ⓘ Free online encyclopedia. Did you know? page 146




                                               

புறத்திணை நன்னாகனார்

புறத்திணை நன்னாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவர் ஓய்மான் நல்லியாதனைப் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது. அது புறநானூறு 376 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. புலவர் வறுமையில் நரகவேதனைப் பட்டதாகவும், பொழுது இறங்கிய மாலை வேளையில் நல்லியாதனிட ...

                                               

பூங்கணுத்திரையார்

பூங்கணுத்திரையார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பெயரைப் பூங்கண் உத்திரையார் என்று பிரித்துப் பார்க்கின்றனர். ஆதிரை என்பது போல உத்திரை என்பதும் ஒரு பெயர். உத்திரை நாள்மீன் 27 நாள்மீன் வரிசையில் 12ஆவது மீன். உத்திரை நாளில் பிறந்த இவருக்கு உத ...

                                               

பூதங்கண்ணனார்

பூதங்கண்ணனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 140. பாடல் சொல்லும் செய்தி அன்று அவனை அவள் ஏற்கவில்லை. என்றாலும் அவன் மனப்புண்ணுக்கு அவளே மருந்து. இதனை எண்ணிக்கொண்டு சோராமல் பின்தொடர வேண்டும் என்று அவன் தன் நெஞ்சுக்குச ...

                                               

பெருங்குன்றூர் கிழார் (சங்கப்புலவர்)

பெருங்குன்றூர்கிழார், சங்க காலப் புலவர்களில் ஒருவராவார். இவர் பாடிய மொத்தப் பாடல்கள் 21. இவற்றில் அகம் எனப்படும் காதல் சார்ந்தவை ஆறு. அகப்பாடல்கள் ஆறில் நான்கு நற்றிணையிலும் ஒன்று அகநானூற்றிலும் மற்றொன்று குறுந்தொகையிலும் உள்ளன. புறநானூற்றில் ஐந் ...

                                               

பெருஞ்சாத்தனார்

இப்படி வெறியாட்டு நடத்தப்போகிறார்கள். என்ன செய்யப்போகிறோம்? என்று தோழி காத்திருக்கும் தலைவன் காதில் விழுமாறு தலைவியிடம் சொல்கிறாள்.

                                               

பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்)

பெருஞ்சித்திரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் 10 உள்ளன. அவை: புறநானூறு 158, 159, 160, 161, 162, 163, 207, 208, 237, 238. வறுமைக்கோலம் முதலானவற்றைச் சித்திரப் படமாக்கி நம் மனக்கண் முன் நிறுத்துவதில் இவர் சிறந்து விளங்கியதை இவரது ப ...

                                               

பெருந்தலைச்சாத்தனார்

பெருந்தலைச் சாத்தனார் சங்ககாலப் புலவர். இவரது தலை சற்றுப் பெரிதாகக் காணப்பட்டதால் இந்தச் சாத்தனாரைப் பெருந்தலைச்சாத்தனார் என்று குறிப்பிடலாயினர். இவரது பாடல்கள் ஒன்பது சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை: அகநானூறு 13, 224, 262, புறநானூறு 151, 164, 165 ...

                                               

பெருந்தேவனார் (சங்கப்புலவர்)

பெருந்தேவனார் சங்ககாலப் புலவர். இவரிலிருந்து வேறுபடுத்திக் காட்டவே சங்கப்பாடல் தொகுக்கப்பட்ட பிற்காலத்தில் வாழ்ந்த பெருந்தேவனாரைப் பாரதம் பாடிய பெருந்தேவனார் எனக் குறிப்பிட்டனர். சங்கநூல் தொகுப்பில் பெருந்தேவனார் பாடல்கள் மூன்று உள்ளன.

                                               

பெருந்தோட் குறுஞ்சாத்தன்

பெருந்தோட் குறுஞ்சாத்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 308 எண்ணுள்ள பாடலாக அமைக்கப்பட்டுள்ளது.

                                               

பெரும்பதுமனார்

பெரும்பதுமனார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் நான்கு உள்ளன. அவை: குறுந்தொகை 7, நற்றிணை 2, 109, புறநானூறு 199. பதுமனார் என்று வேறொரு புலவரும் உள்ளார்.

                                               

பெரும்பாக்கன்

பெரும்பாக்கன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 296 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது. பெரும்பாக்கம் ஊரினர் ஆதலால் பெரும்பாக்கன் என்னும் பெயரினைப் பெற்றவர் இவர்.

