ⓘ Free online encyclopedia. Did you know? page 109




                                               

தமிழக ஆறுகளின் பட்டியல்

இப்பக்கம் தமிழகத்தில் உள்ள ஆறுகளைப் மாவட்டம் வாரியாக பட்டியலிடுகிறது. அடைப்புக்குறிக்குள் ஆறுகளின் நீளம் கொடுக்கப்பட்டுள்ளது. அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு கோரையாறு மஞ்சளாறு வைகையின் துணையாறு கொள்ளிடம் ஆறு கெடிலம் ஆறு அர்ச்சுணன் ஆறு சிற்றாறு ...

                                               

தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம்

தமிழக நதிநீர் இணைப்புத் திட்டம் என்பது இந்திய மாநிலமான தமிழகத்தில், மாநிலத்திற்குள் பாயும் ஆறுகளை கால்வாய்கள் மூலம் இணைத்து, மழைக் காலங்களில் வீணாக கடலில் கலக்கும் உபரி வெள்ளநீரை வறட்சிப் பகுதிகளுக்கு வழங்கும் திட்டம் ஆகும்.

                                               

நண்டலாறு

நண்டலாறு என்னும் ஆறானது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம் இடையே ஓடும் ஆறாகும். இது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு எல்லைக் கோடாகச் செயல்படுகிறது.

                                               

நீவா ஆறு

நீவா ஆறு அல்லது பொன்னை ஆறு என்பது பாலாற்றின் துணை ஆறாகும். இந்த ஆறானது ஆந்திரப் பிரதேசத்தின், சித்தூர் மாவட்டம், சேசாசலம் வனப்பகுதியில் தோன்றுகிறது. அங்கிருந்து 83 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்து தமிழ்நாட்டின், வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம் ஆந்தி ...

                                               

பாலாறு

பாலாறு தென்னிந்திய விவசாயத்தின் தாய் ஆறாக விவசாயிகளால் சொல்லப்படுகிறது. இது கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்திலுள்ள நந்தி மலையில் உற்பத்தியாகிறது. கர்நாடகத்தில் 93 கிமீ தொலைவும், ஆந்திரப்பிரதேசத்தில் 33 கிமீ தொலைவும் தமிழகத்தில் 222 கிமீ தொலைவ ...

                                               

பாலாறு (காவிரியின் துணை ஆறு)

பாலாறு என்பது தென்னிந்தியாவில் உள்ள ஒரு ஆறு ஆகும். இது காவிரியின் துணை ஆறுகளில் ஒன்று. காவிரி அறானது தமிழகத்துக்குள் நுழைந்ததும் அதனுடன் முதலில் கலக்கும் ஆறு இதுவே. இந்த ஆறு ஈரோடு மாவட்டம், ஈரெட்டியூர் அருகே உள்ள மலைப் பகுதியில் சிற்றாறாக உருவாகி ...

                                               

வைகை

வைகை அல்லது வைகையாறு என்பது தென் இந்தியாவின் தமிழகத்தில் பாயும் ஆறுகளுள் ஒன்று. தமிழகத்திலேயே உற்பத்தியாகி இங்கேயே கடல் சேர்கிற வைகை ஆற்றின் நீளம் 258 கி.மீ. ஆகும். இந்நதியின் பாசனப் பரப்பு 7031 ச.கி.மீ. ஆகும். இது தமிழகத்தின் நான்காவது பெரிய ஆறு ...

                                               

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை

இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை அல்லது ஐ.சி.எஃப் பயணிகளுக்கானப் பெட்டிகளை தயாரிக்க 1955ஆம் ஆண்டு சுவிஸ் தொழில்நுட்பத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்திய இரயில்வேயின் முதன்மை தொழிற்சாலையாகும். சென்னையின் புறநகர்ப் பகுதி பெரம்பூரில் இந்திய விடுதலைக்குப் ...

                                               

கன ஊர்தி தொழிற்சாலை

கன ஊர்தி தொழிற்சாலை, ஆவடி, இந்திய மாநிலம் தமிழ்நாட்டில் சென்னைக்கு அண்மையில் அமைந்துள்ளது. இந்திய அரசு படைத்துறைக்குத் தேவையான கனரக போர்க்கள ஊர்திகளை உள்நாட்டிலேயே தயாரிக்கும் திட்டத்தினபடி 1965ஆம் ஆண்டு இந்தத் தொழிற்சாலையை நிறுவியது. இங்கு விஜயந ...

