ⓘ Free online encyclopedia. Did you know? page 160




                                               

குராலம் பறந்தலை

குராலம்பறந்தலை என்பது சங்ககாலத்துப் போர்க்களங்களில் ஒன்று. பல அரசர்கள் ஒன்று திரண்டு இவ்வூரில் சேரன் செங்குட்டுவனைத் தாக்கினர். கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவன் மோகூர் மன்னனோடு போரிட்டு வென்றான். வெற்றியின் அடையாளமாக மோகூர் மன்னனின் முரசத்தைக் கைப் ...

                                               

குளமுற்றம்

குளமுற்றம் என்பது ஓர் ஊர். நெடுங்கிள்ளி, பெருநற்கிள்ளி, போர்வைக்கோ பெருங்கோக் கிள்ளிகொப்பெருஞ்சோழன் நலங்கிள்ளி, பெருநற்கிள்ளி, வேல்பஃறடக்கை பெருநற்கிள்ளி, இராசசூயம் வேட்டவன் பெருநற்கிள்ளி, முடித்தலைக்கோ ஆகிய சோழ வேந்தர்கள் கிள்ளி என்னும் பெயருடன் ...

                                               

கூடகாரம்

கூடகாரம் என்பது மதுரை மாநகரில் இருந்த பகுதி என்பதை அதன் பெயர் கொண்டு உணரமுடிகிறது. கூடம் என்பது கூடிக் கூம்பாக அமைக்கப்படும் கோபுரத்தையும், மாடி வீடுகளையும் குறிக்கும். கூடகோபுரம் என்று இன்றும் வழங்குகிறோம். இன்றும் மதுரையில் உள்ள தெருக்கள் கிழக் ...

                                               

கூடல் (அகுதை கூடல்)

சங்ககாலத்தில் கூடல் என்றாலே மதுரையைத்தான் குறிக்கும். என்றாலும் அகுதை என்னும் வேளிர்குடித் தலைவன் இருந்துகொண்டு ஆண்ட கூடல் மதுரையாக இருக்காது எனக் கொள்ளவேண்டியுள்ளது. அகுதை கூடல் நகர அரசன். இவனது கூடல் வைகைஅணைக்கு அருகே உள்ள கூடலூர் என்பது அறிஞர் ...

                                               

கூடல் (நான்மாடக்கூடல்)

சங்ககாலத்தில் கூடல் என்றாலே மதுரையைத்தான் குறிக்கும். கூடல் பற்றி சங்க இலக்கியத்தில் வரும் செய்திகள் இக்கட்டுரையில் தொகுக்கப்பட்டுள்ளன.

                                               

கொடுமணம்

கொடுமணம், பந்தர் ஆகிய இரண்டு ஊர்களும் சங்க இலக்கியம் பத்துப்பாட்டில் இணையாகவே குறிப்பிடப்படுகின்றன. இவை இரண்டுமே அரபிக் கடலோரத் துறைமுகங்கள். கிரேக்க மாலுமி பெரிப்ளஸ் பந்தர் துறைமுகத்தை Balita எனக் குறிப்பிடுகிறார். சங்ககாலத்து அரபிக்கடலோரத் துறை ...

                                               

சாய்க்காடு

சாய்க்காடு சங்ககாலத்திலும் சிறப்புற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. இவ்வூர் தமிழ்நாட்டில் சீர்காழிக்குத் தென்கிழக்கில் 11.5 கிலோமீட்டர் தொலைவில் காவிரியாற்றின் வடகரையில் உள்ளது. காவிரிப்பூம்பட்டினத்துக்கு அருகில் உள்ளது குறிப்பு

                                               

சிராப்பள்ளி

சிராப்பள்ளி என்னும் ஊரின் பெயரோடு திரு என்னும் அடைமொழி சேர்ந்து திருச்சிராப்பள்ளி என்னும் பெயர் தோன்றியது. மக்கள் மிகுதியாக உறைவிடமாய்க் கொண்டிருந்த ஊர் உறையூர். இந்த உறையூர் சங்க காலச் சோழர்களின் தலைநகரம். இதன் கிழக்கில் இருந்த நெடும்பெருங்குன்ற ...

