ⓘ Free online encyclopedia. Did you know? page 145




                                               

எருமையூரன்

எருமை நன்னாட்டை இப்போது மைசூர் என்கிறோம். மகிஷம் என்பது எருமையைக் குறிக்கும் வடசொல். மகிஷ ஊர் மைசூர் ஆயிற்று. சங்ககாலப் புலவர் நக்கீரர் இவனைப் பற்றிக் குறிப்பிடுகிறார். எருமையூரன் என்ற பெயர் பெற்ற அரசன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எ ...

                                               

ஏழில் நெடுவரை

ஏழில் நெடுவரை யானது ஏழில் குன்றம் என்னும் பெயராலும் சங்கநூல்களில் குறிப்பிடப்படுகிறது. இது இக்காலத்தில் கேரளமாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ளது. இதன் இக்கால வழக்குப்பெயர் எழில்மலை. ஆனைமலைக் குன்றுகளில் ஒன்று பழனி. இக்காலத்தில் இப்பெயரால் வழங்கப்ப ...

                                               

ஏறை

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஒன்று ஆனைமலை. ஆனைமலையைச் சங்கப் பாடல் அறுகோட்டியானை என்று குறிப்பிடுகிறது. இக்காலத்தில் பழனி என்றும், திருமுருகாற்றுப்படையில் ஆவினன்குடி என்றும் கூறப்படும் ஊர் சங்ககாலத்தில் பொதினி என்னும் பெயரைப் பெற்றிருந்தது. ...

                                               

கவிரம்

கவிரம் என்பது ஒரு கவாஅன். கவாஅன் என்னும் சொல் மலையிடைவெளிக் கணவாயைக் குறிக்கும். இந்த ஊர் தற்போதைய செங்கோட்டை நகராகும். இக்கவிரம் ஆய் ஆரசர்ககுக்கு கீழும் பாண்டியர் குடிகளில் ஒன்றான கவுரியர் மன்னர்களின் கீழும் இருந்திருக்கிறது. இக்கவிரத்தை ஆண்ட பா ...

                                               

காஞ்சி ஆறு

காஞ்சி என்பது சேரநாட்டில் பாய்ந்த ஓர் ஆறு இது சேரநாட்டு மலையில் பிறந்து சேரநாட்டுக் கடலில் விழுந்தது, இந்த ஆற்றில் ஆண்டுதோறும் விழா நிகழும். இதனைக் காவிரியில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவோடு ஒப்பிடலாம். காஞ்சியாற்று விழாவுக்குத் தீநீர் விழா என்ற ...

                                               

குடபுலம்

குடபுலம் என்பது சேரநாடு. தமிழகத்தின் மேற்கில் உள்ளமையால் இதனைக் குடபுலம் என்றனர். சோழநாட்டைக் குணபுலம் என்றும், பாண்டியநாட்டைத் தென்புலம் என்றும் குறிப்பிட்டனர். இது இருப்பிடம் நோக்கிய திசைக் குறியீட்டுப்பெயர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவ ...

                                               

குடமலை

சங்க இலக்கியங்களில் வரும் சொல்லாட்சிகள் குடமலை என்பது வடக்கில் காவிரி தோன்றும் பகுதிமுதல் தெற்கில் சந்தனம் மணக்கும் பொதியமலை வரை உள்ள மேற்குத்தொடர்ச்சிமலை முழுவதையும் குறிக்கும் என்பதைப் புலப்படுத்துகின்றன. குடமலையில் பிறந்த ஆரம் சந்தனம் அகில் கட ...

                                               

குடவர்

சங்ககாலச் சேரநாட்டின் ஒரு பகுதியாக விளங்கியது குடநாடு. அதில் வாழ்ந்த மக்கள் குடவர் எனப்பட்டனர். குடபுலம் என்பது சேரநாடு. குடதிசை என்பது மேற்குத் திசையைக் குறிக்கும் தமிழ்ச்சொல். சேர நாட்டைக் குடபுலம் என்பர். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், குடநாட்டை வ ...

