ⓘ Free online encyclopedia. Did you know? page 18




                                               

திருத்தொண்டர் திருவந்தாதி

திருத்தொண்டர் திருவந்தாதி என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று. அந்தாதி என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம் திருத்தொண்டர் திருவந்தாதி நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம்பி. காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பாதி. ...

                                               

திருவாய்மொழி நூற்றந்தாதி

திருவாய்மொழி நூற்றந்தாதி 15-ஆம் நூற்றாண்டு நூல். மணவாள மாமுனிகள் பாடிய மூன்று தமிழ்நூல்களில் இது ஒன்று. நம்மாழ்வார் பாடிய நூல் திருவாய்மொழி. இதில் 100 பதிகங்கள் உள்ளன. இதில் உள்ள ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு வெண்பா என 100 வெண்பாக்கள் மணவாள மாமுனிகள ...

                                               

திருவேகம்பமுடையார் திருவந்தாதி

திருவேகம்பமுடையார் திருவந்தாதி என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறையில் இடம்பெற்றுள்ளது. அந்தாதி என்பது ஒரு சிற்றிலக்கியம் இதன் ஆசிரியர் பட்டணத்துப் பிள்ளையார். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தவர். காலம் பத்தாம் நூற்றாண்டு. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர ...

                                               

திருவேகம்பர் அந்தாதி

திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் ஆனந்தக்கூத்தர், மயிலம்மையார்க்கு மகனாகப் பிறந்தவர் சிவஞானமுனிவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் முக்களாலிங்கர். இளம்வயது முதலாகவே துறவறத்தில் நாட்டம் கொண்டு திருவாவடுதுறை ஆதீனத்திலேயே தங்கினார். இவரத ...

                                               

நிராமய அந்தாதி

நிராமய அந்தாதி என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. இது 10 வெண்பாக்களைக் கொண்டு அமைந்துள்ள அந்தாதிச் சிறு நூல். திருஞான சம்பந்தரைப் போற்றும் நூல் இது. திருஞான சம்பந்தரை இந்நூல் ‘துரை காழிச் சம்பந்தர்’ எனக் குறிப்பிடுகிறத ...

                                               

பந்தன் அந்தாதி

பந்தன் அந்தாதி என்னும் நூல் ஔவையாரால் பாடப்பட்டது என அந்த நூலின் குறிப்பு கூறுகிறது. அந்த நூலின் உள்ளே வரும் பாடல்களை எண்ணிப் பார்க்கும்போது இந்த நூல் எந்த ஔவையாராலும் பாடப்படவில்லை என்பது தெளிவாகும். இந்த நூலில் உள்ள ஒரு பாடல் ஔவையாரையே குறிப்பி ...

                                               

பொன்வண்ணத்தந்தாதி

பொன்வண்ணம் என்று இந்த நூல் தொடங்குவதால் இதற்குப் பொன்வண்ணத்து அந்தாதி என்னும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான அந்தாதி வகையினது. நூலின் காலம் 650-710. இது சேரமான் ...

                                               

அழகர் குறவஞ்சி

தமிழ் இலக்கியத்தில் அழகர் குறவஞ்சி என்பது இசை, நாடகத் தமிழில் தனிச்சிறப்பு பெற்ற குறவஞ்சி வகைகளில் ஒன்று. இலக்கியம், இசை இரண்டும் அமைந்த ஒன்று. இக்குறவஞ்சி நாடக ஆசிரியர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த கவிகுஞ்சர பாரதி. சங்கீத மும்மூர்த்திகளான தியா ...

                                               

கும்பேசர் குறவஞ்சி

கும்பேசர் குறவஞ்சி நாடகத்தை இயற்றியவர் பாபநாச முதலியார் என்பதை நூலின் பாயிரம் மூலமாக அறிந்துகொள்ளலாம். பாபநாச முதலியார் 17ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவரது வாழ்க்கை குறித்த முழுமையான செய்திகள் கிடைக்கவில்லை.

