ⓘ Free online encyclopedia. Did you know? page 321




                                               

மரபணு

மரபணு என்பது ஒரு உயிரினத்தின் பாரம்பரிய இயல்புகளை சந்ததிகளினூடாக கடத்தவல்ல ஒரு மூலக்கூற்று அலகாகும். ஒரு புரதத்தையோ அல்லது அதன் ஒரு பகுதியையோ உருவாக்க உதவும் மரபுக்குறியீடுகளைக் கொண்டுள்ள ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் எந்த ஒரு துணுக்கையும் குறிக ...

                                               

மரபணு இருக்கை

மரபியல் அல்லது மரபியல் கணிப்பீட்டில், மரபணு இருக்கை என்பது ஒரு நிறப்புரியில் இருக்கும் ஒரு மரபணுவின் அல்லது டி.என்.ஏ வரிசையின் வரையறுக்கப்பட்ட இருப்பிடம் ஆகும். ஒரு மரபணு இருக்கையில் உள்ள டி.என்.ஏ வரிசையில் காணப்படக்கூடிய வேற்று வடிவங்களே எதிருரு ...

                                               

மரபணு தொடரிகள்

மரபணுத் தொடரிகள் என்பது டி.என்.ஏ. ஈரிழையில் இருந்து ஆர்.என்.ஏ நகல் வருவதை செயல்படுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் ஒரு வரிசை ஆகும். பொதுவாக இவை ஒரு மரபணுவின் தொடக்க புள்ளியில் இருந்து மேல் வரிசையில் அமைந்து இருக்கும். நிலை கருவற்ற மற்றும் நிலைகருவு ...

                                               

மரபணு வெளிப்பாடு

டி.என்.ஏ யிலிருக்கும் மரபணுக்கள் ஆர்.என்.ஏ க்களாகப் படியெடுக்கப்பட்டு, பின்னர் அந்த ஆர்.என்.ஏக்களில் இருந்து புரதம் என்னும் மரபணு உற்பத்திப்பொருளாக மொழிபெயர்ப்பு செய்யப்படுகின்றது" மரபணு வெளிப்பாடு Gene expression என்பது மரபணுவில் இருக்கும் தகவல் ...

                                               

முக்குறியம்

முக்குறியம் என்பது உயிரணுக்களில், புரத மூலக்கூற்று உருவாக்கத்திற்குத் தேவையான அமினோ அமிலங்களில் ஒரு குறிப்பிட்ட அமினோ அமிலத்தைக் குறியீடு செய்யும் வகையில் டி.என்.ஏ யில் அல்லது செய்திகாவும் ஆர்.என்.ஏ யில் இருக்கும் மரபுக்குறியீட்டின் ஒரு சிறிய அலக ...

                                               

ஹோமியோபாக்ஸ்

ஹோமியோபாக்ஸ் என்பது ஒரு டி. என். ஏ. வரிசையாகும். ஏறத்தாழ 180 அடி சோடி நீளம் கொண்ட இவை, விலங்குகளில், பூஞ்சைகள், மற்றும் தாவரங்களுடனான உடற்கூறியல் வளர்ச்சி வகைகளின் மரபணுக்களில் காணப்படுகிறது. இந்த மரபணுக்கள் "ஹோமியோடோமைன்" புரதப் பொருட்கள் தயாரிக ...

                                               

மாந்த இனமும் மரபியலும்

மாந்த இனமும், மரபியலும் சார்ந்த உறவு, மாந்த இன வகைபாட்டுச் சிக்கலுக்கு மேலும் தெளிந்த விளக்கம் தர உதவும். நடைமுறை வாழ்வில் புறத்தோற்ற வகைமையை வைத்தும் வாய்ப்புள்ள புவிப்பரப்பியல் மூதாதையர் கால்வழி மனப்பதிவுகளைக் கொண்டும் பல சமூகங்கள் மாந்தரைக் கு ...

                                               

எக்சு ஒய் ஒய் நோய்த்தொகை

எக்சு ஒய் ஒய் நோய்த்தொகை என்பது ஒரு கூடுதல் ஒய் குறுமவகம் உள்ள மரபியல் நிலையாகும். இதற்கான அறிகுறிகள் மிகச் சிலவே. இவர்கள் இயல்பை விட கூடுதலான உயரம் உள்ளவர்களாக இருப்பார்கள், முகப்பருவும் கற்றல் சிக்கல்களும் உள்ளவர்களாக இருப்பார்கள். மற்றபடி, இவர ...