                                               

குதிரைமலை

குதிரைமலை, ஆனைமலை தோட்டிமலை போன்ற மலைப்பெயர்கள் அவற்றின் உருவத்தால் பெயர் பெற்றவை. பிட்டன் பிட்டன் மகன் பிட்டங்கொற்றன் அதியமான் நெடுமான் அஞ்சி அதியமான் மகன் பொகுட்டெழினி ஆகியோர் இதனை ஆண்ட சங்ககால அரசர்கள். குதிரைமலை குதிரை போல் உருவம் கொண்டிருந்த ...

                                               

குழுமூர்

குழுமூர் சங்ககாலத்தில் பெயர்பெற்று விளங்கிய ஊர்களில் ஒன்று. அது மலைச்சாரலில் அமைந்திருந்தது. பசுக்கூட்டம் அங்கு மேயும். இவ்வூரில் இருந்த வள்ளல் உதியன். உதியன் என்னும் பெயர் சேர மன்னனை நினவூட்டுகிறது. எனவே இந்த ஊர் சேரநாட்டுப் பகுதியில் இருந்தது எ ...

                                               

குறுக்கைப் பறந்தலை

குறுக்கை என்னும் ஊரில் சங்ககாலத்தில் போர் நடந்த இடம் குறுக்கைப் பறந்தலை. போர்க்களத்தைதைச் சங்கநூல்கள் பறந்தலை என்று குறிப்பிடுகின்றன. சிவன் கோயில் அட்ட வீரட்டான சிவத்தலங்களில் குறுக்கை வீரட்டானம் என இது குறிப்பிடப்படுகிறது. மயிலாடுதுறைக்கு அண்மைய ...

                                               

சங்கப்பாடல் பேசும் ஆறுகள்

சங்கப்பாடல்களில் ஆறுகள் பலவற்றின் பெயர்கள் வருகின்றன. சில பாடல்கள் ஆற்றின் வளத்தைப் பற்றிப் பேசுகின்றன. சில அந்த ஆற்றுநில மன்னனைக் குறிப்பிடுகின்றன. சில அந்த ஆற்றங்கரை மக்களைப் பற்றிப் பேசுகின்றன. இங்கு அந்த ஆற்றின் பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. அ ...

                                               

தமிழ் நாவலந்தண்பொழில்

நாவலந்தண்பொழில் என்பது தமிழ்மொழி வழங்கிய நிலத்தைக் குறிக்கும் தொடர். இதன் வடக்கு எல்லை குருகொடு பெயர்பெற்ற மால்வரை. குருகு என்பதைக் கிரவுஞ்சம் என வடமொழியாக்கம் செய்து இந்த மலையின் பெயரைக் கிரவுஞ்சமலை எனக் குறிப்பிடுகின்றனர். விந்திய-சாத்பூரா மலைக ...

                                               

தொழுநை

தொழுநை என்பது யமுனை ஆற்றைக் குறிக்கத் தமிழாக்கம் செய்யப்பட்ட சொல். கதை யமுனை ஆற்றில் குளித்த இளம்பெண்களின் சேலையைத் திருடிக்கொண்டு மரத்தில் ஏறிக்கொண்டான் என்னும் கதை ஒன்று உண்டு. தமிழர் பண்பாடு இந்தக் கதையை வேறு வகையாகத் தமிழ் இலக்கியம் குறிப்பிட ...

                                               

நவிரம் (மலை)

நவிரமலை சங்க கால இலக்கியத்தினுள் சுட்டப்பட்டுள்ள மலைகளில் ஒன்று. வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஈராயிரம் ஆண்டுகட்கு முன்னர், பல்குன்றக் கோட்டம் என்று வழங்கப்பட்டது. பல்குன்றக் கோட்டத்தைச் சிறப்புடன் ஆட்சி செய்தவன் செங்கண் மாத்து ...

                                               

நன்றா

நன்றா என்பது ஒரு குன்று. சேரமன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை என்பானின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. பதிற்றுப்பத்து ஏழாம்பத்து இந்தச் சேரன்மீது கபிலர் என்னும் புலவரால் பாடப்பட்டது. இந்தப் பாடலைக் கேட்டு மகிழ்ந்த சேரன் கபிலருக்குப் பரிசாக" ...