                                               

குற்றாலக் குறவஞ்சி

திருக்குற்றாலக் குறவஞ்சி தமிழ்ச் சிற்றிலக்கியங்களுள் ஒன்று. தமிழ்நாட்டின் தென்கோடியில் தென்காசிக்கு அருகில் அமைந்திருக்கும் குற்றாலம் எனும் ஊரின் சிறப்பைப் புகழ்ந்து அங்குள்ள ஈசரான குற்றாலநாதரைப் போற்றி, தெய்வக் காதல் பற்றிய கற்பனையை அமைத்துப் பா ...

                                               

குறவஞ்சி

குறவஞ்சி ஒரு தமிழ் பாடல் நாடக இலக்கிய வடிவமாகும். இது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாகும். பாட்டுடைத் தலைவன் உலாவரக் கண்ட தலைவி ஒருத்தி, அத்தலைவன் மீது காதல் கொண்டு அவனை அடையத் தவிக்கும் நிலையில், குறவர் குலத்தைச் சார்ந்த பெண் ஒருத்தி அத்தலைவிக்குக் ...

                                               

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி

சரபேந்திர பூபாலக் குறவஞ்சி, தஞ்சாவூரை ஆட்சி செய்த இரண்டாம் சரபோஜியைத் தலைவனாகக் கொண்டு எழுதப்பட்ட நூல் ஆகும். குறவஞ்சி என்பது பிற்காலத்தில் எழுந்த பல்வேறு வகைப்பட்ட பிரபந்தங்களில் ஒன்றாகும்.

                                               

பெத்தலகேம் குறவஞ்சி

பெத்தலகேம் குறவஞ்சி என்ற நூல் தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றாகும். உலாப்போகும் மன்னனையோ தெய்வத்தையோ கண்டு மையல் கொண்ட தலைவி வருந்துவது. வீதியிலே வந்த குறத்தியைக் குறி கேட்பதும், குறத்தி தனது மலை வளம், நாட்டுவளம் ஆகியவற்றை வாழ்த்தி தலைவிய ...

                                               

அறப்பளீசுர சதகம்

இதனை இயற்றியவர் அம்பலவாணக் கவிராயர் என்பவர் ஆவார். இவர் சீர்காழி அருணாசலக் கவிராயரின் மகனாவார். இது தவிர இந்நூலாசிரியர் குறித்த செய்திகள் ஏதும் அறிய இயலவில்லை.

                                               

சதகம்

சதகம் என்பது தமிழில் சிற்றிலக்கியங்கள் எனவும் வடமொழியில் பிரபந்தங்கள் எனவும் அழைக்கப்படும் பாட்டியல் வகைகளுள் ஒன்று ஆகும். தமிழ் இலக்கியத்தில் சொல்லப்படும் அகப்பொருள் அல்லது புறப்பொருள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை அடிப்படையாகக் கொண்டு நூறு பாடல்களால ...

                                               

கதிரை மலைப் பள்ளு

கதிரை மலைப் பள்ளு தமிழ் சிற்றிலக்கியங்களில் ஒன்றான பள்ளு வகையைச் சேர்ந்த நூல். 1915 ஆம் ஆண்டு முதன்முதலாக அச்சில் வெளிவந்த இந்நூலின் காலமும் ஆசிரியர் பெயரும் தெரியவில்லை. இது மரபு வழி இலக்கிய அம்சங்களையும் நாட்டார் இலக்கியப் பண்புகளையும் இசைநாடகக ...

                                               

ஞானப்பள்ளு

திருவாரூர்த் தியாகேசர் ஞானப் பள்ளேசல் என்னும் நூல் ஒன்றைச் சோழமண்டல சதகம் குறிப்பிடுகிறது. இதற்கு ஞானப்பள்ளு என்னும் பெயர் உண்டு என்றும், கமலை ஞானப்பிரகாசர் இதனைச் செய்தார் என்றும் கூறுகின்றனர். இது பொருந்தாது என அறிஞர் மு. அருணாசலம் கூறுகிறார். ...

