ⓘ Free online encyclopedia. Did you know? page 143




                                               

மெய்ஞ்ஞான விளக்கம்

மெய்ஞ்ஞான விளக்கம் என்னும் நூல் இருந்தது என்பதை உரைநூல்களின் வாயிலாக அறிகிறோம். சாத்திரக் கருத்துக்களில் தனி ஒரு கருத்தை மட்டும் எடுத்துக்கொண்டு விளக்கும் நூல்கள் பல தோன்றின. இவற்றிற்குத் தோன்றுவாயாக அமைந்த நூல் மனவாசகம் கடந்தார் என்பவர் இயற்றிய ...

                                               

மெய்ம்மொழிச் சரிதை

மெய்ம்மொழிச் சரிதை என்னும் நூல் தனி நூலாக வெளிவந்துள்ளது. இந்த நூலில் கிடைத்த பாடல்கள் மட்டுமே பதிப்பிக்கப்பட்டுள்ளன. இது பர-பக்கம், சுப-பக்கம் என்னும் இரண்டு பகுதிகளைக் கொண்டது. இந்த அமைப்பு சிவஞான சித்தியார் நூலின் பாகுபாட்டு முறைமை ஆகும். பர ப ...

                                               

மேருமந்திர புராணம்

மேருமந்திர புராணம் என்னும் நூல் 14 ஆம் நூற்றாண்டில் வாமன முனிவர் என்பவரால் தமிழில் எழுதப்பட்டது. 13 சருக்கங்கள், 1405 பாடல்கள் கொண்டது. மேரு, மந்தரர் என்னும் இரு அரச குமாரர்கள் முற்பிறவியில் பெற்ற முத்தி பற்றிய கதைகளைக் கூறுவது. இடையில் உலகியல் ம ...

                                               

விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் என்னும் நூல் ஔவையார் என்னும் புலவரால் பாடப்பட்டது. இதனைப் பாடிய ஔவையார் 14ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். விநாயகப் பெருமான் தோற்றம் யோகாசன மூச்சுப் பயிற்சி முதலான செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன.

                                               

வினா வெண்பா

வினா வெண்பா சைவ சித்தாந்த சாத்திரங்கள் பதினான்கினுள் ஒன்று. உமாபதி சிவாச்சாரியாரால் 14ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட இது பதின்மூன்று பாக்களை மட்டுமே கொண்டது. வினா வடிவில் அமைந்துள்ள வெண்பாக்களைக் கொண்டது இந்நூல். ஆசிரியர் தம் குருவாகிய மறைஞான சம்பந ...

                                               

உடற்கூற்று வண்ணம்

உடற்கூற்று வண்ணம் என்னும் பெயரில் பட்டினத்தார் ஒரு நூல் செய்துள்ளார். அதைப்போல அருணகிரிநாதர் செய்த உடற்கூற்று வண்ணம் என்றும் உண்டு என்கின்றனர். பட்டினத்தார் உடற்கூற்று வண்ணம் ஆண் பெண் உணர்வு கலந்து ஒழுகிய விந்து ஊறும் சுரோணிதத்தில் கலக்கும். இது ...

                                               

உபதேச காண்டம்

உபதேச காண்டம் என்னும் பெயரில் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த இருவேறு புலவர்கள் தமிழில் இரண்டு நூல் செய்துள்ளனர். இவர்கள் சைவத் துறவிகள். சைவத் துறவிகளை அக்காலத்தில் பண்டாரம் என்றனர். வடமொழி ‘சங்கர சங்கிதை’ என்னும் நூலில் ‘சிவரகசிய காண்டம்’ என்னும் பக ...

                                               

உபதேச மாலை

உபதேச மாலை என்பது சிவஞான வள்ளல் பாடிய 20 நூல்களில் ஒன்று. இந்த நூலில் 100 வெண்பாக்கள் உள்ளன. ’ஆசாரியன்’ என்னும் சொல்லை இந்த நூல் ‘ஆசாரிக்கும் தன்மை உடையவன்’ என விளக்குகிறது. ஆசாரித்தல் என்பது ஆசாரங்களைக் கடைப்பிடித்தல். ஆசாரம் என்பது வாழ்க்கைக்கு ...

