ⓘ Free online encyclopedia. Did you know? page 388




                                               

சிவாலய வகைகள்

சிவாலய வகைகள் என்பவை சிவபெருமானை மூலவராக கொண்டு அமைக்கப்பட்ட கோயிலின் வகைகள் ஆகும். இந்த சிவாலயங்களில் பெரும்பாலும் இலிங்க வடிவில் சிவன் மூலவராக உள்ளார். இந்தியா, இலங்கை, நேபாளம், கம்போடியா என உலக நாடுகள் பலவற்றில் சிவத்தலங்கள் உள்ளன. அவற்றில் அத ...

                                               

சைவ நூல்களின் பட்டியல்

பன்னிரு திருமுறைகள் திருமுறைத் தொடர் சேக்கிழார் புராணம் திருமுறை கண்ட புராணம் திருப்பதிக் கோவை திருத்தொண்டர் திருநாமக்கோவை திருத்தொண்டர் புராண சாரம் திருப்பதிகக் கோவை

                                               

ஆரத்தி

ஆரத்தி என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தீபங்களை ஏற்றி வழிபடும் இந்து சமயத்திலுள்ள தெய்வ வழிபாட்டின் முறையாகும். இவ்வாறு வழிபடும் போது பாடப்படும் பாடல்கள் ஆரத்திப் பாடல்கள் எனப்படுகின்றன.

                                               

நேர்ந்து விடுதல்

நேர்ந்து விடுதல் என்பது இந்து சமயத்தின் நேர்த்திக் கடன்களில் ஒன்றாகும். இந்த நேர்த்திக் கடன் சிறு தெய்வ, பெரு தெய்வ வழிபாடுகளில் வேறுபடுகின்றது. சிறு தெய்வ வழிபாடுகளில் ஆடு, கோழி போன்ற கால்நடைகளை இறைவனுக்கு என்று கூறி வீட்டிலேயே வளர்க்கின்றனர். ப ...

                                               

மலைவலம்

மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படுவது புனித மலையாக கருதும் மலையையோ அல்லது கோயில் அமைந்த மலையையோ வலம் வருதலாகும். கயிலை மலையை வலம் வரும் பழக்கம் இருந்துவருகிறது. கிரி என்றால் மலை; வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள். அதனால் மலையை சுற்றி வருவது கிரிவல ...

                                               

மழைச்சோறு வழிபாடு

மழைசோறு வழிபாடு என்பது மழை வேண்டி நடத்தப்படும் எண்ணற்ற நாட்டார் சடங்குகளில் ஒன்றாகும். இந்த சடங்கு முறைகளால் மழை வரும் என்பது மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் பெளர்ணமிக்கு அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கி திங்க ...

                                               

வேள்வி

யாகம் என்பதற்கு அர்ப்பணித்தல் என்று பொருளாகும். இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவனுக்கு புனிதமாகக் கருதும் பொருள்களை அர்ப்பணித்தல் யாகமாக கருதப்படுகிறது. வேள்வி, ஹோமம், ஓமம் என்று என்றும் அழைக்கப்பெறுகிறது. யஜூர் வேதத்தில் முப்பது வகையான யாகங் ...

                                               

கெண்டிகை

கெண்டிகை என்பது கேரளத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளிலும் உள்ள பழைய வீடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒரு பாத்திரம். கெண்டிகையின் ஆரம்பகால எடுத்துக்காட்டுகள் முதலில் தெற்காசியாவின் சாவல்தா நாகரீக கால கலாச்சாரங்களில், முதன்முறையாக தொன்றின. குறிப்பாக ...

                                               

திருவாபரணம்

திருவாபரணம் இது சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவனான சுவாமி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் ஆபரணம் ஆகும். மூன்று பெட்டிகளில் உள்ள புனிதமான ஆபரணங்களை, மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் முன்னதாக, பந்தளம் அரண்மனையில் இருந்து சபரிமலைக்கு ...

