ⓘ Free online encyclopedia. Did you know? page 131




                                               

மதுரைப் பெருங்கொல்லன்

விலங்குகள் ஒன்றை ஒன்று கொல்வதைப் பாடியமையால் இப்புலவரைப் பெருங்கொல்லன் என்றனர். இவருக்கு இப் பெயரைச் சூட்டியவர் குறுந்தொகை நூலைத் தொகுத்த ஆசிரியர். இவர் பாடற்பொருளால் பெயர்பெற்ற புலவர்.

                                               

மதுரைப் பெருமருதனார்

மதுரைப் பெருமருதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 241. இவரது மகனும் புலவர். பெயர் மதுரைப் பெருமருது இளநாகனார்.

                                               

மதுரைப் பெருமருது இளநாகனார்

மதுரைப் பெருமருது இளநாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது வாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 251. புலவர் பெயர் - இளநாகனார் தந்தை பெயர் - பெருமருது ஊர் - மதுரை இவரது தந்தையாரும் புலவர். பெயர் மதுரைப் பெருமருதனார்.

                                               

மதுரைப் போத்தனார்

மாடு, எருமை, புலி, மரைமான், புல்வாய்மான், மயில், எழால், நீர்வாழ் உயிரினங்கள் முதலானவற்றின் ஆண்களைப் போத்து என்று வழங்கிவந்தனர். வெட்டி நட்டால் வளரக்கூடிய மரக்கிளையைப் போத்து என்பர். இவர் போத்து நட்டு மரம் வளர்த்த பெருமகனார். மக்களில் ஆண்பாலாரின் ...

                                               

மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்

பொருங்கண்ணன் என்பது இவரது இயற்பெயர். மருங்கூர் மக்கள் இவரைத் தமக்கு உரிமையாக்கிக் கொண்டிருந்தனர். இவரைத் தலைமையாகக் கொண்டு வழிமொழிந்து இவர் சொற்படி வாழ்ந்துவந்தனர்.

                                               

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்

மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 289. குமரன் என்பது இவர் பெயர். குமரனார் என்பது இவரைச் சிறப்பிக்கும் பெயர். இவரது தந்தை பெயர் சேந்தன். இவர்கள் மருங்கூர்ப்பட்டினத்த ...

                                               

மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்

பூதன் என்பது இவர் பெயர். ஆர் சிற்று விகுதி. மருங்கூர் இவரது ஊர். இவரது தந்தை பெழர் பாகைசாத்தன். உண்ணும்போது தன் உணவிலிருந்து ஒரு பாகத்தைப் பங்கு போட்டுப் பாகம் கொடுத்து உண்ணும் பழக்கம் கொண்ணிருந்தமையால் ஊர்மக்கள் இப்புலவரின் தந்தையைப் பாகைசாத்தன் ...

                                               

மருதம் பாடிய இளங்கடுங்கோ

மருதம் பாடிய இளங்கடுங்கோ பழந் தமிழ் அரச மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்தவர். சங்கத் தமிழ் இலக்கிய நூல்களான அகநானூறு, நற்றிணை ஆகியவற்றில் காணப்படும் மூன்று பாடல்களைப் பாடிய புலவர் என்ற அளவிலேயே இவர் அறியப்படுகிறார்.

                                               

மலையனார்

மலையன் என்னும் பெயர் முருகனைக் குறிக்கும். முருகன் குன்றுதோறு ஆடும் குமரன். மைவரை உலகத்தில் சேயோன் மேவி இருக்கிறான். மலையனார் கடவுள் பெயரைப் பெற்ற புலவர். இது இறையனார் என்னும் பெயரைப் போன்றது.

                                               

மள்ளனார்

மள்ளனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு சங்கநூல் தொகுப்பில் உள்ளன. அவை: குறுந்தொகை 72, நற்றிணை 204. இரண்டும் அகப்பொருள் பற்றியவை. மள்ளன் என்னும் சொல் உழைப்பாளியைக் குறிக்கும். வயலில் உழைப்பவனையும், போர்களத்தில் உழைப்பவனையும் ...

