ⓘ Free online encyclopedia. Did you know? page 122




                                               

சி. சே. மார்ட்டின்

சிரிலஸ் சேவியர் மார்ட்டின் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். மார்ட்டின் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத் தொகுதியில் 1965 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ...

                                               

சி. நாகராஜா

சின்னத்தம்பி நாகராஜா என்னும் முழுப் பெயர் கொண்ட சி. நாகராஜா ஒரு இலங்கைத் தமிழ் வழக்கறிஞர். இவர் யாழ்ப்பாண மாநகர முதல்வராகவும், யாழ் மாவட்ட அபிவிருத்திச் சபையின் துணைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

                                               

சித்ரூபானந்தர்

சுவாமி சித்ரூபானந்தாவின் இயற்பெயர் பி. இரத்தினசபாபதி. துறவறம் பூண்ட இவருக்கு இராமகிருஷ்ண மடத்தின் 10வது தலைவர் சுவாமி விரேஷ்வரானந்த மகராஜ் 1968 ஆம் ஆண்டில் தீட்சை அளித்தார். சித்ரூபானந்தர் என்ற பெயருடன் திரும்பிய சுவாமிகள் 1969 ஆம் ஆண்டில் பருத்த ...

                                               

சிற்றம்பலம் கார்டினர்

சேர் சிற்றம்பலம் ஆபிரகாம் கார்டினர் இலங்கைத் தமிழ் தொழிலதிபரும், இலங்கை செனட் சபை உறுப்பினரும், திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.

                                               

சு. இராசரத்தினம்

சு. இராசரத்தினம், இந்து போர்ட் இராசரத்தினம் எனச் சிறப்பாக அழைக்கப்பட்டவர். சைவ சமய அபிவிருத்தியில் கவனம் செலுத்தியவர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் அரசியல்வாதி. இலங்கை சட்டவாக்கப் பேரவையில் ஏழாண்டுகள் உறுப்பினராக இருந்தவர். சட்டவல்லுனர்.

                                               

சு. நடராஜா

சுப்பிரமணியம் நடராஜா இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், இலங்கை செனட் சபை உறுப்பினரும் ஆவார். "பொட்டர்" நடராஜா என அழைக்கப்படும் சுப்பிரமணியம் நடராஜா அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் ஒரு மூத்த உறுப்பினர் ஆவார். 1961 ஆம் ஆண்டில் ...

                                               

சுந்தரம் சிறீஸ்கந்தராஜா

சுந்தரம் சிறீஸ்கந்தராஜா இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆவார். பீஜியில் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாகவும், உயர் நீதிமன்ற நீதியரசராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

                                               

செ. எ. ஆனந்தராஜன்

செல்லையா எட்வின் ஆனந்தராஜன் இலங்கைத் தமிழ் கல்வியாளரும், ஆசிரியரும் ஆவார். இவர் யாழ்ப்பாணம் பரி. யோவான் கல்லூரியின் ஆசிரியராகவும், அதிபராகவும் பணியாற்றியவர். ஈழப் போரின் போது இவர் தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

                                               

செ. சுந்தரலிங்கம்

செல்லப்பா சுந்தரலிங்கம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், வழக்கறிஞரும் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர். தமிழீழம் என்ற கோட்பாட்டை முன்வைத்த தலைவர்களில் முக்கிய இடம் வகிப்பவர்.

                                               

செ. நாகலிங்கம்

செல்லப்பா நாகலிங்கம், இலங்கையின் ஒரு முதன்மையான சட்டத்தரணியும், நீதிபதியும் ஆவார். இலங்கை மீயுயர் நீதிமன்றத்தின் ஒரு நீதியரசராக இருந்த அவர், 1954 இல் இலங்கையின் பதில் மகாதேசாதிபதியாகப் பணியாற்றினார். அத்துடன் இலங்கையின் பதில் பிரதம நீதியரசராகவும் ...

                                               

செல்லப்பா குமாரசுவாமி

செல்லப்பா குமாரசுவாமி இலங்கைத் தமிழ் குடிமுறை அரசுப் பணியாளரும். தூதுவரும், முன்னாள் மேலவை உறுப்பினரும் ஆவார்.

                                               

செல்லையா பொன்னத்துரை

செல்லையா பொன்னத்துரை என்பவர் இலங்கையின் துடுப்பாட்ட நடுவர் ஆவார். இவர் 1985 முதல் 1993 வரை மூன்று தேர்வுத் துடுப்பாட்ட ஆட்டங்களிலும், 1983 முதல் 1993 வரை எட்டு ஒருநாள் போட்டிகளிலும் நடுவராகப் பணியாற்றியுள்ளார். இலங்கை 1985 ஆம் ஆண்டில் இந்திய அணிக ...