                                               

நெய்வேத்தியம்

நைவேத்தியம் என்பது இறைவனுக்கு படைக்கப்படும் உணவு. உணவு உண்ணும் முன், இந்துக்கள் இறைவனுக்குப் உணவு படைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். எனவே கடவுளுக்குப் படைப்பதற்கான உணவைத் தயாரிக்கும் சமயத்திலும், காணிக்கை செலுத்தும் சமயத்திலும் அவ்வுணவை உண்ணுதல் த ...

                                               

பஞ்சாமிர்தம்

பஞ்சாமிர்தம் அல்லது ஐந்தமுது என்பது இந்து சமயப் வழிபாடு மற்றும் பூசனைகளில் பயன்படுத்தப்படும் ஐந்துணவுக் கலவை ஆகும். தேன், வாழைப்பழம், பால், தயிர், நெய் ஆகியவையே அந்த ஐந்துணவுகள் ஆகும்.

                                               

சர்ப்பம் துள்ளல்

சர்பம் துள்ளல் அல்லது நாக களம் பட்டு என்பது பொதுவாக கேரள மாநிலத்தில் உள்ள மூதாதையர் கோயில்கள் அல்லது தாராவத்துகளுடன் தொடர்புடைய விசித்திரமான சடங்கின் தனித்துவமான வடிவமாகும். பழங்காலத்திலிருந்தே கேரளாவில் உள்ள பல குடும்ப வீடுகளில் காவு அல்லது பாம் ...

                                               

நாக சதுர்த்தி

கருடபஞ்சமிக்கு முன்பு சதுர்த்தி திதி அமையும் நாள் நாகசதுர்த்தி நாளாகும். இந்நாளைப் பற்றி சதுர்வாக சிந்தாமணி எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாற்கடலிருந்து வெளிவந்த ஆலகாலத்தினை சிவபெருமான் உண்ட தினமாக இந்நாள் கருதப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில ...

                                               

அஜா ஏகாதசி

புரட்டாசி தேய்பிறை ஏகாதசியை அஜா ஏகாதசி என்கின்றனர். இந்த நாளைப் பற்றி ஏகாதசி மகாத்மியம் குறிப்பிடுகிறது. இந்த விரதமிருந்தால் இழந்த சொத்துகளும், சுகம் திரும்ப கிடைக்கும் என நம்பப்படுகிறது.

                                               

சயனி ஏகாதசி

சதுர்மாஸ்ய காலத்தில் வருகின்ற ஏகாதசியை சயனி ஏகாதசி என்கின்றனர். இந்த ஏகாதசி நாளில் தீப தானம் செய்வது சிறப்பாகும். சயனம் என்றால் உறங்குதல் திருமால் ஆடி பௌர்ணமியிலிருந்து கார்த்திகை பௌர்ணமி வரை உறங்குகிறார். அதனால் இக்காலத்தில் வருகின்ற ஏகாதசியை சய ...

                                               

யோகினி ஏகாதசி

குபேரனின் பணியாட்களில் ஒருவன் ஹேமமாலி. அவனுக்கு குபேரன் சிவபூசைக்காக பூக்களை சேகரிப்பது பணி. ஒருநாள் தன்புதுமனைவி விசாலாட்சியுடன் நேரத்தினை செலவிட்டு, தன்னுடைய பணியை மறந்து போனான். வழக்காக பூசை செய்ய வந்த குபேரன் தனக்கு பூசை செய்ய பூக்கள் இல்லாமை ...

                                               

சங்கடகர சதுர்த்தி விரதம்

சங்கடகர சதுர்த்தி விரதம் இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களுள் ஒன்று. மாதந்தோறும் தேய்பிறையில் வரும் சதுர்த்தித் திதியில் இவ்விரதம் கடைபிடிக்கப்படும். இந்நாளில் பகல் பொழுதும் உண்ணாநோம்பிருந்து மாலையில் விநாயகரை பூசை செய்து உடன் ...

                                               

அடப்பு

அடப்பு என்பது இந்து சமய சாவுச்சடங்குகளில் ஒன்றாகும். அடப்பு ஏற்படும் காலங்களில் இறந்தவரின் ஆவியானது சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ செல்லும் வழியானது அடைக்கப்பட்டு விடுமென நம்பப்படுகிறது. ஒருவர் இறந்த பிறகு அவருடைய இறப்பின் நேரத்தினைக் கொண்டு ஜோதிடத ...