                                               

பல்குன்றக் கோட்டம்

பல்குன்றக் கோட்டம் என்பது சங்ககாலத்தில் செங்கண்மா என்னும் ஊரைத் தன்னகத்தே கொண்டு விளங்கிய ஆட்சிப் பகுதி. பத்துப்பாட்டு என்பது சங்ககால நூல்கள் 10 அடங்கிய ஒரு தொகுப்பு. அந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று மலைபடுகடாம். இந்த நூலைப் பாடிய ...

                                               

பாடலி

கங்கை ஆற்றங்கரையில் இருந்த பாடலிபுத்திரம் சங்கப் பாடல்களில் பாடலி என்று குறிக்கப்பட்டுள்ளது. குறுந்தொகை 75, அகநானூறு 265 ஆகிய பாடல்கள் இதனைக் குறிப்பிடுகின்றன.

                                               

புன்னாடு

சங்க இலக்கியங்கள் கூறும் புன்னாடு கபினி ஆற்றங்கரையின் தெற்கிலும், கொள்ளேகளம் பகுதிக்கு மேற்கிலும், கொடகு மலைகளுக்கு தென்கிழக்கிலும் அமைந்திருந்தது. சங்ககாலத்திலிருந்து கி.பி 5 ஆம் நூற்றாண்டு வரை புன்னாடு கொங்கின் ஒரு பகுதியாக இருந்துவந்தது. பின்ன ...

                                               

முக்காவல் நாடு

திருச்சி மாவட்டம் முசிறி வட்டத்தில் ஆமூர் என்னும் ஊர் உள்ளது. இதனைப் புறநானூற்றுப் பாடல் முக்காவல் நாட்டு ஆமூர் எனக் குறிப்பிடுகிறது. முக்காவல் நாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றவன் சோழன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி. இவனைப் புலவர் சாத்தந்தைய ...

                                               

முதிரம்

சங்ககாலத்து முதிரமலை இக்காலத்தில் முதுமலை என்னும் பெயருடன் விளங்குகிறது. குமணன் என்னும் வள்ளல் சங்ககாலத்தில் இதன் அரசன். இவனது தம்பி இளங்குமணன் அண்ணனிடமிருந்து நாட்டைப் பறித்துக்கொண்டான். குமணன் இந்த முதிரமலைக் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்தபோது ...

                                               

ஆர்க்காடு

காவிரிக்கரை ஆர்க்காட்டை ஆண்ட அரசன் அழிசி. அவன் மகன் சேந்தன். இருவரும் அரசர்கள். யானைப்படை கொண்ட பசும்பூண் சோழர் என்னும் சோழர் கால்வழி ஆர்க்காட்டில் இருந்துகொண்டு ஆட்சிபுரிந்துவந்தது. இந்த ஆர்க்காட்டில் தேரோடும் தெருவில் கள்ளுப்பானையில் ஈ மொய்ப்பத ...

                                               

திருக்கோவலூர்

திருக்கோவிலூர், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் வட்டம் மற்றும் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும்,சிறப்பு பேரூராட்சி ஆகும். இங்கு வீரட்டேஸ்வர் கோயில் மற்றும் உலகளந் ...

                                               

துளு நாடு

துளு நாடு கர்நாடகா மாநிலத்தின் கடற்கரை மாவட்டங்களான உடுப்பி மாவட்டம் மற்றும் தெற்கு கன்னடம் மாவட்டங்களை உள்ளடக்கியது. முன்னர் இது சேரநாட்டின் வடமேற்கில் அமைந்திருந்ததாகவும், கோசர் என்னும் அரசர்கள் இந்நாட்டை ஆண்டதாகவும் மாமூலனார் அகப்பாடல் கூறுகிற ...

                                               

சங்க கால அரசர்கள்

மூவேந்தர் அல்லாத சங்க கால அரசர்களை இங்கு மன்னர்கள் என்று குறிப்பிடுகிறோம். இவர்களைச் சிற்றரசர்கள் என்றும், குறுநில மன்னர்கள் என்றும் குறிப்பிடுகின்றனர். இளவரசர்கள், அரசியர், கிழான் போன்ற ஊர்ப் பெருந்தனக்காரன், படைவீரர்கள், வள்ளல்கள், சிறப்புக்குர ...