                                               

சிறுகுடி

சிறுகுடி என்னும் பெயர்கொண்ட ஊர் நான்கு இடங்களில் இருந்ததைச் சங்கநூற் பாடல்கள் தெரிவிக்கின்றன. அவற்றின் ஆட்சித் தலைவர்கள் வேறு வேறு சீறூர் மன்னர்கள். அனைவரும் கொடையாளிகள்.

                                               

செங்கண்மா

செங்கண்மா என்பது ஓர் ஊர். இங்கிருந்த வள்ளல் செங்கண்மாத்து வேள் நன்னன் சேய் நன்னன். இவன் மலைபடுகடாம் என்னும் நூலில் புலவர் இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகன் என்பவரால் பாராட்டப் பட்டவன்.

                                               

செல்லூர்

செல்லூர் வங்கக் கரையில் இருந்ததோர் ஊர். இக்காலத்தில் பன்னாட்டுப் பறவைகளின் புகலிடமாக விளங்கும் கோடியக்கரைப் பகுதியில் இந்த ஊர் இருந்தது எனல் பொருத்தமானது. செல்லூர் என்னும் பெயருடன் முதுகுளத்தூர் பகுதியில் ஓர் ஊர் உள்ளது. இது கடல், வயல், கானம் ஆகி ...

                                               

நன்மாவிலங்கை

நன்மாவிலங்கை – இது சங்ககாலத்து ஓய்மானாட்டின் தலைநகர். நல்லியக்கோடன் என்னும் வள்ளல் இந்நாட்டு அரசன். சிறுபாணாற்றுப்படை என்னும் நூலில் இவனது சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. பாடிய புலவர் இடைக்கழிநாட்டு நல்லூர் நத்தத்தனார். ஓய்மான் நல்லியாதன், ஓய்மான் வில ...

                                               

நாகநாடு

புகார் நகருக்கு அப்பால் 400 யோசனை தூரம் நிலப்பரந்திருந்த நாடு நாகநாடு. புகார் நகரிலிருந்து நாகநாடு செல்லும் கடல்வழியில் மணிபல்லவம் என்னும் தீவு நாகநாட்டை அடுத்து இருந்தது. மணிபல்லவத் தீவின் காவல் தெய்வம் மணிமேகலை. கோவலன் மகள் மணிமேகலையைத் தூக்கிச ...

                                               

நாகபுரம்

நாகபுரம் என்பது ஓர் ஊர். புகார் நகரத்து அரசி, சித்திராபதி, அவளது ஆயம், மணிமேகலை ஆகியோர் அறவண அடிகளிடம் நல்லறம் கேட்டனர். பின்னர் மணிமேகலை புத்தத் துறவிக் கோலத்தில் அந்தரம் வழியாகப் பறந்து சென்றாள். வழியில் ஓர் ஊரின் பொழிலில் இறங்கி இளைப்பாறினாள். ...

                                               

நாஞ்சில்

நாஞ்சில் என்பது சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ஒரு சங்ககாலத்து ஊர் ஆகும். குமரி மாவட்டத்தின் அகஸ்தீஸ்வரம் மற்றும் தோவாளை வட்டங்கள் நாஞ்சில் நாடு என அழைக்கப்படும்.

                                               

நாலூர்

நாலூர் திவாரூர் மாவட்டத்திலுள்ள ஓர் ஊர். இவ்வூரில் சங்ககாலத்தில் கோசர் குடிமக்கள் வாழ்ந்துவந்தனர். இவர்கள் நாலூர்க்கோசர் எனப்பட்டனர். இவர்கள் அரசனுக்காக ஆலமரத்தடியில் இருந்துகொண்டு வரி தண்டுவர். சங்ககாலத்தில் இவ்வூரின் பெயர் நாலை என்னும் சுருக்கம ...

                                               

நியமம் (ஊர்)

நியமம் என்னும் சொல் பெருநகரத் தெருக்களில் இருபுறமும் ஓங்கி உயர்ந்து நிற்கும் மாடங்களைக் குறிக்கும். எனினும் சேரநாட்டில் குன்றுகள் சூழ்ந்த பகுதியில் நியமம் என்னும் பெயர் பூண்ட ஊர் ஒன்று இருந்தது எனக் கொள்ள இடமுண்டு. இவ்வூரில் கடல், மலை, ஆறு ஆகியவற ...