                                               

இறுதிச் சடங்கு

ஒரு மனிதனின் உயிர் பிரிந்த பின்பு, அந்த உடல் மண்ணில் புதைக்கப்பட்டோ அல்லது நெருப்பில் எரித்துச் சாம்பலாக்கப்பட்டோ அழிக்கப்படுகிறது. உயிர் பிரிந்த உடல் அழிக்கப்படுவதற்கு முன்பாக சில சடங்குகள் செய்யப்படுகின்றன. இதற்கு இறுதிச் சடங்கு என்று பெயர். இவ ...

                                               

சிரார்த்தம்

சிரார்த்தம் என்பது இந்து மத அனுட்டனாங்களில் அபரக்கிரியைகளில் ஒன்றாகும். சிரார்த்தம் என்பதன் பொருள் சிரத்தையோடு செய்யவேண்டியது என்பதாகும். இதனை பிதிர்கருமம் எனும் பொருளில் எல்லாப் பிதிர்க்கருமங்களையும் குறிப்பிதற்குப் பயன்படுத்துவர். எனினும் சிரார ...

                                               

மகாளயம்

புரட்டாசிப் பவுர்ணமியை அடுத்த பிரதமையில் தொடங்கி 15 நாட்கள் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இதனை மகாளயபட்சம் எனவும் கூறுவர். மகாளயம் என்றால் மகான்கள் வாழும் இடம் என்றும், பட்சம் என்றால் பாதி மாதம் என்றும் பொருளாகும். மகான்கள் பாதி மாதம் பூமியில் ...

                                               

சேணை தொட்டு வைத்தல்

சேணை தொட்டு வைத்தல் பிறந்த குழந்தையின் நாவில் இனிப்புச் சுவையுடைய நீர்மத்தினை வைக்கும் இந்து சமய சடங்காகும். சேணை வைக்க பெரும்பாலும் தேனும், பாலுடன் கலந்த நெய்யும் பயன்படுத்தப்படுகின்றன. சேணை வைக்க இனிப்பு கலந்த தண்ணீரையும் பயன்படுத்துகின்றார்கள் ...

                                               

பெயர் சூட்டுதல்

பெயர் சூட்டுதல் என்பது குழந்தைக்கு பெயர் வைக்கும் இந்து சமய சடங்காகும். தற்காலத்தில் பெயர் சூட்டுதல் விழாவாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த சடங்கினை நாமகரணம் என்ற வடமொழி வழக்கிலும் அழைக்கின்றனர். இச்சடங்கு முறை சாதி, சமூக மற்றும் புவியியல் சார்ந்து நட ...

                                               

அகாசுரன்

அகாசூரன் என்பவன் இந்து மற்றும் வேத இதிகாசங்களின் கூற்றின்படி ஒரு அரக்கன் ஆவான். அகாசுரன் கம்சனின் தளபதிகளில் ஒருவன். புத்தனா மற்றும் பகாசுரானின் அண்ணணாவான். பாகவத புராணத்தின்படி கண்ணனைக் கொல்ல கம்சனால் அகாசுரன் அனுப்பப்படுகிறான். கண்ணன் நண்பர்களோ ...

                                               

அந்தகாசூரன்

அந்தகாசூரன், இந்து தொன்மவியலின் படி, அசுரன் ஆவார். பார்வதியை கவர்ந்து சென்ற அந்தகாசூரனை சிவபெருமான் வதைத்தார். சிவபெருமான், அந்தாசூரனை வதைத்த வரலாறு மச்ச புராணம், கூர்ம புராணம், லிங்க புராணம் மற்றும் சிவபுராணங்களில் விளக்கப்பட்டுள்ளது. சில சாததிர ...

                                               

இந்திரசித்து

இந்திரஜித் அல்லது மேகநாதன் இந்து புராணங்களின்படி இலங்கை நாடு மற்றும் இந்திர லோகத்திற்கு இளவரசனாவான். இந்து புராணமானா இராமாயணத்தின்படி இவன் இராவணனின் மகனாவான். இவனது தாயார் மண்டோதரி இந்து புராணங்களில் மிகப் பெரிய போர்வீரர்களில் ஒருவனாக அவர் கருதப் ...