                                               

கில்பர்ட் நோய்த்தொகை

கில்பர்ட் நோய்த்தொகை என்பது மெலிவான கல்லீரல் நோயாகும். இந்நிலையில் கல்லீரல் பித்தத்துகளைச் சரியாகக் கையாள்வதில்லை. பலருக்கு இந்நிலையின்போது அறிகுறிகள் ஏதும் அமைவது இல்லை. மிக அருகிய நிலையில் தோல் அல்லது வெண்விழிப்படலம் மஞ்சளாக அமையலாம். மற்றபடி, ...

                                               

டெளன் நோய்க்கூட்டறிகுறி

டௌன் நோய்க்கூட்டறிகுறி அல்லது டௌன் நோய்த்தொகை என்பது மனிதரில் காணப்படும் 21 ஆம் நிறப்புரியில் இரண்டு இருப்பதற்குப் பதிலாக, பகுதியாகவோ, முழுமையாகவோ மேலதிகமான ஒரு நிறப்புரி காணப்படும் நிலையாகும். மரபணு கோளாறுகளில் இந்நோயானது மிகவும் முக்கியமானதாகக் ...

                                               

திரீச்சர் காலின்சு நோய்த்தொகை

திரீச்சர் காலின்சு நோய்த்தொகை என்பது காதுகள், கண்கள், கன்ன எலும்புகள், முகவாய் ஆகியவற்றில் உருக்குலைவுகளை ஏற்படுத்தும் மரபியல் கோளாறு ஆகும். நோய்த்தாக்கம் குறைந்த நிலையில் இருந்து கடும்நிலை வரை அமையலாம். மூச்சுயிர்ப்புச் சிக்கல்கள், பார்வைச் சிக் ...

                                               

பிராடர் – வில்லி கூட்டறிகுறி

பிராடர்-வில்லி நோய்த்தொகை என்பது சில குறிப்பிட்ட மரபன்களின் செயலிழப்பால் ஏற்படும் ஒரு மரபியல் கோளாறு ஆகும். புதிதாகப் பிறந்த குழந்தைகளில் இதன் அறிகுறிகளாக வலிவற்ற தசை, மிகக் குறைவான ஊட்டம், மெதுவான வளர்ச்சி ஆகியன அமையும் குழந்தையில் இருந்தே கடும் ...

                                               

பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய்

பிறந்த குழந்தைகளில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் அல்லது பிறந்த குழந்தைகள், முதிர்கருக்களில் குருதிச் சிவப்பணு சிதைவு நோய் என்பது தாயின் குருதிக்கும், சேயின் குருதிக்கும் ஏற்படக்கூடிய ஒரு ஒவ்வாமை நிலையில், தாயில் உருவாகும் IgG வகை பிறபொருளெதிரியா ...

                                               

ஊசிக் காளான்

ஊசிக் காளான் அல்லது மியுக்கர் என்றழைக்கப்படும் இப்பேரினப் பூஞ்சையில், 3000 இனங்கள் உள்ளன. இவை மண், செரிமான மண்டலம், தாவரங்களின் மேற்புறம், அழுகிய காய்கறிகளில் காணப்படுகின்றன.கருப்பு ரொட்டிக் காளான் என்றும் இவை அழைக்கப்படுகின்றன.

                                               

கறையானிக் காளான்

கறையானிக் காளான் என்ற இப்பேரினப் பூஞ்சை, உயரிய பூஞ்சை வகுப்பைச் சார்ந்தது ஆகும். இதன் குடும்பம், செவுளினப் பூஞ்சை என்றழைக்கப்படுகிறது. இவற்றில் 30 சிற்றினங்கள் உள்ளன. இப்பூஞ்சைகளில் பெரும்பாலானவை, உணவுக் காளான்கள் ஆகும்.

                                               

தாவரப் பூசணவியல்

தாவரப் பூசணவியல் என்பது தாவரங்களின் வாழ்க்கைச் சுற்றில் இடர்களை உருவாக்கும் பூஞ்ஞைகளைப் பற்றி விவரிப்பதாகும். இதனால் மறைமுகமாக மனிதனுக்கும் பெரிய இழப்புகள் உண்டாகின்றன. இவ்விதம் ஊறுவிளைவிக்கும் பூஞ்சைகள் என 300 க்கும் மேற்பட்டவைகள் கண்டறியப்பட்டு ...