                                               

பெருவழுதி

பெருவழுதி சங்ககாலப் புலவர். கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ஓர் அரசன். அவனது அண்ணன் ஒரு புலவர். பெருவழுதியின் பாடல்கள் இரண்டு உள்ளன. - அவை: நற்றிணை 55, 56.

                                               

பெருவாயின் முள்ளியார்

பெருவாயில் என்னும் ஊரில் வாழ்ந்த புலவர் பெருவாயின்முள்ளியார். கடம்பின் பெருவாயில் என்னும் ஊரே இந்தப் பெருவாயில். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை என்னும் நூல் இவரால் பாடப்பட்டது. வெண்பாயாப்பில் அமைந்த இந்த நூலில் வாழ்க்கையில் பின் ...

                                               

பேய்மகள் இளவெயினி

பேய்மகள் இளவெயினி சங்ககாலப் பெண் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் புறநானூறு 11 ஆம் பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளது. அதில் இவர் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவின் கொடைப் பெருமையைப் பாராட்டியுள்ளார். சேரமான் பாலை ...

                                               

பேயனார்

பேயனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 105 பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றில் சில பாடல்களில் பாடியவர் பெயர் பேயார் என உள்ளது. இதனைக் கொண்டு அப்பாடல்களைப் பாடிய புலவர் பெண்பால் புலவர் என எடுத்துக்கொண்டுள்ளனர்.

                                               

பேராலவாயர்

பேராலவாயர் சங்ககாலப் புலவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் ஆறு உள்ளன. இவரை மதுரைப் பேராலவாயார் எனவும் வழங்குவர். பேராலவாய் என்பது மதுரையின் ஒரு பகுதி. பெரிய ஆலமரம் இருந்த பகுதி. இங்கு வாழ்ந்த புலவர் பேராலவாயர்.

                                               

பேரிசாத்தனார்

சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் போரிட்டுக்கொண்டபோது மலையன் சோழர்பக்கம் இருந்து போரிட்டான். இதனால் சோழன் வென்றான். அப்போது சோழன் உன்னைப் புகழ்ந்தான். மலையன் இல்லாவிட்டால் வென்றிருக்கலாம் என்று தோற்ற பொற ...

                                               

பொதுக்கயத்துக் கீரந்தை

பொதுக்கயத்துக் கீரந்தை சங்ககாலப் புலவர். இவரது பாடலாகக் குறுந்தொகை 337 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் உள்ளது. கயம் என்றால் குளம். பொதுக்கயம் என்பது ஊரின் பெயர்.

                                               

பொதும்பில் கிழார்

பொதும்பில் கிழார் சங்ககாலப் புலவர். நற்றிணை 57 எண்ணுள்ள ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. இவரது மகனார் வெண்கண்ணியார் என்பவரும் ஒரு புலவர்.

                                               

பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார்

பொதும்பில் கிழார் மகனார் வெண்கண்ணியார் சங்ககாலப் புலவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை நற்றிணை 375, 387. இவரது தந்தையார் பொதும்பில் கிழார் என்பவரும் ஒரு புலவர்.

                                               

பொதும்பில் புல்லாளங் கண்ணியார்

பொதும்பில் புல்லாளங் கண்ணியார் சங்ககாலப் பெண்பால் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 154ஆம் பாடலாக உள்ளது. புல்லாளம் என்பது இவர் கண்களிலிருந்த புல் போன்ற வரிக் கோடுகள். ஒப்புநோக்குக பூங்க ...

                                               

பொய்கையார்

பொய்கையார் சங்ககாலப் புலவர். இவரது மூன்று பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை: நற்றிணை 18, புறநானூறு 48, 49 ஆகியவை. இவர் வறுமையில் வாடும் புலவர்களைச் சேரமான் கோக்கோதை மார்பனிடம் ஆற்றுபடுத்துகிறார்.

                                               

பொருந்தில் இளங்கீரனார்

பொருந்தில் இளங்கீரனார் சங்ககாலப் புலவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை: அகநானூறு 19, 351, புறநானூறு 53 ஆகியவை. பொருந்தில் என்பது ஊரின் பெயர். சேரன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் வெற்றிகளை இவர் பாராட்டிப் பாடியுள்ளார். தம் பாட ...

                                               

போதனார்

இவரத் பாடல் "பிரசம் கலந்த வெண்நுவைத் தீம்பால்" என்று தொடங்குகிறது. போதம் என்னும் சொல் பாலைக் குறிக்கும். இப் புலவரின் இயற்பெயர் தெரியாத நிலையில் பாலுண்ணச் செய்யும் செய்தியமைந்த பாடலைப் பாடியதால் நற்றிணை நூலைத் தொகுத்தவர் போதனார் என்று பெயர் சூட்ட ...

