ⓘ Free online encyclopedia. Did you know? page 167




                                               

ஏமாற்றி (சதுரங்கம்)

சதுரங்கத்தில், ஏமாற்றி என்பது எதிரி காயை வலையில் அகப்பட செய்யப்படும் உத்தியாகும். பொதுவாக எதிரி ராஜா அல்லது ராணியை நஞ்சான கட்டத்திற்கு தனது காயைப் பலியிடுவதன் மூலம் கட்டாயப்படுத்திச் செல்ல வைப்பதாகும்.

                                               

காற்றாலை உத்தி

சதுரங்க விளையாட்டில் காற்றாலை உத்தி என்பது திட்டமிட்டு தாக்குதல் நிகழ்த்தும் ஒருவகையான சதுரங்க உத்தி வகையாகும். இவ்வுத்தியில் முற்றுகையும் வெளிப்படும் முற்றுகையும் இணைந்து ஒன்றன் பின் ஒன்றாக ஓயாமல் முற்றுகையிட்டு எதிரியின் மீது தாக்குதல் நிகழ்த்த ...

                                               

சுக்சுவாங்

சுக்சுவாங் என்பது சதுரங்கம் மற்றும் வேறு சில ஆட்டங்களிலும் வரும் ஓர் நிலையாகும். இந்த நிலையில் ஓர் ஆட்டக்காரர் நகர்த்துவதற்கான வாய்ப்பை கடத்த அல்லது நகர்த்தாமல் இருக்க விரும்பும்போது, நகர்த்தவேண்டும் என்ற கட்டாயத்தின் மூலம் செய்யப்படும் ஒரு நகர்த ...

                                               

செருகி (சதுரங்கம்)

சதுரங்க விளையாட்டில் செருகி எனப்படுவது, ஆட்டக்காரர்களால் உருவாக்கப்படும் ஒரு இக்கட்டான சூழல் ஆகும். இந்த சொல் அத்தகைய இடரில் சிக்கியுள்ள சதுரங்கக் காயைச் சுட்டும் ஒரு பெயராகவும் பொருள் கொள்ளப்படுகிறது. தாக்குதல் நிகழ்த்தும் வீரர் இச்சூழலை உண்டாக் ...

                                               

தியாகம் (சதுரங்கம்)

சதுரங்கத்தில், தியாகம் என்பது ஒரு சதுரங்கக் காயை எதிராளிக்கு விட்டுக்கொடுக்கும் நகர்த்தலாகும். இத்தியாகம் நிலையில் மேலோங்கல் அல்லது புது வியூகம் அமைத்தல் என்பவற்றைக் கருத்திற்கொண்டு செய்யப்படுகிறது. தியாகம் என்பது சிலவேளை வலுக்கூடிய காயை எதிராளிய ...

                                               

பற்றுக்காய் உத்தி

சதுரங்க விளையாட்டில் பற்றுக்காய் உத்தி Skewer என்பது ஊடுகதிர் தாக்குதல் அல்லது எக்சு கதிர் தாக்குதல் என்றும் அழைக்கப்படுகிறது. சதுரங்க ஆட்டத்தில் செருகி உருவாக்கும் இக்கட்டான நிலை போலவே பற்றுக்காய் உத்தியும் இத்தகைய நிலைப்பாட்டை எதிரிக்கு உண்டாக் ...

                                               

மிகை பாரமேற்றுதல் (சதுரங்கம்)

சதுரங்க விளையாட்டில் மிகை பாரமேற்றுதல் என்பது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு சதுரங்க காய்க்கு, எதிரியானவர் மேலும் கூடுதலாக மற்றொரு பாதுகாப்பு பணியையும் சுமத்தும் உத்தியாகும். இதனால் அளிக்கப்பட்ட அதன் அசல் தற்காப்பு வேலையை கைவிட ...