                                               

நீடூர்

நீடூர் என்பது தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை தாலுக்காவில் அமைந்துள்ள ஊராட்சி ஆகும். இது மயிலாடுதுறையில் இருந்து சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சங்ககாலத்தில் இதனை ஆண்ட அரசன் எவ்வி ஆவான் என அகநானூற்றின் ஒரு ...

                                               

நீர்ப்பெயற்று

நீர்ப்பெயற்று சங்ககாலத் துறைமுகங்களில் ஒன்று. சங்க இலக்கியங்களில் வங்கக்கடல் துறைமுகங்களாகக் காட்டப்பட்டுள்ளவை நான்கு. தெற்கிலிருந்து வடக்கு வடக்கு நோக்கிச் செல்லும்போது அவற்றின் வரிசை இவ்வாறு அமையும். கொற்கை – பாண்டிநாட்டுத் துறைமுகம். புகார் என ...

                                               

நீலகண்ட நகரம்

இந்நகர் பெரிப்ளசு காலத்தில் நெல்சின்டா எனவும் ப்ளைனி காலத்தில் நியாசின்டி எனவும் டாலமி காலத்தில் இது மேல்கிந்தா எனவும் குறிக்கப்பட்டுளது. இது பாண்டியர் ஆளுகைக்குள் இருந்ததாகவும் இங்கிருந்தே மிளகு செங்கடல் துறைமுகங்களுக்கு ஏற்றுமதை செய்யப்பட்டதாகவ ...

                                               

நெய்தலங்கானல்

நெய்தலங்கானல் என்பது புகார் நகரப்பகுதி. சோழ அரசன் இளஞ்சேட் சென்னி ‘நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி’ என்று அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான். திருச்சி மாவட்டம் குளித்தலைப் பகுதியில் நெய்தலூர் என்னும் பெயர் கொண்ட ஊர் உள்ளது. இந்த நெய்தலூரே சங்ககாலத்து ...

                                               

நெல்லின் ஊர்

நெல்லின் ஊர் சங்ககாலத்துத் துறைமுகங்களில் ஒன்று. இது பெரிப்ளஸ் குறிப்பு நூல் பத்தி 54-ல் நெல்சிந்தா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தமிழகதின் மேற்குக் கடலோரத் துறைமுகங்களில் ஒன்று. பாண்டியன் வெற்றி இதனைச் சங்ககாலத்தில் பாண்டியன் தலையாலங்கானத்துச் ...

                                               

நேரி

நேரி என்னும் சங்ககால ஊர் இக்காலத்தில் சபரி என மருவியுள்ளது. காப்பியாற்றுக் காப்பியனார் என்னும் புலவர் விறலியரை அழைத்துக்கொண்டு களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் என்னும் சேர மன்னனிடம் செல்வதாக ஒரு பாடலில் குறிப்பிட்டுள்ளார். அப்போது அவன் நேரி என்னும ...

                                               

நேரிவாயில்

சங்ககாலத்தில் சோழநாட்டுத் தலைநகராகிய உறையூருக்குத் தெற்கில் நேரி என்னும் ஊர் இருந்தது. எனவே உறையூர்க் கோட்டையின் தெற்குப்புற வாயில் நேரிவாயில் எனப்பட்டது. இக்காலத்தில் தென்னூர் என வழங்குகின்றனர். சோழர் தலைநகரின் தெற்குப்புறத்தில் உள்ள ஊர் என்பது ...

                                               

பாரம் (ஊர்)

குறிஞ்சிப்பாட்டு என்னும் சங்ககால நூல் 99 மலர்களின் பெயர்களைத் தொகுத்துக் கூறுகிறது. அவற்றுள் ஒன்று பாரம் என்னும் மலர். இக்காலத்தில் பாரிசாதம் என்னும் பெயரால் வழங்கப்படும் மலர் இது ஆகலாம். இந்தப் பாரம் மலர் மிகுதியாகப் பூத்திருந்த ஊர் பாரம். இப்போ ...