                                               

தண்டிகைக் கனகராயன் பள்ளு

தண்டிகைக் கனகராயன் பள்ளு, யாழ்ப்பாணத்தில் எழுந்த ஒரு பள்ளு வகைச் சிற்றிலக்கிய நூல். மாவிட்டபுரம் என்னும் ஊரைச் சேர்ந்த சின்னக்குட்டிப் புலவர் 18 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்நூலை ஆக்கியுள்ளார். யாழ்ப்பாண அரசன், கூழங்கைச் சக்கரவர்த்தி எனப்படும் ம ...

                                               

பறாளை விநாயகர் பள்ளு

பறாளை விநாயகர் பள்ளு ஈழத்தில் தோன்றிய பள்ளு இலக்கியங்களில் ஒன்று. கிபி 18-19 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த யாழ்ப்பாணத்து, நல்லூர் சின்னத்தம்பிப் புலவரால் ஆக்கப்பட்ட இந்நூல், இலங்கையின் வடபாலுள்ள பறாளை என்னும் இடத்திலுள்ள விநாயகப் பெருமானின் மேற் பா ...

                                               

முக்கூடற் பள்ளு

பள்ளு என்ற சிற்றிலக்கிய வகையில் சிறந்த நூல் முக்கூடற்பள்ளு. நெல்லை மாவட்டத்தில் உள்ள பொருனை ஆற்றங்கரையில் முக்கூடல் என்ற நகரம் உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள அழகர் பெருமானை இந்த நூல் போற்றி இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இந்த நூலின் காலம் கி.பி. 1680 ...

                                               

அதிசய அணி

வியப்பு அணி என்பது ஒன்றை மிகைப்படுத்திக் கூறுவது. ஒரு பொருளினது அழகை மிகவும் அதிகப்படியான கற்பனைத்திறன் கலந்து, கேட்போர் வியக்கும்படி அழகாக வர்ணித்துக்குக் கூறுவது.

                                               

ஆர்வமொழியணி

ஆர்வம் = அன்பு, மகிழ்ச்சி. மனத்திற்குள் ஏற்படும் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் சொற்கள் மிகுதியாக அமைந்து வருவது ஆர்வமொழி அணி ஆகும். இது மகிழ்ச்சி அணி எனவும் பெயர் பெறும்.

                                               

இதரவிதர உவமையணி

இதரவிதர உவமையணி என்பது உவமையணியின் ஒரு வகையாகும். இதனை தடுமாறுவமை என்றும் கூறுவர். பொருளாகக் கூறப்பட்டது சில சமயம் உவமையாகவும். உவமையானது சில சமயம் பொருளாகவும் மாறி மாறி ஒரு தொடர்ச்சியாக வருவது இதர விதரம் ஆகும். சான்று களிக்கும் கயல்போலும் நுங்கண ...

                                               

இரட்டுறமொழிதல் அணி

ஒரு சொல்லோ, சொற்றொடரோ இரு பொருள் பட வருவது இரட்டறமொழிதல் அணி எனப்படும். இதனைச் சிலேடையணி என்றும் அழைப்பர். ஒரு சொல் பிரிபடாமல் தனித்துநின்று பல பொருள் தருவது செம்மொழிச் சிலேடை என்றும், சொற்றொடர் பல வகையாகப் பிரிக்கப்பட்டுப் பல பொருள்களைத் தருவது ...

                                               

இலேச அணி

ஒரு கருத்தை அல்லது உணர்வைக் குறிப்பாகக் காட்டுதல் அல்லது வெளிப்படுத்தல் பல அணிகளில் காணப்படுவது. ஒருவகையில் இலேச அணியும் குறிப்புணர்த்தலைச் செய்வது; ஆயினும் குறிப்புணர்த்தும் பிற அணிகளிலிருந்து வேறுபடுவது. மனத்தில் தோன்றும் ஓர் உணர்வைச் சொல்லாமல் ...