                                               

உபதேச ரத்தின மாலை

உபதேச ரத்தின மாலை 15-ஆம் நூற்றாண்டு நூல். மணவாள மாமுனிகள் பாடிய மூன்று தமிழ்நூல்களில் ஒன்று. திருவாய்மொழிப் பிள்ளை எனச் சிறப்புப்பெயர் பெற்ற திருமலையாழ்வார் மணவாள மாமுனிகளின் ஆசிரியர். அவர் தமக்குச் சொல்லித்தந்த நெறிமுறைகளைப் பலரும் தெரிந்துகொள்ள ...

                                               

ஓங்குகோயில் புராணம்

ஓங்குகோயில் புராணம் என்பது திருப்புத்தூர் சிவபெருமான்மீது பாடப்பட்ட நூல். பாடியவர் திருவம்பலமுடையார் மறைஞான சம்பந்தர். காலம் 15ஆம் நூற்றாண்டு. இந்த நூல் கிடைக்கவில்லை. திருத்தளிநாதர் திருவிளையாடல்களைக் கூறும் இந்த நூலை திருவம்பலமுடையார் மறைஞான சம ...

                                               

கந்தரனுபூதி

அனுபூதி என்னும் சொல்லினை அனு + பூதி என்று பிரிக்கலாம். "அனு" என்பது அனுபவம். "பூதி" என்பது புத்தி. இது அறிவு. அறிவின் பூரிப்பு. அனுபவ அறிவின் பூரிப்பே அனுபூதி.

                                               

கருணாமிர்தம்

கருணாமிர்தம் என்னும் நூல் சைவ இலக்கியங்களில் ஒன்று. இது சிவஞான வள்ளல் என்பவரால் செய்யப்பட்டது. 64 விருத்தங்கள் கொண்டது. பெரும்பாலான விருத்தங்கள்" திருப்புலி வனத்துளானே” என முடிகின்றன. புலிவனம் என்பது புலி பூசித்த தலம் என்பது ஐதிகம். புலி திரிந்த ...

                                               

சகலாகம சாரம்

சகலாகம சாரம் என்னும் நூல் 15ஆம் நூற்றாண்டில் தோன்றியது. ஆசிரியர் களந்தையார் என்று போற்றப்பட்ட தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசர். இவர் மறைஞான சம்பந்தரின் குரவர். நூல் குறட்பாக்களால் ஆனது. மேற்கோள் பாடல்களாகச் சில ப ...

                                               

சசிவர்ண போதம்

சசிவர்ண போதம் என்பது மோகவதைப் பரணி என்னும் நூலின் ஒரு பகுதி. மோகவதைப் பரணி தத்துவராயர் நூல்களில் ஒன்று. காலம் 15ஆம் நூற்றாண்டு. பரணி நூலில் இது பேய்களுக்குத் தேவி கூறியதாக வருகிறது. சசிவர்ண போதம் தனி நூலாகப் பல பதிப்புகள் வெளிவந்துள்ளன. வேதாந்தம் ...

                                               

சத்தியஞான போதம்

சத்தியஞான போதம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவரால் 15ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. இதனைச் ‘சத்தியஞானப் போதத் தமிழ்’ என்று இந்த நூலின் பாயிரம் கூறுகிறது. ‘வள்ளலார் சாத்திரம்’ என்னும் பெயரில் இவரது 20 நூல்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று வெளிவந்துள்ளத ...

                                               

சித்தாந்த தரிசனம்

சித்தாந்த தரிசனம் என்னும் நூல் சிவஞான வள்ளல் என்பவர் இயற்றிய 20 நூல்களில் ஒன்று. பாயிரம், பதி, பசு, பாசம், பாசமோசனம், சிவயோகம் என்னும் ஐந்து இயல்களைக் கூறும் வெண்பாக்களையும், 379 குறள்வெண்பாக்களையும் கொண்ட நூல் இது. இந்த நூல் சைவ சமயக் கருத்துகள் ...

                                               

சிந்தாமணிச் சுருக்கம்

சிந்தாமணிச் சுருக்கம் என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் பகழிக்கூத்தரால் இயற்றப்பட்டது. சிந்தாமணிச் சுருக்கம் என்னும் இந்த நூலுக்கு பகழிக்கூத்தர் வைத்த பெயர் ‘சிந்தாமணி விளக்கம்’. சீவகசிந்தாமணி நூலிலுள்ள கருத்துக்களைச் சுருக்கிச் சொல்லும் நூலாக இது ...