                                               

இரணியகசிபு

இரணியகசிபு அல்லது இரணியன் {Hiranyakashipu or Hiranyakasipu), காசிபர் - திதி தம்பதியரின் மகன். இரணியாட்சனின் அண்ணன். விஷ்ணுவின் பத்து அவதாரங்களான தசாவதாரத்தில் நான்காம் அவதாரமான நரசிம்மர் வதம்செய்த அரக்கன். வட மொழியில் இரண்யம் எனில் தங்கம். கசிபு ...

                                               

இரணியாட்சன்

ஏன் குழப்பம்? யார் மூத்தவன்? இரணியாட்சன் அல்லது இரண்யாட்சன் Hiranyaksha, ஒரு இந்து புராணக் கதாபாத்திரம் ஆகும். இவர் காசிபர் - திதி தம்பதியரின் மகன். இரணியனின் அண்ணன் ஆவார். பிரம்மாவை நோக்கி கடும் தவம் மேற்கொண்டு, தனக்கு எந்த ஆயுதத்தின் மூலமும் ம ...

                                               

இராவணன்

மேலும் தகவல்களுக்கு: இராவணன் பக்கவழி நெறிப்படுத்தல் இராவணன் வால்மீகி முனிவர் எழுதிய இராமாயணம் எனும் காவியம் கூறும் இலங்கையை ஆண்ட அசுர குல மன்னர் ஆவார். இராவணனுக்கு தசக்கிரீவன், இலங்கேஸ்வரன், இராவணேஸ்வரன், திரிலோக அதிபதி என்று பல பெயர்கள் உண்டு. ப ...

                                               

கபந்தன்

கபந்தன் அல்லது கவந்தன் (कबन्ध, இராமாயணக் காவியத்தில் ஆரண்யகாண்டத்தில் கூறப்படும், கால்கள், கழுத்து, தலையும் அற்ற முண்டமும், நீண்ட கைகளும், வயிற்றில் ஒற்றைக் கண்ணும், அகண்ட வாயுடன் கூடிய ஒரு இராட்சசன் ஆவார். கபந்தனின் இரண்டு நீண்ட கைகளை இராமன் மற் ...

                                               

காலயவனன்

காலயவனன் என்பவர் மகாபாரதத்தில் வருகின்ற கதைமாந்தராவார். இவர் கார்கியா எனும் பிராமணனுக்கு சிவபெருமான் வரத்தால் பிறந்தவர். யவன அரசரிடம் வளர்ந்து கிருஷ்ணனை அழிக்க சென்றார். யாதவர்களால் வெல்ல முடியாத வரத்தினைப் பெற்ற அரக்கன் என்பதால் கிருஷ்ணன் தந்திர ...

                                               

கும்பகருணன்

கும்பகருணன் அல்லது கும்பகர்ணன் என்பவன் இந்து புராணமான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு கதை மாந்தர். இவன் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தம்பி ஆவான். பிரம்மனிடம் தவறுதலாக நித்திரை என்னும் வரத்தை கேட்டு பெற்றான். அதனால் அவனது வாழ்வில் ...

                                               

கேசி (அரக்கன்)

கேசி என்பவர் இந்து தொன்மவியிலில் இடம்பெற்றிருக்கும் அரக்கனாவார். இவர் பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்றவர் என்று கூறப்படுகிறது. இந்து சமய இதிகாசமான மகாபாரதத்தில் இவரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இவர் கம்சனின் கையாளாக கண்ணனைக் கொல்வதற்கு ...

                                               

சலந்தரன்

சலந்தரன் என்பவர் ஜலத்திலிருந்து தோன்றிய அரக்கன் ஆவார். சிவபெருமானை வணங்கி யாராலும் வெல்ல இயலாத வரத்தினைப் பெற்றார். இந்திரனை வென்று தேவலோகத்தினையும், பிரம்மனை வென்று சத்திய லோகத்தினையும், திருமாலையும் வென்று பாற்கடலையும் பெற்றார். அத்துடன் சிவபெர ...