                                               

சென்னையில் செயல்படும் தானுந்து தொழிற்சாலைகள்

சென்னை நகரம் ஆசியா கண்டத்தின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வாகனங்களில் 40 சதவீதம் சென்னை நகரிலேயே உற்பத்தி செய்யப்படுவதே இதற்கு காரணமாகும். உலகின் பல முன்னணி தொழில் நிறுவனங்களும் சென்னையில் தொழிற்சாலை அமைத் ...

                                               

போர்ட் இந்தியா நிறுவனம்

ஃபோர்ட் இந்தியா பிரைவேட் லிமிடெட் இந்தியாவில் போர்ட் தானுந்து நிறுவனத்திற்கு முழுமையும் உரிமையான துணை நிறுவனமாகும். இதன் தலைமையகம் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையை அடுத்த மறைமலை நகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்தியாவில் சீருந்து தயா ...

                                               

மெட்ராசு இறப்பர் பேக்டரி

பரவலாக எம்ஆர்எஃப் என அறியப்படும் மெட்ராசு இறப்பர் பேக்டரி, தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஓர் முதன்மையான உருளிப்பட்டை தயாரிப்பு நிறுவனமாகும். இதன் முதன்மை தயாரிப்பாக தானுந்துகளுக்கான உருளிப்பட்டைகளைத் தயாரிப்பதாக இருப்பினும் ஆசுபுரோ என்றஅமெர ...

                                               

யுயேண்டே தானுந்து நிறுவனம்

யுயேண்டே மோடார்சு கம்பனி கொரியாவின் ஓர் தானுந்து தயாரிப்பாளராகும். இதன் துணை நிறுவனமான கியா மோட்டார்சுடன் இணைந்த யுயேண்டே கியா ஆட்டோமோடிவ் குழுமம் 2009ஆம் ஆண்டில் உலகின் நான்காவது மிகப்பெரும் தானுந்து தயாரிப்பாளராக விளங்குகிறது. மேலும் அவ்வாண்டு ...

                                               

அம்பத்தூர் தொழிற்பேட்டை

அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆங்கிலம்: AMBATTUR Industrial Estate என்பது தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய சிறிய அளவிலான தொழில்துறை தோட்டமாகும். இது அம்பத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி மக்களுக்காக சென்னை பகுதியில் சிறப்பாக நியமிக்கப்பட்ட தொழில்துறை பகு ...

                                               

சென்னையில் வியாபாரம்

தென்னிந்தியாவின் முக்கிய சில்லறை விற்பனை மற்றும் வியாபார மையமாக சென்னை உள்ளது. அதன் புறநகர்ப் பகுதிகளில் சில பிரத்யேக வியாபாரத் தளங்களாக சேவை செய்கின்றன. பதினேழாம் நூற்றாண்டில் நகரத்தை உருவாக்கியதில் இருந்து, நகரின் பிரதான வர்த்தக மையத்தில் ஜார்ஜ ...

                                               

மாதவரம் பால் காலனி

மாதவரம் பால் காலனி சென்னையின் வடக்குப் பகுதியில் உள்ள ஒரு சுற்றுவட்டாரமாக இருக்கிறது. இந்திய மாநிலங்களில் தமிழ்நாட்டின் ஒரு மாநகரமாக சென்னை மாவட்டம் உள்ளது. சென்னை வடக்கு பகுதியில் உள்ள மாதவரம் பால் காலனியில் 5000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கின்ற ...

                                               

அசில்

அசில் என்பது ஒரு கோழி இனமாகும். இது பாக்கித்தானின் சிந்து தெற்கு பஞ்சாப்பை சேர்ந்தது என்றும், குறிப்பாக அங்கு உள்ள அசாரா என்ற பகுதியைச் சேர்ந்தது என்றும் கருதப்படுகிறது. மேலும் இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் கிராமப ...

                                               

ஆட்டுப்பண்ணை, சின்னசேலம்

ஆட்டுப்பண்ணை, சின்னசேலம் என்பது தமிழ்நாடின், விழுப்புரம், சேலம் மாவட்ட எல்லையில் சின்னசேலம் பகுதியில் உள்ள ஒரு ஆட்டுப்பண்ணையாகும். இப்பகுதியில் பரவலாக உள்ள கறுப்பு நிற குறும்பெட்டை ஆடுகளுடன் பீக்கானீர் கிடாக்களுடன் இனக்கலப்பு செய்து தரமான ஆடுகளை ...

