ⓘ Free online encyclopedia. Did you know? page 141




                                               

மிதவை (புதினம்)

மிதவை என்பது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதிய புதினம் ஆகும். இந்நூலின் முதற்பதிப்பு 1986-ல் அன்னம் பதிப்பகத்தாரின் வெளியீடாக வந்தது. இந்நாவலின் முகப்பு அல்லடை ஓவியம் ஓவியர் ஜீவா.

                                               

பள்ளிகொண்டபுரம்

பள்ளிகொண்டபுரம் நீல. பத்மநாபனின் சிறந்த புதினங்களுள் ஒன்று. திருவனந்தபுரத்தின் பின்னணியில் அமைந்த கதை. அனந்த நாயரின் வாழ்க்கையைப் பற்றிய தேடல்களும் அதற்கான கேள்விகளுமே புதினம் முழுவதும் பரவலாக உள்ளன. இப்புதினம் முதல் பதிப்பாக டிசம்பர் 1970-இல் வா ...

                                               

இரும்பு குதிரைகள்

இரும்பு குதிரைகள் பாலகுமாரனின் பிரசித்தி பெற்ற புதினம். இதில் கதையின் நாயகன் ஒரு லாரி கம்பெனியில் பொறுப்பில் இருப்பதாகவும், அது சம்பந்தமாக அவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும், சந்திக்கும் மனிதர்களையும் பற்றி விளக்கியிருப்பார். தனக்குள்ளே உள்ள ஓரு ...

                                               

உடையார் (புதினம்)

உடையார் என்பது பாலகுமாரன் எழுதிய வரலாற்றுப் புதினம் ஆகும். ஆறு பாகங்களை உடைய இப்புதினம் முதலில் இதயம் பேசுகிறது வார இதழில் தொடர்கதையாக வெளிவந்தது. பின்னர் விசா பதிப்பகத்தாரால் புத்தகமாக வெளியிடப்பட்டது. தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்ட வரலாற்றை, க ...

                                               

தாயுமானவன் (நூல்)

தாயுமானவன், எழுத்தாளர் பாலகுமாரனின் ஒரு புகழ்பெற்ற புதினமாகும். இப்புதினத்தை பாலகுமாரன் தன் வாழ்க்கை அனுபவத்தை தழுவி எழுதியுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இப்புதினம் முதலில் ஆனந்த விகடன் கிழமை இதழில் ஒரு தொடர் கதையாக வெளிவந்தது. பின்னர் இதை விகடன் ...

                                               

கனிச்சாறு (நூல்)

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தம் இளமைக் காலத்திலேயே தமிழரின் மொழி, இன, நாட்டு நலக்கொள்கையைப் பின்பற்றிச் செயற்படத் தொடங்கினார். மொழிஞாயிறு தேவநேயப் பாவாணரின் மாணவராக இருந்து தமிழில் புலமை கைவரப்பெற்று பாவாணரைத் தமிழுலகம், மொழியியல் உலகிற்கு உயர்த்த ...

                                               

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? (நூல்)

நல்ல உரைநடை எழுத வேண்டுமா? என்பது பேராசிரியர் மா. நன்னன் எழுதிய நூல் ஆகும். இது இரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளது. 1900 பக்கங்கள் கொண்ட இந்நூல் நான்காம் வியல் பதிப்பைக் கண்டுள்ளது.

                                               

பெரியார் கணினி (நூல்)

பெரியார் கணிணி என்னும் நூல் பேராசிரியர் மா. நன்னன் அவர்களின் ஆக்கம் ஆகும். இந்நூலில் பெரியாரின் கருத்துகள் காலவரிசையிலும்,பொருள்வரிசையிலும் திரட்டப்பட்டுள்ளன. ஆய்வாளர்களுக்கு அவர்களின் பணியை எளிதாக்கும் விதத்தில் இந்நூல் உள்ளது. இந்நூலை கையாள வசத ...

