ⓘ Free online encyclopedia. Did you know? page 33




                                               

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது

கூளப்பநாயக்கன் விறலிவிடு தூது என்பது 18 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட தூது வகையைச் சார்ந்த சிற்றிலக்கிய நூல் ஆகும். 1728ல் நிலக்கோட்டை என்னும் சிற்றரசை ஆண்டுவந்த கூளப்பநாயக்கன் என்பவனே இந்த நூலின் பாட்டுடைத் தலைவன். அக்காலத்தில் வாழ்ந்த சுப்பிரதீபக ...

                                               

செங்குந்தர் துகில்விடு தூது

தமிழகத்தில் பல சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடி உள்ளனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் இருந்தாலும் கூட, சில சாதியருடைய பண்டைக் கால வழக்க ஒழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைக்கின்றன. செங்குந்தர் துகில்விடு த ...

                                               

தெய்வச்சிலையார் விறலிவிடு தூது

தெய்வச்சிலையார் விறலிவிடு தூது என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமாரசாமி அவதானி என்பவர் பாடிய தூது நூல். திருநெல்வேலி தெய்வச்சிலைப் பெருமாள் முதலியார் மீது பாடப்பட்டது. திருநெல்வேலிக்கு அருகே கிருஷ்ணாபுரம் என்னும் ஊர் உள்ளது. இந்த ஊர் அக ...

                                               

நெஞ்சு விடு தூது

நெஞ்சு விடு தூது, கி.பி. 1311-ம் ஆண்டு, உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்ட நூலாகும். இந்நூலின் செய்யுள்கள் கலிவெண்பாவில் பாடப்பட்டுள்ளன. இந்நூலின் ஆசிரியர், தனது ஞானாசிரியனைத் தலைவனாக நினைத்துத் தன்னைக் காதலியாகப் பாவித்துத் தனது மனதைத் த ...

                                               

பணவிடு தூது

பணவிடு தூது என்பது தூது வகை இலக்கியம் ஆகும். இந்தப் பெயரில் பல புலவர்களால் தூதுக்கள் இயற்றப்பட்டன. பணம் தூது செல்லத் சிறப்புத் தகுது பெற்றது என்றும், கருத்தை நிறைவேற்றித் தரும் ஆற்றல் வல்லது என்றும் கருத்தை எடுத்துரைத்து இந்த படைப்புக்கள் அமைகின்றன.

                                               

மான் விடு தூது

மான் விடு தூது என்பது மிதிலைப்பட்டிக் குழந்தைக் கவிராயர் என்பவர் இயற்றிய ஓர் அரிய நூலாகும். இதனை உ. வே. சாமிநாதையர் 1936ஆம் ஆண்டு பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இந்நூல் 301 கண்ணிகளைக் கொண்டது.

                                               

திருவாலங்காட்டுத் திருப்பதிகம்

திருவாலங்காட்டில் சிவபெருமான் நடனமாடுவதைக் கண்டு காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகும். பதிக முறையில் பாடப்பெற்ற முதல் பாடல்கள் என்பதால் இதனை ஆதிப்பதிகம் என்றும் அழைப்பர். முதன் முறையாக இறைவனை இசையால் பாடியத ...

                                               

பாய்ச்சலூர்ப் பதிகம்

பாய்ச்சலூர்ப் பதிகம் தமிழ் சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த உத்தரநல்லூர் நங்கை என்ற பெண்பாற் புலவரால் எழுதப்பட்டது. சாதீய அமைப்புக்கும் நாற்வர்ணக் கொள்கைக்கும் எதிரான கருத்துகளை இந்நூல் கொண்டுள்ளது. பாய்ச்சலூர் எனும் ...

                                               

அஞ்ஞவதைப் பரணி

அஞ்ஞவதைப் பரணி 15ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல். இது அஞ்ஞவதைப் பரணி எனவும், ஞானபரணி எனவும், தத்துவக் காட்சி எனவும் கூறப்படும். இந்த நூலைப் பற்றிய செய்தியை மறைஞான தேசிகர் என்பவர் தாம் எழுதிய உரைநூலில் குறிப்பிடுகிறார். ஞானம் என்பது மெய்யறிவு. அஞ்ஞா ...