                                               

பிசிர் (ஊர்)

பிசிர் என்பது சங்ககாலத்தில் பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர். பிசிர் என்பது கடலலையால் வீசப்படும் நீர்த்திவலைகளைக் குறிக்கும். எனவே இந்த ஊர் கடற்கரை ஓரமாக இருந்த ஊர் எனத் தெரிகிறது. எனினும் இந்த ஊரை முல்லைநிலப் பகுதியாகக் கோப்பெருஞ்சோழன் பாடல் குறி ...

                                               

பிடவூர்

சங்ககாலத்தில் பிடவூர் எனப் பெயர்பெற்றிருந்த இந்த ஊர் இக்காலத்தில் திருப்பட்டூர் என வழங்கப்படுகிறது. சோழப் பெருவேந்தன் தித்தன் என்பவன் உறையூரில் இருந்துகொண்டு ஆட்சி புரிந்த காலத்தில் அவனது உறையூருக்குக் கிழக்கே இருந்த பிடவூரில் இருந்த வள்ளல் பெருஞ ...

                                               

புறந்தை

புறந்தை என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. இதன் அரசன் பெயர் பெரியன். இவன் சிறந்த வள்ளல்களில் ஒருவன் ‘புறந்தை முன்றுறை’ என இந்த ஊர் குறிப்பிடப்படுவதால் இது கடற்கரை ஓரத்தில் இருந்தது எனத் தெரிகிறது. இதன் துறையில் பல புதிய புதிய நாரைகள் வந்து ஒலி எழுப்ப ...

                                               

பொதினி

பொதினி என்னும் சங்ககால ஊர் இக்காலத்தில் பழனி என்னும் பெயருடன் விளங்குகிறது. ஆறு மலைமுகடுகளைக் கொண்டது ஆனைமலை. அவற்றுள் ஒரு முகடு பொதினி. இதனைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட சங்ககால மன்னன் முருகன். பொதினி நகரில் வைரக் கற்களுக்குப் பட்டை தீட்டும் தொழில் ...

                                               

பொறையாறு

பொறையாறு சங்ககால ஊர்களில் ஒன்று. இக்காலத்தில் தரங்கம்பாடியை அடுத்து உள்ள பொறையாறு என்னும் ஊர்தான் அது. சங்ககாலத்தில் பெரியன் என்னும் பெயர் கொண்ட மன்னன் இங்கு இருந்துகொண்டு ஆண்டுவந்தான். இவன் சிறந்த கொடைவள்ளல். இவ்வூரில் குருகு இனக் கொக்குகள் மிகு ...

                                               

மருங்கூர்ப் பட்டினம்

மருங்கூர்ப்பட்டினம் துறைமுகத்தைப் பற்றி நக்கீரர் பாடல்கள் குறிப்பிடுகின்றன. கடலோர ஊணூரை அடுத்து மருங்கூர்ப் பட்டினம் இருந்தது. ஊணூர் அரசன் தழும்பன். மருங்கூர்ப்பட்டின அரசன் வழுதி. ஊணூர் அன்றில் பறவைகளின் புகலிடம். இவ்வூர் திருவுடை வியனகர் எனப் போ ...

                                               

மல்லி (ஊர்)

மல்லி என்பது சங்ககால ஊர்களில் ஒன்று. இக்காலத்தில் சேலம் மாவட்டம் ஆத்துர் வட்டத்தில் மல்லியக்கரை என்னும் ஊர் உள்ளது. இந்த ஊரே சங்ககால மல்லி எனக் கொள்ளும் வகையில் பாடலின் குறிப்புகள் உள்ளன. இவ்வூர் வள்ளல் ஆதியிடம் பரிசில் பெறச் செல்வோர் இவ்வூர்ப் ப ...

                                               

மாங்காடு (சங்ககாலம்)

மாங்காடு என்னும் பெயர் கொண்ட ஊர்கள் தமிழ்நாட்டில் ஆங்காங்கே உள்ளன. பண்டைக் காலத்திலும் இருந்தன. அவற்றில் ஒன்று குடமலையில் இருந்தது. இந்த ஊரைச் சேர்ந்தவர் மாங்காட்டு மறையோன். கோவலன், கண்ணகி, காவுந்தி ஐயை ஆகியோருக்கு உறையூரிலிருந்து மதுரை செல்லும் ...