                                               

சங்கத் தமிழ் (நூல்)

கலைஞர் இந்த நூலில் சங்க இலக்கியத்தில் உள்ள பொருத்தமான 100 பாடல்களுக்கு புதுக்கவிதையில் விளக்கக் கவிதைகளை எழுதியுள்ளார். ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வண்ண ஓவியம் என்ற வீதத்தில் புகழ்பெற்ற ஓவியர்களைக்கொண்டு ஓவியம் புனையப்பட்டு உள்ளது. இதில் இறுதியில் உள ...

                                               

நெஞ்சுக்கு நீதி (நூல்)

நெஞ்சுக்கு நீதி திமுக தலைவர் மு.கருணாநிதி எழுதிய சுயவரலாற்று நூல் ஆகும். இதுவரை நான்கு பாகங்கள் வெளியாகியுள்ளன. முதல் பாகம் தினமணிக் கதிர் இதழில் தொடராக வெளியானது. 1924 இல் கருணாநிதியின் பிறப்பு முதல் 1969 இல் அவர் தமிழ்நாட்டின் முதல்வராகும் வரைய ...

                                               

மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று (நூல்)

மேடையிலே வீசிய மெல்லிய பூங்காற்று என்னும் நூல் கலைஞர் கருணாநிதி விழாக்களில் பேசிய உரைகள் அடங்கிய தொகுப்பாகும். இந்நூலை தமிழ்க்கனி பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக 1979ஆம் ஆண்டு வெளியிட்டது. கருணாநிதியின் அரசியல் அல்லாத இலக்கிய மணம் கமழும் உரைகளைத் தொக ...

                                               

கள்ளோ காவியமோ (நூல்)

கள்ளோ காவியமோ என்பது மு. வரதராசன் எழுதிய ஒரு தமிழ்ப் புதினம். ஒரு பெண் பிறந்தது முதல் இறுதி வரையிலும் படும் துன்பத்தையும் ஒரு பெண்ணுக்கு வாழ்வில் இறுதிக் காலம் வரை நிழல் போல தொடர்ந்து வரும் உறவைப் பற்றியும் இந்நாவலில் காட்டியுள்ளார் நாவலாசிரியர்.

                                               

மொழி நூல் (நூல்)

மொழி நூல் என்பது, தமிழில் மொழியியல் தொடர்பாக வெளிவந்த ஒரு நூல். மு. வரதராசன் எழுதிய இந்த நூலின் முதற் பதிப்பு சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தினரால் 1947ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

                                               

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் (சிறுகதைத் தொகுப்பு)

தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் எழுத்தாளர் வண்ணதாசனின் சிறுகதைத் தொகுப்பு ஆகும். இத்தொகுப்பு முதலில் 1978-ல் வெளிவந்தது. இத்தொகுப்பில் மொத்தம் 11 சிறுகதைகள் உள்ளன. இத்தொகுப்பிலுள்ள கதைகளில் ஒன்றான தோட்டத்திற்கு வெளியிலும் சில பூக்கள் என்பதே ...

                                               

அரசரும் புலவரும்

அரசரும் புலவரும் என்னும் நூல் புறநானூறில் புகழப்படும் குமணன், அதியன் நெடுமான் அஞ்சி என்னும் இரண்டு வள்ளல்களை அறிமுகம் செய்யும் சிறுவர் இலக்கியம் ஆகும். 1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்நூலை எழுதியவர் அந்நாளைய பொதுக்கல்வி இயக்குநரக நூல ...

                                               

குறிப்பேடு (நூல்)

குறிப்பேடு என்னும் பொது அறிவு நூலானது அந்நாளைய பொதுக்கல்வி இயக்குநரக நூலகரும் பின்னாளைய தமிழ்நாடு அரசு பொது நூலகத் துறை இயக்குநருமான வே. தில்லைநாயகத்தால் 1961ஆம் ஆண்டில் முதன்முறையாக எழுதப்பட்டது. அதன் பின்னர் 1962, 1963ஆம் ஆண்டுகளில் இற்றைப்படுத ...

                                               

அறம் (சிறுகதைத் தொகுதி)

அறம் ஜெயமோகன் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளின் தொகுதி. இதை வம்சி பதிப்பகம், திருவண்ணாமலை 2011 ஆகஸ்டில் வெளியிட்டிருக்கிறது. உண்மைமனிதர்களின் கதைகள் என்று இக்கதைகள் ஆசிரியரால் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்நூலின் ISBN – 978-93-80545-42-4.