                                               

உயர்வு நவிற்சி அணி

குதிரை வேகமாகப் பாய்ந்து ஓடிற்று - இது தன்மை நவிற்சி அணி குதிரை காற்றிலும் வேகமாகப் பாய்ந்து ஓடிற்று - இது உயர்வு நவிற்சி அணி காற்று மிகவும் வேகமானதொன்று. அதையும் விட வேகமாகப் பறப்பதென்பது மிகைப்படுத்திய கூற்று.

                                               

உருவக அணி

உருவக அணி என்பது உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப் படுத்துவதாகும். விதி: "உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்றென மாட்டின் அஃது உருவகமாகும்". எடுத்து ...

                                               

உவமையணி

தமிழிலக்கணத்தில், உவமையணி என்பது கூறக் கருதிய பொருளை நன்கு தெரிந்த ஒன்றைக் காட்டி விளக்குவது. ஒரு பொருளை இன்னொரு பொருளுடன் ஒப்பிட்டு அழகு படுத்திக் கூறுவது. தெரியாத பொருளைக் காட்ட தெரிந்த பொருளைச் சொல்லி விளக்குவது. சொல்ல எடுத்துக் கொண்ட பொருளை வ ...

                                               

உள்ளுறை

தெரியாத பொருளைத் தெளிவாக்குவதற்கு உவமை கையாளப்படும். உவமை பல வகையில் அமையும். அவற்றுள் உள்ளுறை என்பது ஒருவகை. உள்ளுறை என்பது அகத்திணைப் பாடல்களில் அமைந்திருக்கும். புறத்திணைப் பாடல்களில் அது அமையுமாயின் அதனைப் பிறிது மொழிதல் அணி =ஒட்டணி என்பர். க ...

                                               

உள்ளுறை உவமம்

தமிழில் உள்ள அகத்திணைப் பாடல்களுக்கு உரிய திணையைத் தீர்மானிப்பதற்குத் திணை கொள் நெறி எனத் தனி இலக்கண நெறி ஒன்று உண்டு. அது உரிப்பொருளை அடிப்படையாகக் கொண்டது. உரிப்பொருளானது பாடலில் வெளிப்படையாகப் புலப்படுவதோடு மட்டுமன்றி இறைச்சி உள்ளுறை உவமம் ஆகி ...

                                               

ஒழுகிசை (செய்யுள்)

ஒழுகிசை என்பது செய்யுட்களைச் சொற்களால் அல்லது பொருளால் மோனை முதலான தொடைகள் அமைத்து கேட்போருக்கு இன்பம் தரும் வகையில் அமைக்கும் செய்யுளின் ஓசையாகும். வெறுக்கத்தக்க இனிமையல்லாத இசைபோலன்றி, நீரொழுக்குப் போல தங்கு தடையின்றிச் செல்லும் ஓசையால் தொடுக்க ...

                                               

குளகச் செய்யுள்

குளகச் செய்யுள் என்பது பல பாடலாய் நின்று ஒரு வினையை அல்லது ஒரு பெயரையாவது கொண்டு முற்றுப் பெறும் செய்யுளாகும். குளகம் என்பது ஒரு பாடலில் பொருள் முடியாமல் அடுத்தடுத்து சென்று முடிவதாகும். சான்று: பாடல் 1: இருவிகற்ப நேரிசை வெண்பா முன்புலகம் ஏழினையு ...

                                               

சொல் அணி

செய்யுளில் அல்லது வசனத்தில் இரண்டாவது எழுத்து ஒழுங்குபடத் தொகுக்கப்பட்டிருப்பது. அல்லது செய்யுட் சீர்களின் இரண்டாவது எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது. உதாரணம் ஒ ட் டகத்தைக் க ட் டிக்கோ கெ ட் டியாக ஒ ட் டிக்கோ வ ட் ட வ ட் டப் பொ ட் டுக்காரி

                                               

தற்குறிப்பேற்ற அணி

எ.கா.1: போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரல் என்பனபோல் மறித்துக் கைகாட்ட சிலப்பதிகாரம் விளக்கம்: கோவலனும் கண்ணகியும் மதுரை மாநகரத்திற்குள் நுழைய முற்படும்போது இயல்பாகக் காற்றிலாடும் தோரண வாயிற் கொடிகளைக் கவிஞர் தம் கற்பனையினால் கோவலன் மதுரையி ...