                                               

மாங்குடி மருதனார்

மாங்குடி மருதனார் என்பவர் சங்ககால நல்லிசைப் புலவர்களில் ஒருவர். இவர் பத்துப்பாட்டு எனும் பெயரில் தொகுக்கப்பட்ட பத்து செய்யுள் நூல்களுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியை இயற்றியவர். மதுரைக் காஞ்சியில் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் ...

                                               

மாதீர்த்தன்

மாதீர்த்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குந்தொகை 113. இவர் பாடல்செய்தியால் பெயர் பெற்ற புலவர். இவர் தம் பாடலில் ”சிறுகான்யாற்று நீரில்” படியும் வண்டலை மகளிர் தன் கூந்தலைக் கழுவி மணமூட்டக் கொண்டுவருவதைக் குறிப ...

                                               

மாமிலாடன்

மாமிலாடன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத் தொகையில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 46 எண்ணுள்ள பாடல். மாமலாடன் என்றும் இவர் பெயர் சில பதிப்புகளில் உள்ளது. மலைய நாட்டு மன்னனை மலாடர் கோமான் என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. இதன ...

                                               

மாமூலனார்

மாமூலனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரை வரலாற்றுப் புலவர் என்று போற்றுகின்றனர். இவரால் பாடப்பெற்ற 30 பாடல்களும் அகத்திணைப் பாடல்கள். அவற்றுள் 29 பாலைத் திணைப் பாடல்கள். ஒன்று குறிஞ்சித் திணைப் பாடல்.

                                               

மார்க்கண்டேயனார்

நிலமகள் என்றென்றும் நிலைத்திருந்து அழுகிறாள் என்னும் கருத்தமைந்த இந்தப் பாடலைப் பாடிய புலவருக்கு மார்க்கண்டேயனார் என்று புறநானூற்றைத் தொகுத்த ஆசிரியர் பெயர் சூட்டியுள்ளார். பாடற்பொருளால் பெயரமைந்த புலவர் இவர். ஏயன் = எய்தியவன் மார் = மார்பகம் கண் ...

                                               

மாற்பித்தியார்

மாற்பித்தியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் 2 பாடல்கள் உள்ளன. அவை புறநானூறு 251, புறநானூறு 252. இரண்டும் தாபதவாகை என்னும் துறையைச் சேர்ந்தவை. நாலிரு வழக்கின் தாபத பக்கம் என்று தொல்காப்பியம் 1021 இதனைக் குறிப ...

                                               

மாறோக்கத்து நப்பசலையார்

மாறோக்கத்து நப்பசலையார் சங்ககாலத்துப் பெண்புலவர்களில் ஒருவர். எட்டுப் பாடல்கள் இவரால் பாடப்பட்டனவாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளன. மாறோக்கம் என்பது ஓர் ஊர். இவ்வூரில் வாழ்ந்த மற்றொரு புலவர் மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார் என்னும் கணியர் சோதிடர்

                                               

மாறோக்கத்துக் காமக்கணி நப்பாலத்தனார்

இந்த நப்பாலத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது ஊர் மாறோக்கம். இவர் ஒரு கணியர். இவரது கணிப்பு காதலர் இருவரிடையே இருக்கும் காமத்தை மையமாகக் கொண்டு அளவிடுவது. சங்கத்தொகை நூல்களில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 377ஆம் பாடலாக இ ...

                                               

மிளைக் கந்தன்

இது மருதத்திணைப் பாடல். தலைவன் பரத்தையிடம் இருந்துவிட்டு இல்லம் மீள்கிறான். தோழி அவனை வீட்டிற்குள் நுழையாதே எனத் தடுக்கிறாள். அப்போது அவள் சொல்கிறாள். முன்பொருகாலத்தில் தலைவிதலைவனின் மனைவி வேப்பங்காயைத் தந்தாலும் அதனை இனிக்கும் தேம்பூங்கட்டி இதுப ...