                                               

ஈராறு கால்கொண்டெழும் புரவி

ஈராறு கால்கொண்டெழும் புரவி ஜெயமோகன் எழுதிய சிறுகதைகளின் தொகுதி. 2012ல் சொல்புதிது பதிப்பகம் இந்நூலை வெளியிட்டிருக்கிறது. இது நான்கு பாகங்களாக வெளிவந்துள்ளது.

                                               

கண்ணீரைப் பின் தொடர்தல் (நூல்)

கண்ணீரைப் பின் தொடர்தல் ஜெயமோகன் எழுதிய கட்டுரை நூல். சிறந்த 20 இந்திய நாவல்களாக ஆசிரியர் கருதுபவற்றின் கதைகளைச் சொல்லி சிறப்புகளை அறிமுகம் செய்கிறது.

                                               

சாட்சிமொழி (நூல்)

சாட்சிமொழி ஜெயமோகன் எழுதிய அரசியல்கட்டுரைகளின் தொகுப்பு. 2008ல் உயிர்மை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டது. சுதந்திர எழுத்தாளராக ஜெயமோகன் எழுதிய கட்டுரைகள் இதில் உள்ளன. எனது இந்தியா போன்ற புகழ்பெற்ற கட்ட்ரைகள் விவாதத்துக்குள்ளானவை.

                                               

சிலுவையின் பெயரால் (நூல்)

சிலுவையின் பெயரால் ஜெயமோகன் கிறித்தவ மதத்தின் ஆன்மீகத்தையும் அரசியலையும் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. 2008ல் உயிர்மை பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது

                                               

சு. ரா - நினைவின் நதியில் (நூல்)

சு.ரா - நினைவின் நதியில் எழுத்தாளர் சுந்தர ராமசாமியைப்பற்றி ஜெயமோகன் எழுதிய நினைவுச்சித்திரம் இந்நூல். 2004ல் சுந்தர ராமசாமி மறைந்ததும் இந்நூல் எழுதப்பட்டது. உயிர்மை பதிப்பகம் இதை வெளியிட்டிருக்கிறது. இந்நூலின் முதல் பகுதி உயிர்மை இதழில் வெளிவந்தது

                                               

நாவல் (நூல்)

நாவல் என்பது ஜெயமோகன் எழுதிய ஒரு கோட்பாட்டு நூல். 1991 ஆம் ஆண்டு மடல் பதிப்பகம் இதை வெளியிட்டது. நாவல் என்ற கலைவடிவத்தை வடிவநோக்கில் வரையறுத்து எழுதப்பட்ட முதல் தமிழ் நூல் இது. இதற்கு முன்னோடியாக கைலாசபதி எழுதிய நாவல்கலை என்ற நூலைச் சொல்லலாம். இந ...

                                               

புதியகாலம் (நூல்)

’இலக்கிய விமரிசனம் என்பது இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே. ஆனால் நாம் நமது முன்னோடிகளைப் பற்றிப் பேசும் அளவுக்குச் சமகால இலக்கியத்தைப் பற்றிப் பேசுவதில்லை. ஆகவே சமகாலத்து எழுத்தாளர்களைப்பற்றிய நமது பார்வை எப்போதும் மங்கலாகவே இருக்கிறது’ ...

                                               

விசும்பு (நூல்)

விசும்பு, எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 12 அறிவியல் புனைகதைகளின் தொகுதி. இக்கதைகள் ஆரம்பத்தில் திண்ணை இணைய இதழில் வெளிவந்து பின்னர் எனி இந்தியன் பதிப்பகம் அதன் பின் கிழக்கு பதிப்பகத்தால் தொகுப்பாக வெளியிடப்பட்டது. மேலை அறிவியலுடன் இந்திய பாரம்பரிய அ ...

                                               

ஜெயமோகன் சிறுகதைகள்

இத்தொகுதியில் படுமை, போதி, ஜகன்மித்தியை போன்ற ஜெயமோகனின் புகழ்பெற்ற ஆரம்பகாலக் கதைகள் முதல் மகாபாரதத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட திசைகளின் நடுவே, விரித்த கரங்களில் போன்ற கதைகள் வரை இடம்பெற்றுள்ளன. அப்பாவும் மகனும் இரணியன் தேவதை மாடன்மோட்சம ...