                                               

சோமசுந்தரம் நடேசன்

சோமசுந்தரம் நடேசன் என்பவர் இலங்கையில் பிரபலமான ஒரு வழக்கறிஞரும், மேலவை உறுப்பினரும் ஆவார். 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்ட நடேசன், 1972 ஆம் ஆண்டில் செனட் சபை கலைக்கப்படும் வரையில் உறுப்பினராக இருந்த ஒரே ஒரு மே ...

                                               

டபிள்யூ. எம். எஸ். தம்பு

டபிள்யூ. எம். எஸ். தம்பு இலங்கைத் தமிழரும், தமிழ், சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளரும், இயக்குநரும் ஆவார். இவர் 1950கள், 60களில் பல புகழ் பெற்ற சிங்களத் திரைப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார். இந்தியாவிலும் பல தமிழ்த் திரைப்படங்களைத் தயாரித்துள்ளார்.

                                               

டபிள்யூ. ஜி. ரொக்வூட்

வில்லியம் கேப்ரியல் ரொக்வூட் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், மருத்துவரும், இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

                                               

டி. ஜெ. அம்பலவாணர்

அதி வணக்கத்துக்குரிய தாவீது செயரத்தினம் அம்பலவாணர் இலங்கைத் தமிழ் போதகர் ஆவார். இவர் 1971 முதல் 1993 வரை தென்னிந்தியத் திருச்சபையின் யாழ்ப்பாண ஆயராகப் பணியாற்றினார்.

                                               

த. இராசலிங்கம்

தம்பிப்பிள்ளை இராசலிங்கம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இராசலிங்கம் இலங்கையின் வடக்கே வதிரி என்ற கிராமத்தில் 1933 நவம்பர் 21 இல் பிறந்தார். இவர் ஒரு கல்வித்துறை அதிகாரியாகப் பணியாற்றினார்.

                                               

தா. இராமலிங்கம் (அரசியல்வாதி)

தாமோதரம்பிள்ளை இராமலிங்கம் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

தா. ச. துரைராசா

தா. ச. துரைராசா யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரசியலாளர். தமிழ்க் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் நீண்ட காலம் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினராகவும், 7 சனவரி1961 முதல் 12 பெப்ரவரி 1962 வரை ஒரு தடவையும், 15 மே 1963 முதல் 6 மே 1964 வரை இன்னொரு தடவையுமான இர ...

                                               

தா. திருநாவுக்கரசு

தாமோதரம்பிள்ளை திருநாவுக்கரசு இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

தெ. து. ஜயரத்தினம்

தெ. து. ஜயரத்தினம் யாழ்ப்பாணத்தின் கல்விமான் ஆவார். யாழ்ப்பாணம் மகாஜனா கல்லூரியின் அதிபராக இருந்து கல்லூரியின் வளர்ச்சிக்கும் மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் பெரும்பணி ஆற்றியுள்ளார்.

                                               

நெவின்ஸ் செல்வதுரை

நெவின்ஸ் செல்வதுரை இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், ஆசிரியரும் ஆவார். இலங்கை அரசாங்க சபையின் ஊர்காவற்துறை உறுப்பினரராகவும், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபராகவும் இருந்தவர்.

                                               

நேசம் சரவணமுத்து

லூயிசா நேசம் சரவணமுத்து இலங்கை அரசாங்க சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட முதலாவது தமிழ்ப் பெண் ஆவார். 1932, 1936 ஆம் ஆண்டுகளில் அரசாங்க சபைக்கு இடம்பெற்ற தேர்தல்களில் இவர் கொழும்பு வடக்குத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

                                               

ப. அ. தோமசு

தோலகட்டி சுவாமி என அழைக்கப்பட்ட வணக்கத்திற்குரிய ப. அ. தோமசு அடிகள் செபமாலை துறவற சபையை ஆரம்பித்தவர். ஆசியாவிலேயே முதல் தியான யோகசபையான செபமாலைத்தாசர் சபையை தோலகட்டி என்ற இடத்தில் ஆரம்பித்தவர். கத்தோலிக்கத் திருச்சபையில் புனிதர் நிலைக்கு உயர்த்தப ...

                                               

பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை

அதிவணக்கத்துக்குரிய யாக்கோபு பஸ்தியாம்பிள்ளை தியோகுப்பிள்ளை என்பவர் இலங்கைத் தமிழ் மதகுருவும், ரோமன் கத்தோலிக்க முன்னாள் யாழ்ப்பாண ஆயரும் ஆவார்.