                                               

மிளைப் பெருங்கந்தன்

மிளைப் பெருங்கந்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இவன் அரசன். கந்தனார் எனச் சிறப்பிக்கப்படாமையால் அரசன் என்கிறோம். இப் புலவரது பாடல்கள் மூன்று உள்ளன. அவை குறுந்தொகை 136, 204, 234 ஆகியவை. மிளை என்பது காவல்காடு. காவல்காடு உள்ளதோர் ஊர்.

                                               

மிளைவேள் தித்தன்

மிளைவேள் தித்தன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். சங்கநூல் தொகுப்பில் இவனது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 284. உறந்தை அரசன் தித்தன் வேறு. மிளைவேள் தித்தன் வேறு. வேள் = வேளிர்குடி வள்ளல் மிளை = காவல்காடு

                                               

மீனெறி தூண்டிலார்

மீனெறி தூண்டிலார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் உள்ளது. அது குறுந்தொகை 54. இவர் தன் பாடலில் மீனெறி தூண்டில் என்னும் தொடரைக் கையாண்டுள்ளார். அதனால் இவருக்குப் பாடல் தொடரால் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பெயர் ...

                                               

முக்கல் ஆசான் நல்வெள்ளையார்

முக்கல் ஆசான் நல்வெள்ளையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 272. முக்கல் என்பது இவர் வாழ்ந்த ஊரின் பெயர். இவர் மாணவர்களுக்குப் பாடம் புகட்டும் ஆசிரியர் பணியில் ஈடுபட்டிருந்தவர்.

                                               

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன் சங்ககால அரசப்புலவர்களில் ஒருவன். இவனது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் கொடையில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 30; நெய்தல் திணையைச் சேர்ந்தது. இதில் சொல்லப்பட்ட செய்தி: தலைவன் தலைவியைப் பெறப் பட்டப்பகலில் வருகிறான். வந்த ...

                                               

முடத்தாமக்கண்ணியார்

முடத்தாமக் கண்ணியார் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றான பொருநராற்றுப்படையை இயற்றிய புலவரின் பெயராகும். இவர் ஆண்பால் புலவர் ஆவார். கண்ணி என்பது பூமாலை வகைகளில் ஒன்று. முடத்தாமம் செண்டால் இணைக்கப்படாத மாலை. கழுத்தில் அணியும்போது இருபுறமும் தொங்கும். இத ...

                                               

முதுகூத்தனார்

முதுகூத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் முதுகூத்தன் எனவும், உறையூர் முதுகூத்தன் எனவும் குறிப்பிடப்படுகிறார். சங்கநூல் தொகுப்பில் இவர் பாடியனவாக ஒன்பது பாடல்கள் உள்ளன. அவை: புறநானூறு 331 அகநானூறு 137, 329 குறுந்தொகை 221, 353, 371, 390 நற் ...

                                               

முதுவெங்கண்ணனார்

இந்தப் பாடல் குறிஞ்சித்திணை பற்றியது. தலைவன் தலைவியை நாடிப் பகலில் வருகிறான். அவனை இரவு வரையில் காத்திருந்து பெறுமாறு தோழி சொல்லும் செய்தி இதில் உள்ளது. தாமம் நல்கு தாமம் என்னும் சொல் மாலையைக் குறிக்கும் வகையில் இப் பாடலில் கையாளப்பட்டுள்ளது. யான ...

                                               

முப்பேர் நாகனார்

முப்பேர் நாகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 314 எண்ணுள்ள பாடல். இந்தப் பாடல் தலைவி தலைவனைப் பிரிந்த காலத்தில் உடல் மெலிந்திருக்கும் பாலைத்திணைச் செய்தியைத் தெரிவிக்கிறது.

                                               

முரஞ்சியூர் முடிநாகராயர்

முரஞ்சியூர் முடிநாகராயர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 2 எண்ணில் வைக்கப்பட்டுள்ளது. அதில் அவர் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை நேரில் கண்டு வாழ்த்தியுள்ளார்.