                                               

அமிர்தபதி

அமிர்தபதி என்பது சமணமத நூல்களில் ஒன்று. இந்த நூல் பற்றி யாப்பருங்கல விருத்தியுரையில் ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் குறிப்பு அமிர்தபதி நூலில் வரும் முதல் பாடலை, சிந்தாமணி, சூளாமணி, குண்டலகேசி, நீலகேசி ஆகிய நூல்களில் வரும் பாடலோடு இணைத்துப் பார்க்க ...

                                               

சிராமலை அந்தாதி

சிராமலை அந்தாதி என்னும் நூல் 10 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. வேம்பையர் கோன் நாராயணன் என்பவர் இதன் ஆசிரியர். இது மண்டலித்து வரும் அந்தாதி நூல். 102 கட்டளைக் கலித்துறைப் பாடல்கள் இதில் உள்ளன. பாடல் – எடுத்துக்காட்டு மெல்லிய செந்தமிழ் மாலைக்கு மெய்ப் ...

                                               

சினேந்திரமாலை

சினேந்திர மாலை என்பது ஒரு சமண நூல். உபேந்திர ஆசாரியர் என்னும் சமண முனிவர் இதன் ஆசிரியர். சிலப்பதிகாரம் அருபதவுரை இந்த நூலின் பாடல் ஒன்றை மேற்கோளாகத் தருவதால் இந்த நூலின் காலம் 10 ஆம் நூற்றாண்டு எனக் கொள்கின்றனர். சினேந்திரன் – அருகன். எண்வகைக் கன ...

                                               

தனியன் (வைணவம்)

தனியன் என்பது வைணவ நூல்களில் காணப்படும் குறியீடு. ஆழ்வார் அல்லது வைணவப் பெரியார் ஒருவரின் பாடல்களைக் கூறும் முன்னர் அவரைப் போற்றித் துதிக்கும் பாடல். தனிமனிதனைப் போற்றும் பாடல் ஆனதால் இப்பாடல் தனியன் எனப்பட்டது என்பது ஒரு பொருள். தனித்து நிற்கும் ...

                                               

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா

திருமாளிகைத்தேவர் திருவிசைப்பா தொகுப்பில் உள்ள பாடல்கள் 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த திருமாளிகைத் தேவரால் பாடப்பட்டது. பன்னிரு திருமுறைகளில் ஒன்பதாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளது திருவிசைப்பா. இதில் ஒன்பது பேர் பாடிய பாடல்கள் உள்ளன. இத் தொகுப ...

                                               

திருவாலி அமுதனார் திருவிசைப்பா

திருவாலி அமுதனார் திருவிசைப்பா திருவாலியமுதனாரால் பாடப்பட்டவை. இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு. இந்தத் திருவிசைப்பா நான்கு பதிகங்களில் 42 இசைப்பாக்களைக் கொண்டுள்ளது. இவை தில்லையில் உள்ள நடராசப் பெருமானைப் போற்றிப் பாடப்பட்டவை.

                                               

திருவிருத்தம் (நம்மாழ்வார்)

பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி ஆகிய நூல்களைப் பாடியுள்ளார். இவர் 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். நம்மாழ்வாரின் பாட்டுடைத் தலைவர் திருமால். இவர் திருமாலைத் தெய்வமாகக் கொண்டு ...

                                               

திரையக் காணம்

திரையக் காணம் என்பது ஒரு சோதிட நூல். இதன் காலம் 10 ஆம் நூற்றாண்டு. யாப்பருங்கல விருத்தி உரையிலும், பெருந்தேவனார் எழுதிய வீரசோழிய உரையிலும் திரையக்காணப் பாடல்கள் என்னும் குறிப்போடு ஆறு பாடல்கள் உள்ளன. அந்தப் பாடல்களுக்கான சிறு விளக்கங்களும் அந்தந் ...