                                               

பூஞ்சை

மிகப் பெரிய மெய்க்கருவுயிரி உயிரினக் குழுக்களில் பூஞ்சை களும் ஒன்று. தற்போதைய பாகுபாட்டியலின் அடிப்படையில், பூஞ்சைகள் ஒரு தனி இராச்சியமாக வகைப்படுத்தப்படுகின்றன. வளமற்ற மண்ணும், தாவர, விலங்கு கழிவுகளும் இவற்றின் தாக்கத்தால் மாற்றமடைந்து, நிலத்துட ...

                                               

மதுவம்

மதுவம் எனப்படுவது கிட்டத்தட்ட 1500 இனங்களை உள்ளடக்கிய பூஞ்சை எனப்படும் உயிரியல் இராச்சியத்தைச் சேர்ந்த, ஒருகல மெய்க்கருவுயிரி நுண்ணுயிர்களாகும். ஏனைய பூஞ்சைகளைப் போலல்லாது இவை தனிக்கலங்களால் ஆன அசையக்கூடிய தனிக்கல உயிரிகளாகும். இனங்களுக்கிடையே கல ...

                                               

பொனொபோ

பொனொபோ எனப்படும் மனிதக் குரங்குகள் அண்மைக் காலம் வரை குள்ள சிம்ப்பன்சி அல்லது குள்ள சிம்ப்பன்சி என்று அழைக்கப்பட்டன. இவை முதனி வரிசையில், சிம்ப்பன்சி இனக் குரங்குகளின் இரு பிரிவுகளில் ஒன்றின்கீழ் வருவன. "சிம்ப்பன்சி" என்ற பெயர் பொதுவான சிம்ப்பன்ச ...

                                               

மனிதக் குரங்கு

மனிதக் குரங்கு என்பது ஹொமினோய்டியே பெருங்குடும்பத்தைச் சேர்ந்த உயர் விலங்கினம் ஆகும். பொது வழக்கில் இது பெரும்பாலும் மனிதர்களை உள்ளடக்குவதில்லை எனினும் அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில் மனிதரும் இவ் வகையுள் அடங்குபவரே. நடைமுறையில் உள்ள வகைப்பாட்ட ...

                                               

அமினோ அமிலம்

வேதியியலில், அமினோ அமிலம் அல்லது அமினோக் காடி என்பது, அமைன், கார்பாக்சைல் ஆகிய இரண்டு வேதி வினைக்குழுக்கள் கொண்ட ஒரு மூலக்கூறு ஆகும். அமினோ அமிலத்தில் காணப்படும் முதன்மையான தனிமங்களாக கார்பன், ஐதரசன், ஆக்சிசன், நைதரசன் போன்றவை காணப்படுகின்றன, பிற ...

                                               

அமினோ அமிலம் (புரதமாக்குபவை)

புரதமாக்கும் அமினோ அமிலங்கள் எனப்படுபவை மொழிபெயர்ப்பு என்ற உயிரியல் சேர்க்கை மூலம் இணைக்கப்பட்டு, புரதங்களை உருவாக்கக்கூடிய அமினோ அமிலங்களாகும். இவற்றிற்கு மரபுக்குறியீட்டிலிருந்து குறிமுறைச் செய்ய உயிரணு அமைப்பு முறை தேவைப்படுகின்றது. மொத்தம் 22 ...

                                               

அமினோபாசுபோனேட்டு

அமினோபாசுபோனேட்டுகள் என்பவை 2 PCR 2 NR" 2. என்ற பொது மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிமபாசுபரசு சேர்மங்களாகும் அமினோ அமிலங்களின் கட்டமைப்பை ஒத்த வரிசைச் சேர்மங்கள் என இவை வகைப்படுத்தப்படுகின்றன. அமினோ அமிலங்களில் உள்ள கார்பாக்சிலிக் ...

                                               

அஸ்பரஜின்

அஸ்பரஜின் அஸ்பரமைடு புரதங்களில் அடிப்படையாக உள்ள 20 அமினோ அமிலங்களில் ஒன்றாகும். இதனுடைய வாய்பாடு: 2 HN-CO-CH 2 -CH-COOH C 4 H 8 N 2 O 3. இது ஒரு அத்தியாவசியமற்ற ஆல்ஃபா அமினோ அமிலமாகும். அஸ்பரஜின் விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படக்கூடியது. ...