                                               

போந்தைப் பசலையார்

போந்தைப் பசலையார் சங்ககாலப் புலவர். அகநானூறு 110 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. தலைவிக்கு நிகழந்ததைத் தோழி செவிலிக்கு அறத்தொடு நிறகும் இந்தப் பாடல் ஒரு நிகழ்வின் தொடர் போல அமைந்துள்ளது.

                                               

மடல் பாடிய மாதங்கீரனார்

மடல் பாடிய மாதங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை: குறுந்தொகை 182, நற்றிணை 337 ஆகியவை. இந்த இரண்டு பாடல்களிலும் மடலேறும் செய்தி வருகிறது. எனவே மாதங்கீரனார் என்னும் இந்தப் புலவருக்கு மடல் பா ...

                                               

மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார்

மதுரை அளக்கர் ஞாழலார் மகனார் மள்ளனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 13 பாடல்கள் சங்கநூல் தொகையில் இடம்பெற்றுள்ளன. அவை: அகநானூறு 33, 144, 174, 244, 314, 344, 353, குறுந்தொகை 188, 215, நற்றிணை 82, 297, 321, புறநானூறு 388 ஆகியவை. பாடல் சொல்லும ...

                                               

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார்

மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது 12 பாடல்கள் சங்கநூல் தொகையில் இடம் பெற்றுள்ளன. அவை: அகநானூறு 56, 124, 230, 254, 272, 302, குறுந்தொகை 185, நற்றிணை 33, 157, 221, 344, புறநானூறு 329 ஆகியவை.

                                               

மதுரை இளங்கௌசிகனார்

பொருள் தேடப் பிரிந்து சென்ற தலைவன் பாலைநிலச் சுரவழியில் செல்லும்போது தன் தலைவியின் எண்ணம் வரத் தன் நெஞ்சோடு பேசுகிறான். வானவன் என்னும் சேரன் அழித்த பகைவர் நாடு போல் அவள் அழிந்த கோலத்தில் பெருமூச்சு விட்டுக்கொண்டிருப்பாள். குவளை மொட்டுப் போன்ற அவள ...

                                               

மதுரை இளம்பாலாசிரியன் சேந்தன் கூத்தனார்

இளம்பாலாசிரியன் = இளஞ்சிறுவர்களுக்குப் பாடம் சொல்லித்தரும் ஆசிரியன் சேந்தன் - இந்தப் புலவர் கூத்தனாரின் தந்தை. சேந்தன் என்னும் பெயர் சேயோனாகிய முருகனைக் குறிக்கும்.

                                               

மதுரை ஓலைக்கடைக் கண்ணம் புகுந்தாராயத்தனார்

மதுரை ஓலைக்கடைக்கண்ணம் புகுந்தார் ஆயத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 350. மதுரையில் ஓலைக்கடைக்கண்ணம் என்பது ஒரு பகுதி. தன் உற்றார் உறவினராகிய ஆயத்தாரோடு இப்பகுதியில் குடியேறிய புலவர் இவர். இவரது ...

                                               

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார்

மதுரை ஓலைக்கடையத்தார் நல்வெள்ளையார் சங்ககாலப் பெண்புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன. அவை நற்றிணை 250, 369 ஆகியவை. மதுரைமாநகரில் ஓலைக்கடை என்பது ஒரு பகுதியாக விளங்கியது. அப்பகுதியில் வாழ்ந்தவர் நல்வெள்ள ...

                                               

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார்

மதுரை மருதங்கிழார் மகனார் சொகுத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை நற்றிணையில் பாலைத்திணைப் பாடல்களாக அமைந்துள்ளன. பாடல் எண் 329, 352.

                                               

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார்

மதுரை மருதங்கிழார் மகனார் பெருங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் ஓவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை அகநானூறு 247, 364, நற்றிணை 388.

                                               

மதுரை வேளாசான்

ஆசான் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியன். வேளாசான் = வேள்வி செய்யும் ஆசான். வேள்வி = மக்களுக்குப் பயன்படும் உதவி. போர் நிற்பதற்கு உதவிய பாங்கு பாடலில் கூறப்பட்டுள்ளது. இந்த உதவி வேள்விதானே! புறநானூறு நூலைத் தொகுத்தவர் பாடற்பொருளால் இவருக்கு ...