                                               

சிவஞானபோத விருத்தம்

சிவஞானபோத விருத்தம் என்னும் நூல் கண்ணுடைய வள்ளல் என்பவரால் 15 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்டது. இது 12 விருத்தங்களை மட்டும் கொண்ட நூல். ‘ஸ்ரீமது வள்ளலார் அருளிய திருவிருத்தம்’ என்று காழித் தாண்டவராயர் தம் திருவாசக உரையில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ...

                                               

சைன ராமாயணம்

சமண இராமாயணம் அல்லது சைன இராமாயணம் சமணர்களால் இயற்றப்பட்டது. சமண சமயத்தின் தலையான காேட்பாடான காெல்லாமையின்படி வாழ்பவனாக இராமனைக் காட்டுகிறது. இராமன் எந்தக் காெலையும் புரியவில்லை எனவும், இலக்குவனே இராவணனையும், மாரீசனையும் கொல்வதாகக் கதை செல்கிறது.

                                               

சொரூபசாரம்

சொரூபசாரம் என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. சொரூபானந்தர், தத்துவராயர் எனபவரின் குரு. நூலின் பெயருக்கும் சொரூபானந்தர் பெயருக்கும் உள்ள சொல் ஒப்புமையைக் கருத்தில் கொண்டு இந்த நூல் சொரூபானந்தரால் செய்யப்பட்டது எனக் கூறலாயினர ...

                                               

ஞான சாரம்

ஞான சாரம் என்னும் பெயரில் பல நூல்கள் உள்ளன. வேதாந்தம், வைணவம், வீரசைவம் சமயம் சார்ந்த நூல்கள் அவை. அவரது மாணாக்கர் திருநெறி விளக்கமுடையார் இயற்றிய ஞானசாரம் கண்ணுடைய வள்ளல் இயற்றிய ஞானசாரம் இவை இரண்டும் வேதாந்த நூல்கள் இவை 15 ஆம் நூற்றாண்டில் வாழ் ...

                                               

தசகாரியம் (களந்தை ஞானப்பிரகாசர் நூல்)

தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் களந்தை ஞானப்பிரகாசர் இயற்றிய தசகாரியம் என்னும் நூலே தசகாரியம் பற்றிக் கூறும் நூல்கள் பலவற்றில் அளவில் பெரியது. இந்த நூலாசிரியரின் காலம் காலம் 15 ஆம் நூற்றாண்டு. நூல் 302 பாடல்களைக் கொண்டது. 8 பாயிரப் ...

                                               

திருநெறி விளக்கம்

திருநெறி விளக்கம் என்னும் இந்த நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதன் ஆசிரியர் பெயர் தெரியவில்லை. எனவே இவரைத் திருநெறிவிளக்கமுடையார் என்கின்றனர். திருநெறி என்னும் பெயரால் இந்த நூல் சிவப்பிரகாசம் என்னும் நூலைக் குறிப்பிடுகிறது. சிவப்பிரகாசம் என் ...

                                               

திருவாதவூரார் புராணம்

திருவாதவூரார் புராணம் என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. இதனை இயற்றியவர் கடவுள் மாமுனிவர் எனப் போற்றப்படும் கவிஞர். இதில் திருவாதவூரார் வரலாறு பற்றிய செய்திகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பி தொகுத்த 63 நாயன்மார்கள் பட்டி ...

                                               

நவலிங்க லீலை

நவலிங்க லீலை என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய நூல்களில் ஒன்று. உரைநூல் குறிப்புகளால் அறியப்படும் நூல்களில் ஒன்று. ஒன்பது லிங்கங்களின் திருவிளையாடல் கதைகளைக் கூறும் நூல். இது வீரசைவம் என்னும் சமயம் சார்ந்த நூல். இதன் ஆசிரியரின் பெயர் தெரிய ...

                                               

நியதிப் பயன்

நியதிப் பயன் என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் இயற்றிய நூல்களில் ஒன்று. கண்ணுடைய வள்ளல் சம்பந்தர் பரம்பரையில் வந்தவர். திருஞான சம்பந்தரை ஆசிரியராக எண்ணி வழிபட்டவர். இவர் இயற்றிய நியதிப் பயன் நூலில் 103 கட்டளைக் கலித்துறைப் ...