                                               

பாலகுமாரன் மகாதேவா

பக்கு மகாதேவா என அழைக்கப்படும் பாலகுமாரன் மகாதேவா என்பவர் கல்விமானும், முன்னணி இலங்கைத் தமிழ் அரசு அதிகாரியும் ஆவார்.

                                               

பிலிப்பு தெ மெல்லோ

பிலிப்பு தெ மெல்லோ கொழும்பில் பிறந்த கிறிஸ்தவத் தமிழ் அறிஞர். எபிரேயு, கிரேக்கம், இலத்தீன், போர்த்துக்கீசம், தமிழ் ஆகிய மொழிகள் மட்டுமல்லாமல் வேதசாத்திரங்களையும் கற்றுத் தேர்ந்தவர். கிறிஸ்தவக் குருவானவராக ஆகும் முன்னரே இவர் சத்திய வேதாகமத்தைத் தம ...

                                               

பொன்னம்பலம் இராமநாதன்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் இலங்கையின் தேசியத் தலைவர்களுள் ஒருவராகக் கருதப்பட்டவர். சிங்களவரும், தமிழரும் இன வேறுபாடு பாராது அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக்கொண்டனர்.

                                               

பொன்னம்பலம் குமாரசுவாமி

முதலியார் பொன்னம்பலம் குமாரசுவாமி என்பவர் இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும் இலங்கை சட்டவாக்கப் பேரவை உறுப்பினரும் ஆவார்.

                                               

பொன்னம்பலம் நாகலிங்கம்

நாகலிங்கம் யாழ்ப்பாணத்தில் தெல்லிப்பளையில் பிறந்தவர். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி, திருநெல்வேலி பரமேசுவரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்று, பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார். தெல்லிப்பளை, சுன்னாகம், உடுவில் ஆகிய இடங்க ...

                                               

மு. ஆலாலசுந்தரம்

ஆலாலசுந்தரம் யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டைச் சேர்ந்தவர். தமிழ்நாடு, சென்னையில் கல்வி கற்றுப் பட்டம் பெற்றுத் திரும்பியவர் ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

                                               

மு. சிவசிதம்பரம்

மு. சிவசிதம்பரம் எனப் பொதுவாக அறியப்பட்ட முருகேசு சிவசிதம்பரம் இலங்கைத் தமிழ் அரசியல் தலைவர். நீண்டகாலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த இவர் ஒரு வழக்கறிஞரும் ஆவார். நாடாளுமன்ற துணை சபாநாயகராகவும் 1968 முதல் 1970 வரை பணியாற்றினார்.

                                               

மு. திருச்செல்வம்

முருகேசன் திருச்செல்வம் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் மேலவை உறுப்பினரும், அமைச்சரும், பிரபலமான வழக்கறிஞரும் ஆவார்.

                                               

மு. பாலசுந்தரம்

மெதடிஸ்த குரு வண. கே. எஸ். முருகேசு என்பவருக்குப் பிறந்தவர் பாலசுந்தரம். யாழ்ப்பாணம் கில்னர் கல்லூரியிலும், கொழும்பு ரோயல் கல்லூரியிலும் கல்வி பயின்று பின்னர் கொழும்பு பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்று அறிவியலில் பட்டம் பெற்றார். புலமைப் பரிசில் ...

                                               

முத்து குமாரசுவாமி

சேர் முத்து குமாரசுவாமி பிரித்தானிய இலங்கையின் முதலாவது சட்டவாக்கப் பேரவையில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகப் பதவி வகித்துச் சேவை புரிந்தவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். இவரின் தந்தை கேட் முதலியார் ஆறுமுகம்பிள்ளை குமாரசுவாமி சட்டவாக்கப் பேரவையின் மு ...

                                               

யோகேஸ்வரி பற்குணராசா

யோகேஸ்வரி பற்குணராசா முன்னாள் யாழ்ப்பாண மாநகர முதல்வர். ஈழ மக்கள் சனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், 2009ம் ஆண்டு இடம்பெற்ற மாநகர சபைக்கான தேர்தலில் ஈழ மக்கள் சனநாயகக் கூட்டணியை உள்ளடக்கிய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற ...

                                               

ரொபின் தம்பு

ரொபின் தம்பு என அழைக்கப்படும் ரவீந்திரா குமாரசுவாமி தம்பு இலங்கையின் முன்னோடித் திரைப்படத் தயாரிப்பாளரும் இயக்குனரும் ஆவார். தமிழரான இவர் சிங்கள மொழித் திரைப்படங்களையே தயாரித்தார். இவர் தயாரிப்பாளரும் இயக்குனருமான டபிள்யூ. எம். எஸ். தம்புவின் மகன ...