                                               

இரணியவதைப் பரணி

இரணியவதைப் பரணி என்பது பரணி இலக்கியங்களில் ஒன்று. இந்த நூல் தனி நூலாக வெளிவரவில்லை. எனினும் ‘செந்தமிழ்’ என்னும் 1918-ஆம் ஆண்டு மாத இதழில் வெளிவந்துள்ளது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. காலம் பற்றிய குறிப்புக்களும் இல்லை. ஒப்புநோக்கி ஆராய்ந்து ப ...

                                               

கலிங்கத்துப் பரணி (ஒட்டக்கூத்தர் நூல்)

செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப்பரணி பலராலும் போற்றிப் பயிலபட்டுவருகிறது. கலிங்கத்துப் பரணி என்னும் பெயரில் ஒட்டக்கூத்தர் பாடிய பரணிநூல் ஒன்றும் உண்டு. செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணி, முதலாம் குலோத்துங்கனின் படைத்தலைவன் கருணாகரத் தொண்டைமான ...

                                               

கலிங்கத்துப்பரணி

கலிங்கத்துப்பரணி என்ற நூல் பரணி வகையைச் சார்ந்த சிற்றிலக்கியம் ஆகும். இந்நூல் முதலாம் குலோத்துங்க சோழனின் கலிங்கப் போர் வெற்றி குறித்துப் பாடப்பட்ட நூல் ஆகும். குலோத்துங்கனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது. அனந்தவர்மன் என்னும் வட கலிங்க மன்னன் திறை ...

                                               

மோகவதைப் பரணி

மோகவதைப் பரணி என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று. இதன் மறுபெயர் ஏடுகளில் விடுபட்டுள்ளது. இதில் 850 கண்ணிகள் உள்ளன. இதன் காலம் 15-ஆம் நூற்றாண்டு. தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். மோகத்தை எப்படி வதைத்தார் என்று இது விளக்குகிறது. ம ...

                                               

அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்

அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் அல்லது குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ் என்பது சிவஞான முனிவரால் இயற்றப்பட்ட பிள்ளைத்தமிழ் நூலாகும். இந்நூல் குளத்தூர்ப் பிள்ளைத்தமிழ் எனவும் அறியப்பெறுகிறது. காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் ...

                                               

ஆதிநாதர் பிள்ளைத்தமிழ்

ஆதிநாதர் பிள்ளைத்தமிழ் என்னும் நூல் மயிலாப்பூர்ப் பகுதியைக் கடல்கொண்ட கி. பி. 1600-ஆம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட நூல். ஆசிரியர் பெயர் தெரியவில்லை. தமிழ்ச்சமணர் தமிழர்க்கு அறமும், தமிழுக்கு இலக்கணமும் தருவதில் கவனம் செலுத்திவந்தனர். சீவக சிந்தாமணி ...

                                               

கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்

தமிழ் இலக்கியத்தில் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான பிள்ளைத்தமிழ் என்ற இலக்கியத்தில் கவிஞர் அல்லது சான்றோர் பற்றிய சிற்றிலக்கிய நூல்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. திருவள்ளுவர் பிள்ளைத்தமிழ் 1- தொகுப்பு நூல் மாணிக்கவாசகர் பிள்ளைத்தமிழ்2 -ராம. சொ. சொ ...

                                               

காங்கேயன் பிள்ளைத்தமிழ்

காங்கேயன் பிள்ளைத்தமிழ் என்னும் பெயரில் இரண்டு நூல்கள் இருந்ததாகக் கல்வெட்டு ஆவணங்களிலிருந்து தெரியவருகின்றன. ஒன்று கண்ணமங்கலம் காங்கேயன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ். மற்றொன்று நியமம் காங்கேயன் மீது பாடப்பட்ட பிள்ளைத்தமிழ். பாடப்பட்ட இருவரும் மா ...

                                               

குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்

இரண்டாம் குலோத்துங்கனைச் சிறப்பித்து அவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய இரண்டாம் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் ஆகும். இது பிள்ளைத்தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த கி.பி 12ஆம் நூற்றாண்டு நூல் ஆகும். இரண்டாம் குலோத்துங்கன் மீது அவர் பாடிய முதல் நூல் ...

                                               

சத்தியஞான பண்டார பிள்ளைத்தமிழ்

சத்தியஞான பண்டார பிள்ளைத்தமிழ் என்னும் நூல் சிதம்பரநாத முனிவர் என்பவரால் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இது பிழைகள் மலிந்த பதிப்பாக உள்ளது. மற்ற நூல்களைப் போல 100 பாடல்கள் கொண்டது. மேலும் இறுதியில் ஒரு வாழ்த்துப்பா சேர்க்கப்பட்டுள்ளது. நூலாசிரி ...

