ⓘ Free online encyclopedia. Did you know? page 97




                                               

சந்தோஷ் பாபு

இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக தமிழ்நாடு அரசுப் பணியிலிருக்கும் டாக்டர் சந்தோஷ் பாபு 1995 ஆம் ஆண்டு பிரிவு இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாவார். தற்போது தமிழ்நாடு மின்னணுவியல் கழகத்தின் நிர்வாக இயக்குனராகவும் இணைய வழி அரசின் இயக்குனராகவும் உள்ளார்.

                                               

சி. உமாசங்கர்

சி.உமாசங்கர் தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார். 1990 ஆம் ஆண்டு துணை மாவட்ட ஆட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியான மயிலாடுதுறையின் துணை மாவட்ட ஆட்சித் தலைவராக பணியைத் துவங் ...

                                               

ந. அருள்

ந. அருள், 2009 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் முதல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் கீழான மொழி பெயர்ப்புத் துறை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார். அருந்தமிழில் அயற்சொற்கள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார். பின்னர் ...

                                               

ப. வி. ச. டேவிதார்

ப. வி. ச. டேவிதார் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி. இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் வணிகவியலில் இளநிலைப் பட்டமும், அதன் பின்பு அதே கல்லூரியில் பொது நிர்வாகத்தில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னை கிறித்துவக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடத்திற ...

                                               

வி. கு. சுப்புராசு

வி. கு. சுப்புராசு தமிழ்நாட்டரசின் சுகாதாரத் துறையின் முதன்மைச் செயலாளர் ஆவார். இவரது சொந்த ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள நாட்டாபட்டி எனும் ஒரு சிற்றூர் ஆகும். இவரது தந்தை குமாரசாமி அய்யா தன் மகன்கள் நன்றாக படிக்க வேண்டும் என எண்ணி திருமங்கலத்தில் ...

                                               

இல. நடராசன்

இல. நடராசன் என்பவர் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சரான இராசாசி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்கியதை எதிர்த்து, 1937இல்நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் முதன்முதலாக உயிர்விட்ட போராளி ஆவார்.

                                               

சிவகங்கை இராசேந்திரன்

சிவகங்கை இராசேந்திரன் என்று அறியப்படும் மு. இராசேந்திரன் இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது, போராடி துப்பாக்க ...

                                               

தாலமுத்து

தாலமுத்து என்பவர் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சரான இராசாசி பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக ஆக்குவதாக 1938. ஏப்ரல் 21 அன்று அறிவித்ததை எதிர்த்து, நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது தமிழகத்தில் 1939 இல் இரண்டாவதாக உயிர்விட்ட போராளி ...

                                               

அன்புக்கொடி நல்லதம்பி

அன்புக்கொடி நல்லதம்பி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் வரலாற்றுப் பேராசிரியையாகப் பணியாற்றியவர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையின் கீழான 12 ஆம் வகுப்புக்கான வரலாற்றுப் பாடநூல் குழுத் தலைவராகப் பணியாற்றியவர். பல்வேறு நூல ...

                                               

அஜயன்பாலா

அஜயன் பாலா என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர், தமிழ்த் திரைப்பட இயக்குனர், வசனகர்த்தா, மற்றும் திரைப்பட நடிகர். சென்னையில் வசித்து வரும் இவர் 6 அத்தியாயம் என்னும் படத்தொகையில் ஒரு அத்தியாயத்தை இயக்கியுள்ளார். ஆனந்த விகடனில் வெளியான "நாயகன்" மூலம் பரவலா ...

                                               

ஆ. சந்திரசேகரன்

ஆ. சந்திரசேகரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் 25 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றியவர். கல்லூரியின் துணை முதல்வர், முதல்வர் பொறுப்புகளையும் வகித்திருக்கிறார். தமிழக நிலச் சட்டங்கள், ஓர் இந்துப ...

                                               

ஆர். கே. நாராயணன்

ஆர். கே. நாராயணன் என்னும் ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணசாமி உலக அளவில் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர், இந்திய நாவல் ஆசிரியர் ஆவார். பிரபல கார்டூனிஸ்ட் ஆர். கே. லஷ்மண் இவரது தம்பியாவார். இவரின் உணர்ச்சிப்பூர்வமான நாவல்கள் 20 ஆம் நூற்றாண்டு இந்தியரின ...