                                               

சுபாகு

சுபாகுவுடன், மாரீசன் மற்றும் அவர்களின் தாயான தாடகை, விசுவாமித்திர முனிவர் நடத்தும் வேள்விகளில், இறந்த விலங்குகளின் சதையும், எலும்புகளையும் வேள்வித்தீயில் கொட்டி, வேள்வி நிறைவுறாத படி, தீது செய்து கொண்டிருந்தனர். இவர்களது தீத்செயல்களை தடுத்து நிறு ...

                                               

சுமாலி

சுமாலி இராவணின் தாய் வழி பாட்டனும், அரக்கர் குலத் தலைவனும் ஆவார். இவரது மகள் கைகேசி ஆவார். சுமாலியின் மூத்த சகோதரன் மால்யவான் மற்றும் இளைய சகோதரன் மாலி ஆவார்கள். சுமாலி தனதிரு சகோதரர்களுடன் பிரம்மாவை நோக்கி கடும் தவம் நோற்று, வரங்கள் பல பெற்று, த ...

                                               

சூர்ப்பணகை

சூர்ப்பணகை என்பவள் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம். இவள் அரக்கர் குலத்தைச் சேர்ந்த இலங்கை அரசன் இராவணனின் தங்கை. இவளது ஏனைய சகோதரர்கள் கும்பகர்ணன், விபீடணன், கரன் மற்றும் தூஷணன் ஆவார். 14 ஆண்டு வன வாசத்தின் போது இராமன், சீதை மற்றும் இலட்சு ...

                                               

தாடகை

தாடகை இராமாயணக் காப்பியத்தில் வருகின்ற ஒரு கதைமாந்தர்களுள் ஒன்று. அகத்தியரின் சாபத்தால் அரக்கியாக மாறும் இயக்கர் குலப் பெண்ணாக இவள் உருவாக்கப்பட்டுள்ளாள். பல்வேறு வகையான கொடுமைகளைச் செய்துகொண்டு காட்டில் வாழுகிறாள். விசுவாமித்திர முனிவர் செய்த வே ...

                                               

தாரகன்

தாரகன் இந்து தொன்மவியல் புராணங்களிலும், நூல்களிலும் வருகின்ற அர்க்கர் குல அரசன் சூரபத்மனின் சகோதரன் ஆவார். இவர் தாரகாசூரன் என்றும் அறியப்படுகிறார். மிகுந்த தவத்தினால் சிவக்குமாரனால் மட்டுமே மரணம் நேரும் வரத்தினை பெற்றிருந்தார். அதனால் சிவபெருமான் ...

                                               

பகாசூரன்

பாகாசூரன் என்பவர் மகாபாரதக் கதைகளில் வருகின்ற அரக்கனாவார். |பாண்டவர்களின் அஞ்ஞாத வாசத்தின் போது, பீமன் இவரைக் கொன்றான். இவரையும், இவர் மனைவியையும் நாட்டார் தெய்வமாக வழிபடுகின்றனர். திரௌபதியம்மன் கோயில்களில் தனித்திருக்கும் பகாசூரன் சிலைகள் உள்ளன. ...

                                               

பிரம்ம ராக்கதன்

பிரம்ம ராக்கதன் என்பது உண்மையில் ஒரு பிராமணரின் ஆவி ஆகும். அவர் உயர் குடியில் பிறந்து இறந்த அறிஞர். அவர் தனது வாழ்க்கையில் தீய காரியங்களைச் செய்தவர். அறிவைத் தவறாகப் பயன்படுத்தியவர். இப்படிப்பட்ட பெண்ணோ ஆணோ அவரின் இறப்புக்கு பிறகு ஒரு பிரம்மா ராட ...

                                               

பூதனை

பூதனை என்பவர் பாகவதம் போன்ற இந்து தொன்மவியல் குறிப்பிடும் ஓர் அரக்கி ஆவார். குழந்தை கடவுளான கிருஷ்ணரால் கொல்லப்பட்ட அரக்கியாவார். இந்திய புராணங்களில் கிருஷ்ணரை விஷம் கலந்த பாலால் கொல்லும் நோக்கத்துடன் இருந்தாலும் கிருஷ்ணருக்கு தாய்ப்பால் கொடுத்தத ...