                                               

முத்தூறு

முத்தூறு திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஊர். இந்த ஊரில் நெல் விளைச்சல் அதிகம். வேளிர் குடி மக்கள் இவ்வூரில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் இந்த ஊரில் தொன்றுதொட்டு வாழ்ந்துவருவதால் ‘தொன்முதிர் வேளிர்’ எனச் சிறப்பிக்கப்பட்டுள்ளனர். மிழலை நாட்டைக் கைப்பற்றிய ...

                                               

முதுவெள்ளில்

முதுவெள்ளிலை என்னும் ஊர் மக்கள் பாண்டியன் வெற்றியைக் கொண்டாடி மகிழ்ந்தனர். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துப் போரில் வெற்றி பெற்றதை முதுவெள்ளிலை மக்கள் கொண்டாடி மகிழ்ந்தார்களாம். இவ்வூரில் மீன் நிற்கும் கோள்நிலை ...

                                               

வஞ்சி (ஊர்)

வஞ்சி என்னும் மாநகரம் மணிமேகலை – வஞ்சிமாநகர் புக்க காதை சேரநாட்டின் தலைநகர். குடநாட்டின் தலைநகர் வஞ்சி. தற்காலக் கரூரையும் சங்ககாலத்தில் வஞ்சி என்றும், வஞ்சிமுற்றம் என்றும் வழங்கினர். பாட்டு - வஞ்சி என்பது பாணர் பாடும் பண் வகைகளில் ஒன்று மரம் - வ ...

                                               

வல்லார்

வல்லார் என்னும் சஙக கால ஊரில் வல்லார் கிழான் பண்ணன் என்னும் வள்ளல் வாழ்ந்துவந்தான். இந்த ஊர் வலார் என்றும் வழங்கப்பட்டது. வல்லார் புன்புல நிலம். இந்த ஊர் பெருங் குறும்புகளால் சூழப்பட்டிருந்தது. குறும்பு என்பது முல்லைநிலத்து ஊர். இவ்வூரில் மரத்தில ...

                                               

வாட்டாறு

வாட்டாறு என்னும் ஊரில் சங்ககாலத்தில் வாழ்ந்த வள்ளல் எழினியாதன். இவனை வாட்டாற்று எழினியாதன் என்பர். இவன் பெயர் எழினி மகன் ஆதன் என்பதாகலாம். மாங்குடி கிழார் என்னும் புலவர் இவனைப் பாடியுள்ளார். ஊர் வளம் வாட்டாற்றில் கீழ்நீர் மீன் தருகிறதாம். மேல்நீர ...

                                               

வெண்ணிவாயில்

வெண்ணிவாயில் என்பது சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய ஊர்களுள் ஒன்று. பரணர் பாடல் இதனைக் குறிப்பிடுகிறது. வெண்ணிப் பறந்தலையில் நடந்தது போலவே வெண்ணிவாயில் என்னும் ஊரிலும் போர் நடந்தது. இவ்வூர் நறவுக் கள்ளுக்குப் பெயர்பெற்றது. இவ்வூரில் கரிகாலனை 1 ...

                                               

வெண்மணி வாயில்

வெண்மணி வாயில் என்பது சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. மாமூலனார் பாடல் அகம் 211 இந்த ஊருக்கு இப் பெயர் வந்த காரணத்தைப் புலப்படுத்துகின்றது. இப் பெயர் தோன்றுவதற்கு முன்னர் இவ்வூரின் பெயர் வெண்ணி என்று வெறுமனே வழங்கப்பட்டது. சங்கக ...

                                               

வெள்ளியம்பலம்

சங்ககாலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன் பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி எனப் பெயர் கொண்டுள்ளதால் தன் இறுதிக் காலத்தில் அவன் வெள்ளியம்பலத்தில் உயிர் நீத்தான் எனக் கொள்ளப்படுகிறது. இந்த வெள்ளியம்பல்லம் இக்காலச் சொக்கநாதர் கோயில் அன்று. ச ...

                                               

வேலூர் (சங்ககாலம்)

சங்ககாலத்தில் ஓய்மானாட்டின் பகுதியாக விளங்கியது இந்த வேலூர். அக்காலத்தில் இதன் அரசன் நல்லியக்கோடன். சீறியாழ்ப் பாணர்களை இவனிடம் சென்று பரிசில் பெற்று உய்யுமாறு ஆற்றுப்படுத்தும் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் இந்த வேலூர் வழியாகச் செல்ல ...