                                               

ஆர். சூடாமணி

ஆர். சூடாமணி தமிழகப் பெண் எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் என புகழப்பட்டவர். இவர் ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். கலைமகள், சுதேசமித்திரன், தினமணிகதிர், கல்கி, விகடன் என்று எல்லாப் பத்திரிகைகளிலும் சூடாமணி எழுதினார். தமிழில ...

                                               

இரா. குமரவேலன்

இரா. குமரவேலன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் பிறந்த இவர் சென்னை, பச்சையப்பன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பன்மொழி அறிவு பெற்றவர். பூங்குன்றன் கவிதைகள், தமிழ் நாடக ஆய்வு, கவிதை நாடகம் - ஒரு கண்ணோட்டம், பொன்னி, தம ...

                                               

எல். கைலாசம்

வரலாற்றுப் புதின எழுத்தாளர் டாக்டர் எல். கைலாசம், சென்னை மைலாப்பூரைச் சேர்ந்தவர். இவர் பதினைந்துக்கும் மேற்பட்ட வரலாற்றுப் புதினங்களையும் மட்டுமல்லாது, தணிக்கை துறை சம்பந்தமான பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் இயற்றியுள்ளார். இவர் எழுதிய மலர்ச்சோலை ம ...

                                               

எஸ். எல். வி. மூர்த்தி

எஸ்.எல்.வி. மூர்த்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வருகிறார். தமிழ் நாளிதழ்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கதை, கட்டுரைகளை எழுதியிருக்கிறார். வெற்றிக்கு வித்திடும் ஆசிரியர்களே, வெற்றிக்கு விரைந்திடு, சவாலே சமாளி போன்ற கட்டுரைகளை வெ ...

                                               

ஏ. திருநாவுக்கரசு

ஏ. திருநாவுக்கரசு (பிறப்பு: ஆகத்து 12 1927, தமிழக எழுத்தாளர், தேவகோட்டை எனுமிடத்தில் பிறந்து தற்போது, தியாகராய நகர் சென்னையில் வாழ்ந்துவரும் இவர் வானதி பதிப்பக உரிமையாளரும், 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதிப்புத் தொழிலில் ஈடுபட்டு 7000க்கும் மேற்பட் ...

                                               

ஏ. வி. எம். ஜபார்தீன்

ஏ. வி. எம். ஜபார்தீன் பிரிம்ரோஸ் கார்டன் சீமான் சீனிவாசன் சாலை ஆழ்வர்பேட்டை சென்னையில் பிறந்த இவர் ஒரு இலக்கியப் புரவலரும்," சமநிலைச் சமுதாயம்” இதழைப் பொருள் நோக்கமின்றிச் சக விழிப்புணர்ச்சிக்காக மிகச் சிறப்பாக நடத்தி வருபவரும், சீறாப்புராணத்துக் ...

                                               

க. சிவநேசன்

க. சிவநேசன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசிக்கும் இவர் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சித்த மருத்துவத்தில் தேர்ச்சி பெற்று, அரசு மருத்துவராகப் பதிவு பெற்று மருத்துவப் பணிகளையும் செய்தவர். இவர் ...

                                               

கல்லை ஆ.துரை

சென்னையிலுள்ள கெல்லட் மேல்நிலைப் பள்ளியில் 32 ஆண்டுகள் தமிழாசிரியராகப் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

                                               

கே. பாலசந்தர் (எழுத்தாளர்)

கே. பாலசந்தர் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையைச் சேர்ந்த இவர் தற்போது அமெரிக்காவில் இலினோயிஸ் பல்கலைக்கழகத்தில் மருத்துவத் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய" காக்க காக்க இதயம் காக்க” எனும் நூல் தமிழ்நாடு அரசின் ...

                                               

சா. பாலுச்சாமி

சா. பாலுச்சாமி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர் சென்னை, தாம்பரம் கிறித்தவக் கல்லூரியில் தமிழ்த் துறை இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். மாரிக்கால இரவுகள், மிளகுக் கொடிகள் போன்ற நூல்களை எழுதிய ...