                                               

மூலங்கீரனார்

மூலங்கீரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பெயர் கீரன். கீரனார் என்பது இவரைச் சிறப்பிக்கும் மொழிவழக்கு. இவரது தந்தையார் பெயர் மூலன். இவரது பெயரை வேறு வகையிலும் எண்ணிப் பார்க்கலாம். மூலநாளில் பிறந்த கீரனார் என்பது அந்த வேறு வகை. இவரது பாடல் ச ...

                                               

மையோடக் கோவனார்

மையோடக் கோவனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். மையோடம் என்பது இவர் வாழ்ந்த ஊர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது பரிபாடல் தொகுப்பில் 7 எண் கொண்ட பாடலாக அமைந்துள்ளது. வையை ஆற்றில் நீராடுவது பற்றிய செய்தி இதில் உள்ளது. பித்தாமத்தர் என்னும் இசைவாண ...

                                               

மோசிக்கரையனார்

மோசிக்கரையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கப்பாடல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 260. மோசிக்கரை என்பது ஓர் ஊர். பாடலைப் பார்க்கும்போது அது கடலின் ஓரத்தில் இருந்ததை உணரமுடிகிறது.

                                               

மோசிகண்ணத்தனார்

மோசி கண்ணத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 124 மோசி என்னும் புலவர் அல்லது பெருமகன் வாழ்ந்த ஊர் கண்ணத்தம். இந்தக் கண்ணத்தத்தில் வாழ்ந்த புலவர் கண்ணத்தனார்.

                                               

மோசிகொற்றன்

மோசி கொற்றன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 377. மோசிக்கொற்றன் என்று இவரது பெயர் அமைந்திருந்தால் மோசி என்பது ஊரைக் குறிக்கும். இவரது பெயர் மோசிகொற்றன் என்று இடையில் ஒன்று மிகாமல் அ ...

                                               

மோசிசாத்தனார்

மோசி சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 272. மோசி என்பது தந்தையின் பெயர். உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் புலவர் இவரது தந்தை எனலாம். இந்தப் பாடல் செரு மிடை வீழ்தல் என்னு ...

                                               

மோதாசனார்

"காதல் செவிலியர்" செய்துகொள்ளும் "ஏதில் சிறுசெரு" பற்றி இவர் தம் பாடலில் குறிப்பிடுகிறார். செவிலியர் குழந்தையைப் பேணி வளர்ப்பர். இவர்கள் காதல் குழந்தையை வளர்க்கும் செவிலியர். யார் அவர்கள்? காதலனும், அவனுடன் அவனது ஊருக்குத் தன் பெற்றோருக்குத் தெரி ...

                                               

வடநெடுந்தத்தனார்

வடநெடுந்தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 179. நாலைகிழவன் நாகன் என்பவனின் வல்லாண்மை இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                               

வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார்

சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று புறநானூற்றில் 125 எண்ணுள்ள பாடலாக அமைந்துள்ளது. சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, ஆகிய இருவருக்கும் இடையே நடந்த போரில் மலையமான் திருமுடிக் காரி சோழன் பக்கம ...

                                               

வடமவண்ணக்கன் தாமோதரனார்

வடமவண்ணக்கன் தாமோதரன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை குறுந்தொகை 85, புறநானூறு 172. வண்ணம் என்பது நிறம். பொன்னின் நிறத்தைக் காண்பது வண்ணக்கம். நகைப்பொன்னின், நாணயப்பொன்னின் மாற்றைக் காண்பவர் வண்ண ...

                                               

வடமோதங்கிழார்

வடமோதங் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை அகநானூறு 317, புறநானூறு 260 ஆகியவை. வடமோதம் என்பது ஊரின் பெயர். இந்த ஊர் மக்கள் இவரைத் தமக்கு உரிமையுள்ள தலைவராகக் கொண்டமையால் இவரை ஊர்ப்பெயராலேயே வ ...