                                               

அத்தி அரசன்

அத்தி என்பவன் சங்ககால அரசர்களில் ஒருவன். இவனைச் சேரர் படைத்தலைவன் என்று சில அறிஞர்கள் கருதுகின்றனர். குடவாயிற் கீரத்தனார், இவனைப்பற்றிய செய்திகளை அளித்துள்ளார். பெரும்பூட் சென்னி என்னும் சோழ வேந்தனை ஏழுபேர் கூட்டாகச் சேர்ந்து தாக்கினர். இந்த எழுவ ...

                                               

அந்துவஞ்சாத்தன்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இருந்தனர். அவர்கள் ஆந்தை, மாவன், இயக்கன் எனப்பட்ட ஐவர். இவர்களில் ஒருவன் இந்த அந்துவஞ்சாத்தன். ஆதன் அழிசி, அந்துவஞ்சாத்தன், ...

                                               

அந்துவன் கீரன்

காவட்டனார் என்னும் புலவர் பாடியுள்ள இரண்டு பாடல்களில் ஒன்று புறநானூறு 359 எண்ணுள்ள பாடல். இந்தப் பாடலின் அடியில் அந்துவன் கீரனை ப் பாடியது என்னும் குறிப்பு உள்ளது. பாடலில் இவன் பெயர் இல்லை. பாடல் பெருங்காஞ்சி என்னும் துறையைச் சேர்ந்தது. பல நாடுகள ...

                                               

அறுகை

அறுகை என்பவன் ஓர் அரசன். அவன் 5-ஆம் பதிற்றுப்பத்துப் பாட்டுடைத் தலைவன் கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனுக்குக் கேளிர் என்று குறிப்பிடப்படுகிறான். கேண்மை எனபது நட்பைக் குறிக்கும் நண்பரைக் கிளைஞர் என்று வள்ளுவர் குறிப்பிடுகின்றார். இந்தச் சொல்லாட்ச ...

                                               

அன்னி

இக்காலத்து அன்னியூர் என்னுமிடத்தில் இருந்துகொண்டு சங்ககாலத்தில் ஆண்ட மன்னன் அன்னி. இது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை வட்டத்தில் அமைந்துள்ளது. அன்னியின் காவல்மரமான புன்னை மரத்தை குறுக்கைப் பறந்தலைப் போரில் வென்ற திதியன் வெட்டிச் சாய்தபோது ...

                                               

ஆதன் அவினி

ஆதன் அவினி சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் ஓரம்போகியார் ஐங்குறுநூறு தொகுப்பில் உள்ள மருதத்திணை பாடல்களில் முதல் பத்திலுள்ள 10 பாடல்களையும் வாழி ஆதன் வாழி அவினி என்று அரசவாழ்த்துப் பாடித் தொடங்குகிறார். இதில் ஆதன் என்பது தந்தையின் பெயர். அவினி ...

                                               

ஆதன் அழிசி

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இருந்தனர். அவர்கள் ஆதன் அழிசி ஆந்தை மாவன் இயக்கன் எனப்பட்ட ஐவர். அந்துவஞ்சாத்தன் சங்கப்பாடல்களில் ஆதன் அழிசியைப் பற்றியுள்ள ...

                                               

ஆதி (அரசன்)

ஆதி என்னும் பெயர் கொண்ட குறுநிலத் தலைவர்களில் ஒருவன் மல்லி கிழான் காரியாதி. இந்த ஆதியின் தந்தை காரி. இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி அல்லன். இந்தக் கடையெழு வள்ளல்களில் ஒருவனான காரி மலையமான் திருமுடிக் காரி. இவனது ஊர் திருக்கோவலூர். மற்றொரு ...