                                               

விலக்குதல் (சதுரங்கம்)

சதுரங்க விளையாட்டில் விலக்குதல் என்பது திட்டமிடப்பட்ட ஒரு சதுரங்க உத்தியாகும். எதிரியின் காயை அது ஆக்ரமித்துள்ள சதுரத்தில் மற்றொரு சதுரத்துக்கு விலகிச்செல்ல தூண்டுவதே விலக்குதல் எனப்படும். இது அருகில் உள்ள சதுரத்திற்கோ, வேறு வரிசைக்கோ வேறு தரத்தி ...

                                               

அரை-திறந்த செங்குத்து வரிசை

சதுரங்கத்தில், அரை-திறந்த செங்குத்து வரிசை அல்லது பாதி-திறந்த செங்குத்து வரிசை என்பது ஒரு நிறச்சிப்பாய் மட்டும் கொண்ட செங்குத்து வரிசையாகும். அரை-திறந்த செங்குத்து வரிசையானது கோட்டை மற்றும் அரசிக்கும் தாக்குதல் நடத்துவதை இலகுவாக்கும். அரை-திறந்த ...

                                               

இணைக்கப்பட்ட சிப்பாய்கள்

சதுரங்க விளையாட்டில், ஒரே நிறத்தில் இரண்டு சிப்பாய்களோ இரண்டுக்கு மேற்பட்ட சிப்பாய்களோ அடுத்துள்ள வரிசைகளில் இணைந்து நின்றிருத்தலை இணைக்கப்பட்ட சிப்பாய்கள் என்று அழைக்கின்றனர். இவை தனித்த சிப்பாயிலிருந்து வேறுபட்டவைகளாகும். இணைக்கப்பட்டுள்ள இச்சி ...

                                               

இரட்டடுக்குச் சிப்பாய்

சதுரங்க விளையாட்டில் இரட்டடுக்குச் சிப்பாய் அமைப்பு என்பது ஒரே நிறத்திலுள்ள இரண்டு சிப்பாய்கள் முன்னும் பின்னுமாக ஒரே வரிசையில் நிற்பதைக் குறிக்கும். சகோதர சிப்பாயின் வரிசையில் பிரவேசித்த எதிரியின் காயைக் கைப்பற்றும் நிலை ஏற்படும்போது மட்டுந்தான் ...

                                               

இராசாவின் பலியாட்டம்

இராசாவின் பலியாட்டம் என்பது 1. e4 e5 2. f4 ஆகிய நகர்த்தல்களுடன் ஆரம்பிக்கும் சதுரங்கத்திறப்பாகும். வெள்ளையானது d2–d4 ஐ கொண்டு ஒரு பலமான, மத்திய சதுரங்களைத் தனது காய்களுடன் அமைக்க கருப்பின் e-சிப்பாயைத் தனது காய் ஒன்றைப் பலியிட்டு வழிமாற்றுகிறது. ...

                                               

இறுதி முற்றுகை மாதிரி

சதுரங்க விளையாட்டில் முற்றுகை மாதிரி என்று பயன்படுத்தப்படும் சொல்லின் பொருள், எதிரி அரசனுக்கு இறுதி முற்றுகை வைத்து ஆட்டத்தை நிறைவு செய்யும் வாய்ப்புள்ள காய்களின் இருப்பிடங்களை மாதிரியாக நிற்கவைத்து விளக்கும் வழிமுறையைக் குறிக்கிறது. இந்த பல்வேறு ...

                                               

எதிரியில்லாச் சிப்பாய்

சதுரங்கத்தில், எதிரியில்லாச் சிப்பாய் என்பது, எட்டாவது வரிசையை அடைவதற்கு எதிராக, அதைத் தடுத்து நிறுத்த எதிராளியின் சிப்பாய் இல்லாத சிப்பாய் ஆகும். எ.கா. இது இருக்கும் செங்குத்து வரிசையிலோ அல்லது அதற்கு அருகேயுள்ள வரிசைகளிலோ எதிராளியின் சிப்பாய் இ ...