                                               

அஸ்பார்ட்டம்

அஸ்பார்ட்டம் என்பது ஒரு செயற்கை இனிப்பூட்டி. கரும்புச் சர்க்கரையான சுக்ரோசை விட இது 200 மடங்கு இனிப்புச் சுவையைத் தூண்டக் கூடியது. இதைச் சர்க்கரை என்று சொல்வது தவறு. ஏனெனில், வேதியியல் அடிப்படையில் இது ஃபினைல் அலனைன் மற்றும் அஸ்பார்ட்டிக் அமிலம் ...

                                               

ஆர்னிதின்

ஆர்னிதின் நேரடியாக டி.என்.ஏ மூலக்கூறிலிருந்து குறிமுறையீடு செய்யப்படாத, யூரியா சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும், அமினோ அமிலமாகும். யூரியா உருவாக்கத்தில் ஆர்ஜினின் மீது ஆர்ஜினினேஸ் நொதி வினை புரியும்போது ஆர்னிதின் ஒரு விளை பொருளாகக் கிடைப்பதால் ...

                                               

காமா அமினோ புயூட்டைரிக் காடி

காமா அமினோ புயூட்டைரிக் காடி என்பது நரம்பணுக்களுக்கிடையே செயல்படும் நரம்புக்கடத்திப் பொருள். நரம்புக்கடத்திகளின் வேலை நரம்புக் கம்பிகளின் வழியே மின் துடிப்பு கடப்பதற்கு உறுதுணையாக இருப்பது, பலவித நரம்புக்கடத்திகள் மூளையில் வெவ்வேறு வகை நரம்புப் ப ...

                                               

கிளைசின்

கிளைசின் என்னும் அமினோ அமிலம் ஒரு கரிமச்சேர்மம் ஆகும். இதனுடைய வாய்பாடு: NH 2 CH 2 COOH. "பக்கத் தொடரில்" இரண்டு ஹைட்ரசன் அணுக்களை மட்டும் கொண்டுள்ளதால் புரதங்களில் சாதரணமாகக் காணப்படும் 20 அமினோ அமிலங்களில் கிளைசின் மிகவும் சிறியதாகவும், நீர்நாட ...

                                               

கிளைத்தொடரி அமினோ அமிலம்

கிளைத்தொடரி அமினோ அமிலம் என்பது கொழுப்பார்ந்த அமினோ அமிலத்தை கிளைத்தொடரியாகக் கொண்ட அமினோ அமிலமாகும். புரதமாக்கும் அமினோ அமிலங்களில் மூன்று கிளைத்தொடரி அமினோ அமிலங்கள் உள்ளன: லியூசின், ஐசோலியூசின், வாலின். கிளைத்தொடரி அமினோ அமிலங்கள், மனிதருக்குத ...

                                               

குளூட்டாமிக் காடி

குளூட்டாமிக் காடி அல்லது குளூட்டாமிக் அமிலம் என்பது மாந்தர்களின் உடலியக்கத்திற்கு அடிப்படையாக உள்ள ஏறத்தாழ 20 அமினோ காடிகளில் ஒன்று, ஆனால் மிகத்தேவையான அமினோகாடிகளில் ஒன்றல்ல. குளூட்டாமிக் காடியின் உப்பும், எதிர்மின்மம் கொண்ட கார்பாக்சைலேட்டும் க ...

                                               

சர்க்கரையாக்க அமினோ அமிலம்

சர்க்கரையாக்க அமினோ அமிலம் என்னும் அமினோ அமிலத்தை குளுக்கோசு புத்தாக்கத்‌தின் மூலமாக குளுக்கோசாக மாற்ற முடியும். ஆனால், கீட்டோனாக்க அமினோ அமிலங்கள் கீட்டோன் உடலங்களாக மாற்றப்படுகின்றன. சர்க்கரையாக்க அமினோ அமிலங்களிலிருந்து குளுக்கோசை உருவாக்க முத ...

                                               

சிட்ருலின்

சிட்ருலின் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய நல்லியல் வாய்பாடு: H2NCNH3CHCO2H. சிட்ருலின், பாலூட்டிகள் அமோனியா கழிவுநீக்கத்திற்குப் பயன்படுத்தும் யூரியா சுழற்சி தடவழியில் உள்ள ஒரு முக்கிய இடைநிலை வேதிப் பொருளாகும். ஆர்னிதின் மற்றும் கார்பமோயி ...