                                               

மதுரைக் கண்டராதித்தனார்

பிரிவுக் காலத்தில் பொறுத்துக்கொள்ளுமாறு தலைவியைத் தோழி வற்புறுத்துகிறாள். கருநிறமும் நரைமுடியும் கலந்துள்ள ஆண் மரையான் புளிக்கும் நெல்லிக்காயைத் தின்றுவிட்டு அதன் இனிப்புக்காக நீர்க்கரையில் பூத்திருக்கும் மலர்கள் கலங்கும்படி சென்று மலையேறிச் சென் ...

                                               

மதுரைக் கண்ணத்தனார்

பகலின் ஒளி ஒருபுறமும், இரவின் இருள் மற்றொருபுறமும் மயங்கி நிற்பது அந்தி வானம். இது சிவனும் திருமாலும் ஓருருவம் பெற்றிருக்கும் தோற்றம் போல உள்ளதாம். இந்த அந்தியில் தலைவன் வந்துசெல்ல வேண்டாம் என்கிறாள் தோழி.

                                               

மதுரைக் கவுணியன் பூதத்தனார்

பூதங்கள் ஐந்து என்று திருக்குறள் குறிப்பிடுகிறது. 271 பூதங்கள் ஐந்தும் அகத்தே நகும் நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் இந்தப் பூதங்கள் ஐந்தும் நமக்கு வெளியிலும், உடலுக்குள்ளும் இருக்கின்றன. இந்த உண்மையை உணர்ந்தவன் பூதத்தன்.

                                               

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரால் பாடப்பட்ட இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவை: அகநானூறு 170, புறநானூறு 316.

                                               

மதுரைக் காமக்கணி நப்பாலத்தனார்

ஆற்றின் இரு கரையையும் இணைப்பது பாலம். அத்தம் என்பது வழி. பாலத்தன் = பாலமாக விளங்கியவன். காதலர்களின் பாலம் இவர்.

                                               

மதுரைக் காருலவியங் கூத்தனார்

மதுரைக் காருலவியங் கூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 325. காருலவியம் என்பது மதுரையின் ஒரு பகுதியாகச் சங்ககாலத்தில் இருந்த இடம்.

                                               

மதுரைக் கூத்தனார்

மதுரைக் கூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 334. கூத்தன் = கூத்தாடிப் பிழைப்பவன். இதன் பெண்பால் விறலி

                                               

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார்

மதுரைக் கொல்லன் வெண்ணாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இரண்டு உள்ளன. அவை: அகநானூறு 363, நற்றிணை 385. கொல்லன் என்னும் சொல் பொற்கொல்லரையும், இரும்புவேலை செய்பவரையும் குறிக்கும்.

                                               

மதுரைச் சுள்ளம் போதனார்

மதுரைச் சுள்ளம் போதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 215. சுள்ளம் என்பது மதுரையின் ஒரு பகுதியாகச் சங்ககாலத்தில் விளங்கியது.

                                               

மதுரைத் தத்தங்கண்ணனார்

மதுரைத் தத்தங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 335. தத்தம் என்பது அக்காலத்தில் மதுரையின் ஒரு பகுதிக்கு வழங்கப்பட்ட பெயர்.

                                               

மதுரைத் தமிழக் கூத்தனார்

மதுரைத் தமிழக்கூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 334. தமிழ்நாட்டில் தமிழக்கூத்தும், ஆரியக்கூத்தும் நடைபெற்றன.அவற்றுள் இவர் தமிழக்கூத்து ஆடிய பாணர் குடியினர். இப்பாடலின் அடிகள் இடையிடையே சிதைந்துப ...

                                               

மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார்

மதுரைப் பாலாசிரியர் சேந்தன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 322. பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர். சேந்தன் என்னும் சொல் செவ்வேள் முருகனைக் குறிக்கும்.

                                               

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார்

மதுரைப் பாலாசிரியர் நப்பாலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 172. பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர்.

                                               

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார்

மதுரைப் பாலாசிரியர் நற்றாமனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 92. பால் = தூய்மை. பாலாசிரியர் = நன்னடத்தையால் பாடம் புகட்டும் ஆசிரியர். தாமனார் என்னும் பெயர் மாலையணிந்து காட்சி தரும் முருகனையும், திருமால ...

                                               

மதுரைப் புல்லங்கண்ணனார்

மதுரைப் புல்லங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 161. புல்லம் என்பது மதுரையில் இருந்த ஒரு பகுதி. கண்ணனார் புலவர் பெயர்.