                                               

ஓயாமல் முற்றுகை

சதுரங்க விளையாட்டில், ஓயாமல் முற்றுகை என்பது நடந்து கொண்டிருக்கும் ஒரு ஆட்டத்தை சமநிலையில் முடித்துக் கொள்ள ஒருவீரர் மற்றவரை வலியுறுத்தும் ஒருவகையான கட்டாய நிலையாகும். அதாவது விளையாடிக் கொண்டிருக்கும் இரண்டு வீரர்களில் ஒருவர், அந்த ஆட்டத்தைச் சமந ...

                                               

கோட்டை கட்டுதல்

சதுரங்கத்தில், கோட்டை கட்டுதல் என்பது அரசனையும் அதே நிறக் கோட்டைகளுள் ஏதேனுமொன்றையும் பயன்படுத்திச் செய்யப்படும் ஒரு சிறப்பு நகர்வு ஆகும். சதுரங்கத்தில் இரண்டு காய்களை ஒரே நேரத்தில் நகர்த்தக்கூடிய ஒரே நகர்வு இதுவே. கோட்டை கட்டுதல் என்பது அரசனை மு ...

                                               

சதுரங்கக் கலைச்சொற்கள்

பொதுவாகப் பயன்படுத்தப்படும் சதுரங்கக் கலைச்சொற்கள் இங்குத் தமிழ் அகர வரிசையில் பட்டியலிடப்படுகின்றன. அவற்றுக்கு இணையான ஆங்கிலச் சொற்களும் தரப்பட்டுள்ளன. இவற்றுள் சிலவற்றுக்குத் தனிப்பக்கங்கள் காணப்படுகின்றன.

                                               

சமநிலை (சதுரங்கம்)

சதுரங்கத்தில், சமநிலை என்பது விளையாட்டின் முடிவை அறிய முடியாத ஒரு நிலையாகும். அதாவது வெற்றி தோல்வி அற்ற நிலை. வழமையாக ஒரு சதுரங்கப்போட்டியில் சமநிலை பெற்று இருவரும் அரைவாசிப் புள்ளிகளைப் பெறுவது பெறுமதியானது. ஏனென்றால் ஒரு போட்டியில் வெற்றி பெறுப ...

                                               

சாத்தியமான நகர்வற்ற நிலை

சதுரங்கத்தில், சாத்தியமான நகர்வற்ற நிலை என்பது முற்றுகைக்காளாகாத வேளையில் ஒரு போட்டியாளரால் எந்தவோர் ஏற்றுக்கொள்ளக்கூடிய நகர்வையும் செய்ய முடியாத நிலை ஆகும். சாத்தியமான நகர்வற்ற நிலை ஏற்பட்டால் அப்போட்டி சமநிலையில் முடிவடையும். சதுரங்க விதிமுறைகள ...

                                               

தனித்த சிப்பாய்

சதுரங்க ஆட்டத்தில், தனக்குப் பக்கவாட்டில் உள்ள வரிசைகளில் நட்பு சிப்பாய் ஒருவரும் துணைக்கு இல்லாமல் தனிமைப்பட்டு நிற்கும் சிப்பாயை தனித்த சிப்பாய் அல்லது விலகிய சிப்பாய் என்பர். அரசியின் சிப்பாய் இவ்வாறு தனித்து விடப்பட்டால் அதைத் தனித்தீவு சிப்ப ...

                                               

திறந்த ஆட்டம்

திறந்த ஆட்டம் அல்லது இரட்டை இராசாவின் சிப்பாய் திறப்பு என்பது 1. e4 e5 எனும் நகர்த்தல்களுடன் தொடங்கும் சதுரங்கத் திறப்பாகும். வெள்ளை தனது இராசாவின் சிப்பாயை இரு கட்டங்கள் முன்னே நகர்த்த கருப்பும் அதே போல் நகர்த்துவது திறந்த ஆட்டம் வகையாகும். 1.e4 ...