                                               

லக்சுமன் கதிர்காமர்

லக்சுமன் கதிர்காமர் இலங்கையின் முன்னாள் அரசியல்வாதியும் வெளிநாட்டமைச்சருமாவார். 13 ஆகஸ்ட் 2005 அன்று கொழும்பில் உள்ள அவரது இல்லத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இக்கொலையை விடுதலைப் புலிகள் அமைப்பினர் செய்ததாக அரசு குற்றஞ்சாட்டியது.

                                               

லோங் அடிகள்

அதி வணக்கத்துக்குரிய லோங் அடிகள் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரியில் அதிபராகப் பணியாற்றிய ஓர் அயர்லாந்து அடிகள் ஆவார். 1896இல் அயர்லாந்திலுள்ள லிமெரிக் என்னுமிடத்தில் பிறந்த இவர் 1920 இல் திருநிலைப்படுத்தப்பட்டார். 1921 இல் பத்திரிசியார் ...

                                               

வ. ந. நவரத்தினம்

வல்லிபுரம் நல்லதம்பி நவரத்தினம் இலங்கையின் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.

                                               

வ. பொன்னம்பலம்

வி. பி. என்று அழைக்கப்படும் வ. பொன்னம்பலம் இலங்கை அரசியல்வாதியும், பொதுவுடமைவாதியும், ஆசிரியரும் ஆவார். இவர் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்துக்கான செயலராகப் பணியாற்றியவர்.

                                               

வி. தர்மலிங்கம்

விஸ்வநாதர் தர்மலிங்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவராகவும் 23 ஆண்டுகள் தொடர்ச்சியாக உடுவில், மானிப்பாய் தொகுதிகளின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்தவர். இவர் 1985, செப்டம்பர் 2 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்டார்.

                                               

வி. வீரசிங்கம்

விசுவலிங்கம் வீரசிங்கம் இலங்கைத் தமிழ் ஆசிரியரும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், கூட்டுறவாளரும் ஆவார்.

                                               

விசுவநாதர் காசிப்பிள்ளை

விசுவநாதர் காசிப்பிள்ளை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த அரச சட்டத்தரணியும், யாழ் இந்துக் கல்லூரியை நிறுவியவர்களில் ஒருவரும் ஆவார்.

                                               

விநாயக முதலியார்

விநாயக முதலியார் இலங்கையின் வட அந்தலையில் உள்ள நகரமான பருத்தித்துறையைப் பூர்வீகமாகக் கொண்ட ஒரு செல்வந்தராவார். கப்பல்கள் பல மூலம் செல்வந்தராக இருந்த இவர் மக்கள் சேவையிலும் நாட்டமுள்ளவராக இருந்தார். இவரைப் பாராட்டி பிரித்தானிய அரசு முதலியார் என்ற ...

                                               

வீ. சிவசுப்பிரமணியம்

நீதியரசர் வீரவாகு சிவசுப்பிரமணியம் அல்லது சிவசுப்பிரமணியம் இலங்கைத் தமிழரான இவர் புகழ்பெற்ற வழக்கறிஞரும், நீதிபதியுமாவார். இவர் நீதித்துறையின் கீழமை நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றி, பின்னர் இலங்கை உச்ச நீதிமன்ற அமைச்சகத்தின் செயலாளர் ...

                                               

வெ. யோகேசுவரன்

வெற்றிவேலு யோகேஸ்வரன் இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். யோகேஸ்வரன் விடுதலைப் புலிகளால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

                                               

வே. அ. கந்தையா

கந்தையா இலங்கையின் வடக்கே வேலணை, வங்களாவடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை வேலுப்பிள்ளை அம்பலவாணர், தாயார் இராசம்மா. இவருடன் உடன்பிறந்தவர்கள் சொர்ணலட்சுமி, இராசலட்சுமி, சுந்தரம்பிள்ளை. ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையில் பெற்றார். ...

                                               

வே. குமாரசுவாமி

வேலுப்பிள்ளை குமாரசுவாமி இலங்கைத் தமிழ் வழக்கறிஞரும், அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.

                                               

வைத்திலிங்கம் செட்டியார்

வைத்திலிங்கம் செட்டியார் சோழ நாட்டிலிருந்து வந்து யாழ்ப்பாணத்தில் வசித்துவந்தவரும், அக்காலத்தில் யாழ்ப்பாணத்தை ஆண்ட ஒல்லாந்தரிடம் மொழி பெயர்ப்பாளராயிருந்த கொச்சிக் கணேசையர் என்பவரிடம் உத்தியோகம் பார்த்துவந்தவருமான கோபாலச் செட்டியார் என்பவருடைய மக ...