                                               

பஞ்சாக்கர மாலை

பஞ்சாக்கர மாலை என்பது 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கண்ணுடைய வள்ளல் என்பவர் இயற்றிய நூல்களில் ஒன்று. இது 60 வெண்பாக்களால் ஆன ஒரு சிறு நூல். இந்த நூல் தூல பஞ்சாக்கரம், சூக்கும பஞ்சாக்கரம், சீவன்-முத்தர் பூசைக்-கிரமம் - என்று மூன்று பகுப்புகளைக் கொண் ...

                                               

பெரிய திருமுடியடைவு

பெரிய திருமுடி அடைவு என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. வைணவ குருபரம்பரை வரலாற்றினைக் கூறுவது. கந்தாடையப்பன் தொகுத்தது. பார்த்தசாரதி ஐயங்கார் பதிப்பாக இந்த நூல் வெளிவந்துள்ளது. அரிசமய தீபம் என்னும் நூலுக்கு எழுதப்பட்ட முன்னுரையில் பெரிய ...

                                               

பேரானந்த சித்தியார்

பேரானந்த சித்தியார் என்னும் நூல் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைவ சித்தாந்த நூல். இதில் 108 விருத்தங்கள் உள்ளன. ஆனந்தம் என்பது உலகியல் மகிழ்ச்சி. பேரானந்தம் என்பது மறைபொருள் பற்றிய உண்மை உணர்வில் தோன்றும் மகிழ்ச்சி. இந்தப் பேரானந்த மகிழ்வை அடையும் ...

                                               

வில்லிபாரதம்

வைணவப் புலவரான வில்லிபுத்தூரார் சனியூர் என்ற ஊரில் பிறந்தவர். வக்கபாகை என்னுமிடத்தை ஆண்டுவந்த மன்னனான வரபதி ஆட்கொண்டான் என்பவன் வில்லிபுத்தூராரை ஆதரித்து வந்தான். ஒருமுறை வில்லிபுத்தூரார் புலவர்களிடம் போட்டி வைத்து யார் தோல்வி அடைகிறார்களோ அவர்கள ...

                                               

ஸ்ரீபுராணம்

ஸ்ரீபுராணம் 15 ஆம் நூற்றாண்டில் தோன்றிய சைன மத நூல். இந்நூல் ஜினசேனாசாரியார் எழுதிய மகாபுராணத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலாகும். குணபத்திராசாரியார் என்பவர் இத்னை தமிழ் மொழியில் மணிப்பிரவாள நடையில் எழுதியுள்ளார். இவர் விழுப்புரம் மாவட்த்திலுள்ள பெ ...

                                               

அகத்தியர் தீட்சாவிதி இருநூறு

அகத்தியர் தீட்சாவிதி இருநூறு என்பது சமயநெறி கூறும் ஒரு நூல். அகத்தியர் என்று போற்றப்பட்ட ஒருவர் 16ஆம் நூற்றாண்டில் இயற்றிய நூல் இது. அகத்தைத் தூய்மையாக வைத்துக்கொண்டவர் அகத்தியர். இந்த அகத்தியர் அகத்திலிருக்கும் அழுக்குகளை எண்ணம் என்னும் தீயிலிட் ...

                                               

அட்டாங்கயோகக் குறள்

அட்டாங்கயோகக் குறள் என்னும் நூல் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த்து. 65 குறள்பாக்கள் மட்டுமே கொண்ட சிறுநூல் இது. இந்த நூல் அட்டாங்க யோகங்கள் விளக்குகிறது. நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்துநினை என்றும் சிவன்தாள் இணை. என்பது இந்த நூலிலுள்ள குறட்பாக்கள ...

                                               

அண்ணாமலையார் வண்ணம்

அண்ணாமலையார் வண்ணம் என்னும் நூல் சேறைக் கவிராசபிள்ளை என்பவரால் இயற்றப்பட்டது. காலம் 16ஆம் நூற்றாண்டு. வண்ண இசை என்பது மற்றொரு வகை. வண்ணம் என்பது ஒருவகை. இந்த நூல் வண்ண இசையால் ஆனது. இந்த நூலிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு மலர்தானை வனசமலர் தனைப்போல ...