                                               

வேளூர் வாயில்

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஊருக்கு மேற்கில் இக்காலத்தில் உள்ள புள்ளிருக்கு வேளூர்தான் இந்தச் சங்ககால வேளூர்-வாயில். இதனை இக்கால மக்கள் வைத்தீஸ்வரன் கோயில் என வழங்குகின்றனர். சத்தியம் இவ்வூர்த் தெய்வத்தின்மீது ஆணையிட்டு ஒருவன் சத்தியம் செய்வதாகச ...

                                               

தென்னவன் மறவன்

தென்னவன் மறவன் என்று போற்றப்படுபவன் சிறுகுடி கிழான் பண்ணன். இவன் சங்ககால வள்ளல்களில் ஒருவன். மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் என்னும் புலவர் இவனது கொடைத்தன்மையைப் போற்றிப் பாடியுள்ளார். இந்தப் பாடல் சிதைந்த நிலையில் உள்ளது. என்றாலும் தெளிவான ...

                                               

ஆனைச்சாத்தன்

ஆனைச்சாத்தன் என்பது பறவை இனங்களில் ஒன்று. இந்தப் பறவைகள் விடியலில் பேசிக்கொண்டது பற்றி கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பெண்புலவர் குறிப்பிடுகிறார். இதனை வலியன்-குருவி எனப் பெரும்பாலோர் கூறுகின்றனர். வலியன் குருவிக்குப் பரத்துவாசப் பறவை என ...

                                               

குருகு (பறவை)

குருகு என்னும் சொல்லால் உணர்த்தப்படும் பொருள்களில் குருகு என்னும் பறவை யும் ஒன்று. இதனைச் சலகப்பாடல்கள் கருங்கால் வெண்குருகு என்னும் தொடரால் குறிப்பிடுகின்றன. பறவை வெள்ளை நிறம். கால்கள் கருநிறம். அமர்ந்திருக்கும்போது சற்றே பசுமை நிறம் கொண்ட குருக ...

                                               

மகன்றில் பறவை

மகன்றில் King penguin என்பது ஒரு வகை நீர்ப்பறவை. உருவம் இந்தப் பறவை பறவை அன்றில் பறவை போல் இணைபிரியாமல் வாழும் பாங்கினை உடையது. இதற்கு நீண்ட சிறகும், குறுகிய கால்களும் உண்டு. மகன்றில் புணர்ச்சி மகன்றில் பறவை நீரில் வாழும். ஆணும் பெண்ணும் இணைந்தே ...

                                               

அயிரை மலை (சங்க காலம்)

அயிரைமலை என்னும் சங்ககாலப் பெயர்வழக்கு அய்யனார் மலையான ஐயப்பன் மலை என மருவியுள்ளது. நேரிமலை எனவும் இது வழங்கப்பட்டது. அயிரை என்பது மிக உயர்ந்த மலை. அதன் முகடுகளிலிருந்து அருவிகள் இழும் என்னும் ஓசை முழக்கத்துடன் கொட்டும். இது சிலம்பாறு. பாலைக் கௌத ...

                                               

அரிசில் ஆறு

அரிசில் என்பது ஓர் ஆறு. காவிரி ஆற்றின் கிளை ஆறு. நற்றிணை 141 வெள்ளம் குறைந்த காலத்தில் இதன் மணல் அறல் அறலாகப் படிந்து அழகாகக் காணப்படும். இந்த மணல்-படிவைச் சல்லியங்குமரனார் தன் பாடல் தலைவியின் கூந்தலுக்கு உவமையாக்கிக்கொண்டுள்ளார். இது ஓடும் பகுதி ...

                                               

இருங்குன்றம்

இருங்குன்றம் என்பது இக்காலத்தில் அழகர்கோயில் என வழங்கப்படுகிறது. மதுரையிலுள்ள மீனாட்சிக்குச் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் சீர் கொண்டுவந்த பின் வைகை ஆற்றில் இறங்குவதாகக் கொண்டாடப்படும் திருவிழா இந்த இருங்குன்றப் பெருமாளோடு தொடர்புடையது. சங்க க ...