                                               

சாந்தகுமாரி சிவகடாட்சம்

சாந்தகுமாரி சிவகடாட்சம் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னை திருவல்லிக்கேணியில் பிறந்த இவர் எழுதிய பயணக் கட்டுரைகள் பல அச்சிதழ்களில் வெளியாகி இருக்கின்றன. இவர் எழுதிய" சுற்றும் உலகில் சுற்றிய இடங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம ...

                                               

சிவசக்தி பாண்டியன்

சிவசக்தி பாண்டியன் என்னும் பாண்டியன் என்பவர் ஒரு தமிழகத் திரைப்படத் தயாரிப்பாளராவார். சென்னையைச் சேர்ந்தவரான இவர் துவக்கத்தில் திரைப்பட விநியோகத் தொழிலைச் செய்வதுவந்தார். பின்னர் சென்னை பாடியில் உள்ள சிவசக்தி என்ற திரையரங்கை குத்தகைக்கு எடுத்து ந ...

                                               

சுரேந்திர மேத்தா

சுரேந்திர மேத்தா, பதினெட்டாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட உலக வெஜிடேரியன் காங்கிரஸ் அமைப்பின் தலைவராகப் பணியாற்றிய முதல் ஆசியர். உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இவ்வமைப்பின் மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார். இவ்வமைப்பினால் வழங்கப்படும் மங்கர் விரு ...

                                               

டி. தட்சிணாமூர்த்தி

டி. தட்சிணாமூர்த்தி என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவர் பேராசிரியராகத் தன் பணியைத் தொடங்கித் தற்போது கல்லூரி முதல்வராகப் பணியாற்றி வருகிறார். இவர் ஜி. பாலன் என்பவருடன் இணைந்து எழுதிய" ...

                                               

திவாகர் (எழுத்தாளர்)

திவாகர் 1956 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை காலஞ்சென்ற வெங்கடராமன், சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றியவர். நாகை மாவட்டம், திருவாலி திருநகரியைச் சேர்ந்தவர். சென்னையில் கல்வி கற்ற திவாகர் 1977 இல் ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவுக்குப் பணி நிமித் ...

                                               

தோ. ஜம்புகுமாரன்

தோ. ஜம்புகுமாரன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் வசித்து வரும் இவர் தமிழில் முதுகலைப் பட்டமும், கல்வியியலில் இளங்கலைப் பட்டமும், புலவர் பட்டமும் பெற்று, தலைமைத் தமிழாசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் பணியாற்றியவர். இவர் எழுதிய "பா ...

                                               

நம்பெருமாள் செட்டியார்

நம்பெருமாள் செட்டியார் என்பவர் சென்னையைச் சேர்ந்த கட்டட ஒப்பந்தக்காரரும், பொறியாளரும் மற்றும் பெரும் செல்வந்தரும் ஆவார். இவர் சென்னையில் பெரிய, பேர் பெற்ற கட்டடங்களைக் கட்டியவர்.

                                               

ப. சரவணன் (தமிழக எழுத்தாளர்)

இவர் சென்னையில் சு. பழனிசாமி - ப. அனுசுயாதேவி ஆகியோருக்குப் பிறந்தார். மதுரை அல்-அமீன் மேல்நிலைப் பள்ளியில் 1989-1995வரை பள்ளிக் கல்வியை முடித்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 1995-2000 வரை தமிழ் இலக்கியம் பயின்றார். சென்னையிலும் திருச்செங்கோட்டி ...

                                               

பத்மாவதி விவேகானந்தன்

பத்மாவதி விவேகானந்தன் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். சென்னையில் பிறந்த இவர் ”காலந்தோறும் மானுடம்”," தகழியின் நாவல்கள் ஓர் ஆய்வு”," தமிழாக்கம் பெற்றுள்ள மலையாள நாவல்களின் போக்குகள்” எனும் நூல்களை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய "உன்னை அறிந்தால்" எனு ...

                                               

பரிதி இளம்வழுதி

பரிதி இளம்வழுதி என்பவர் இந்திய அரசியல்வாதியாவார். திராவிட இயக்கக்கொள்கையில் பற்றுக்கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டச் செயலாளராக இருந்த இளம்வழுதி என்பவருக்கு மகன் ; சிறந்த பேச்சாளர்; சட்டமன்ற உறுப்பினர்; இதழாளர்.