                                               

வண்ணக்கன்

வண்ணக்கன் என்னும் அடைமொழியோடு குறிப்பிடப்பட்ட புலவர்கள் சங்க நூலில் காணப்படும் பாடல்கள் சிலவற்றைப் பாடியுள்ளனர். விற்றூற்று வண்ணக்கன் தத்தனார் வண்ணக்கன் சோருமருங் குமரனார் புதுக்கயத்து வண்ணக்கன் கம்பூர்கிழான் வடமவண்ணக்கன் தாமோதரனார் வடம வண்ணக்கன் ...

                                               

வண்ணக்கன் சோருமருங் குமரனார்

வண்ணக்கன் சோருமருங் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது நற்றிணை 257 எண் கொண்ட பாடல். இது குறிஞ்சித்திணை மேலது, வண்ணக்கன் = பொன்னையும், நாணயத்தையும் மாற்றுப் பார்ப்பவன். சோரும், மரும் = மா ...

                                               

வண்ணப்புறக் கந்தரத்தனார்

வண்ணப்புறக் கந்தரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் கொகுப்பில் அவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை: அகநானூறு 49, நற்றிணை 71. இவை இரண்டு பாடல்களுமே பாலைத்திணை மேலவை.

                                               

வருமுலையாரித்தி

வருமுலையாரித்தி சங்ககாலப் பெண் புலவர்களுள் ஒருவர். இவரது பெயரை வருமுலை ஆரித்தி என்று பிரித்துப் பார்த்தால் பருத்த முலையை உடையவர் எனப் பொருள் வரும். இற்றி என்பது சங்ககாலப் பெயர்களில் ஒன்று. இந்த வகையில் வருமுலையார் இற்றி என்று பொருள் படும்படியும் ...

                                               

வல்லார் கிழான் பண்ணன்

வல்லார் என்பது சங்ககாலத்தில் சிறப்புற்று விளங்கிய ஊர்களில் என்று. இதன் ஆட்சி உரிமையைப் பெற்றிருந்த மன்னன் வல்லார் கிழான். பாடிய புலவர் சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் என்னும் புலவர் வல்லார் கிழான் பண்ணனைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். வல் ...

                                               

வன்பரணர்

வன்பரணர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். வரலாற்றுப் புலவர் என்று போற்றப்படும் வேறொரு புலவர் பரணர். இவர் அவர் அல்லர் என்பதை உணர்த்த இவரை வன்பரணர் எனக் குறிப்பிடலாயினர்.

                                               

வாயில் இளங்கண்ணன்

வாயில் இளங்கண்ணன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 346 எண் கொண்ட பாடலைப் பாடியவர் இவர். இந்த ஒரு பாடல் மட்டுமே இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. வாயில் என்பது ஊரின் பெயர். சென்னை மயிலாப்பூர் சிவபெருமானை வாயிலிலிருந்தே வழிபட்ட சி ...

                                               

வாயிலான் தேவன்

வாயிலான் தேவன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 103, 108 ஆகிய இரண்டு பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கப்பாடல் தொகுப்பில் உள்ளன. வாயில் என்பது ஊரின் பெயர். சென்னை மயிலாப்பூர் சிவபெருமானை வாயிலிலிருந்தே வழிபட்ட சிவனடியார் வாயிலார். இவர் வாந்த ...

                                               

வான்மீகியார்

வான்மீகியார் சங்ககாலத் தமிழ்ப் புலவர். இவரது பாடல் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது புறநானூறு 358. சமற்கிருதத்தில் இராமாயணம் எழுதிய வான்மீகி முனிவர் இவர் எனக் கொள்வாரும் உண்டு. தமிழ்ப்புலவர் வான்மீகியார் சொல்லும் செய்தி: பரிதி சூழ்ந்த ...

                                               

விட்டகுதிரையார்

விட்டகுதிரையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுதியில் இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 74 எண் கொண்ட பாடல் ஆகும். இவர் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர் ஆவார். தமது பாடலில் விட்ட குதிரை என்னும் அருமையான தொடரைக் கையாண்டுள்ள ...