                                               

அண்ணாமலையார் வெண்பா

அண்ணாமலையார் வெண்பா என்னும் நூல் குரு நமசிவாயர் என்பவரால் பாடப்பட்டது. இந்தப் புலவர் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். குரு நமசிவாயரின் ஆசிரியர் ‘குகை நமசிவாயர்’. இவரது பெயரை இந்த நூல் 10 வெண்பாக்களில் வைத்துப் பாடிப் போற்றியுள்ளது. இந்த நூலில் 100 ...

                                               

அத்துவித சாரம்

அத்துவித சாரம் என்பது சாத்திரம் கூறும் ஒரு சிறுநூல். கமலை ஞானப்பிரகாசர் என்பவரால் பாடப்பட்டது. இதில் காப்புச் செய்யுள் ஒன்றும் 60 விருத்தப் பாடல்களும் உள்ளன. அத்துவிதமாய் தனக்குள் விளங்கும் மோனகுருவைத் தனக்கு ஞானம் நல்கும்படி இதன் காப்புச் செய்யு ...

                                               

அர்த்த பஞ்சக வியாக்கியானம்

அர்த்த பஞ்சக வியாக்கியானம் என்பது மணவாள மாமுனி எழுதிய ஒரு விரிவுரை நூல். பிள்ளை லோகாச்சாரியர் 18 நூல்கள் எழுதியுள்ளார். அவற்றை ‘அஷ்டாதச ரகசியம்’ என்பர். அவற்‍றில் மூன்றிற்கு ஸ்ரீமத்மணவாளமாமுனிகள் விரிவுரை எழுதியுள்ளார். இந்த அர்த்த பஞ்சகம் என்ற ர ...

                                               

அருணகிரிப் புராணம்

அருணகிரிப் புராணம் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் என்னும் புலவர் பாடிய நூல். இவர் சிதம்பரத்தில் வாழ்ந்தவர். இவரைக் ‘கண்கட்டி மறைஞான சம்பந்தர்’ எனவும் வழங்குவர். இவரது காலத்திலேயே இவர் பாடிய அண்ணாமலையைப் பற்றிப் பாட ...

                                               

ஆன்மலிங்க மாலை

ஆன்மலிங்க மாலை என்னும் நூல் சிவபூசை செய்பவரின் ஐங்களத் தூய்மை பற்றிக் கூறுகிறது. உடலிலுள்ள ஐம்பொறிகள் பூதம் வழிபாட்டு மொழி மந்திரம் பூசை செய்யப்படும் லிங்கம் பூசை செய்யும் இடம் ஸ்தலம் பூசைக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள் திரவியம் ஆகிய ஐந்தும் த ...

                                               

இலிங்க புராணம்

இலிங்க புராணம் என்னும் நூல் வரகுணராமர் என்னும் பாண்டியன் குலசேகரனால் இயற்றப்பட்ட இரண்டு நூல்களில் முதலாவது நூல். மற்றொன்று வாயு சங்கிதை. இரண்டும் புராண நூல்கள். இதில் இரண்டு காண்டங்கள் உள்ளன. முதலாவது பூர்வ காண்டத்தில் பாயிரமும், பதிகமும், 108 அத ...

                                               

இறைசைப் புராணம்

இறைசைப் புராணம் என்பது ‘இறைவாச நல்லூர்ப் புராணம்’ என்னும் நூற்பெயரின் சுருக்கப் பெயர். நூலின் காலம் 16-ஆம் நூற்றாண்டு இவ்வூரில் திருச்சாழல் ஓதுவதற்காக விக்கிரம சோழன் நிவந்தம் அளித்துள்ளான் கோயிலின் தல மரம் அரசமரம் இது பெண்ணைநாட்டில் உள்ள ஓர் ஊர். ...

                                               

உபதேச ரத்தினமாலை வியாக்கியானம்

உபதேச ரத்தினமாலை என்னும் நூல் 15ஆம் நூற்றாண்டில் மணவாள மாமுனி செய்தது. இதற்கு விரிவுரையாக எழுதப்பட்டதே உபதேச ரத்தினமாலை வியாக்கியானம். இந்ந விரிவுரையை எழுதியவர் பிள்ளை லோகஞ்சீயர். இந்த நூலின் காலம் 16ஆம் நூற்றாண்டு. பெரியவாச்சான் பிள்ளை திவ்வியப் ...