                                               

ஆமூர் மல்லன்

ஆமூர் மல்லன் சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன். ஆமூர் என்னும் பெயர் கொண்ட ஊர்கள் 3 இடங்களில் சங்ககாலத்தில் இருந்ததைச் சங்கநூல்கள் காட்டுகின்றன. அவற்றுள் திருச்சி மாவட்டத்தில் காவிரிக்கு வடகரையில் உள்ள முக்காவல்நாட்டு ஆமூரை ஆண்டவன் இந்த ஆமூர்மல ...

                                               

ஆரியப் பொருநன்

ஆரியப் பொருநன் பாணன் என்பவனை மற்போரிட்டுத் தாக்கினான் என அகநானூறு குறிப்பிடுகிறது. பாணன் மார்பில் குத்தும்போது ஆரியப் பொருநனின் கையின் தோள்பட்டை மூட்டு நழுவி விட்டது. எனவே ஆரியப்பொருநன் வீழ்ந்து விட்டான். இது தெரியாமல் பாணன் மேலும் ஆரியப் பொருநனை ...

                                               

இடும்பில்புறம்

இடும்பில்புறம் சங்கப்பாடல்களில் குறிப்பிடப்படும் ஒரு ஊர். பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்தைப் பாடியவர் பரணர். கடல் பிறக்கு ஓட்டிய செங்குட்டுவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு இதனைப் பாடியுள்ளார். இந்தச் செங்குட்டுவன் தன் கங்கைக்கரை வெற்றிக்குப் பின்னர் ...

                                               

இயக்கன்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் பாண்டிய அரசர்களில் ஒருவன். இவனது அரசவையில் ஐம்பெருங்குழுவைப் போல் ஐந்து நண்பர்கள் இருந்தனர். அவர்கள் இயக்கன் எனப்பட்ட ஐவர். அந்துவஞ்சாத்தன், ஆதன் அழிசி, ஆந்தை, மாவன், சங்கப்பாடல்களில் இயக்கனைப் பற்றியுள்ள க ...

                                               

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர்

இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர், முத்தரைய அரச குலத்தைச் சேர்ந்த தஞ்சாவூரை கி.பி 705 முதல் 745 வரை ஆட்சி செய்த அரசர் ஆவார். இவர் மேலும் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர், சுவரன் மாறன், குவாவன் மாறன் என்றும் அறியப்படுகிறார். இவர் தஞ்சாவூர், புதுக்கோ ...

                                               

இளங்கண்டீரக்கோ

இளங்கண்டீரக்கோ என்பவன் கண்டீரக்கோப்பெருநள்ளியின் தம்பி. கண்டீரக்கோப்பெருநள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன். நள்ளி எனச் சுருக்கமாகக் குறிப்பிடப்படுபவன். இளங்கண்டீரக்கோ தன் நண்பனான இளவிச்சிக்கோவுடன் விச்சிமலைநாட்டு அரண்மனையில் இருந்தான். அப்போது புலவ ...

                                               

இளங்குமணன்

இளங்குமணன் சங்ககால அரசன். இவன் தன் அண்ணன் குமணனிடமிருந்து நாட்டைப் பறித்துக்கொண்டவன். குமணனை அவன் தம்பி இளங்குமணன் நாடுகடத்திவிட்டான். குமணன் காட்டில் தலைமறைவாக வாழ்ந்துவந்தான். குமணனிடம் பரிசில் பெறச் சென்ற புலவர் பெருந்தலைச்சாத்தனார் நிலைமையைத் ...

                                               

இளங்கோ முத்தரையர்

இளங்கோ முத்தாரையர் விடல் விடுகு இளங்கோவதி முத்தரையன் என்றும் கோ இளங்கோ முத்தரையர் என்றும் அழைக்கப்படும், இவர் முத்தரைய அரச குலத்தின் கடைசி ஆட்சியாளராக இருந்தார்.

                                               

இளவிச்சிக்கோ

விச்சிமலை அரசன் விச்சிக்கோ. விச்சிக்கோவின் தம்பி இளவிச்சிக்கோ. இளவிச்சிக்கோவும், இளங்கண்டீரக்கோவும் விச்சிமலை அரண்மனை அவைக்களத்தில் அமர்ர்ந்திருந்தனர். அவைக்களம் சென்ற புலவர் வன்பரணர் இளங்கண்டீரக்கோவை மகிழ்வுடன் தழுவினார். இளவிச்சிக்கோவைத் தழுவவி ...