                                               

ஆலம்பாடி மாடு

ஆலம்பாடி என்பது ஓகேனக்கலில் இருந்து சுமார் மூன்று அல்லது நான்கு மைல் தொலைவில் கர்நாடகத்தின் எல்லைக்குள் அமைந்துள்ள ஒரு சிற்றூர் ஆகும். அந்த ஊரில் தோன்றிய மாட்டு இனமாதலால் இது இப்பெயரைப் பெற்றது. இந்த மாடானது வண்டி இழுப்பதற்கும், உழவுப் பணிகளுக்கு ...

                                               

இராமநாதபுரம் வெள்ளை ஆடு

இராமநாதபுரம் வெள்ளை ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் இராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றன.

                                               

உம்பளச்சேரி மாடு

உம்பளச்சேரி மாடு என்பது தமிழ்நாட்டில் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் காணப்படும் மாடுகளின் ஒரு இனமாகும். இவை குட்டையானவை என்றாலும். இதன் கால்கள் உறுதியானவை, ஆழமான சேற்றில் இறங்கி நன்கு உழக்கூடியவை.

                                               

கன்னி ஆடு

கன்னி ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு வெள்ளாட்டினமாகும். இவை தோலுக்காகவும், இறைச்சிக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் மந்தையாகச் செல்லும்போது, அதன் கால் அசைவுகள் ராணுவ வீரர்களைப் போல வரிசையாக அமைந்திருக்கும். இதனால் இவை சிப்பாய் நட ...

                                               

காங்கேயம் காளை

காங்கேயம் காளை என்பது இந்திய நாட்டில், தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கேயம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஈரோடு, கரூர், நாமக்கல், தாராபுரம் போன்ற பகுதிகளில் விவசாயப் பணிக்காக வளர்க்கப்படும் ஒரு வகை நாட்டு மாடு இனம் ஆக ...

                                               

கிளி மூக்கு கோழி

கிளி மூக்கு கோழிகள் அல்லது விசிறிவால் சேவல் என்பவை இவை தமிழகத்துக்கே உரித்தான கோழி இனமாக கருதப்படுகிறது. என்றாலும், இது அசில் நாட்டுக் கோழியின் கலப்பினம் என்பதே கால்நடை நிபுணர்களின் கருத்து. இந்தச் சேவல்கள் கம்பீரத் தோற்றத்துடன் மூர்க்கமானவையாகக் ...

                                               

கீழக்கரிசல் ஆடு

கீழக்கரிசல் ஆடு அல்லது அடிக்கருவை, கருவி என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய செம்மறியாட்டு இனங்களில் ஒன்றாகும். இவை இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் தமிழகத்தின் ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ...

                                               

குரும்பை ஆடு

குரும்பை ஆடு அல்லது கோயம்புத்தூர் ஆடு என்பது வட தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சூலூர் வட்டத்தில் வசிக்கும் குரும்பர் இனத்தவர்களால் முதலில் வளர்க்கப்பட்ட ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை இறைச்சி மற்றும் முரட்டு ரோம உற்பத்திக்குப் பயன்படுக ...

                                               

கொடி ஆடு

கொடி ஆடு என்பது தமிழகத்தின் ஒரு வெள்ளாடு இனமாகும். இவை தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம், விளாத்திகுளம் மற்றும் கருங்குளம் போன்ற பகுதிகளில் பரவலாக காணப்படுகின்றன. இவ்வாட்டின் உடல் அமைப்பு மெலிந்து காணப்படும். நீண்ட கால்களைக ...

                                               

கோயம்புத்தூர் ஆடு

கோயம்புத்தூர் ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காவும், கம்பளி உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்தில் காணப்படுகின்றன.

                                               

சங்ககிரி கருஞ்சதை கோழி

சங்ககிரி கருஞ்சதை கோழி என்பது தமிழ்நாட்டினை பூர்விகமாகக் கொண்ட கோழி வகையாகும். இந்தக் கோழியானது கருஞ்சதை நாட்டுக் கோழி என்றும், சங்ககிரி சண்டைக் கோழி என்றும் அழைக்கப்படுகிறது. இந்தக் கோழியானது கத்திக்கட்டு என்ற ரகத்தினைச் சேர்ந்ததாகும். அதனால் கத ...

