளை நோக்கும்போது மயங்கம் எதனால் என்பதை நாம் உணர்ந்துகொள்ள முடிகிறது. கீழ் வரும் ஆட்சிகளைப் பாருங்கள். தெளிவாகப் புரிந்தவிடும். அறம் பூண்டார் - திருக்குறள் 23 அறம் பெருகும் - திருக்குறள் 96 அறம் பார்க்கும் - திருக்குறள் 130 அறம் பொருள் கண்டார் - திருக்குறள் 141 அறம் கூறான் - திருக்குறள் 181 அறம் கூறும் - திருக்குறள் 183 - இப்படிப் பல அனைத்தறன் ஆகுல நீர பிற - திருக்குறள் 34 அறனே - திருக்குறள் 39 அன்பும் அறனும் உடைத்தாயின் - திருக்குறள் 45 அறன் இழுக்கா இல்வாழ்க்கை - திருக்குறள் 48 அறன் எனப்பட்டதே - திருக்குறள் 49 - இப்படிப் பல அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை நின்றாரின் பேதையார் இல் - திருக்குறள் 142 இதில் பிறன் என்னும் சொல் மயங்காதாகையால் எதுகைக்காக அறங்கடை என்பது அறன்கடை எனத் திரிந்து நின்றது. அறன்வலியுறுத்தல் - திருக்குறள் அதிகாரம் 4 இதில் வ எழுத்து அரையுயிர்
                                     

2. விதி

இந்த ஆட்சிகள் உயிரெழுத்து ஒன்றும்போது ன் என்றும், மெய்யோடு அதாவது உயிர்மெய்யோடு ஒன்றும்போது ம் என்றும் மயங்கும் என்னும் தமிழ்மரபினை உணர்த்துகின்றன.

ஏனைய மொழிகளுக்கும் இந்த விதி பொருந்துவதைச் சங்கநூல் ஆட்சிகளில் உணர்த்துகொள்ளலாம்.

                                     

3. ம்-ன் மயங்காத் தொடர்மொழி ஒன்பது

  • இளம்பூரணர் எடுத்துக்காட்டு
அழன், உகின், கடான், குயின், செகின், பயின், புழன், வயான், விழன்,
  • நச்சினார்க்கினியார் விளக்கம்
அழன், எகின், கடான், குயின், செகின், பயின், புழன், வயான், விழன்,