                                               

பிலோ இருதயநாத்

பிலோ இருதயநாத் இந்தியாவில் உள்ள பல்வேறு ஆதிவாசிகளையும் நாடோடிகளையும் நேரில் சென்று சந்தித்து அவர்கள் வாழ்க்கை முறை பற்றி அறிந்து கொண்டு அதை தமிழ் இலக்கியங்களுடன் ஒப்பிட்டு கட்டுரைகள் எழுதியவர் ஆவார். இவர் மைசூரில் பிறந்து சென்னையில் வளர்ந்தவர். ச ...

                                               

மதுமிதா (எழுத்தாளர்)

மதுமிதா என்ற "மஞ்சு ரெங்கநாதன்" ஒரு தமிழக எழுத்தாளர். கவிதை, சிறுகதை, கட்டுரை, நேர்காணல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட இவர். சமசுக்கிருதத்திலிருந்து மொழிபெயர்ப்பு நூலொன்றையும் வெளியிட்டுள்ளார்.

                                               

மா. சு. சம்பந்தன்

மா. சு. சம்பந்தன் தமிழக எழுத்தாளர் ஆவார். தமிழக முதல்வர்கள் மூவரிடம் விருதும் பரிசும் பெற்ற பெருமைக்குரியவர். சிறந்த இதழியலாளராகவும், பேச்சாளராகவும், தனித்தமிழ்ப் பற்றாளராகவும், பெரியாரியச் சிந்தனையாளராகவும், பதிப்பியல் முன்னோடியாகவும் விளங்கியவர ...

                                               

முகம்மது அப்துல் அலி

அல்-ஹஜ் நவாப் குலாம் முகம்மது அப்துல் அலி கான் பகதூர் தற்போதைய ஆற்காடு இளவரசராக பட்டம் ஏற்றிருப்பவராவார். இவர் 1993 சூலையில் தமது தந்தை குலாம் முகம்மது அப்துல் காதிரின் மறைவிற்குப் பிறகு இப்பட்டத்திற்கு உரியவரானார். இவரது குடும்பத்தினர் இரண்டாவது ...

                                               

மே. வீ. வேணுகோபாலப் பிள்ளை

மே. வீ. வேணுகோபாலன் பதிப்பாசிரியராகவும், படைப்பாளராகவும் விளங்கியவர். தமிழுலகால், இலக்கணத் தாத்தா எனவும், மகாவித்வான் எனவும் அழைக்கப்பெற்றவர்.

                                               

வித்யாசாகர் (எழுத்தாளர்)

வித்யாசாகர் புதுச்சேரியைப் பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்க் கவிஞர். வெங்கடாசலம் எனும் இயற்பெயருடைய இவர் முதுகலை இயந்திரப் பொறியாளர். குவைத்தில் எண்ணெய் சார்ந்த நிறுவனத்தில் தர மேலாண்மை மற்றும் ஆய்வுத ...

                                               

விமலாதித்த மாமல்லன்

சி. நரசிம்மன் என்ற இயற்பெயர் கொண்ட இவர் மாத்வ குடும்பத்தைச் சார்ந்த கன்னட – மராட்டியத் தாய் தந்தையருக்கு, சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் பிறந்தார். பள்ளிப்பருவம் பாண்டிச்சேரியில். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றவர், எனி ...

                                               

அ. கி. பரந்தாமனார்

அல்லிக்குழி கிருட்டிணசாமி பரந்தாமனார் என்னும் அ. கி. பரந்தாமனார் எழுத்தராக வாழ்க்கையைத் தொடங்கி தமிழ்ப்பேராசிரியராக உயர்ந்தவர் ஆவார். எழுத்தாளர், கவிஞர், சொற்பொழிவாளர் மற்றும் வரலாற்று ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.

                                               

இராம. பெரியகருப்பன்

தமிழண்ணல் என்கிற இராம. பெரியகருப்பன் ஒரு தமிழறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் தமிழ் ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக விளங்கியவர்.