                                               

நிலை உயர்வு (சதுரங்கம்)

நிலை உயர்வு என்பது சிப்பாய் எட்டாவது வரிசையைச் சென்றடையும்போது அதே நிறத்தையுடைய ராணி, குதிரை, கோட்டை அல்லது மந்திரியாக அதிகார உயர்வு பெறுதல் ஆகும். எட்டாவது வரிசைக்குச் சிப்பாய் நகர்த்தப்பட்டவுடனேயே புதிய காய் சிப்பாய் இருந்த இடத்தில் வைக்கப்படும ...

                                               

பலியாட்டம் (சதுரங்கம்)

பலியாட்டம் என்பது சதுரங்கத் திறப்புக்களில் ஒரு ஆட்டக்காரர், பெரும்பாலும் வெள்ளை ஆட்டக்காரர், தனது காய் ஒன்றை, பொதுவாக சிப்பாயை தனக்கு ஒரு சாதகமான நிலையை கொண்டுவரும் என்ற நம்பிக்கையில் பலியிடுதல் ஆகும். நன்கு அறியப்பட்ட உதாரணங்களாக இராசாவின் பலியா ...

                                               

பறக்கும் கட்டம்

சதுரங்கத்தில், பறக்கும் கட்டம் அல்லது தப்பிக்கும் கட்டம் என்பது ராஜாவோ அல்லது வேறு காயோ தாக்கப்படும் போது தன்னை காத்துக்கொள்ள செல்லும் கட்டமாகும். சில சமயங்களில் மார்பி தற்காப்பில் மந்திரி நகர்வதற்கு வழியில்லாமல் இருக்கும் போது தப்புவதற்கு c2-c3 ...

                                               

பின்தங்கிய சிப்பாய்

சதுரங்க விளையாட்டில் பின்தங்கிய சிப்பாய் என்றால் ஒரு சிப்பாய் அதே நிறத்திலுள்ள சக சிப்பாய்களைக் காட்டிலும் அடுத்துள்ள வரிசையில் பின்னால் நிற்பதைக் குறிக்கும். இவ்வாறு பின்தங்கி நிற்கும் சிப்பாயால் இன்னொரு காயின் பாதுகாப்புடன் முன்நகர முடியாது. பட ...

                                               

பெருந்தவறு (சதுரங்கம்)

சதுரங்க விளையாட்டில் பெருந்தவறு என்பது மிகமோசமான ஒரு நகர்த்தலைக் குறிக்கிறது. எதிராளி விரித்த சூழ்ச்சிவலையைக் கவனிக்காமல் விடுவது, நேரக்கட்டுப்பாடு காரணமாக பதற்றமாக நகர்த்துவது, அதிக அசட்டுத் தன்னம்பிக்கையுடன் அவசரமாக நகர்த்துவது, கவனக்குறைவாக வி ...

                                               

போகும்போது பிடித்தல்

சதுரங்கத்தில் போகும்போது பிடித்தல் என்பது சதுரங்க ஆட்டத்தில் ஒரு கைப்பற்றல் நடவடிக்கை ஆகும். ஆட்டத்தின் போது ஒரு சிறப்பு நிகழ்வாக இரு சதுரங்க ஆட்டக்காரர்களும் எதிரியின் சிப்பாயைக் கைப்பற்றுவதற்கென்று வகுக்கப்பட்டுள்ள ஒரு தனி விதி முறையாகும். இக்க ...

                                               

மாணவகன் முற்றுகை

சதுரங்க விளையாட்டில் மாணவகன் முற்றுகை பின்வரும் நகர்வுகளால் அடையப்படுகிறது. 1. e4 e5 2. Qh5 Nc6 3. Bc4 Nf6? 4. Qxf7# மேற்கண்ட நகர்வுகள் முன்னுக்குப் பின்னாக வெவ்வேறு வரிசை முறைகளிலும் சில வித்தியாசங்களுடன் ஆடப்படுவதுண்டு. ஆனால் அடிப்படை உத்தி ஒன் ...