                                               

தொல்காப்பியப் பொதுப்பாயிர உரை

தொல்காப்பியப் பொதுப்பாயிரமும், அதன் உரையும் 10 ஆம் நூற்றாண்டில் ஆத்திரையன் பேராசிரியன் எனபவரால் செய்யப்பட்டது. தொல்காப்பியம் கி. மு. 5 ஆம் நூற்றாண்டு நூல். பனம்பாரனார் தொல்காப்பியரின் உடன்சாலை மாணாக்கர். இவர் தொல்காப்பியத்துக்கு எழுதியுள்ளது சிறப ...

                                               

நாரத சரிதை

புறத்திரட்டு என்னும் நூலில் காணப்படும் சில பாடல்கள் நாரத சரிதை என்னும் நூலின் பெயரிட்டுக் காட்டப்பட்டுள்ளன. இதனால் இப் பெயருடைய நூல் இருந்தது என்பதை அறியமுடிகிறது. இதில் வரும் பாடல்களில் வரும் பொருளை ஒப்புநோக்கி, சு. வையாபுரிப்பிள்ளை இந்த நூலைச் ...

                                               

வாமன சரிதை

வாமன சரிதை என்னும் நூல் உரைநூலால் தெரியவரும் நூல்களில் ஒன்று. நவநீதப் பாட்டியல் நூலுக்கு எழுதப்பட்டுள்ள உரையில் வாமன சரிதை என்னும் நூல் பெயரளவில் குறிப்பிடப்பட்டுள்ளது. "செய்வித்தோனால் பெயர் பெற்றன பிங்கல சரிதை, வாமன சரிதை" - என்பது அந்த உரையில் ...

                                               

வேணாட்டடிகள் திருவிசைப்பா

ஒன்பதாம் திருமுறையில் இடம்பெற்றுள்ள வேணாட்டடிகள் திருவிசைப்பா பத்து விருத்தப் பாடல்கள்ளைக் கொண்டது. இது தோன்றிய காலம் 10 ஆம் நூற்றாண்டு. தில்லையில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடப்பட்ட பாடல்கள் இவை.

                                               

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை என்பது ஒரு சைவ நூல். இது பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள நூல்களில் ஒன்று. உலா என்பது ஒருவகைச் சிற்றிலக்கியம். கலிவொண்பாப் பாடலால் அமைவது. ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை நூலின் ஆசிரியர் நம்பியாண்டார் நம ...

                                               

இராசராச விசயம்

இராசராச விசயம் என்னும் நூல் தஞ்சை நகரிலிருந்து அரசாண்ட முதலாம் இராசராசன்மீது பாடப்பட்டது. இதனை நாராயணன் பட்டாதித்தன் எனும் புலவர். இந்தப் புலவர் சவர்ணன் என்னும் சாதியினர். சவர்ணன் குலத்தவர்கள் அக்காலத்தில் சிறந்த மருத்துவர்களாகத் திகழ்ந்தனர். புல ...

                                               

ஓவிய நூல்

ஓவிய நூல் எனும் பெயரில் ஒரு நூல் இருந்ததை அடியாக்கு நல்லாரின் சிலப்பதிகார உரை கூறுகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் செய்திகள்: நிற்றல், இருத்தல், கிடத்தல், இயங்குதல் பற்றிய செய்திகள் இதில் கூறப்பட்டுள்ளன. திரிதரவு இல்லவை என்பது வகைப்படும ...

                                               

கோயில் திருப்பண்ணியர் விருத்தம்

கோயில் திருப்பண்ணியார் விருத்தம் என்னும் சைவ நூல் பதினோராம் திருமுறைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. விருத்தம் ஒருவகைச் சிற்றிலக்கியம்.நூலின் பெயர் விருத்தம் என்று இருந்தாலும் இதில் உள்ள பாடல்கள் கட்டளைக்கலித்துறைப் பாடல்களாக உள்ளன. கட்டளைக்கலித்து ...