                                               

தன்மேம்பாட்டுரை அணி

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் தன்மேம்பாட்டுரை அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது: நூற்பா தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை. -- தண்டியலங்காரம், 71 எ.கா. எஞ்சினார் இல்லை எனக்கெதிரா இன்னுயிர்கொண்டு அஞ்சினார் அஞ்சாது போய ...

                                               

தன்மை நவிற்சி அணி

தன்மை நவிற்சி அணி என்பது எவ்வகைப் பொருளையும் அல்லது எச்செயலையும் உண்மையான முறையில் உள்ளபடி உள்ளதாக விளக்கும் சொற்களால் அமைவது. இது இயல்பு நவிற்சி அணி எனவும் கூறப்படும்.

                                               

திரிபணி

திரிபணி தமிழில் போற்றப்பட்ட அணியிலக்கண வகைகளில் ஒன்று. இது சொல்லணி வகை. இது மடக்கணியிலிருந்து சற்றே வேறுபாடு உடையது. மடக்கணியில் ஒரு பாடல் அடியில் உள்ள சில சீர்கள் அடுத்த அடியில் வரும்போது முன்னதன் எதுகையையும் மோனையையும் அப்படியே கொண்டதாக இருக்கு ...

                                               

தீவக அணி

தண்டியலங்காரம் பொருளணியியலில் சொல் அடிப்படையில் அமையும் சில அணிகள் இடம் பெறுகின்றன. பாடலில் வரும் சொற்கள் பொருள் விளக்கத்திற்குக் காரணமாக இருப்பதால் இவை பொருளணியியலில் வைக்கப்பட்டன. இத்தகைய அணிகளில் தீவக அணியும் ஒன்று.

                                               

தொகைநிலைச் செய்யுள்

தொகைநிலைச் செய்யுள் என்பது ஒருவராலோ அல்லது பலராலோ உரைக்கப்பட்டு பல பாட்டாய் வருவனவும், பொருள், இடம், காலம், தொழில், பாட்டு, அளவு, ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டு ஒன்றாகத் தொகுக்கப்பட்டு தொகை எனப்பெயர் பெற்றனவும் ஆகிய செய்யுள்கள் ஆகும். இவற்றுள் ...

                                               

தொடர்நிலைச் செய்யுள்

தொடர்நிலைச் செய்யுள் என்பது செய்யுட்கள் தம்முள் பொருளால் தொடந்து வருவதும், சொல்லால் தொடர்ந்து வருவதுமாகும். பொருளால் தொடர்ந்து வருவது பெருங்காப்பியம், சிறு காப்பியம் என இரு வகைப்படும். சொல்லால் தொடர்ந்துவருவது அந்தாதியாகும். சான்று: மதுரைக் கலம்ப ...

                                               

தொல்காப்பியம் உவமவியல் செய்திகள்

தமிழுக்குக் கிடைத்துள்ள மிகத் தொன்மையான நூலான தொல்காப்பியம் தமிழ்மொழியின் இலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என 3 பகுதிகளாகக் காட்டுகிறது. ஒவ்வொரு பகுதியும் 9 இயல்களைக் கொண்டது. தமிழரின் கருத்துக்கள் நூலில் அமையுமாற்றைக் கூறுவது மூன்றாவது பகுதியாகி ...