                                               

உருத்திராக்க விசிட்டம்

உருத்திராக்க விசிட்டம் என்பது தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் இயற்றிய நூல். இது 108 வெண்பாக்கள் கொண்டது. இது உருத்திராக்க மாலையில் இருக்கவேண்டிய 108 மணிகளின் எண்ணிக்கை போலும். அத்துடன் தொடக்கத்திலிலுள்ள பாயிரப் பகுத ...

                                               

உரோமரிசி ஞானம்

உரோமரிசி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சித்தர்களில் ஒருவர். இவர் தன் பெயரை ‘உரோமன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இவர் பெயரில் 10 நூல்கள் உள்ளன. இவை ரசவாத வைத்தியம், யோகம் பற்றிய செய்திகளைக் கூறுகின்றன. அவற்றுள் ஒன்று உரோமரிசி ஞானம். இந்த நூலில் 28 கண்ணி ...

                                               

ஐக்கியவியல்

ஐக்கியவியல் என்னும் நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தர் இயற்றிய நூல்களில் ஒன்று. காலம் 16ஆம் நூற்றாண்டு. இது 15 வெண்பாக்கள் மட்டும் கொண்ட ஒரு சிறு நூல். ஐக்கியம் என்றால் என்ன என்பதை இந்த நூல் விளக்குகிறது. இந்த நூல ...

                                               

கமலாலய புராணம்

கமலாய புராணம் என்பது தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன சீடர் மறைஞான சம்பந்தரால் செய்யப்பட்ட நூல். கமலாலயம் என்பது திருவாரூர் கோயிலிலுள்ள குளத்தின் பெயர். கமலாலய புராணத்திற்கு ஆதி கமலாலய மகாத்மியம் என்னும் பெயரும் உண்டு. இதில் 24 சருக்கங்களு ...

                                               

கருவூரார் பூசாவிதி

கருவூரார் பூசாவிதி என்னும் நூல் கருவூரில் வாழ்ந்த கருவூரார் எனும் சித்தரால் செய்யப்பட்ட நூல். இவரது நூலில் கையாளப்பட்டுள்ள சொற்கள் இவரை 16ஆம் நூற்றாண்டுக்குத் தள்ளுகின்றன. இந்த நூலில் 30 விருத்தப் பாடல்கள் உள்ளன. நூலில் உள்ள சில செய்திகள் பாணம் வ ...

                                               

காசி காண்டம்

காசி காண்டம் தமிழ் புலவர்களில் ஒருவராகிய அதிவீரராம பாண்டியர் என்பவரால் இயற்றப்பட்ட நூல்களுள் ஒன்று. வடமொழி நூலான சங்கரசங்கிதையில் இருந்து இதற்குரிய பொருள் எடுத்தாலப்பட்டுள்ளது. சங்கிரசங்கிதையின் நான்காம்பகுதி காசி காண்டம். இது நாற்பத்தொரு பகுதிகள ...

                                               

கூடற்புராணம்

கூடற் புராணம் என்னும் நூல் மதுரையை அடுத்த இருந்தையூர் கோயிலில் உள்ள பெருமாள்மீது பாடப்பட்டது. இதனை இயற்றிய ஆசிரியரின் பெயர் தெரியவில்லை. எனினும் 16ஆம் நூற்றாண்டு புரூரவ சரிதை நூலிலுள்ள சில புதிய கதைகள் இந்த நூலில் இடம் பெற்றிருத்தலையும், நூலிலுள் ...

                                               

சங்கரவிலாசம்

சங்கரவிலாசம் என்னும் நூல் சிதம்பரநாத கவி என்பவரால் எழுதப்பட்டது. சிதம்பரநாத கவியைச் சிதம்பரநாத பூபதி என்றும் கூறுவர். இவரது ஆசிரியர் நிரம்ப அழகிய தேசிகர். இந்த்த் தேசிகரின் ஆசாரியர் கமலை ஞானப்பிரகாசர். சிதம்பரநாத கவி தென்பாண்டி நாட்டுக்குச் சென்ற ...