                                               

செம்மறை

பர்கூர் மலை மாடு அல்லது செம்மறை என்பது தமிழ்நாட்டின், ஈரோடு மாவட்டம், பவானி வட்டத்தில் பர்கூர் மலைக்காடுகளில் மேயக்கூடிய ஒரு மாட்டினமாகும். இந்த மாடு பழுப்பு நிறத்தில் வெள்ளை திட்டுகள் கொண்டு இருக்கும். அரிதாக சிலமாடுகள் வெள்ளை நிறத்திலும் பழுப்ப ...

                                               

செவ்வாடு

செவ்வாடு அல்லது சிவலையாடு என்பது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரம்பரிய செம்மறியாட்டு இனங்களில் ஒன்றாகும். இதில் அரிச்செவ்வாடு, கருஞ்செவ்வாடு என இரு வகைகள் உள்ளன. இவை இறைச்சித் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. இந்த ஆடுகள் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்த ...

                                               

சென்னை சிவப்பு ஆடு

சென்னை சிவப்பு ஆடு என்பது வட தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்களில் காணப்படுகின்றன.

                                               

திருச்சி கருப்பு ஆடு

திருச்சி கருப்பு ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவும், முரட்டு ரோம உற்பத்திக்காகவும் வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் திருச்சி, பெரம்பலூர், தருமபுரி, சேலம் போன்ற ம ...

                                               

தோடா எருமை

தோடா எருமை என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் பழங்குடி மக்களால் வளர்க்கப்படும் எருமை இனமாகும். இந்த எருமைகள் படுகர், கோத்தர் போன்ற பழங்குடிகளும் வளர்க்கின்றனர். என்றாலும் தோடர் இனமக்களின் வாழ்வில் மிக இன்றியமையாத விலங்காக இவை ...

                                               

நீலகிரி ஆடு

நீலகிரி செம்மறியாடு என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் மட்டும் காணப்படும் ஒரு செம்மறி ஆட்டு இனமாகும். இது நீலகிரி மலைப் பகுதிகளில் இனப்பெருக்கம் ஆனவை மேலும் இவை அவற்றிலிருந்து கிடைக்கும் தரமான கம்பளிக்காக அறியப்படுகிறன. அதன் கம்பளி இழைகளில ...

                                               

மாவட்ட கால்நடை பண்ணை (ஒசூர்)

மாவட்ட கால்நடை பண்ணை, ஓசூர், தமிழ்நாடின், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரின், மத்திகிரியில் உள்ளது. இந்தப் பண்ணை 1.641.41 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு ஜெர்சி மாடுகள்,ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் பிரசியன் கலப்பினம், சிவப்பு சிந்தி, காங்கேயம் ஆகிய மா ...

                                               

மாவட்ட கால்நடை பண்ணை, அபிஷேகப்பட்டி

மாவட்ட கால்நடை பண்ணை என்பது தமிழ்நாடின், திருநெல்வேலி மாவட்டம், அபிசேகப்பட்டியில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும். இந்தப் பண்ணையானது சுமார் 1250 ஏக்கர் நிலப்பரப்பளவில் உள்ளது. இப்பண்ணையில், ஜெர்சி மாடுகள்,ஜெர்சி கலப்பினம், ஹோல்ஸ்டீன் பிரசியன் கலப் ...

                                               

மாவட்ட கால்நடை பண்ணை, கொருக்கை

மாவட்ட கால்நடை பண்ணை, கொருக்கை என்பது தமிழ்நாடின், திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொருக்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடத்தப்படும் ஒரு கால்நடைப் பண்ணையாகும். இந்தப் பண்ணையானது 495 ஏக்கர் பர ...

                                               

மாவட்ட கால்நடை பண்ணை, செட்டிநாடு

மாவட்ட கால்நடை பண்ணை, செட்டிநாடு என்பது தமிழ்நாடின், சிவகங்கை மாவட்டம், செட்டிநாட்டில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையாகும். இந்தப் பண்ணையானது 1957ஆம் ஆண்டு 1.907.32 ஏக்கர் பரப்பளவில் துவக்கப்பட்டது. இதில் 300 ஏக்கரில் மானாவாரி ஆராய்ச்சி நிலையம், 30 ஏக ...