                                               

முட்டாளின் இறுதி

முட்டாளின் இறுதி என்பது சதுரங்கத்தில் மிகவும் விரைவான இறுதி முற்றுகை ஆகும். இதற்கான நகர்வுகள் பின்வருமாறு:- 1.f3 e5 2.g4 Qh4# இங்கே வெள்ளையானது முதலாவது நகர்வாக f3 இற்குப் பதிலாக f4 ஐயோ g -காலாளை முதலில் நகர்த்தினாலோ கறுப்பு e6 இற்குப் பதிலாக e5 ...

                                               

முற்காப்பு (சதுரங்கம்)

சதுரங்க விளையாட்டில் முற்காப்பு என்ற சொல்லாட்சி, வருமுன் காப்போம் என்ற பொருளிலேயே பயன்படுகிறது. முற்காப்பு என்பது சதுரங்க விளையாட்டில் பொதுவாகப் பயன்படும் ஒரு சதுரங்க உத்தியாகும். இவ்வுத்தியை 1920 ஆம் ஆண்டில் கிராண்ட் மாஸ்டர் ஆரோன் நிம்சோவிச்சு த ...

                                               

முற்றுகை (சதுரங்கம்)

முற்றுகை என்பது சதுரங்கம், சீனச் சதுரங்கம், சப்பானியச் சதுரங்கம் போன்ற ஆட்டங்களில் அடுத்த நகர்வில் அரசனைக் கைப்பற்றுவதற்கான அச்சுறுத்தலைக் குறிக்கும். ஒரு போட்டியாளரின் அரசனானது முற்றுகைக்காளாக்கப்பட்டால், அவர் அடுத்த நகர்வில் அரசனை முற்றுகையில் ...

                                               

விலா மடிப்புத்தேர்

சதுரங்க விளையாட்டில் விலா மடிப்புத்தேர் என்பது ஒருவிதமான முன்னேற்றம் தரும் நகர்வு வகையாகும். இத்தாலி மொழியில் "சிறிய விலாமடிப்பு" என்று இதற்குப் பொருள். இதனடிப்படையில் ஒரு மந்திரி அடுத்துள்ள குதிரை வரிசையின் இரண்டாவது கட்டத்திற்கு இடம்பெயர்கின்றத ...

                                               

அங்கேரியன் தடுப்பாட்டம்

அங்கேரியன் தடுப்பாட்டம் என்ற சதுரங்கத் திறப்பு கீழ்கண்ட நகர்வுகளுடன் தொடங்கி விளையாடப்படுகிறது. 1. e4 e5 2. Nf3 Nc6 3. Bc4 Be7 அங்கேரியத் தடுப்பாட்டம் இத்தாலிய ஆட்டத்தின் சதுரங்க நகர்வுகளின் வரிசையில் விளையாடப்படும் ஒரு நகர்வு வரிசையாகும். 3.Bc4 ...

                                               

அமர் திறப்பு

அமர் திறப்பு என்பது பின் வரும் சதுரங்கத் திறப்பு நகர்வுகளை கொண்டு தொடங்குகிறது. இத்திறப்பை பாரிசு திறப்பு, போதை குதிரை திறப்பு அல்லது அமோனியா திறப்பு போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. அமோனியாவின் வேதியியல் வாய்ப்பாடும் இத்திறப்பின் முதல் நகர்வ ...

                                               

அலாபின் திறப்பு

அலாபின் திறப்பு சதுரங்க விளையாட்டில் விளையாடப்படும் ஒரு வழக்கத்திற்கு மாறான திறப்பு முறையாகும். இத்திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்குகிறது. 1.e4 e5 2.Ne2 உருசோ-லித்துவேனிய வீர்ரும் சதுரங்கத் திறப்புகள் பகுப்பாய்வு அறிஞருமான செம்யோன் அலாபின் 1 ...

                                               

ஆங்கிலத் திறப்பு

ஆங்கிலத் திறப்பு என்பது 1. c4 எனும் நகர்த்தலுடன் ஆரம்பிக்கும் திறப்புக்களைக் குறிக்கும். இது பிளாங் திறப்பில் நான்காவது பிரபலமான திறப்பாகும். பல்வகையான தரவுத்தளங்களின் படி, வெள்ளையின் சாத்தியமான இருபது ஆரம்ப நகர்த்தல்களில், பிரபலமான நான்கு நகர்த் ...