                                               

சேத்திரக்கோவை நூல் கூறும் முருகனின் திருத்தலங்கள்

ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் நூல் கூறும் முருகனின் திருத்தலங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன. சுவேதவனம் திருநாவலூர் சேய்ஞலூர் சையகிரி திருவக்கரை திருநெல்வேலி திருக்கடவூர் திருவிடைக்கழி எருக்கத்தம்புலியூர் திருவதிகை திருவா ...

                                               

தத்துவ நிலையம்

தத்துவ நிலையம் என்னும் நூல் தத்துவராயர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது பிள்ளைத் திருநாமம் எனவும் கூறப்படும். இது ஒரு பிள்ளைத்தமிழ் நூல். தத்துவராயரின் ஆசிரியர் சொரூபானந்தர். சொரூபானந்தரை இந்த நூல் பிள்ளையாகப் பாவித்துப் புகழ்கிறது. காலம் 15-ஆம் நூற ...

                                               

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ்

திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் பகழிக் கூத்தர். இது திருச்செந்தூர் முருகனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டது; பாடல் எண்ணிக்கை 3+103. காலம் 15 ஆம் நூற்றாண்டு. திருச்செ ...

                                               

திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ்

திருஞான சம்பந்தர் பிள்ளைத்தமிழ் என்பது சிற்றிலக்கியங்களில் ஒன்றான பிள்ளைத்தமிழ் என்ற வகையைச் சார்ந்ததாகும். திருஞான சம்பந்தருக்கு ஐந்து பிள்ளைத்தமிழ் நூல்கள் உள்ளன. இந்நூல் ஆசிரியர் திருவாடுதுறை ஆதீனத்து ஞானாசாரியர் பரம்பரையில் வந்த திரு. மாசிலாம ...

                                               

திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ்

திருநாவுக்கரசர் பிள்ளைத்தமிழ் என்பது சைவ நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசர் என்பவரைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு திரு. சொக்கலிங்கய்யா என்பவரால் இயற்றப்பட்டதாகும். இது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். காப்புச் செய்யுள் ...

                                               

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ்

திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் என்பது பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலகும். இதனை இயற்றியவர் சிதம்பரசுவாமிகள். பாட்டுடைத்தலைவன் முருகன். காலம் தெரியவில்லை. பாடல் மற்றும் பருவங்கள் விவரம் தெரியவில்லை. சிதம்பர சுவாமிகள் பாடியு ...

                                               

பிள்ளைத்தமிழ் நூற்பட்டி

பிள்ளைத்தமிழ் நூல்கள் தமிழ் மொழியில் பல்கியுள்ளன. இதுவரைத் தெரிய வந்துள்ள, பிள்ளைத்தமிழ் நூல்களின் விவரங்கள் இங்கு குறிப்பிடப்படுகின்றன. அவைகளை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம். இதுவரை சைன பௌத்த புலவர்கள் பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடி இருப்பதாகப் ...

                                               

பெரியாழ்வார் பாடிய பிள்ளைத்தமிழ்

பெரியாழ்வார், ஆழ்வார்கள்களில் ஒருவர். கி.பி. 6 நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர். வைணவர். இவரது பாடல்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தம் நூலில் முதல் 5 திருமொழிகளாக அமைந்துள்ளன. அவற்றில் 474 பாடல்கள் உள்ளன. இவற்றில் இவர் கண்ணனைப் பிள்ளையாகப் பாவி ...

                                               

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்

மதுரை மீனாட்சியம்மை பிள்ளைதமிழ் என்ற நூல் பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படுகிறது. மதுரையில் எழுந்தருளியுள்ள மீனாட்சியம்மையைப் பாட்டுடைத்தலைவியாகக் கொண்டு குமரகு ...

                                               

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ்

முத்துக்குமார சுவாமி பிள்ளைத்தமிழ் என்னும் நூல் பிள்ளைத்தமிழ் வகையைச் சேர்ந்த சிற்றிலக்கியம். அதன் ஆசிரியர் குமர குருபரர். நூலின் பாட்டுடைத்தலைவன் முருகன்; பாடப்பட்டுள்ள அவனது பருவங்கள் பத்து. 17 ஆம் நுற்றாண்டைச் சேர்ந்த இந்நூலில் உள்ள மொத்தப் பா ...