                                               

மேச்சேரி ஆடு

மேச்சேரி ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறி ஆட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இவை சேலம் மாவட்டத்தின் மேச்சேரி, கொளத்தூர், நங்கவள்ளி, ஓமலூர் மற்றும் ஈரோடு, தர்மபுரி மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் சி ...

                                               

வேம்பூர் ஆடு

வேம்பூர் ஆடு என்பது தமிழ்நாட்டில் காணப்படும் ஒரு செம்மறியாட்டு இனமாகும். இவை பெரும்பாலும் இறைச்சி தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. இந்த இன ஆடுகள், தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தின் வேம்பூர், மேலக்கரந்தை, கீழக்கரந்தை, நாகலாபுரம் பகுதிகளிலும், ...

                                               

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம்

தமிழ்நாடு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், என்பது இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள பாராம்பரிய கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவு அமைப்பாகும். இது பெரும்பாலும் கோ-ஆப்டெக்ஸ் என்றே அழைக்கப்படுகிறது. தமிழக அரசின் கைத்தறி, துணிநூல், காதி, கிர ...

                                               

திருப்பூர்

திருப்பூர் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, கொங்கு நாட்டில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத் தலைமையிடமும், மாநகராட்சியும் ஆகும். இது 160 சகிமீ பரப்பளவு கொண்டது. இம்மாநகரம் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடை தொழிலில் மிகவும் சிறந்து விளங்குகிறது. தமி ...

                                               

பின்னி அண்டு கோ

பின்னி அண்டு கோ என்பது சென்னை நகரில் கப்பல், நெசவு, வங்கி, இன்சூரன்சு போன்ற தொழில்களைச் செய்த பெரிய குழுமம் ஆகும். இது சென்னையில் 200 ஆண்டுகளுக்கு முன் மிகப் பெரிய வணிக நிறுவனமாக விளங்கி வந்தது. 1797 ஆம் ஆண்டில் பின்னி அண்டு குழுமம் சான் பின்னி எ ...

                                               

லட்சுமி ஆலைகள்

லட்சுமி ஆலைகள் என்பது கோயம்புத்தூரிலுள்ள,இந்தியா ஒரு பெரிய துணி நூற்பாலை மற்றும் ஆடை உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் ஜி. குப்புசாமி நாயுடு என்பவரால் 1910 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கோவில்பட்டி மற்றும் பல்லடம், அவிநாசி சாலையில் இந்த நிறுவனத் ...

                                               

அத்திக்கடவு-அவினாசி திட்டம்

அத்திக்கடவு-அவினாசி திட்டம் என்பது பில்லூர் அருகில் உள்ள பவானி ஆற்றிலிருந்து 2.000 கன அடி வெள்ள உபரி நீரை கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களிலுள்ள வறட்சி மிக்கஅன்னூர், திருப்பூர், அவினாசி, சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங ...

                                               

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம்

தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் என்பது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்குக் கீழ் இயங்கும் இந்திய அரசின் ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்று. இது தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆடுதுறையில் அமைந்துள்ளது. 1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கபட்டது. தமிழ் ...

                                               

தமிழ்நாடு வேளாண்மை சந்தைப்படுத்தல் வாரியம்

தமிழ்நாடு மாநில வேளாண்மை விற்பனை வாரியம் மாநில அரசின் நிறைவேற்று ஆணையால் நிர்வகிக்கப்பட்டது GO Ms. No. 25852 விவசாயத் திணைக்களம், 24.10.1970 தேதியிட்ட மற்றும் 24.10.1970 க்கு பின்னர் இயங்கி வருகிறது. சந்தைக் குழுக்கள் மற்றும் ஆலோசனைக் குழுவாக செய ...

                                               

பாரம்பரிய நெல்

பாரம்பரிய நெல் விதைகள் பழைமையான நெல் விதை ரகங்களைக் குறிக்கும். இந்தியாவில் 200000 மேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவாக பல பாரம்பரிய நெல் ரகங்கள் அழிந்து பட்டன. 1959 ஆம் ஆண்டு இந்தியாவின் கட்டக ...

                                               

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம்

வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், கிள்ளிகுளம் என்பது தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், வள்ளநாடு கிள்ளிகுளத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தால் மூன்றாவதாக அமைக்கப்பெற்ற வேளாண் கல்லூரி ஆகும்.