                                               

ஆண்டர்சன் திறப்பு

சதுரங்க விளையாட்டில் ஆண்டர்சன் திறப்பு என்பது, a3 என்ற தொடக்க நகர்வை கொண்டுள்ள ஆட்டமாகும். அதிகாரபூர்வமற்ற உலக சம்பியன் அடால்பு ஆண்டர்சனின் பெயரைச் சூட்டி அவருடைய பெயராலேயே இத்தொடக்க நகர்வு அழைக்கப்படுகிறது. 1858 ஆம் ஆண்டில் பவுல் மார்பிக்கு எதிர ...

                                               

ஆல்பின் எதிர்பலியாட்டம்

ஆல்பின் எதிர்பலியாட்டம் என்ற சதுரங்கத் திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்கி விளையாடப்படுகிறது. 1. d4 d5 2. c4 e5 பின்னர் வழக்கமாகத் தொடர்கின்ற நகர்வு விளையாடப்படுகிறது. 3. dxe5 d4 ராணியின் பலியாட்ட திறப்புக்கு எதிராக விளையாடப்படும் பொதுவான தற்க ...

                                               

இத்தாலியப் பலியாட்டம்

இத்தாலியப் பலியாட்டம் என்ற சதுரங்கத் திறப்பு பின் வரும் நகர்வுகளை ந்கர்த்தி தொடங்கப்படுகிறது. 1. e4 e5 2. Nf3 Nc6 3. Bc4 Bc5 4. d4 பெரும்பாலும் கியூகோ பியானோ அல்லது கியுகோ பியானிசுசிமோ திறப்புகளின் அமைதியான மற்றும் மூடிய வரிசை நகர்வுகளுக்கு மாற்ற ...

                                               

இராசா குதிரைத் திறப்பு

இராசா குதிரைத் திறப்பு பின் வரும் திறப்புகளுடன் தொடங்குகிறது. 1. e4 e5 2. Nf3 கருப்புக் காய்களுடன் விளையாடுபவரின் இரண்டாம் நகர்வை அடிப்படையாகக் கொண்டு வெவ்வேறு விதமான பிற பெயர்த் திறப்புகளாகத் தொடர்கிறது.

                                               

இராசாவின் சிப்பாய் ஆட்டம்

இராசாவின் சிப்பாய் ஆட்டம் என்பது 1. e4 எனும் நகர்த்தலுடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் திறப்புக்களைக் குறிக்கும். வெள்ளையானது தொடங்குவதற்கு சாத்தியமான இருபது நகர்த்தல்களில் ஒன்றைத் தேர்வு செய்து ஆட்டத்தை ஆரம்பிக்கும். இந்த வகைத் திறப்பு வெள்ளைக்கு பெரும ...

                                               

இரு குதிரைகள் தடுப்பு, மேக்சு லேங்கி தாக்குதல்

மேக்சு லேங்கி தாக்குதல் இரண்டு குதிரைகள் தடுப்பு, பெட்ரோஃப்சு தடுப்பு, சிகாட்ச்சு பலியாட்டம். மந்திரியின் திறப்பாட்டம், நடுக்கள ஆட்டம், கியுக்கோ பியானோஉள்ளிட்ட பல்வேறு வகையான சதுரங்கத் திறப்பு வரிசைகளில் இருந்தும் தோன்றுகிறது. இவற்றில் பொதுவாகக் ...

                                               

உருய் உலோப்பசு

உருய் உலோப்பசு என்பது ஒரு சதுரங்க முன்நகர்வு ஆகும். இது எசுப்பானிய முன்நகர்வு அல்லது எசுப்பானிய விளையாட்டு எனவும் அழைக்கப்படும். இந்த முன்நகர்வு பின்வருமாறு தொடங்கும். 1.e4 e5 2.Nf3 Nc6 3.Bb5 ருய் லோபஸ் என்பது பிரபலமான சதுரங்க முன்நகர்வுகளுள் ஒன் ...