                                               

சிஸ்டீன்

சிஸ்டீன் என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO 2 CCHCH 2 SH. இது ஒரு அத்தியாவசியமற்ற அமினோ அமிலமாகும். இது விலங்குகளின் உடலிலும் மனிதர்களின் உடலிலும் விளைகின்ற ஒன்று. இதன் குறிமுறையன்கள்: UGU மற்றும் UGC. மின் மு ...

                                               

செலீனோசிஸ்டீன்

சிஸ்டீனைப் போன்ற கட்டமைப்பை செலீனோசிஸ்டீன் கொண்டிருந்தாலும், கந்தகத்திற்கு பதிலாக செலீனியம் அணுவைக் கொண்டுள்ளதால் செலீனோல் தொகுதியை உருவாக்குகிறது. ஒன்று அ அதற்கு மேற்பட்ட செலீனோ சிஸ்டீன் படிவங்களைக் கொண்டப் புரதங்கள் செலீனோ புரதங்கள் என்றழைக்கப் ...

                                               

டிரிப்டோபான்

டிரிப்டோபான் என்னும் அமினோ அமிலம் ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்தே இது பெறப்படுகிறது. ஆதலினால் இது இன்றியமையா அமினோ அமிலங்கள் என்ற பிரிவினுள் அடங்கும். இதன ...

                                               

பிரோலைசின்

பிரோலைசின் இயற்கையில் காணப்படும், பொதுமரபுக்குறியீட்டிலிருந்து நேரடியாகக் குறிமுறைச் செய்யப்படும் அமினோ அமிலமாகும். இது, சில மீத்தேனாக்கும் ஆர்க்கியா என்னும் ஒரு செல் பாக்டீரியாக்களில் உபயோகப்படுத்தப்படுகின்றது. மேலும், மீத்தேன் உருவாக்கும் வளர்ச ...

                                               

புரோலின்

புரோலின் என்பது C 5 H 9 NO 2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஓர் அமினோ அமிலம் ஆகும். இதனுடைய அமைப்பு வாய்ப்பாட்டை HO2CCH3.என்று எழுதுகிறார்கள். CCU, CCC, CCA மற்றும் CCG போன்ற மரபுக்குறிமுறையன்களால் இது குறிக்கப்படுகிறது. இந்த அமினோ அமிலம் புரத ...

                                               

லியூசின்

லியூசின் என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO 2 CCHCH 2 CH 2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்பட ...

                                               

வாலின்

வாலின் என்னும் அமினோ அமிலம் ஒரு கிளைத்தொடரி ஆல்ஃபா- அமினோ அமிலமாகும். இதனுடைய வாய்பாடு: HO 2 CCHCH 2. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. ...

                                               

ஹோமோசிஸ்டீன்

ஹோமோசிஸ்டீன் என்னும் அமினோ அமிலத்தின் வாய்பாடு: HSCH 2 CH 2 CHCO 2 H. இது, சிஸ்டீன் அமினோ அமிலத்திற்கு ஒப்பானதாகும். ஆனால், சிஸ்டீனைக் காட்டிலும் ஒரு மீத்தைலீன் தொகுதியை அதிகமாகக் கொண்டுள்ளது. ஹோமோசிஸ்டீன், மெத்தியோனின் அமினோ அமிலத்திலுள்ள இறுதி ...

                                               

யூரியா சுழற்சி

யூரியா சுழற்சி ஆர்னிதின் சுழற்சி என்பது பல விலங்குகளில் அமோனியாவிலிருந்து, யூரியா தயாரிக்க நடைபெறும் உயிரிவேதி வினைகளின் சுழற்சியாகும். யூரியா சுழற்சி கல்லீரலில் முதன்மையாகவும், சிறுநீரகத்தில் குறைவான அளவும் நடைபெறுகின்றது.

                                               

சமநிலைப் புள்ளி

ஒரு தாவரத்திற்குக் கார்பன் டை ஆக்சைடின் செறிவு குறைவாகவும் தட்டுப்பாடின்றித் தீவிரமான ஒளியும் கிடைக்கும் நிலையில் ஒளிச்சேர்க்கையின் வீதம் அத்தாவரத்தின் சுவாச அளவுக்குச் சரிசமமாக இருக்கும். இடையறாது நடைபெறும் சுவாசமும் ஒளிச் சுவாசமும் இதில் அடங்கு ...

