Back

ⓘ தொல்காப்பியம் மொழிமரபுச் செய்திகள். தொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டது. முதலாவதாக உள்ளது எழுத்ததிகாரம். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள ..




                                     

ⓘ தொல்காப்பியம் மொழிமரபுச் செய்திகள்

தொல்காப்பியம் மூன்று அதிகாரங்கள் கொண்டது. முதலாவதாக உள்ளது எழுத்ததிகாரம். இதில் ஒன்பது இயல்கள் உள்ளன. அவற்றில் இரண்டாவதாக உள்ள இயல் மொழிமரபு.

இங்கே மொழி என்றால் சொல்லென்று பொருள். பேசப்படுவது மொழி. அதற்கு எழுத்து வடிவமும் உருவாக்கிக்கொண்டுள்ளோம். பேசும்போது எழுத்து எழுத்தாகப் பேசுவதில்லை. சொல் சொல்லாக இணைத்துத்தான் பேசுகிறோம். எனவே மொழிவது சொல்லாகிறது.எனவே இங்கு மொழி என்பது மொழியப்படும் சொல்லைக் குறிக்கும்.

மரபு என்பது இங்கு முன்னோரைப் பின்பற்றும் வழக்கத்தைக் குறிக்கும்.

முதலாவது இயலில் முதலெழுத்துக்கள் விளக்கப்பட்டன. இந்த இரண்டாது இயலில் சார்பெழுத்துக்கள், மொழிமுதல் எழுத்துக்கள், மொழியிறுதி எழுத்துக்கள் விளக்கப்படுகின்றன.

                                     

1.1. செய்திகள் மொழி வகைப்பாடு 3 நிலை

ஓரெழுத்தொருமொழி - இரண்டு மாத்திரையின் மிகாதவை ஆ, பூ, கா, து, நொ போன்று தனியெழுத்து நிலையில் பொருள் தரும் சொற்களை ஓரெழுத்தொருமொழி என்றனர். "இவற்றில் கா காட்டைக் குறிக்கும்போது பெயர்ச்சொல். காப்பாற்று என்னும் பொருள் தரும்போது வினைச்சொல். உண்கா கொற்றா என்பதில் உள்ள கா இடைச்சொல். குறில் உயிரெழுத்து ஐந்தில் எதுவும் தனிதொழி ஆகாது. உயிர்மெய் குறிலில் து, நொ இரண்டு எழுத்து தனிமொழி ஆகும் ஈரெழுத்தொருமொழி - இரண்டு மாத்திரையின் மிகாதவை மண், மணி இரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி - இரண்டு மாத்திரையின் மிக்கவை மலர், தேன்
                                     

1.2. செய்திகள் குற்றியலுகரம்

மொழியில் மாத்திரை குறைந்து ஒலிக்கும் உகரம் குற்றியலுகரம் எனப்படும். அவை வல்லின எழுத்தின்மேல் ஏறி ஊர்ந்துவரும். மொழியின் இறுதியில் வரும் - நாகு, வரகு மொழியின் இடையில் வரும் - செக்குக்கணை, சுக்குக்கோடு சுக்குப்பொடி என்னும்போது வரும் கு குற்றியலுகரம் அன்று
                                     

1.3. செய்திகள் குற்றியலிகரம்

குற்றியலுகரத்தில் முடியும் சொல்லை அடுத்து யா எழுத்தில் தொடங்கும் சொல் வந்தால் நிலைமொழியில் உள்ள குற்றியலுகரமானது குற்றியலிகரமாக மாறும். வரகியாது வரகு+யாது யா என்னும் உரையசைக்கிளவி முன் கேண்மியா (கேளும்