                                               

நிதரிசன அணி

உலகில் இயற்கையாகச் சில நிகழ்ச்சிகள் நிகழ்வதைக் கவிஞர்கள் காண்கிறார்கள். அவற்றை உலக மாந்தர் வாழ்க்கையோடு இயைத்துப் பார்க்கின்றனர். தாம் கண்ணுற்ற இயற்கை நிகழ்ச்சிகள் மாந்தருடைய நல்ல பண்புகளையும் தீய பண்புகளையும் எடுத்துக்காட்டுவதற்காவே நிகழ்கின்றன ...

                                               

நிரல்நிறை அணி

நிரல்நிறை அணி சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப் படியே பொருள் கொள்ளும். அதாவது சில சொற்களை முதலில் ஒரு வரிசையில் வைத்து, அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறைமாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும். எ.கா. அன்பும் அறனும ...

                                               

நுட்ப அணி

கவிஞர் தாம் சொல்லக் கருதியதைக் கூற்றினால், வெளிப்படையாகக் கூறுவதும் உண்டு. குறிப்பினால் கூறுவதும் உண்டு. குறிப்பினால் உணர்த்தும் அணிகளுள் நுட்பஅணி ஒன்று. செயல்பாட்டாலும், செய்யும் தொழிலாலும் கருத்தைக் குறிப்பாகப் புலப்படுத்தும் முறையில் அமைத்துப் ...

                                               

பரியாய அணி

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரியாய அணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது: கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப் பிறிதுஒன்று உரைப்பது பரியா யம்மே -- தண்டியலங்காரம், 72 பரியாயம் - ஒன்றுக்குப் பதிலாக, சாமர்த்தியமாக வேறொன்றை ...

                                               

பரிவருத்தனை அணி

12ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கருதப்படும் தண்டியலங்காரம் பரிவருத்தனை யணியைக் கீழ்வருமாறு விளக்குகிறது: பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே -- தண்டியலங்காரம், 87 பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும ...

                                               

பாவிக அணி

பொருள் அணிகளில் உள்ள மற்ற முப்பத்து நான்கு அணிகளும் தனிநிலைச் செய்யுளில் அமையுமாறு தண்டி ஆசிரியரால் கூறப்பட்டவை ஆகும். பாவிக அணியோ, தொடர்நிலைச் செய்யுள் என்று கூறப்படும் ஒரு பெரிய காப்பியம் முழுவதும் ஊடாடி நிற்கும் கருத்தையோ, நீதியையோ பற்றியதாகக் ...

                                               

பிறிது மொழிதல் அணி

பிறிது மொழிதல் அணி என்பது தான் கருதும் பொருளை வெளிப்படையாகக் கூறாமல் பிறிதொன்றால் ஏற்றிக் கூறுதல். அதாவது கருத்திலே ஒன்றைக் கொண்டு, அது குறிப்பால் விளங்கித் தோன்றுமாறு வேறு ஒன்றைக் கூறுவது போல பிறிதொரு பொருள் மேல் ஏற்றிக் கூறுவது. புலவர் தான் கரு ...

                                               

பிறிதுமொழிதல் அணி

பிறிது மொழிதல் அணியைத் தண்டியலங்காரம் என்னும் நூல் ஒட்டணி என்று குறிப்பிடுகிறது. அது குறிப்பிடும் 35 அணிகளில் இது ஒன்று. புலவர் தான் சொல்ல விரும்பும் கருத்து தன் பாடலில் ஒட்டிக்கொண்டிருக்கும்படி பிறிதொன்றைக் கூறுவது ஒட்டணி. இதனை நுவலா நுவற்சி, தொ ...

                                               

பின்வருநிலையணி

சொல் பின்வருநிலையணி என்பது ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல் பின்னர் பல இடத்தும் வந்து வெவ்வேறு பொருளைத் தருவது சொல் பின்வரு நிலையணி ஆகும் எ.கா: இக்குறட்பாவில் உடைமை என்ற சொல்லானது பெற்றிருத்தல், உடைய, பொருள் என வேறுபட்ட பொருளில் பல முறை வந்துள்ளத ...