                                               

மாரீசன்

மாரீசன், இந்து இதிகாசங்களில் ஒன்றான இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு பாத்திரம் ஆகும். பொன் மானாக வந்த அரக்கன் இராவணனின் மாமன் ஆவான். இராவணன் சீதையை தூக்கிக் கொண்டு போக எண்ணினான். அதற்கு அவன் தனது மாமனின் உதவியை நாடினான். அவன் மாமனும் அதற்கு சம்மதித்த ...

                                               

மால்யவான்

மால்யவான், இலங்கையின் அரக்கர் குல வேந்தன் இராவணின் தாய்வழி தாத்தா சுமாலியின் மூத்த சகோதரும், மரியாதைக்குரிய தலைமை அமைச்சரும் ஆவார். சுகேது என்ற அரக்கருக்கு பிறந்த மூவரில் மூத்தவன் மால்யவான். இளையவர்கள் சுமாலி இராவணனின் தாய்வழித் தாத்தா மற்றும் மா ...

                                               

ரத்த பிந்து

ரத்த பிந்து என்பவர் இந்து தொன்மவியலில் வருகின்ற அரக்கன் ஆவார். இவரைப் பற்றி மார்க்கண்டேயப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. மகிசாசுரன் எனும் அரக்க வேந்தனை அழிக்க சிவபெருமானால் தோற்றுவிக்கப்பட்ட மாதா அரக்கர் படைகளை அழிக்கும் பொழுது, அங்கு ரத்த பிந்து ...

                                               

ரம்பன்

ரம்பன் என்பவர் இந்து தொன்மவியலில் வருகின்ற அரக்கன். இவரது சகோதரன் கரம்பனை இந்திரன் முதலை வடிவெடுத்து கொன்றார், அதனால் இந்திரனை அழிக்க கூடிய மகன் வேண்டுமென தவமிருந்து அக்னி தேவனிடம் வரம் பெற்றார். யச்சினிகள் வாழுகின்ற உலகத்திற்கு சென்று அங்கு எரும ...

                                               

ருரு

ருரு என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் ஒரு அரக்கராவார். இவர் ஒரு முறை சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவியை கண்டு அவரை அடைய வேண்டும் என எண்ணினார். அதற்காக கடுமையான தவத்தில் ஈடுபட்டார். பிரம்மா அவர்முன் தோன்றி என்ன வரம்வேண்டுமென கேட்க பார்வத ...

                                               

வாணாசூரன்

வாணாசூரன் என்பவர் அரக்கர் குலத்தில் பிறந்த சிவபக்தன் ஆவார். இவர் சைவ தொன்மவியலின் படி கண்ணனின் சம்பந்தி. வாணாசூரன் காஞ்சிபுரம் வாணேசுடவரர் கோயிலில் வழிபட்டு கணங்களுக்கு தலைமையைப் பெற்றான் என்பது வரலாறு. வாணசூரனின் மகள் உசை என்பவளுக்கும் கிருஷ்ணனி ...

                                               

விபீடணன்

விபீடணன், விபீசணன் அல்லது வீடணன் இராமாயணத்தில் இடம்பெறும் ஒரு ஒரு கதை மாந்தர். இவரது மகள் திரிசடை ஆவார். இவன் இராவணனின் தம்பி ஆவான். நீதி நியாயத்தின் படி வாழ்ந்து வந்தான். சீதையை இராவணன் கடத்தி வந்த போது அநியாயம் என்று எடுத்து உரைத்தான். சீதையை வ ...

                                               

இந்து அண்டவியல்

இந்து அண்டவியல் என்பது புராணங்கள் மற்றும் இந்து நூல்களி்ல் கூறப்பட்டுள்ள அண்டம் சம்மந்தமான இயலாகும். சிவலோகம், வைகுந்தம், கோலோகம் போன்ற தொடர்ந்து அழியா லோகங்களையும், அழியக்கூடிய பதினான்கு உலகங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது ...