ⓘ Free online encyclopedia. Did you know? page 126




                                               

உவர்க்கண்ணூர்ப் புல்லங்கீரனார்

உவர்க்கண்ணூர்ப் புல்லங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அகநானூறு பாடல் எண் 146 ஒன்று மட்டும் இவர் பாடியதாகச் சங்கநூல் தொகுப்பில் உள்ளது. இது முல்லைத் திணைப் பாடல். புல்லம் என்பது இந்தப் புலவர் கண்ணனாரின் ஊர். இந்த ஊரில் கிணறு தோண்டும்போது உ ...

                                               

உறையனார்

உறை என்னும் சொல் மழைநீரைக் குறிக்கும். திருக்குறள் 559 முறை கோடி மன்னவன் செய்யின் உறை கோடி ஒல்லாது வானம் பெயல். இதனால் இப் புலவர் பெயரின் பொருள் விளங்கும். இறையனார் என்னும் புலவரின் பெயர் இதனோடு ஒப்புநோக்கத் தக்கது. திருக்குறளின் முதல் அதிகாரம் இ ...

                                               

உறையூர் இளம்பொன் வாணிகனார்

உறையூர் இளம்பொன் வாணிகனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். புறநானூறு 264 இவர் பாடிய பாடல். சங்கநூல் தொகுப்பில் இந்த ஒன்றுதான் இவர் பெயரில் உள்ளது. இவர் உறையூரில் பொன்வாணிகம் செய்து வாழ்ந்துவந்தவர்.

                                               

உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்

இவர் பாடிய பாடல்கள் 13 நமக்குக் கிடைத்துள்ளன. அவை யாவுமே புறத்திணையைச் சேர்ந்தவை. இவை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானூற்றுள் வைக்கப்பட்டுள்ளன. புறம்: 13, 127-135, 241, 374, 375

                                               

உறையூர் மருத்துவன் தாமோதரனார்

உறையூர் மருத்துவன் தாமோதரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 5 உள்ளன.அவை: அகநானூறு 133, 257, புறநானூறு 60, 170, 321 இவற்றில் இவர் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன், பிட்டங்கொற்றன் ஆகியோரைப் பாடியுள்ளார்.

                                               

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்கள் 6 இடம்பெற்றுள்ளன. அவை: சோழன் நலங்கிள்ளியைப் பாடும்போது சேட்சென்னி நலங்கிள்ளி என அவன் பெயரைக் குறிப்பிட்டு நலங்கிள்ளியின் தந்தை நெய்தலங்கானல் இளஞ்சேட்செ ...

                                               

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார்

உறையூர்க் கதுவாய்ச் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் உறையூரில் வாழ்ந்தவர். இவரது வாய் சப்பையாக இருந்ததால் இவரை ஊர்மக்கள் கதுவாய்ச் சாத்தனார் என்று அழைத்தனர். சங்கத்தொகைப் பாடல்களில் இவரது பாடல் ஒன்றே ஒன்று இடம்பெற்றுள்ளது. அது நற்றிணை ...

                                               

உறையூர்ச் சல்லியங் குமரனார்

உறையூர்ச் சல்லியங் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் ஒரே ஒரு பாடல் உள்ளது. மருதத் திணைப் பாடலான அது குறுந்தொகை 309ஆம் பாடலாக அமைந்துள்ளது.

                                               

உறையூர்ச் சிறுகந்தனார்

உறையூர்ச் சிறுகந்தரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. குறிஞ்சித் திணையைச் சேர்ந்த அந்தப் பாடல் குறுந்தொகையில் 257ஆம் பாடலாக உள்ளது.

                                               

உறையூர்ப் பல்காயனார்

உறையூர்ப் பல்காயனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் 374ஆவது பாடலாக உள்ளது. இவர் பெயர் பராயனார் என்றும் கூறப்படுகிறது. மேலும் இவர் யாப்பிலக்கணஞ் செய்திருந்தாரென்றும் யாப்பரு ...

                                               

ஊட்டியார்

ஊட்டியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கத்தொகை நூல்களில் இவரது பாடல்களாக இரண்டு பாடல்கள் உள்ளன. அகநானூறு 68, 388 எண்ணுள்ள பாடல்களாக அவை அமைந்துள்ளன. இரண்டும் குறிஞ்சித் திணைப் பாடல்கள்.

                                               

ஊண்பித்தை

ஊண்பித்தை என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 232 எண்ணுள்ள பாடல் ஒன்று மட்டும் இவரது பாடலாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளது. பாலைத் திணைப் பாடல் அது.

                                               

ஊன்பொதி பசுங்குடையார்

ஊன்பொதி பசுங்குடையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 4 சங்கப் பாடல்கள் இவர் பாடியனவாக உள்ளன. நான்கும் புறநானூற்றுப் பாடல்கள். அவற்றின் எண் 10, 203, 370, 378 இவரால் பாடப்பட்ட அரசர்கள் சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி புறநானூறு 10 சேரமான் பாமுள்ள ...

                                               

எயிற்றியனார்

எயிற்றியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று மட்டும் உள்ளது. இவர் பாலை நிலப் பெண் எயிற்றி ஒருத்தியை மணந்துகொண்டு வாழ்ந்து வந்தமையால் இவரை மக்கள் எயிற்றியனார் என்றனர்.

                                               

எயினந்தையார்

"துகில் விரித்தன்ன வெயில் அவிர் உருப்பின் என்றூழ் நீடிய குன்றத்துக் கவாஅன் ஓய்ப்பசி செந்நாய் உயங்கு மரை தொலைச்சி ஆர்ந்தன ஒழிந்த மிச்சில் சேய் நாட்டு அருஞ் சுரம் செல்வோர்க்கு வல்சி ஆகும் வெம்மை ஆர் இடை இறத்தல் நுமக்கே மெய் மலி உவகை ஆகின்று இவட்கே ...

                                               

எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார்

எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று புறநானூறு 397-ம் பாடலாகத் தொகுக்கப்பட்டுள்ளது. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் இவரால் பாடப்பட்டவன். பாடாண் திணை எனக் குறிப்பிடப்பட்டுள்ள இந்தப் பாடலின் ...

                                               

எருமை வெளியனார்

எருமை வெளியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல்களில் இவர் பாடியனவாக மூன்று பாடல்கள் உள்ளன. அவை அகநானூறு 73, புறநானூறு 273, 303 ஆகியவை. எருமை வெளியனார் மகனார் கடலனார் என்னும் புலவர் இவரது மகன். எருமை என்பது ஓர் ஊர். இக்காலத்து மைசூர் சங்ககா ...

                                               

எருமை வெளியனார் மகனார் கடலனார்

எருமை வெளியனார் மகனார் கடலனார் சங்கலாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. அது அகநானூறு 72ஆம் பாடலாக உள்ளது. இவரது தந்தையார் எருமை வெளியனார் எனபவரும் ஒரு புலவர். இவரது பாடல்கள் இரண்டு சங்கநூல் தொகுப ...

                                               

எழூஉப்பன்றி நாகன் குமரனார்

எழூஉப்பன்றி நாகன் குமரனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல்களாகச் சங்கநூல் தொகுப்பில் இரண்டு பாடல்கள் உள்ளன. அவை இரண்டும் அகநானூற்றில் 138, 240 எண்ணிட்ட பாடல்களாக அமைந்துள்ளன. பெருங்கோழியூர், குறுங்கோழியூர் ஆகிய ஊரின் பெயர்கள் கோழியின் ப ...

                                               

ஐயாதிச் சிறு வெண்டேரையார்

ஐயாதிச் சிறு வெண்டேரையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூற்றின் 363ஆம் பாடலாக உள்ளது. தேரையார் என்பது புலவர் பெயர். சிறுமை, வெண்மை ஆகிய அடைமொழிகள் இவரது பெயருடன் இணைந்துள்ளன. ...

                                               

ஐயூர் முடவனார்

ஐயூர் முடவனார் சங்ககாலத்துப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய 10 பாடல்கள் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன. அவை: நற்றிணை 206, 334 குறுந்தொகை 123, 206, 322 அகநானூறு 216, புறநானூறு 51, 228, 314, 399

                                               

ஐயூர் மூலங்கிழார்

ஐயூர் மூலங்கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூற்றில் 21 ஆம் பாடலாக அமைந்துள்ளது. அதில் அவர் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனின் வெற்றியைப் பாடி ...

                                               

ஐயூர் மூலங்கீரனார்

ஐயூர் மூலங்கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று சங்கநூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. அது புறநானூற்றில் 21ஆம் பாடலாக அமைந்துள்ளது. அதில் அவர் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னனின் வெற்றியைப் பாடிய ...

                                               

ஒக்கூர் மாசாத்தனார்

பிரிந்திருக்கும் தலைவனிடம் பாணன் தலைவியின் துயர நிலையை வெளிப்படுத்துகிறான். காயாம் பூக்கள் நீல நிறத்தில் உதிர்ந்து கிடக்கும் முல்லை நிலத்தில் சிவப்பு நிற மூதாய்ப் பூச்சிகள் மேய்கின்றன. மேய்ந்துகொண்டிருக்கும் ஆண்மான் பெண்மானைத் தழுவிக்கொண்டு விளைய ...

                                               

ஒருசிறைப் பெரியனார்

ஒருசிறைப் பெரியனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். குறுந்தொகை 272, நற்றிணை 121, புறநானூறு 137 ஆகிய 3 பாடல்கள் இவரால் பாடப்பட்டனவாகச் சங்கத்தொகை நூல்களில் இடம்பெற்றுள்ளன.

                                               

ஒரூஉத்தனார்

ஒரூஉத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகக் கிடைத்துள்ளது ஒரே ஒரு பாடல். அது புறநானூற்றில் 275 ஆம் பாடலாக உள்ளது. அந்தப் பாடல் எருமை மறம் என்னும் துறையைச் சார்ந்தது. பெரும்படையின் நடுவே நனியொருவனாக எதிர்த்து நின்று போரிடுவது எருமை மற ...

                                               

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன்

ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் ஓர் அரசனாகவும் இருந்தவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் சங்கநூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அவையாவன அகநானூறு 25, புறநானூறு 71. இவரது மனைவி பூதபாண்டியன் தேவி பெருங்கோப் பெண்டும் ஒரு புல ...

                                               

ஓரம்போகியார்

ஓரம்போகியார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் 110 உள்ளன. அனைத்துமே மருதத்திணைப் பாடல்கள். இவை மருதத்திணையில் என்னென்ன சொல்லப்படும் என்பதற்கு இலக்கணம் வகுப்பது போல் உள்ளன.

                                               

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார்

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். காஞ்சியில் பிறந்து அதன் அருகில் உள்ள கச்சிப்பேடு என்னும் ஊர்ப்பகுதியில் வாழ்ந்தவர் இவர். குறுந்தொகை நூலில் 213, 216 எண்ணுள்ள இரண்டு பாடல்கள் இவரால் பாடப்பட்டவை. தோடார் எல்வளை = புயத ...

                                               

கச்சிப்பேட்டுப் பெருந்தச்சனார்

கச்சிப் பேட்டுப் பெருந்தச்சனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடியனவாக 144, 213 எண்களில் நற்றிணைப் பாடல்கள் இரண்டு உள்ளன. கச்சிப்பேட்டு இளந்தச்சனார் என்னும் புலவர் இவரது தம்பி. ஆம் அறல் = நீரின் சிற்றலை வேரில் பழுத்திருக்கும் பலாப்பழத்தை கன ...

                                               

கடியலூர் உருத்திரங்கண்ணனார்

கடியலூர் உருத்திரங்கண்ணனார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர் ஆவார். இவர் பாடிய பெரும்பாணாற்றுப்படை, பட்டினப்பாலை ஆகிய இருபாட்டுக்களும் பத்துப்பாட்டு எனும் பத்து பாட்டுக்களின்‌ தொகுதியில் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமின்றி இவர் அகநானூற்றில் 167ஆவ ...

                                               

கடுந்தொடைக் காவினார்

கடுந்தொடைப் காவினார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 109. பாலைத் திணை. இவர் தன் பாடலால் பெயர் பெற்ற புலவர். காட்டில் கடுந்தொடையால் அம்பு எய்பவரை இவர் தம் பாடலில் குறிப்பிட்டுள்ளார்.

                                               

கடுந்தோட் கரவீரன்

கடுந்தோட் கரவீரன் சங்ககாலப் புலவர்களில் ஒருவன். இவனைக் கரவீரனார் என்று குறிப்பிடாததால் இவனை ஒரு குறுநிலத் தலைவன் என்று எண்ண வேண்டியுள்ளது. இந்தப் புலவர் பாடியதாக ஒரே ஒரு பாடல் உள்ளது. அது குறுந்தொகை 69.

                                               

கடுவன் இளமள்ளனார்

இது மருதத் திணைப் பாடல். பரத்தை ஒருத்தி தலைவனை ஏளனப்படுத்தி அவனுடைய பாணனிடம் பேசுகிறாள். உன் தலைவனைப் பார்த்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. அவன் என்னிடம் வந்து நீ என்னலும் என்ன சொன்னாலும் பிரியமாட்டேன் என்கிறான். அவன் தான் அரசனிடம் பெற்ற தாரையும ...

                                               

கடுவன் இளவெயினனார்

கடிவன் இள எயினனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். பரிபாடல் நூலில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. எண் 3, 4, ஆகிய இரண்டு பாடல்கள் திருமாலை வாழ்த்துவதாகவும், எண் 5 கொண்ட பாடல் செவ்வேளை வாழ்த்துவதாகவும் அமைந்துள்ளன. இவரது பாடல்களில் பிற பாடல்களில் காணப் ...

                                               

கண்ணகாரன் கொற்றனார்

கண்ணகாரன் கொற்றனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாக ஒன்றே ஒன்று உள்ளது. கண்ணகாரன் என்னும் சொல் கருத்தாழம் மிக்கவரைக் குறிக்கும். கண் = கருத்து, மனக்கண்

                                               

கணக்காயன் தத்தனார்

கணக்காயன் தத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 304. கணக்கு என்னும் சொல் நூலைக் குறிக்கும். கீழ்க்கணக்கு, மேல்கணக்கு என்னும் தொடர்களால் இதனை உணரலாம். நூல்களை மாணாக்கர்களுக்குச் சொல்லித் தருபவர் கணக் ...

                                               

கணியன் பூங்குன்றனார்

கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்க காலப் புலவர்களில் ஒருவர். கணியம் என்பது நாள் கிழமை கணித்து பலன் கூறும் சோதிடம். கணியம் தெரிந்தவன் கணியன். கணிமேதையார், கணிமேவந்தவள் என்னும் பெயர்கள் கணியத்தோடு தொடர்பு கொண்டவை. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர ...

                                               

கதப் பிள்ளையார்

கதப் பிள்ளையார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் ஐந்து உள்ளன. அவை; குறுந்தொகை 64, 265, 350, நற்றிணை 135, புறநானூறு 380. இவை தரும் செய்திகள் இங்குத் தொகுத்துக் காட்டபடுகின்றன.

                                               

கந்தரத்தனார்

கந்தரத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். எட்டுப் பாடல்கள் இவர் பாடியனவாகச் சங்கத்தொகை நூல்களில் உள்ளன. இவரது பாடல் சொல்லும் செய்திகள்

                                               

கபிலர் (சங்ககாலம்)

கபிலர் சங்க காலத்து தமிழ்ப் புலவர்களில் குறிப்பிடத்தக்கவர். சங்க இலக்கியப் பாடல்களுள் மிக அதிக எண்ணிகையில் பாடல்களை இயற்றியவர்.; திருவாதவூரில் பிறந்தவர் எனத் "திருவிளையாடற் புராணம் கூறுவது கபிலதேவ நாயனார் என்னும் சைவப் புலவரை. இவர் அகத்திணைகள் பல ...

                                               

கயத்தூர் கிழார்

கயத்தூர் கிழார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்றி உள்ளது. அது குறுந்தொகைப் பாடல் 354. இவரது பாடலின் தொடர் பலராலும் பேசப்படுகிறது. பரத்தையிடமிருந்து மனைவியிடம் வந்த தலைவியின் கணவனைத் தோழி வீட்டுக்குள் நுழைய விடாமல் சொல்லும் செய ...

                                               

கயமனார்

கயமனார், சங்ககாலப் புலவர் பாடல் எண்ணிக்கை வரிசையில் எங்கு உள்ளார் என்பதை நாமே அளவிட்டுகொள்ள முடியும். சங்கப் புலவர்களில் 50க்கும் குறைவான எண்ணிக்கையில் பாடல்கள் பாடிய ஏழு புலவர்களில் ஐந்தாவது இடத்தில் இருப்பவர் எனல் ஒரு கணிப்பு. இவரது 23 பாடல்கள் ...

                                               

கருங்குழல் ஆதனார்

கருங்குழல் ஆதனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடல்கள் இரண்டு உள்ளன. அவை புறநானூறு 7, 224 எண்ணுள்ள பாடல்களாக அமைந்துள்ளன. இரண்டிலும் சோழன் கரிகாற் பெருவளத்தான் வெற்றிகளும், பெருமைகளும் பேசப்படுகின்றன. ஒன்றில் அவன் இறந்த செய்தி குறிப்பிடப் ...

                                               

கரும்பிள்ளைப் பூதனார்

சங்ககாலப் புலவர் களில் ஒருவர் கரும்பிள்ளைப் பூதனார். பரிபாடலில் 10ஆம் எண்ணுள்ள பாடல் இவரால் பாடப்பட்டது. வையை ஆற்றில் நடைபெற்ற நீராட்டு விழா பற்றி இப் பாடல் விரிவாகச் சொல்கிறது. இக்காலத்தில் கள்ளழகர் வைகையில் இறங்கும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது.

                                               

கருவூர் கிழார்

குறிஞ்சித் திணை பலரும் கூறுக அஃது அறியாதோரே அருவி தந்த நாட்குரல் எருவை கயம் நாடு யானைக் கவளம் மாந்தும் மலை கெழு நாடன் கேண்மை தலைபோகாமை நற்கு அறிந்தனன் யானே. தலைபோகாமை = உயிர்போகாமை

                                               

கருவூர் நன்மார்பனார்

கருவூர் நன்மார்பனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான அகநானூற்றில் இவரது பாடல் ஒன்று உள்ளது. யில் அமைந்த இப்பாடல் 277ஆம் வரிசையில் உள்ளது.

                                               

கருவூர்க் கண்ணம்பாளனார்

கருவூர்க் கண்ணம்பாளனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கருவூர் இவர் வாழ்ந்த ஊர். இந்தக் கருவூர் இக்காலத்தில் கரூர் என வழங்கப்படுகிறது. கண்ணம்பாளனார் என்பது இவரது பெயர். கண் என்னும் கண்ணோட்ட அம்பைப் பாய்ச்சி மக்களை ஆள்பவர் என்பது இவரது பெயருக்கு உள ...

                                               

கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார்

கருவூர்க் கந்தப்பிள்ளைச் சாத்தனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். கருவூரில் வாழ்ந்தவர். இந்தக் கருவூர் இக்காலத்தில் கரூர் என மருவி வழங்குகிறது. சங்கநூல் தொகுப்பில் இவரது பாடல்கள் மூன்று உள்ளன. புறநானூறு 168, நற்றிணை 343 ஆகிய பாடல்களைப் பாடிய புலவர ...

                                               

கருவூர்க் கலிங்கத்தார்

கருவூர்க் கலிங்கத்தார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். அவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 183 கலிங்கம் என்னும் சொல் ஆடையைக் குறிக்கும். எனவே இவர் துணி வாணிகம் செய்தவர் எனக் கொள்ளலாம். இவரது இயற்பெயர் தெரியவில்லை.