                                               

ஸ்ரீ சுப்பிரமணியக் கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ்

ஸ்ரீ சுப்பிரமணியக்கடவுள் சேத்திரக் கோவை பிள்ளைத்தமிழ் என்ற இந்நூல்பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய வகையைச் சார்ந்த நூலாகும். இதன் ஆசிரியர் சிதம்பர முனிவர் ஆவார். காலம் 19 ஆம் நூற்றாண்டு.

                                               

வருணகுலாதித்தன் மடல்

வருணகுலாதித்தன் மடல், தமிழ் சிற்றிலக்கிய வகையான மடல் வகையைச் சேர்ந்த நூல். நூலின் காலம் 15-17ம் நூற்றாண்டு. பாடியவர் காளிமுத்தம்மை என்றும் அம்மைச்சி என்றும் அழைக்கப்படும் தாசி ஒருவர் எனச் சொல்லப்படுகிறது. காத்தான் என்னும் வருணகுலாதித்தன் மீது அகப ...

                                               

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை

ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக்கோவை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று. மும்மணிக்கோவை என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம். ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக்கலித்துறை என்னும் மூவகையான பாக்களால் தொடுக்கப்பட ...

                                               

சிதம்பர மும்மணிக்கோவை

சிதம்பர மும்மணிக்கோவை என்பது 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த குமரகுருபரரால் இயற்றப்பட்டது. கோவை என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. மும்மணிக்கோவை நூலுக்கு உரிய இலக்கண முறைப்படி பாடப்பட்டுள்ள நூல் இது. ஆசிரியம், வெண்பா, கட்டளைக் கலித்துறை என்ற முற ...

                                               

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை

திருவிடைமருதூர் மும்மணிக்கோவை என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. மும்மணிக்கோவை என்பது ஒரு சிற்றிலக்கியம் இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். சென்னையிலுள்ள திருவொற்றியூர் பகுதியில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. திரு ...

                                               

நம்பெருமாள் மும்மணிக்கோவை

நம்பெருமாள் மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியம் 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருக்குருகைப் பெருமாள் கவிராயரால் பாடப்பட்டது. மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கியம் பொதுவாக 30 பாடல்களைக் கொண்டிருக்கும். இந்த நூல் முழுநூலாகக் கிடைக்கப் பெறவில்லை. உரை ...

                                               

பண்டார மும்மணிக் கோவை

பண்டார மும்மணிக்கோவை என்பது குமரகுருபரர் இயற்றிய நூல்களில் ஒன்று. 17 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பண்டாரம் என்னும் சொல் கருவூலத்தைக் கருவூலம் குறிக்கும். அக்காலத்தில் சைவ ஆசாரியர்களைப் பண்டாரம் என்று குறிப்பிட்டுவந்தனர். அரசுப் பொருளைப் பாதுகாக்கு ...

                                               

மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை

மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று மும்மணிக்கோவை. இதன் ஆசிரியர் அதிராவடிகள் அதிரா அடிகள்; காலம் எட்டாம் நூற்றாண்டு அகவல், வெண்பா, கட்டளைக் ...

                                               

வலிவல மும்மணிக்கோவை

வலிவல மும்மணிக்கோவை என்னும் நூல் 16 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. மும்மணிக்கோவை என்னும் சிற்றிலக்கிய வகையைச் சேர்ந்தது. 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அருணகிரி நாதர் எமன் பாசக்கயிற்றால் கட்டி இழுப்பான் என்னும் கருத்துப் பாடலை இவரது பாடல் வழிமொழியும் ஒ ...

                                               

சித்திரா (இதழ்)

சித்திரா எனும் பெயரில் இலங்கையில் 198+களில் வெளிவந்த ஒரு சித்திரக்கதை வார இதழாகும். இலங்கையில் பல சித்திரக் கலைஞர்கள் இந்த வார இதழில் சித்திரக் கதைகளை எழுதியும் வரைந்தும் வந்தனர். சில சித்திரக் கலைஞர்கள் சித்திரம், கதை இரண்டையும் ஒருசேர எழுதி வெள ...

                                               

சிற்பி (இதழ்)

சிற்பி என்னும் சிறுவர் சித்திரப் பத்திரிகை தமிழ் நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் நகரில் இருந்து வெளிவந்த திங்கள் இதழாகும். இவ்விதழ் இரா. செயக்குமார் என்பவரால் 1990 செப்டம்பர் 1 ஆம் நாள் தொடங்கப்பட்டது.