                                               

ச. வே. சுப்பிரமணியன்

ச. வே. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளரும் தமிழறிஞரும் ஆவார். திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியில் விரிவுரையாளராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். இவர் எழுதிய த ...

                                               

சண்முக. செல்வகணபதி

முனைவர் சண்முக. செல்வகணபதி தமிழ் இலக்கியங்களிலும், தமிழிசையிலும் ஆழ்ந்த புலமைபெற்று, எழுத்தாலும் பேச்சாலும் தமிழ்ப்பணி செய்து வருபவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர். திருவையாறு அரசர் கல்லூரியில் முதல்வர் பொறுப்பேற்றுத் திறம்படப் பணியாற்றிய பேராசிரியர ...

                                               

சரவணப் பெருமாளையர்

சரவணப்பெருமாளையர் 19 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டில் திருத்தணிகையில் சங்கமகுலமென்னும் வீரசைவ மரபில் தோன்றி, வடமொழியிலும், தென்மொழியிலும் பெரும்புலமை பெற்றுப் பல நூல்களை இயற்றிச் சென்னை மாகாணக் கல்லூரியின் முதல் தமிழ் ஆசிரியராக இருந்தவர்.

                                               

சலகண்டபுரம் ப. கண்ணன்

சலகண்டபுரம் ப. கண்ணன் ஒரு தமிழறிஞர், எழுத்தாளர். சேலம் மாவட்டம் சலகண்டபுரத்தில் பிறந்த ப. கண்ணனின் இயற்பெயர் ஜெ.பி.கிருஷ்ணன். 1938ஆம் ஆண்டில் நடந்த கட்டாய இந்திக்கல்வி எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பின்னர் அவர் தன்னுடைய பெயரை சலகண்டபுரம் ப. கண்ணன ...

                                               

சவரிராயர்

சவரிராயர் தமிழ் அறிஞரும் மொழி ஆராய்ச்சியாளரும் ஆவார். தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம், இலத்தின் ஆகிய மொழிகளில் புலமை பெற்றவர். இவர் பண்டிதர் சவரிராயர் என அறியப்பட்டார்.

                                               

சா. தர்மராசு சற்குணர்

சாமுவேல் தர்மராசு சற்குணர் தமிழ்க் கல்வியைப் பரப்புவதற்காகச் சென்னையில் தென்னிந்தியத் தமிழ்க் கல்விச் சங்கம் அமைத்த முன்னோடி; தமிழர்களுக்குத் தமிழ்மட்டும் போதாது, பல மொழி அறிவும் இருந்தால்தான் தமிழின் சிறப்பைச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும் என ...

                                               

சாந்தலிங்க இராமசாமி அடிகளார்

சாந்தலிங்க இராமசாமி அடிகளார் என்பவர் கோயம்புத்தூர் மாநகரின் அருகில், நொய்யல் ஆற்றங்கரையில் கீழை சிதம்பரம் என்று அழைக்கப்படும் 400 வருடப் பழமையான திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழிப் பேரூராதீனத்தின் குருமுதல்வராக இருக்கிறார். மற்றும் உதகை அருள்ம ...

                                               

சாலினி இளந்திரையன்

சாலினி இளந்திரையன் தமிழ்ப் பேராசிரியர்; சொற்பொழிவாளர்; எழுத்தாளார்; நாடக ஆசிரியர்; இதழாளர்; அரசியற் செயற்பாட்டாளர்; பொதுவுடைமைத் தமிழ்தேசியச் சிந்தனையாளர். பேராசிரியர் முனைவர் சாலை இளந்திரையன் மனைவியான இவரது இயற்பெயர் கனகசவுந்தரி என்பது ஆகும்.

                                               

சி. ஆ. ராமசாமிபிள்ளை

இவர் 1898ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ஆம் தேதி பிறந்தவர். தான் செய்துவந்த பஞ்சு வியாபாரம் சரியாக நடைபெறாமல் வறுமையில் வாடியநிலையிலும் தமிழ் இலக்கியத்தில் கொண்ட ஈடுபாட்டால் பல சிறு பிரபந்த நூல்களைப் படைத்துள்ளார். தமிழ் இலக்கிய இலக்கணங்களை சேத்தூர் அரசவை ...