                                               

எழிமலை நன்னன்

எழிமலை நன்னன் Ezhimalai Nannan கி மு மூன்றாம் நூற்றாண்டு, சங்க கால, தென்னிந்தியாவின் மூசிக நாட்டின் மன்னர் ஆவார். மூசிக நாட்டின் தலைநகரம் எழிமலை நகரம் ஆகும். இவர் மௌரியப் பேரரசரான பிந்துசாரரின் சமகாலத்தவர் எனக் கருதப்படுகிறார். அண்டை நாட்டின் வலு ...

                                               

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன்

ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தன் சங்ககால அரசர்கள்களில் ஒருவன். இவனது தந்தை ஒல்லையூர் கிழான். இவன் ஆண்ட நாடு ஒல்லையூர் நாடு. தலைநகர் ஒல்லையூர். இவன் சிறந்த வள்ளல்களில் ஒருவன். வல்வேல் சாத்தன் என இவன் போற்றப்பட்டான். ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன ...

                                               

கட்டி (சங்ககால அரசன்)

சோழன் பெரும்பூட் சென்னியை எதிர்த்துப் பொரிட்ட எழுவர் கூட்டணியில் கட்டி என்பவனும் ஒருவன். கட்டூர் என்னுமிடத்தில் நடந்த போரில் சோழர் படைத்தலைவன் பழையனைக் கொன்றது. பின்னர் பெரும்பூட் சென்னியே தலைமையேற்று போரிட்டபோது எழுவர் கூட்டணியில் அறுவர் தப்பி ஓ ...

                                               

கடியநெடுவேட்டுவன்

கடியநெடுவேட்டுவன் சங்ககால மன்னர்களில் ஒருவன். கோடைமலை அரசன். இவன் நாயுடன் வேட்டைக்குச் செல்லும் பழக்கம் உடையவன். இதனால் இவனைக் கடியநெடுவேட்டுவன் என்றே பெயரிட்டு வழங்கலாயினர். இவனது இயற்பெயர் நெடுவேட்டுவன் என்பதாகும். இதிலுள்ள கடிய என்பது இம்மன்னன ...

                                               

கரும்பனூர் கிழான்

கரும்பனூர் கிழான் சங்ககால மன்னர்களில் ஒருவன். இவன் சிறந்த கொடைவள்ளல். திருவேங்கட மலைப்பகுதி நாட்டை ஆண்டுவந்தான். புலவர் நன்னாகனார் இவனைப் பெருமைப்படுத்திப் பாடியுள்ளார்.

                                               

காரியாதி

காரியாதி சங்ககாலக் குறுநில மன்னர்களில் ஒருவன். இவன் மல்லி கிழான் காரியாதி என ஊர்ப்பெயர் அடைமொழியுடன் குறிப்பிடப்படுகிறான். மற்றும் பெரும்பெயர் ஆதி எனவும் இவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான். இவனது ஊர் மல்லி. இவனது பெயர் ஆதி. இவனது தந்தை பெயர் காரி. இந்த ...

                                               

கிள்ளிவளவன், குளமுற்றத்துத் துஞ்சியவன்

கிள்ளிவளவன் அல்லது கிள்ளி வளவன் என்னும் சோழன் குளமுற்றம் என்னுமிடத்ததில் இறந்ததால் "குளமுற்றத்துத் துஞ்சிய" என்னும் அடைமொழியுடன் "சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்" என்று குறிப்பிடப்படுகிறான். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் என்று ...

                                               

குறும்பியன்

குறும்பியன் சங்ககால மன்னர்களில் ஒருவன். புலவர் பரணர் இவனைப் பற்றிய செய்திகளைத் தருகிறார். இவன் வளங்கெழு தானைக் கொற்றக் குறும்பியன் எனப் போற்றப்பட்டுள்ளான். இவனது படைத்தலைவன் திதியன். அன்னி மிஞிலி என்பவள் கோசர்குடிப் பெண். இவளது தந்தை வயலை உழுதபின ...