                                               

உலோப்பசு திறப்பு

சதுரங்க விளையாட்டில் உலோப்பசு திறப்பு என்பது, 1. e4 e5 2. c3 என்ற ஆரம்ப நகர்வுகளுடன் தொடங்குகிறது. இத்தொடக்கம் மேக்லியாடு தாக்குதல் MacLeod Attack என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்காட்டிசு – கனடிய சதுரங்க விளையாட்டு ...

                                               

ஐரிசு பலியாட்டம்

ஐரிசு பலியாட்டம் என்பது ஒரு பலவீனமான சதுரங்கத் திறப்பு முறையாகும். சிக்காகோ பலியாட்டம், ரேசில் தாசில் பலியாட்டம் என்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இத்திறப்பு பின்வரும் நகர்வுகளுடன் தொடங்குகிறது. 1. e4 e5 2. Nf3 Nc6 3. Nxe5? 3.Nxe5 4.d4 என்ற உத்தேசத ...

                                               

கிரெக்கோ தற்காப்பு

கிரெக்கோ தற்காப்பு என்பது பின்வரும் நகர்வுகளுடன் தொடங்கப்படும் சதுரங்கத் திறப்பு முறையாகும். கியோவச்சினோ கிரெக்கோ கண்டுபிடித்த காரணத்தால் இத்திறப்பு கிரெக்கோ தற்காப்பு எனப் பெயர் பெற்றது. மெக்கோன்னெல் தற்காப்பு என்ற பெயராலும் இதை அழைக்கலாம். 1. e ...

                                               

கீரெசு தற்காப்பு

கீரெசு தற்காப்பு கீழ்கண்ட நகர்வுகளுடன் தொடங்கும் ஒரு சதுரங்கத் திறப்பு ஆட்டமாகும். இதை கங்காரு திறப்பு அல்லது பிராங்கோ-இந்தியன் தற்காப்பு என்ற பெயர்களாலும் அழைப்பர். 1. d4 e6 2. c4 Bb4+ எசுத்தோனிய கிராண்டு மாசுட்டர் பால் கீரெசு பெயரால் இச்சதுரங்க ...

                                               

கோரிங்கு தாக்குதல்

கோரிங்கு தாக்குதல் என்ற சதுரங்க திறப்பு ஆட்டம் பின் வரும் நகர்வுகளுடன் தொடங்குவதாக அடையாளப்படுத்தப்படுகிறது. இவான்சு பலியாட்ட சதுரங்க திறப்பு ஆட்டத்தின் போது இந்நகர்வுகள் தோன்றுவதற்கு வாய்ப்புகள் உண்டு. 1.e4 e5 2.Nf3 Nc6 3.Bc4 Bc5 4.b4 Bxb4 5.c3 ...

                                               

சரகோசா திறப்பு

சரகோசா திறப்பு அல்லது எம்பெல் திறப்பு என்றழைக்கப்படும் சதுரங்கத் திறப்பாட்டம் வெள்ளைக் காய்களுடன் ஆடுபவரின் முதல் நகர்வு, 1. c3 என்ற நகர்வுடன் ஆரம்பமாகிறது. வெள்ளை ஆட்டக்காரரின் இந்த நகர்வு ஆட்டத்தின் தொடக்கத்திலேயே தாக்கும் மனப்பாங்குடன் ஆடப்படு ...

                                               

சிசிலியன் தற்காப்பு

சிசிலியன் தற்காப்பு என்பது சதுரங்கத் திறப்புக்களில் ஒன்றாகும். 1. e4 c5 எனத்தொடங்கும் ஆட்டம் சிசிலியன் தற்காப்பாகும் சிசிலியனானது வெள்ளையின் முதல் நகர்த்தலான 1.e4 இற்கு எதிரான பிரபலாமான மற்றும் நல்ல முடிவுகளைத்தரக்கூடிய ஒரு தற்காப்பாகும். புள்ளிவ ...