                                               

சுட்டி விகடன்

சுட்டி விகடன் என்பது விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் குழந்தைகளுக்கான இதழாகும். வாசல், ஸ்பெஷல், எஃப்.ஏ. பக்கங்கள், பொது அறிவு, தொடர்கள், புதிரோ புதிர், காமிக்ஸ், விளையாட்டு, கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. நீதி நெறி ...

                                               

அழ. வள்ளியப்பா

அழ. வள்ளியப்பா குழந்தை இலக்கியங்கள் படைத்த மிக முக்கியமான கவிஞர். 2.000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதியுள்ளார்.

                                               

ஆர். வெங்கட்ராமன் (எழுத்தாளர்)

ஆர். வெங்கட்ராமன் தமிழகத்தின் ஒரு மூத்த எழுத்தாளர். கலைமகள் ஆசிரியர் குழுவில் சேர்ந்த இவர், பிறகு கலைமகள் காரியாலயம் தொடங்கிய கண்ணன் என்ற சிறுவர் பத்திரிகையின் ஆசிரியராக நீண்டகாலம் பணியாற்றியவர். ஆர்வி என்ற புனைபெயரில் நாவல்கள், சிறுகதைகள், சிறுவ ...

                                               

இரத்தினம் சிவலிங்கம்

மாஸ்டர் சிவலிங்கம் என அழைக்கப்படும் இரத்தினம் சிவலிங்கம் ஈழத்தின் சிறுவர் எழுத்தாளரும், பேச்சாளரும் ஆவார். கவிதை, சிறுவர் கதை, சிறுவர் பாடல்கள், வில்லுப்பாட்டு, நகைச்சுவைப் பேச்சு, நாடகம் எனப் பல துறைகளிலும் சிறப்புப் பெற்றவர்.

                                               

பூவண்ணன்

பூவண்ணன் என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் மற்றும் தமிழ்ப் பேராசிரியரராவார். இவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர் இலக்கிய நூல்களைப் படைத்துள்ளார். 1955 இல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட நாடகப் போட்டியில் இவர் எழுதிய உப்பில்லாத பண்டம ...

                                               

மலையமான் (எழுத்தாளர்)

முனைவர் மலையமான் என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். நா. இராசகோபாலன் எனும் இயற்பெயருடைய இவர் நூலகத்துறையில் பல ஆண்டு காலம் பணியாற்றி இருக்கிறார். சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்குமாக 70 நூல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய" பெரும்புகழ் எறும்புகள்” எனும் ந ...

                                               

மா. கமலவேலன்

மா. கமலவேலன் திண்டுக்கல்லைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர். இவர் இந்திய மத்திய அரசின் பாலசாகித்ய புரஸ்கார் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1961 ஆம் ஆண்டில் இருந்து சிறுவர் நூல்களை எழுதி வருகிறார். சிறுகதை, நாடகம், வாழ்க்கை வரலாறு ஆகிய துறைகளில ...

                                               

ரேவதி (எழுத்தாளர்)

ரேவதி என்ற புனைப்பெயரில் எழுதும் ஈ. எஸ். ஹரிஹரன் ஒரு பிரபலமான தமிழ் எழுத்தாளர். சிறுவர்களுக்காகவும் பெரியவர்களுக்காகவும் சிறுகதை, நாவல், நாடகம் உட்பட 92 நூல்களை வெளியிட்டுள்ளார்.

                                               

பாட்டி வடை சுட்ட கதை

பாட்டி வடை சுட்ட கதை, தமிழ்ச் சூழலில் மிகப்பரவலாக வழங்கிவரும் செவிவழி நீதிக்கதையாகும். தலைமுறை தலைமுறையாக வளர்ந்தவர்களால் சிறுவர்களுக்கு இக்கதை சொல்லப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதலில் கேட்கும் கதையாக பெரும்பாலும் இக்கதையே அமைவது இதன் சிறப்பு. ச ...

                                               

குழந்தைகள் கலைக்களஞ்சியம்

குழந்தைகள் கலைக்களஞ்சியம் என்பது தமிழில் சிறுவர்களுக்கென வெளிவந்த ஒரு கலைக்களஞ்சியம் ஆகும். தமிழ் வளர்ச்சிக் கழகத்தால் வெளியிடப்பட்ட இக்கலைக்களஞ்சியம் பத்துத் தொகுதிகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியும் ஏறத்தாழ 100 பக்கங்களைக் கொண்டுள்ளது.