                                               

சி3 கார்பன் நிலைநிறுத்தம்

C 3 கார்பன் நிலைநிறுத்தம் என்பது தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான கார்பன் நிலைநிறுத்தப் பாதைகளுள் ஒன்று ஆகும். சி4 கார்பன் நிலைநிறுத்தம், கிராசுலாசியன் அமில வளர்சிதைமாற்றம் ஆகிய இரண்டும் மற்ற இரு பாதைகள் ஆகும். இச்செயல் முறையில் கார்பன் டை ஆக ...

                                               

பச்சையம்

பச்சையம் என்பது தாவரங்கள், பாசி வகைகள், சிலவகை பாக்டீரியாக்கள் ஆகியவற்றிலுள்ள ஒரு பச்சை வர்ண ஒளிச்சேர்க்கை நிறமி ஆகும். ஒளிச்சேர்க்கையின் முதல்படியாக பச்சையத்தின்மீது ஒளி விழுகிறது. இதன் மூலம் அது அயனாக்கம் ஆகிறது. இதில் விளையும் வேதியியல் ஆற்றலை ...

                                               

இடைமணமியமாக்கப்பட்டக் கொழுப்பு

இடைமணமியமாக்கப்பட்டக் கொழுப்பு என்பவை ஒரு டிரைகிளிசரைடு மூலக்கூறிலிருந்து மற்றொரு மூலக்கூறுக்கு மாற்றப்பட்ட கொழுப்பு அமிலங்களைக் கொண்ட ஒருவகை எண்ணெய்களாகும். இடைமணமியமாக்கப்படும் வினையானது கொழுப்பு அமிலங்களை மாற்றுவதில்லை. பொதுவாக, உருகுநிலையை மா ...

                                               

ஒமேகா-3 கொழுப்பு அமிலம்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் எனக் குறிக்கப்படுபவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின் குடும்பமாகும். அவை அனைத்தும் n −3 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து மூ ...

                                               

ஒமேகா-6 கொழுப்பு அமிலம்

ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் எனக் குறிக்கப்படுபவை நிறைவுறாக் கொழுப்பு அமிலங்களின் குடும்பமாகும். அவை அனைத்தும் n −6 இடத்தில் பொதுவான ஒரு இறுதி கார்பன்–கார்பன் இரட்டைப் பிணைப்பைக் கொண்டிருக்கும்; அதாவது கொழுப்பு அமிலத்தின் மீத்தைல் முனையிலிருந்து ஆற ...

                                               

குறையடர்த்தி கொழுமியப்புரதம்

குறையடர்த்தி கொழுமியப்புரதம் ஐந்து பெரும் கொழுமியப்புரதத் தொகுப்புகளுள் ஒன்றாகும். கொழுமியப்புரதத் தொகுப்புகளை பெரிய அளவுகளிலிருந்து சிறிய அளவிற்கு பின்வறுமாறு வரிசைப்படுத்தலாம்: கைலோமைக்ரான்கள், மிகு-குறையடர்த்தி கொழுமியப்புரதம், இடைநிலையடர்த்தி ...

                                               

கொழுமிய ஈரடுக்கு

கொழுமிய ஈரடுக்கு என்பது இரு படல கொழுமிய மூலக்கூறுகளாலான மெல்லிய சவ்வாகும். தட்டையான விரிப்புகளாக உள்ள இம்மென்படலங்கள் உயிரணுக்களைச் சுற்றி தொடர் தடுப்புச் சுவர்களை உருவாக்குகின்றன. கிட்டத்தட்ட அனைத்து உயிரினங்களின், பல வைரசுகளின் உயிரணு மென்தோல்க ...

                                               

கொழுமிய மிதவை

உயிரணுக்களின் முதலுருமென்சவ்வுகள் கிளைக்கோஸ்பிங்கோகொழுமியங்கள் மற்றும் புரத ஏற்பிகளின் இணைவினால் உருவானவையாகும். இவை கிளைக்கோகொழுமியப்புரத நுண்ணியத் திரளங்களில் கொழுமிய மிதவைகளாக ஒருங்கமைவு செய்யப்படுகின்றன. இத்தகுச் சிறப்பான மென்படல நுண்ணியத் தி ...