                                               

சிலப்பதிகாரக் குறிப்புரை

சிலப்பதிகாரக் குறிப்புரை என்பது சிலப்பதிகாரம் நூலுக்கு எழுதப்பட்ட முதலாவது உரை. சிலப்பதிகாரத்துக்கு எழுதப்பட்ட பழமையான உரைகள் மூன்று. 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட அடியார்க்கு நல்லார் உரை. இவரது உரையில் குறிப்பிடப்பட்டுள்ள சிலப்பதிகார அரும்பத உர ...

                                               

சீத்தலையார் பாட்டியல்

சீத்தலையார் பாட்டியல் என்னும் பாட்டியல் இலக்கண நூலிலிருந்து இண்டு நூற்பாக்கள் பன்னிரு பாட்டியல் உரைநூலில் மேற்கோளாகத் தரப்பட்டுள்ளன. இந்த நூலைப் பற்றிய வேறு குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை. இந்த நூலின் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ள சீத்தலையார் என்னும் ப ...

                                               

திருநரையூர் விநாயகர் திரு இரட்டைமணிமாலை

திருநரையூர் விநாயகர் திரு இரட்டைமணிமாலை என்னும் நூல் நம்பியாண்டார் நம்பி பாடிய 10 சிற்றிலக்கிய நூல்களில் ஒன்று. நூல் தோன்றிய காலம் 11 ஆம் நூற்றாண்டு. நூலாசிரியர் நம்பி திருநரையூரில் பிறந்தவர். தனக்கு அருள் பாலித்தவர் என்று அவ்வூர் விநாயகப் பெருமா ...

                                               

யாப்பருங்கல விருத்தி

யாப்பருங்கல விருத்தி அல்லது யாப்பருங்கல விருத்தியுரை, அமிர்தசாகரர் எழுதிய யாப்பருங்கலம் நூலுக்கு எழுதப்பட்டுள்ள விரிவுரை. இந்த உரைநூல் எழுதியவர் இன்னார் எனத் தெரியவில்லை. பதிப்புநூல் இந்த உரையைப் பழைய உரை எனப் குறிப்பிடுகிறது. இந்த உரைநூலின் காலம ...

                                               

அரும்பைத் தொள்ளாயிரம்

அரும்பை என்பது அரும்பாக்கம். அரும்பைத் தொள்ளாயிரம் என்னும் நூல் அரும்பாக்கத்தில் வாழ்ந்த பெருமகன் சிறப்புகளைக் கூறும் நூல். 900 பாடல்களைக் கொண்ட நூல். இந்த நூலைப்பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது. நூல் கிடைக்கவில்லை. பாட்டுடைத் தலைவன் விக்கிரம சோழனி ...

                                               

ஆத்திசூடி திறவுகோல்

ஆத்திசூடி திறவுகோல் என்னும் நூல் ஆத்திசூடி நூலின் பெருமையை உணர்ந்து போற்றிப் பாடும் நூல்களில் ஒன்று. குறுமுனி என்பவரால் செய்யப்பட்டது. இந்தக் குறுமுனி என்பவர் யார் என விளங்கவில்லை, அ முதல் ஃ வரை உள்ள ஆத்திசூடி வருக்கக் கோவைக் அடி ஒவ்வொன்றையும் ஈற ...

                                               

இசையாயிரம்

இசையாயிரம் என்னும் நூலைப்பற்றித் தமிழ்நாவலர் சரிதை என்னும் நூலில் ஒரு குறிப்பு வருகிறது. அந்தக் குறிப்பு ஆடுவதும் செக்கே அளப்பதுவும் எண்ணெயே கூடுவதும் சக்கிலியக் கோதையே – நீடுபுகழ் கச்சிச்செப் பேட்டில் கணிக்குங்கால் செக்கார்,தாம் உச்சிக்குப் பின் ...

                                               

எதிர்நூல்

எதிர்நூல் என்று யார் செய்தார் என்னும் குறிப்பு இல்லை. உரையாசிரியர்கள் எதிர்நூல் என்னும் பெயரைக் குறிப்பிடுகின்றனர். பேராசிரியர் குறிப்பு அறிவாளி ஒருவன் தன் கோட்பாட்டை நிலைநாட்டிப் பிறர் கோட்பாட்டை மறுப்பது எதிர்நூல். தன்கோள் நிறீஇப் பிறன்கோள் மறு ...